Sponsored
Home / Novels / Ithu Kathalendraal / Ithu Kaathalendraal -25

Sponsored

Ithu Kaathalendraal -25

Part   –   25.

 

 

“நீங்க யார்மேல கை வச்சு இருக்கீங்க தெரியுமா , அமைச்சர் சர்குணத்தோட மகன்தான் நான் இன்னைக்கு என் அப்பாவோட பிறந்தநாள் இங்கேதான் கொண்டாடிட்டு இருக்காங்க ஒரு வார்த்தை சொன்னால் போதும் உங்க வேலை இன்னையோட காலி அது தெரியுமா”.

அவன் சொன்னதும் அந்த இன்ஸ்பெக்டர் நிதானமடைந்தான் கீழே விழா நடப்பது அவருக்கும் தெரியும் எனவே நிதானமடைந்தார் சிறு யோசனையுடன் ,”ஓ……….. அப்படியா அப்போ நீங்க கிளம்புங்க இவளை விட முடியாது. அப்படி விடணும்னா இவளோட அம்மா அப்பாவை வரச் சொல்லுங்க , கேஸ் பைல் பண்ணிட்டா கோர்ட் ல பரொட்யூஸ் பண்ணாமல் இருக்க முடியாது.

அப்படி இல்லையா உங்க அப்பாவை போன்ல பேசச் சொல்லுங்க. இப்போ வழியை விடுங்க”, சுபாவை அழைத்துக் கொண்டு ஜீப் பிற்கு விரைந்தார்.

இதை ப்ரவீனே எதிர்பார்க்கவில்லை அவனுக்குத் தெரியும் அவளது அப்பாவைப் பற்றி, இவனது அப்பாவிடமோ பேசவே முடியாது அவர் முன்கோபி மட்டுமல்ல நேர்மையானவரும் கூட.

இவனது இந்த செயலை கேள்விப் பட்டால் தண்டனை என்னவோ அதை கொடுங்கள் என்று சொல்லிவிடுவார்.

இவர்களது வாதத்தைக் கேட்டுக் கொண்டே சுபா ப்ரவீனை எரித்து விடுபவள்போல் பார்த்தாள். அவனால் அவளது பார்வையை சந்திக்க இயலவில்லை. தலையை கவிழ்த்துக் கொண்டான்.

அவனை விட்டுவிட்டு ஜீப் ஸ்டேஷன் நோக்கி விரைந்தது. அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி. இவள் போலீஸ் ஜீப்பில் அழுதுகொண்டே போவதை சுபாவின் தோழி தீபா பார்த்தாள்.

அவளுக்கு சுபாவின் தோற்றமும் அழுகையும் ஏதோ சரி யில்லை என்பதை உணர்த்த, வேகமாக சுஷினுக்கு போன் செய்தாள்.

சுபாவின் வாழ்வில் நடந்தது , நடப்பது அனைத்துமே தீபாவிற்க்குத் தெரியும் சுபாவிற்கு இப்பொழுது உதவக் கூடியவன் சுஷின் மட்டுமே என்பது அவளுக்குத் தெரியும். எனவே அவனுக்கு கால் செய்தாள்.

__________________________________________________________________________________________

மினியை விட்டு விட்டு காரில் வரும்போது அவனது அலைபேசி அடித்தது யார் என்றும் பார்க்காமல் ,”ஹலோ…………” என்றான்.

அந்தப்பக்கம் தீபா சொன்ன செய்தியை கேட்டு இடிந்தே போனான் சுஷின். தனது கட்டுப் பாட்டை இழந்து சரியப்போன காரை பிரேக் போட்டு நிறுத்தினான்.

தனது முட்டாள் தனத்தை நினைத்து வருந்தினான். சுபாவிற்கு பேசி எவ்வளவு நாட்கள் ஆகி விட்டது. என்னோட சுயநலத்தினால் அவளைப் பற்றி கவலையே படாமல் போயிட்டேனே.

ஐயோ இப்போ எவ்வளவு பெரிய சிக்கல்ல சிக்கி இருக்கான்னு தெரியலையே, அவனது எண்ணத்திலேயே மூழ்கி விட்டவனை கலைத்தது தீபாவின் குரல்.

“அண்ணா அவ அழுதுட்டே போறாண்ணா என்னால எதுவும் செய்ய முடியலை”, அழுதபடி சொன்னாள்.

“இங்க பாரும்மா உன்பேர் என்ன”, “தீபா” “தீபா நீ உடனே அந்த ஜீப் எந்த ஸ்டேஷன் போகுதுன்னு மட்டும் பார்த்து சொல்லும்மா. நீ இப்போ எந்த ஏரியா வில் இருக்க அதையும் சொல்லு “.

அவள் சொன்னதும் காரை அசுரவேகத்தில் செலுத்தினான் சுஷின். அவனுக்கு புரிந்தது இந்த பிரச்சனைக்கு காரணம் நிச்சயம் ப்ரவீனாகத்தான் இருக்கும் என்பது.

தீபா எந்த ஸ்டேஷன் என்று சொன்னதும் வாயுவேகத்தில் சென்று அந்த ஸ்டேஷன் முன்னால் இறங்கினான் . காரில் இருந்து குதித்து இறங்கி ஓடினான் .

அங்கே அவன் கண்ட காட்சி அவனை பதற வைத்தது, சுபாவை அவள் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒத்துக் கொள்ளச் சொல்லி அடித்துக் கொண்டிருந்தனர்.

வேகமாக அவர்களிடம் சென்று சுபாவை அவர்களிடம் இருந்து பிரித்து அணைத்துக் கொண்டான். “நீங்களும் பொண்ணுங்கதானே ஒரு சின்னப் பொண்ணை இப்படியா அடிப்பிங்க உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா. இல்ல இந்த டிரஸ்-ஐ போட்டதும் மனசாட்சியவும் கழட்டி வச்சுடுவீங்களா”.

“முதல்ல நீ யாருடா இவ கூட டெய்லி போறவனா இவ்வளவு துடிக்கிற”.

 

அவர்களின் பேச்சில்,“அண்ணா……………” கதறலுடன் மயங்கிச் சரிந்தாள் சுபா.

 

அவளது கதறலில் ஸ்டேஷன் கட்டிடமே குலுங்கியது.

 

 

சுஷின் ருத்ர தாண்டவமே ஆடினான், “இன்னும் ஒருவார்த்தை……….. இன்னும் ஒரு வார்த்தை என் தங்கச்சியைப் பற்றி பேசுனீங்க இந்த ஸ்டேஷனையே கொழுத்திடுவேன் “.

அவனது பேச்சும் அவனது பார்வையும் அவன் சொன்னதை செய்வான் என்று தோன்றினாலும் , இவனது மிரட்டலுக்கு பணிவதா நமது காக்கிச் சட்டைக்கு இருக்கும் பவர் தெரியாமல் விளையாடுகிறான் . இவனுக்கு அதைப் புரியவைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்ற ,

“எங்க ஸ்டேஷன் குள்ளேயே வந்து எங்களையே மிரட்டுனன்னு உன்மேல கேஸ் போட்டு உள்ள தள்ளலை பாருடா”.

“முடிஞ்சா செஞ்சுப் பாரு”, அவர்களிடம் சொல்லிவிட்டு தொலைப்பேசியை உயிர்ப்பித்து முதலில் டாக்டர்-க்கு போன் செய்து வரச்சொன்னான்.

வக்கீலுக்கும் போன் செய்துவிட்டு அவர்கள் வந்ததும், சுபாவை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு , இன்னும் ஒருமணி நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு ப்ரவீனின் வீடுநோக்கிச் சென்றான்.

செல்லும் வழியில் அவனது அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஹோட்டல் ரூபாவில் நடப்பதை அறிந்து அங்கே சென்றான்.

அங்கே அவனது கண்கள் ப்ரவீனைத் தேடின கண்டுகொண்டதும் , கொலைவெறியுடன் அவன்மீது பாயத் துடித்த எண்ணத்தை சுற்றுப்புறம் அறிந்து அடக்கினான் .

சுஷினைப் பார்த்ததும் ப்ரவீன் அவனிடம் வந்து அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதான் . இதைப் பார்த்த ப்ரவீனின் தாய் வேகமாக அவர்களின் அருகில் வந்து அவர்கள் இருவரையும் ஹோட்டல் ரூமிற்குள் அழைத்துச் சென்றார்.

இதற்காகவே காத்திருந்தவன் போல சுஷின் ப்ரவீனை முஸ்ட்டி இறுக்கி அடித்து நொறுக்கினான். இவனது அடியையும் வாங்கிக் கொண்டு அவனது காலில் விழுந்து அழுதான் பிரவீன்.

“நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்புதான், உங்க தங்கச்சிமேல இருந்த ஆசையில்தான் அப்படி செஞ்சுட்டேன். நான் அவளை உயிருக்கும் மேலா விரும்புறேன். இப்படி நடக்கும்னு நான் கனவுலகூட நினைக்கலை என்னை அடிங்க நல்ல அடிங்க……………”, முகத்தில் அறைந்துகொண்டு அழுதான்.

“ப்ரவீன் என்ன நடக்குது இங்க கொஞ்சநேரமா உன்முகமே சரி யில்லை . இன்னைக்கு முழுக்க உன்னை ஆளையே காணோம். நான் என்னன்னு கேட்டதுக்கும் பதில் சொல்லாமல் மழுப்புன . இப்போ இவன் யாருன்னே தெரியலை இவன்கிட்ட அடிவாங்கிட்டே கால்ல விழுற உண்மையை சொல்லப் போறியா இல்லையா”.

“அம்மா உங்க பிள்ளையால என் தங்கச்சி இப்போ ஸ்டேஷன்-ல இருக்குறா…….. அதை எப்படி…………”.

“ப்ரவீன் இவன் சொல்லுறது உண்மையா………… . என் கண்ணைப் பார்த்து பதில் சொல்லு………..”.

ஆமாம் என்பதுபோல் தலையை ஆட்டினான் பின்பு நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்ததும் அன்னத்தின் கரம் இடியென அவனது கன்னத்தில் இறங்கியது.

இந்த பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் போது சுஷினின் போன் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. அது சைலண்ட் மோடில் இருந்ததால் அவனுக்கு கேட்கவில்லை.

அதன் அழைப்பை உணரும் நிலையிலும் அவன் இல்லை.

________________________________________________________________________________________________________

இவ்வளவு நேரமாகியும் தனது தாயை காணவில்லையே என மினி தேடிச் சென்றாள். அங்கே கிச்சனில் மீனாட்சி மயக்கமுற்று விழுந்து கிடந்தார்.

மினி ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து தெளித்தும் எந்த மாற்றமும் இல்லாமல் போக பயம் அவளை கவ்விக் கொண்டது.

மூக்கில் விரல் வைத்துப் பார்த்தாள் மினியின் பதட்டத்தில் மீனாட்ச்சியின் மூச்சுக் காற்றை உணரும் நிலையில் அவள் இல்லை.

 

இன்னும் பதட்டம் கூட அது அழுகையாக வெளிவந்தது. அவளது அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு மாமி வேகமாக வந்தார்.

அங்கே மீனாட்சி மயக்கமாக கிடப்பதும்,,மினி அழுவதையும் பார்த்தவர் அவளிடம் மினி தைரியமா இரு உன் அம்மாவுக்கு எதுவும் இல்லை . முதல்ல ஆம்புலன்ஸ் க்கு போன் பண்ணு அடுத்து உன்னை கட்டிக்கப் போறவனுக்கு போன் பண்ணு .

இப்படியே அழுதுட்டு இருந்தால் வேலைக்கு ஆகுமா சீக்கிரம்”. மினி போன் செய்ய போகவும் ஹொச்பிடலுக்கு தேவையான, ப்ளாஸ்க் , டம்பளர், துணி பெட்ஷீட் அனைத்தையும் எடுத்து வைத்தார்.

மினியிடம் ATM கார்டு மறக்காமல் எடுத்து வைக்கச் சொன்னார். ஆம்புலன்ஸ் வந்ததும் மீனாட்ச்சியை கூட்டிக் கொண்டு விரைந்தனர்.

மினி தொடர்ந்து சுஷினுக்கு முயற்சி செய்துகொண்டே இருந்தாள். ஆனால் அவன் எடுக்கவே இல்லை………….

About lavender

Check Also

Ithu Kaathalendraal -48

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.PART  –  48.   வீட்டிற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *