Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen-45

Sponsored

Shenba Ninnai Saranadainthen-45

அத்தியாயம் —45

 

இரவின் துணையோடுச் சித்தார்த் ரூஃப் கார்டனில் அமர்ந்து வானத்தை வெறித்தபடி யோசனையில் மூழ்கி இருந்தவனின் எதிரில் சுபா வந்து அமர்ந்தாள்.

 

“என்ன சித்தார்த், எந்த கோட்டையை பிடிக்க இந்த யோசனை?” என்றாள் புன்னகையுடன்.

 

சித்தார்த் சலிப்புடன் “மச்….” என்றான். “ஒஹ்ஹ்….மதுமிதாவோட மனக் கோட்டையை பிடிக்க தான் இந்த யோசனையா?”

 

“நான் எவ்வளவு முட்டாள்தனமா நடந்து இருக்கேன் சுபா. ரெண்டு மூணு முறை அவளை டெல்லியில் பக்கத்தில் இருந்தும் பார்க்க முடியாமல் போச்சு. ராஜேஷ் முதலில் மதுவைப் பற்றி சொல்லும் போது நான் இந்த அர்ஜுன்தான்னு நினைக்கவே இல்லை. ஆனால், போட்டோவைப் பார்த்ததும், என்னால் அதிர்ச்சியை ஜீரணிக்கவே முடியவில்லை. அர்ஜுன் இறந்து ரெண்டு வருஷம் ஆகபோகுது. ஆனாலும் மது மனதில் இன்னும் அவன் வாழ்ந்துக்கொண்டுத் தான் இருக்கான். அப்போ அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் எவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங் இருந்திருக்கணும்.”

 

“நீயும் தானேடா அவளை உன் உயிரா காதலிக்கிற” என்றாள் ஆறுதலாக.

 

“என்ன காதலிச்சி என்ன சுபா, அவளை நான் நமபலையே. எனக்கு அவ மேல நம்பிக்கை இல்லாமல் போச்சே. இந்தக் கடவுளுக்குக் கண்ணே இல்லைன்னு சொல்வது உண்மைதானோன்னு தோணுது. அர்ஜுனையும், மதுவையும் ஒண்ணு சேர்த்து வச்சிருக்கலாம். அந்த வருத்தம் என் ஒருத்தனோட போயிருக்கும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி என் மதுவை ரொம்பவே அழ வச்சிட்டானே”என விரக்தியுடன் சொன்னான்.

 

“ம்ம்.. அர்ஜுன் இறந்தது எல்லோருக்குமே அதிர்ச்சி தான். அதுக்காக நடந்ததையே நினைத்து நீ கவலைப்படாதேடா. நாளைக்கு நாங்க மது வீட்டுக்குப் போறோம். நீயும் வரியா?”

 

“எனக்கும் அவளைப் பார்க்கணும்னு ஆசை தான். ஆனால், நான் வந்தால் வீணா பிரச்சனை தான் வரும். ஈவ்னிங் தான் பெரிசா அவகிட்ட சேலஜ்ஜெல்லாம் செய்துட்டு வந்திருக்கேன். இன்னைக்கே என்னை என்னவோ வில்லனைப் பார்ப்பது மாதிரி தான் பயத்தோட பார்த்தா” எனச் சொல்ல

 

அதை கேட்டுச் சுபா சிரித்தாள்.”சிரிக்காதே சுபா நானே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன். அவ சம்மதத்தை எப்படி வாங்கறதுன்னே தெரியவில்லை” என்றான் கவலையுடன்.

 

“டோன்ட் வொர்ரி பிரதர் நடப்பதெல்லாம் நன்மைக்கே. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும். நாளைக்கு நான் மதுவிடம் நீ ரொம்ப விசாரித்ததா சொல்லட்டுமா?” என கிண்டலாக கேட்க.

 

சித்தார்த் இரு கைகளையும் உயர்த்தி ஒரு பெரிய கும்பிடாக போட்டு , “அம்மா தாயே நீ உன் திருவாயை மூடிகிட்டு இரு. வந்த வேலை முடிந்ததும் மூட்டையைக் கட்டிக்கிட்டு கிளம்பு. இருக்கும் பிரச்சனையைத் தீராத பிரச்சனையா மாத்திட்டுப் போய்டாதே” எனச் சொல்ல

 

சுபாவும் சிரிப்பை அடக்கிக்கொண்டு பெருந்தன்மையாக சொல்வது போல, “ஏதோ நீ ரொம்ப பீலிங்ஸ்லயிருக்கியேன்னு சொன்னேன். என்னவோ என்னை இந்த துரத்து துரத்துறியே?” என்றாள்

 

“நீ ஒண்ணும் சொல்ல வேணாம். நாளைக்கு மது வீட்டுக்குப் போனீங்களா இன்வைட் செய்தீங்கலான்னு கிளம்பி வந்துகிட்டே இருக்கணும். அங்கே போய் மதுவை அப்படியே பரிதாபமா லுக் விடற வேலை எல்லாம் வேண்டாம். நீ என்னோட அக்கான்னு தெரிஞ்சி போச்சு, இனியும் அவ உன்னிடம் பழைய மாதிரி பேசுவாளான்னே சந்தேகம் தான்” எனச் சொல்லிக்கொண்டிருக்க அதை கேட்டபடியே வந்த மீரா,

 

“அடடடடா… என்ன ஒரு பாசம் மது மேல, விட்டுகொடுக்க மாட்டேன்றீங்களே சித்தார்த். அவளுக்காக இவ்வளவு பார்க்கறீங்களே, ஆனால், அவ உங்களை புரிஞ்சிக்கவே இல்லையே?” என்றாள்.

 

“மது என்னோட பாதி அண்ணி. அவளுக்காக நான் தான் பார்க்கணும். அவ பட்ட கஷ்டம் எல்லாம் முடிந்தது. இனி, அவ வாழ்க்கைல சந்தோஷம் மட்டும்தான் இருக்கணும். அதுக்காக என்ன முடியுமோ கண்டிப்பா செய்வேன். மது என்னை புரிஞ்சுக்கும் நாள் பக்கத்திலேயே தான் இருக்கு. நான் என்னை அவளுக்குப் புரிய வைப்பேன்” என உறுதியோடுச் சொன்னான்.

 

மீரா பெருமையுடன் சித்தார்த்தைப் பார்த்தாள்.”ஆல் த பெஸ்ட் கொழுந்தனாரே. நாங்க எல்லோரும் உங்க பக்கம் தான். மது உங்க பக்கம் சாயத்தான் போறா. அதுக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்” என சித்தார்த்தின் கையை பிடித்து குலுக்கினாள். சித்தார்த்தும் சிரித்துக்கொண்டே தலையை கோதிக்கொண்டான்.

 

அன்று வெள்ளிக்கழமை காலையில் கோவிலுக்குச் சென்று வந்த மது நிதானமாக சமைத்து விட்டு காலை உணவை முடித்துக்கொண்டு பூக்களை சரமாக தொடுத்தபடி அமர்ந்திருந்தாள்.

 

விமலா மெதுவாக, “என்ன மது இன்னைக்கு ஆபீஸ் போகலையா? நேற்றோடு  உன் லீவ் முடிந்திருக்குமே?” என்றார் கேள்வியுடன் மதுவைப் பார்த்தபடி.

 

மதுவும் இந்த கேள்வியை எதிர்பார்த்தே காத்திருந்தாள். அதனால் தயங்காமல், “இல்லம்மா , திங்கட்கிழமைலயிருந்து போகலாம்னு இருக்கேன்” என தலையை நிமிராமலே சொல்லிவிட்டு பூவை பூவை தொடுத்துக்கொண்டிருந்தாள். வாய் அவர்களுக்குப் பதில் சொன்னாலும்,மனம் அவர்களிடம் தேவை இல்லாமல் பொய் சொல்கிறோமே என வருத்தப்பட்டது.

 

எதையுமே கண்களைப் பார்த்து பேசும் மது இன்று நேருக்கு நேராக பார்க்காமல் பேசியதிலிருந்தே அவளுக்கு இனி, ஆபீஸ் போக விருப்பம் இல்லை என்பதை புரிந்துக்கொண்டனர். அவர்கள் அதையும் எதிர்பார்த்து தான் காத்திருந்தனர். சரி நடப்பதை பேசாமல் வேடிக்கை பார்க்கலாம் என இருந்தனர்.

தீபக்கின் திருமணத்திற்கு முன்பே இனி, அந்த அலுவலகத்துக்குச் செல்லக்கூடாது என முடிவெடுத்து அதன்படி வேறு வேலைக்கு விண்ணப்பித்து போனிலும், அடுத்த கட்டமான ஆன்லைன் இண்டேர்வியூவிலும் செலக்ட் ஆகி வேலையில் சேரும் அனுமதி கடிதத்திற்காக காத்திருக்கிறாள். எப்படியும் வேலைக்குப் போய் சேர பதினைந்து நாட்கள் இருக்கிறது. அதுவரை என்ன செய்வது என யோசித்தவள்,இப்போதைக்கு இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டாம், பதினைந்து நாட்களும் ஸ்ரீ ராமின் ஹோமிற்குச் சென்று வரலாம், புது வேலையில் சேர்ந்த பின் வீட்டில் சொல்லிக்கொள்ளலாம். இப்போது சொன்னால் ஏன்? எதற்கு என்ற பல கேள்விகளை சந்திக்க வேண்டி இருக்கும் அதை பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என  முடிவெடுத்து இருந்தாள்.

 

“அம்மா நான் ஸ்ரீ ராம் அண்ணாவோட ஹோம் வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என அனுமதி கேட்க.

 

“போயிட்டுவாம்மா. ஆனால், நேரத்தோடு வந்துவிடு” என்றார்.

 

“சரிம்மா என்றவள்” ஹாலில் மாட்டி இருந்த அர்ஜுனின் படத்திற்குப் பூவை போட்டுவிட்டு மெல்ல அந்த போட்டோவை வருடியபடி நின்றவளை, “வாங்க வாங்க” என்ற குரல் கலைத்து நினைவிு வரவழைத்தது. யார் வந்திருப்பது என திரும்பிப் பார்த்த மது ஹரி, அத்வைத்,மீரா, சுபா நால்வரும் நின்றிருப்பதைப் பார்த்ததும் ஒரு கணம் ஏதும் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாள். மதுவின் தயக்கத்தைக் கண்ட ஹரி, “என்ன மதுமிதா எப்படியிருக்கிறாய்?” என கேட்டதும்

 

“சாரி, வாங்க வாங்க உட்காருங்க. நான் நல்லாயிருக்கேன். நீங்க எல்லோரும் எப்படியிருக்கீங்க?” என விசாரித்தபடி அவர்களை நோக்கி வந்தாள்.”இதோ வருகிறேன்” எனச் சொல்லிவிட்டுத் தன்னுடைய தடுமாற்றத்தை மறைக்க கிச்சனுக்குச் சென்றாள்.

 

ஹாலில் இருந்தவர்கள் பேசிக்கொண்டிருக்க, சுபா சித்தார்த்தின் அக்கா என தெரிந்ததும் சந்த்ருவும், விமலாவும் ஆச்சர்யம் அடைந்தனர். பிறகு ஆண்கள் மூவரின் பேசும் வேறு திசையில் செல்ல பெண்கள் மூவரின் பேச்சு வேறு புறமும் சென்றது.

 

கிச்சனில் மதுவின் மனமோ இப்போது எதற்கு இவர்கள் வந்திருக்கிறார்கள்? என யோசித்தபடியே காஃபியைப் போட்டு எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். அவளுக்கு அவர்கள்; வீட்டு விசேஷத்திற்கு அழைக்க வந்திருப்பார்கள் என்ற எண்ணம் சிறிதும் வரவில்லை.

 

காஃபியை கொடுத்துவிட்டு நின்றிருந்த மதுவை, “உட்கார் மது” என மீரா தன் அருகில் அமரவைத்துக்கொண்டாள்.

 

சுபா, “என்ன மது ஆபீஸ் போகலையா”? என கேட்டதும் “இல்லை லீவ் எக்ஸ்டர்ன் பண்ணி இருக்கேன்” என்றவளை மீராவின் விழிகள் குறுகுறுவென அளவெடுத்துக்கொண்டிருப்பதைக் கவனித்த மதுவிற்கு அங்கே அமர்ந்திருப்பதே சங்கடமாக இருந்தது. ஒருவேளை சுபா தன்னைப் பற்றி வீட்டில் அனைவரிடமும் சொல்லி இருப்பாளோ என்ற எண்ணமே அவளை அமைதி இல்லாமல் செய்தது.

 

“குங்குமம் எடுத்துக்கோ மது ” என சுபாவின் குரல் அழைக்கும் வரை யோசனையிலிருந்த மது எழுந்து குங்குமம் எடுத்துக்கொண்டு சுபாவைப் பார்த்தாள். சுபா சிரித்துக்கொண்டே மதுவின் நெற்றியிலிருந்த குங்குமத்தை சரியாக வைத்தாள்.

 

மீராவும், அத்வைத்தும் தாம்பூலத்துடன் பத்திரிகையை வைத்து கொடுத்து அனைவரும் கட்டாயம் வரவேண்டும் என அழைத்தனர். அதுவரை குழம்பிக்கொண்டிருந்த மதுவிற்கு அவர்கள் வந்த காரணம் தெரிந்ததும் நிம்மதியாக இருப்பது போல தோன்றியது.

 

மதுவின் போன் ஒலிக்க, “எக்ஸ்கியூஸ்மீ” என கேட்டுக்கொண்டு எழுந்து சென்றாள்.போனில் கிளம்பிட்டேன்…, கெஸ்ட் வந்திருக்காங்க….,வந்திடுவேன்… என பேசிவிட்டு வந்தாள்.

 

சுபா மதுவைப் பார்த்து , “எங்கேயாவது வெளியே போகணுமா மது, நீ கிளம்புவதானால் கிளம்பு” என்றாள்.

 

“இல்லை பரவாயில்லை நான் மெதுவா போகிறேன்” எனச் சொல்ல

 

சுபா ஏதோ பேச விரும்புகிறாள் என புரிந்துக்கொண்ட விமலா, “நீ கிளம்பு மது” எனச் சொல்ல சரியென மது அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.

 

மது கிளம்பி சென்றதும் சுபா, “என்னம்மா, மது இப்போ எப்படியிருக்கா?”

 

விமலா, “அவ அப்படியே தான் இருக்கா சுபா. நடுவில் ஆள் கொஞ்சம் மாறினா மாதிரி இருந்தது  என நாங்க கொஞ்சம் சந்தோஷமா இருந்தோம். ஆனால், இப்போ திரும்பவும் அவ உள்ளுக்குள்ளே சுருண்டுகிட்டா” என்றார் கண்கள் கலங்க.

 

சுபா, “கவலைப்படாதீங்க அம்மா, சித்தார்த் மதுவை நல்லபடியா பார்த்துப்பான். எங்க அம்மா அப்பாவுக்கும் கூட எல்லா விஷயமும் தெரியும். அவங்களுக்கும் மது எங்க வீட்டு மருமகளா வர சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க மதுகிட்ட பேசி எப்படியாவது சம்மதம் வாங்குங்க”.

 

மீரா, “அவ இருப்பதைப் பார்த்தால் இனி, ஆபீஸ் போகமாட்டான்னு நினைக்கிறேன்.”

 

சந்துரு, “நாங்களும் அதைத் தான் நினைக்கிறோம். அவளும் ஏதும் சொல்லவில்லை. நாங்களும் ஏதும் கேட்கவில்லை. இப்போ கூட ஸ்ரீராமோட ஹோமுக்குப் போறேன்னு கிளம்பி போயிருக்கா” என்றார்.

 

ஹரி, “யாரு நம்ம அர்ஜுனோட பிரெண்ட் ஸ்ரீ ராமா?” என்றார்.

 

சந்துரு, “ஆமாம் அங்கே தான் போயிருக்கா ஏன் என்ன விஷயம் ?” என்றார்.

 

ஹரி, “ஒண்ணுமில்ல இதோ வருகிறேன்” எனச் சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றார். தன் மொபைலை எடுத்து சித்தார்த்தின் நம்பரை அழைத்து, “சித்தார்த் என் ரூம்ல ஒரு ப்ளூ கலர் சூட்கேஸ் இருக்கும் அதை நான் சொல்லும் அட்ரெஸ்ஸில் கொடுத்துவிட்டு வர முடியுமா?”என்றார். சித்தார்த்தும் சரி எனச் சொன்னதும் அட்ரஸ் சொல்லிவிட்டு நீயே நேர்ல போய் கொடுத்துவிடு, இப்போதே கிளம்பி போனால நல்லயிருக்கும்”என்றார்.

 

சித்தார்த்துடன் பேசிவிட்டு உள்ளே சென்ற ஹரி சிறிது நேரம் மதுமிதா சித்தார்த் பற்றி பேசிவிட்டு “அறுபதாம் கல்யாணத்துக்கு வாங்க பேசுவோம்” எனச் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

 

மது ஹோமிற்குச் சென்று சேர்ந்த போது ஸ்ரீராம் எங்கேயோ வெளியே சென்றிருப்பதாக அங்கிருந்த ஒருவர் சொல்ல மது, “சரி நான் குழந்தைங்க கூட பேசிகிட்டு இருக்கேன் நீங்க அண்ணன் வந்ததும் சொல்லுங்க” எனச் சொல்லிவிட்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குச் சென்று அமர்ந்தாள். அவளைக் கண்டதும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் மதுவை வரவேற்றனர்.

 

சற்றுநேரத்தில் ஸ்ரீராம் வந்து சேர்ந்ததும், மது வந்திருப்பதை சொன்னதும் “சரி நானே போய் பார்த்துக்கொள்கிறேன்” என்றவன் மது இருந்த அறைக்குச் சென்றான், மது குழந்தைகளுடன் சேர்ந்து பாட்டு பாடுவதைக் கண்டவன் சிரித்துக்கொண்டே அவளை அழைக்காமல் திரும்ப சென்றுவிட்டான்.

 

ஸ்ரீராம் தன் அறைக்கு வந்ததும் போனில் பேசிக்கொண்டு அமர்ந்திருக்கும் போது சித்தார்த் தன்னுடைய விசிட்டிங் கார்டை ஸ்ரீராமிடம் கொடுக்க சொல்லிவிட்டு வெளியிலிருந்த சேரில் அமர்ந்தான். விசிட்டிங் கார்டை பார்த்த ஸ்ரீராம், சித்தார்த், ஸ்ரிஷ்டி மல்டிமீடியா என்ற பெயரை பார்த்ததும் அட நம்ம மதுவோட எம்.டி என்று எண்ணிக்கொண்டே எழுந்து வெளியில் வந்தவன் “ஹலோ Mr. சித்தார்த் நான் ஸ்ரீராம்” என தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு உள்ளே அழைத்துசென்றான்.

 

“உங்களை பற்றி மதுமிதா சொல்லி இருக்கா. இவ்வளவு சீக்கிரம் உங்களை நான் சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை” என்றான்.

 

சித்தார்த் ஆச்சரியமாக “மதுவா மதுவை உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான் தன் குரலில் ஆவலை தேக்கி.

 

“மது இங்கே ரெகுலரா வருவாளே. எங்க ஹோமுக்காக சாரிட்டி ப்ரோக்ராம் செய்து கொடுப்பா.”

 

“ஒஹ்…, அப்படியா ஆனால், நான் வந்ததே வேற விஷயம். Mr.ஹரி பிரசாத் chief cammander in air force அவர் என்னோட அக்கா வீட்டுக்காரர். அவர் தான் இந்த சூட்கேஸை உங்களிடம் கொடுக்க சொன்னார் அதற்குத்தான் வந்தேன்”

 

“ஹரி சார் உங்க அக்கா வீட்டுக்காரரா? என ஆச்சரியமாக கேட்டான். நான் சார் கிட்ட சில புக்ஸ் கேட்டிருந்தேன் அதைத் தான் வாங்கி அனுப்பி இருக்கார். நான் ரொம்பத் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க. நான் அப்புறம் போன் செய்து பேசுறேன்” என்றான்.

 

சித்தார்த் அந்த ஹோமை பற்றி விசாரித்துக்கொண்டுத் தன் செக் புக்கை எடுத்து எழுதிக்கொண்டிருந்த போது ஸ்ரீராம் வந்துவிட்டதை தெரிந்துகொண்டு மது ஸ்ரீராமின் அறைக்குள் சித்தார்த் இருப்பதை அறியாமல் , “என்னண்ணா என்னை சீக்கிரம் வரச்சொல்லிட்டு நீங்க எங்கே போய்ட்டீங்க?” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவள் இன்னொருவர் அங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தும் “சாரி, நான் அப்புறம் வரேன்” எனச் சொல்லிக்கொண்டே திரும்ப சித்தார்த்தும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்க இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சித்தார்த், “மது நீயா.?”என ஆனந்த அதிர்ச்சியிலும், மது “சித்தார்த்” என முனகியபடி செய்வதறியாமலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிற்க ஸ்ரீராம் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.

 

இருவரின் நிலையையும் பார்த்த ஸ்ரீராம், “வா மது” என அழைத்ததும் வேறு வழி இல்லாமல் மதுவும் உள்ளே சென்றாள்.

 

“ஹலோ மது எப்படியிருக்க?” என சித்தார்த் கேட்டதும், “நல்லயிருக்கேன் என்ற மது ஸ்ரீராமிடம் “அண்ணா நான் கிளம்பறேன் நீங்க ப்ரோக்ராமுக்குத் தேவையானதை செய்துடுங்க. மீதியை நான் போன் செய்து கேட்டுக்கொள்கிறேன்” என்றாள். மது பேசுவதைப் பார்த்துக்கொண்டே இருந்த சித்தார்த்தின் பார்வை விலகாமல் அவளிடமே நின்றிருந்தது. சித்தார்த்தின் பார்வையைக் கண்ட ஸ்ரீராம் அவன் கண்களில் தெரிந்த ஆர்வத்தையும், காதலையும் கவனிக்க தவறவில்லை.

 

சித்தார்த் மதுவைப் பார்க்கும் பார்வையில் சித்தார்த்தின் காதலையும் மதுவின் விலகலையும் மனதில் குறித்துக்கொண்டான். ஆனால், மதுவிற்கே புரியாத ஒன்று ஸ்ரீராமுக்குப் புரிந்தது.

 

“மது நீ கொஞ்சம் இரு நான் உன்னிடம் பேசவேண்டும் என்றவன் சித்தார்த் கொண்டுவந்து கொடுத்த சூட்கேஸை மதுவிடம் கொடுத்து இந்த புக்ஸை லைப்ரெரியில் கொஞ்சம் அடுக்கி வைத்துவிட்டு வருகிறாயா?” என கேட்டதும் மதுவும், சரியென சூட்கேஸை வாங்கிக்கொண்டு சித்தார்த்தை ஒரு ஓரப்பார்வைப் பார்த்துவிட்டுச் சென்றாள்.

 

சித்தார்த்தும் செக்கை எடுத்து ஸ்ரீராமிடம் கொடுத்துவிட்டு “இனி, என்னோட டொனேஷன் ரெகுலரா உங்களுக்கு வரும். உங்களுக்குக்கூடிய சீக்கிரமே நல்ல செய்தி ஒன்று சொல்கிறேன். நான் கிளம்பறேன்” எனச் சொல்லி கைகொடுத்து விட்டு கிளம்ப ஸ்ரீராமும் சித்தார்த்தின் கார் வரை வந்து வழி அனுப்பினான்.

 

மது அனைத்தையும் லைப்ரரியிலிருந்து ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வளவு நேரம் சித்தார்த் எதற்கு வந்தான்? எங்கே போனாலும் என்னை தொடர்ந்து வருவதே இவனுக்கு வேலையாய் போச்சு என திட்டிக்கொண்டிருந்தவள், அவன் கிளம்புவதைப் பார்த்துவிட்டுத் தன்னிடம் ஒன்றுமே சொல்லாமல் கிளம்புகிறானே என தவித்தது. ஆனால், அந்த தவிப்பை கூட அவளால் உணர முடியவில்லை.

 

சித்தார்த்தை வழி அனுப்பிவிட்டு லைப்ரரியை நோக்கி வந்த ஸ்ரீராம், “மது கொஞ்சம் என்னோடு வா. உன்னிடம் பேசவேண்டும்.” எனச் சொல்லி அந்த காம்பௌண்டிலேயே இருந்த தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றான்.

 

மது என்ன அப்படி முக்கியமான விஷயம் இங்கே வந்து தனியாக பேசும் அளவுக்கு என எண்ணியபடி சோஃபாவில் அமர்ந்தாள். ஸ்ரீராம் காஃபி போட்டு எடுத்து வந்து மதுவிடம் ஒரு கப்பைக் கொடுத்துவிட்டு எதிரில் அமர்ந்தான். ஸ்ரீராமே ஆரம்பிக்கட்டும் என மது காத்திருந்தாள்.

 

“மது நான் நேரடியாக விஷயத்துக்கு வரேன். சுத்திவளைத்து பேச எனக்குத் தெரியாது” என்றவன் மதுவைப் பார்க்க மதுவும் ஸ்ரீராமை நேராக பார்த்தாள். “மது நீ உன் லைப் பத்தி என்ன முடிவு செய்திருக்க?” என்றான்.

 

மது புரியாமல், “நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்குப் புரியவில்லை?” என்றாள்.

 

“சரி நேராகவே உனக்குப் புரியறா மாதிரி கேட்கிறேன். உன் கல்யாணத்தைப் பற்றி என்ன முடிவு செய்திருக்க?” என கேட்டதும் மது அந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் முகமே உணர்த்தியது.

 

மது ஏதும் சொல்லாமல் தன் விரலால் கப்பின் விளிம்பில் வட்டம் போட்டுகொண்டிருந்தாள். “என்ன மது நான் கேட்ட கேள்விக்கு ஒண்ணுமே சொல்லவில்லையே?” என்றான்.

 

“நீங்க கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லணும்னு தோணலை” என்றாள்.

 

“சொல்லணும்னு தோணலையா, இல்லை என்ன சொல்வதுன்னு தெரியலையா?” என விடாமல் கேட்க

 

மது சற்று கோபத்தோடு , “உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படியே வச்சிக்கோங்க” என்றாள்.

 

“எதுக்கு மது இப்போ இவ்வளவு கோபம்? நான் என்ன தப்பா கேட்டுவிட்டேன்?”

 

“எனக்குத் தெரியும் யார் என்ன சொல்லி இருப்பாங்க, எதனால் இத்தனை நாளா இல்லாமல் திடீர்னு இன்னைக்கு நீங்க இந்த கேள்வி கேட்க காரணம் சித்தார்த் என்று எனக்குப் புரியுது. நான் ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை அதை கூட புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு.”

 

“மது எதுக்கு நீ இப்போ சித்தார்த்தை நடுவில் இழுக்கற. சித்தார்த் உன்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவே இல்லை. நானா தான் உன்னை கேட்டேன். நான் இந்த கேள்வி கேட்க சித்தார்த் தான் காரணம்னு நீயே நினைத்துக்கொண்டால் எப்படி? இப்போ நீ சொல்வதைப் பார்த்தால் இதில் என்னவோ பெரிய விஷயம் இருக்குப் போல” என்றான் மதுவை கூர்ந்து பார்த்தபடி.

 

மது தன் வாயால் தானே உளறிவிட்டோமோ என உதட்டைக் கடித்துக்கொண்டாள். ஸ்ரீராமே தொடர்ந்து, “மது அர்ஜுன் உன்னைக் கல்யாணம் செய்து கடைசிவரை இருந்து உன்னோடு வாழ்ந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். ஆனால், அது நடக்காத விஷயமா முடிந்து போச்சு. மது உனக்கு சின்ன வயசு. நீ ஒண்ணும் எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்த நூத்து கிழவி இல்லை. உனக்கும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வரணும்னா நீ ஏன் ஒரு கல்யாணம் செய்துக்கொள்ள கூடாது? அர்ஜுனோட கடைசி ஆசையும் அதானே?” என்ற போதே ஸ்ரீராமின் குரல் கம்ம, மதுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

தன்னை சுதாரித்துக்கொண்ட ஸ்ரீராம், “மது நீ ஏன் சித்தார்த்தை….” என்று சொல்ல ஆரம்பித்ததும், “நோ, நோ…”என்று தலையை அசைத்து மறுத்தாள்.

 

ஸ்ரீராம், “மது வீணா பிடிவாதமா இருக்காதே, இந்த சித்தார்த் உன்னை ரொம்பவே நேசிக்கிறான், அது அவன் உன்னைப் பார்த்த அந்த பார்வையிலேயே தெரியுது. நிதானமா யோசி மது… உனக்காக, உன்னை சேர்ந்தவங்களோட சந்தோஷத்துக்காக…. யோசித்து நல்ல முடிவாக எடு. எனக்குத் தெரிந்து சித்தார்த் இஸ் எ வெரி குட் சாய்ஸ்.” என முடித்துவிட்டு மதுவைப் பார்த்தான்.

 

மது எதற்கும் அசையாமல் அமர்ந்திருந்தாள். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்பது போல ஸ்ரீராமும் அமர்ந்திருந்தான். மது எழுந்தாள்.”நான் கிளம்பறேன் அண்ணா. அதுக்கு முன்னால் ஒன்று சொல்லிவிட்டுப் போறேன். நான் என் மன நிம்மதிக்காக அடிக்கடி இங்கே வந்து போவது உங்களுக்குப் பிடிக்கலைன்னா நேரடியாக சொல்லிடுங்க. இப்படி என கல்யாணத்தைப் பற்றி பேசி நான் இங்கே வருவதைத் தடுத்து நிறுத்த பார்க்காதீங்க” எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

 

ஸ்ரீராம் மது செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -62

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.அத்தியாயம்—62   தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *