Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -63

Sponsored

Shenba Ninnai Saranadainthen -63

அத்தியாயம்—63

 

“ஹே..!! மது வாவா, வாங்கண்ணா, எப்படியிருக்கீங்க?” நான் நல்லாயிருக்கேன் வித்யா. நீ எப்படியிருக்க?” என்றான் புன்னகையுடன். “நல்லாயிருக்கேன், வாங்க. அம்மா அண்ணாவும், மதுவும் வந்தாச்சு” என  குரல் கொடுத்தபடி என உள்ளே அழைத்து சென்றாள்.

 

“வாங்க வாங்க” என அழைத்தபடி ராஜியும், விமலாவும் வந்தனர். “என்ன சித்தார்த் இப்போ உன் உடம்பு எப்படியிருக்கு? நல்லாயிருக்கியா?மது உன்னை நல்லா பார்த்துக்கொள்கிறாளா?” என தொடர்ந்து கேள்விகளால் அவனை துளைக்க அனைத்திற்கும் சிரித்தபடி பதில் சொல்லிக்கொண்டிருந்தவனை, இருவருக்குள்ளும் இருந்த பாசத்தை மௌன புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

மதுவின் தோளில் இடித்த மேகலா, “என்னடி இப்படி வைத்தகண் வாங்காமல் சைட் அடிக்கிற” என் மதுவின் காதில் கிசுகிசுக்க, மது ஒன்றும் சொல்லாமல் ஒரு சிறு புன்னகையுடன் பேசாமல் இருப்பதைப் பார்த்த மேகலா வித்தியாசமாக மதுவைப் பார்த்தாள்.

 

மேகலாவின் பார்வையை புரிந்து கொண்ட மது, மது அவசரப்பட்டு உன் மேல் மற்றவர்களுக்குச் சந்தேகம் வருவது போல நடந்துகொள்ளாதே. நீயும் இங்கே இருக்க போவது கொஞ்சம் நாள் தான் அதனால் எல்லோருடனும் முடிந்த வரை சாதாரணமாகவே பழக முயற்சி செய். இனி, வாழ்நாளெல்லாம் இதை நினைத்து தான் உன் வாழ்க்கையை ஒட்டவேண்டும் என நினைத்தபடி மேகலாவைத் திரும்பிப் பார்த்தாள். மேகலா மதுவின் முகத்தில் தெரிந்த பலவிதமான முகபாவத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் மட்டும் அல்ல சித்தார்த்தும் தான்.

 

சித்தார்த் கிளம்பும் நேரம் மதுவை அழைத்து, “என்ன மது ஒரு மாதிரி இருக்க? இந்த விரதமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். சாமிகிட்ட ஒரு சாரி சொல்லிக்கலாம். நான் ஈவ்னிங் வந்து கூட்டிக்கொண்டு  போகிறேன். நீ தயாராக இரு” என்றான். அவனது பதில் ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் காரியமே கெட்டுது என எண்ணிக்கொண்டு, “அதெல்லாம் வேண்டாம். இந்த விரதம் உங்களுக்காக. நீங்க நல்லாயிருக்கணும் என நான் ஏற்றுக்கொண்டது. கட்டாயம் நான் அதை செய்தே ஆக வேண்டும்” என்று சொன்னாள்.

 

ஒருமுறை அவளைப் பார்த்தவன் சரி நான் கிளம்பறேன் ஈவ்னிங் வந்துவிட்டுப் போறேன். நாளைலயிருந்து என்னை வரக்கூடாதுன்னு சொல்லிட்ட அட்லீஸ்ட் போனாவது செய்யலாமா?” என கேட்டதும் “ம்ம்..” என தலையாட்டிய தன் மனைவியைக் காதலுடன் பார்த்துவிட்டு அவள் கையை பற்றி முத்தமிட்டுவிட்டு கிளம்பினான். கார் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்தபடி நின்றிருந்தாள்.

 

அன்று மாலை நான்கு மணிக்கெல்லாம் சித்தார்த் ஆபிஸிலிருந்து வந்துவிட்டான். விமலாவிடம் அமர்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தான். சிறிதுநேரம் கழித்து எழுந்து அறைக்குச் சென்றான். தீபக்கும் சித்தார்த்தை காண அறைக்குச் சென்றான். மது இருவருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்துவிட்டு கிழே சென்றுவிட “என்ன சித்தார்த் திடீர்னு உங்க பொண்டாட்டியை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போக மனசு வந்திருக்கு” என்றான் தீபக்.

 

“அட நீ வேற சும்மா இருப்பா. என்னவோ விரதமாம். நான் குணமாகிட்டா செய்றேன்னு வேண்டிகிட்டாளாம். இவளை யாரு இப்படியெலாம் விரதம் இருக்க சொல்லி வேண்டிக்கசொன்னது. கோவிலுக்குப் போயிட்டு வர வேண்டியது தானே” என எரிச்சலுடன் சொன்னான்.

 

சிரித்த தீபக், “என்ன சித்தார்த் உனக்காக அவ வேண்டிக்கொண்டிருக்கா. இதுலயிருந்து தெரியல அவ உன்னை எவ்வளவு காதலிக்கிறா என்று. சந்தோஷப்படுப்பா. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல அவங்க அண்ணன் சட்டையை பிடித்து எப்படி கத்தினா தெரியுமா? அப்போதே அவளோட காதலை நாங்க புரிந்து கொண்டோம். என்ன பதினைந்து நாள் தானே கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டுப்பா” என்றான்.

 

“வேற வழி, அதுவும் பார்க்க கூட வரக்கூடாதாம். இதெல்லாம் அதிகமா இல்லை. மனுஷனோட பீலிங்க்ச புரிஞ்சிக்கவே மாட்டேன்னா எப்படி?” என புலம்பினான்.

 

“அப்போ ஏம்பா இங்க உட்கார்ந்து இருக்க உன் பொண்டாட்டி கிட்ட பேசிக்கொண்டிரு” எனச் சொன்ன தீபக் எழுந்து சென்றான். சமையலறையில் இரவு உணவுக்குத் தயார் செய்து கொண்டிருந்த ராஜி, விமலாவிற்கு மது உதவி செய்துகொண்டிருந்தாள்.

 

“மது தேவகி பெரியம்மா போன்ல சித்தார்த் கிட்ட பேசிட்டு இருக்காங்க. நீ போய் பேசிவிட்டு பொறுமையாக வா. மீதி வேலையை அம்மா பார்த்துக்கொள்வார்கள்” என்றான். “நானும் அதான் சொல்லிக்கொண்டிருக்கேன். போதும் நீ கொஞ்சநேரம் உட்கார்னு ஆனா எங்கே சொல்வதை கேட்டா. நீ போ மது நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார் விமலா.

 

“சரி அத்தை” எனச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள். சித்தார்த் கட்டிலில் சாய்ந்த படி அமர்ந்திருந்தான். உள்ளே வந்த மது, “என்னங்க அத்தை போன் பேசி வைத்துவிட்டார்களா?” என கேட்டதும் தீபக் தான் அனுப்பி இருக்கிறான் என நினைத்துக்கொண்டே சிரித்தபடி, “வச்சிட்டாங்க” என்றான்.  “என்ன சொன்னாங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?” என கேட்டாள்.

 

“ம்ம்… சொன்னாங்களே என்னடா இன்னும் பதினைந்து நாள் கழித்து தான் உன் பொண்டாட்டியை பார்க்க போற அதுவரை தாங்கறா மாதிரி ஸ்ட்ராங்கா வாங்கிட்டு வான்னு சொன்னாங்க” என் சொல்லிவிட்டுக் கண்ணை சிமிட்டி சிரித்தவனை இடுப்பில் கை வைத்து முறைத்துவிட்டு “ஸ்ட்ராங்கா தானே கொடுத்துவிட்டால் போச்சு” என கை முட்டியை மடக்கி பாக்சிங் போடுவது போல வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தபடி, “போனா போகுது சின்ன பையனாசேன்னு விடறேன்” எனச் சொல்லிவிட்டுக் கதவை நோக்கி நடக்க சித்தார்த் விரைந்து சென்று கதவை தாளிட்டான்.

 

தாளிட்டவன் திரும்பி மது எதிரில் வந்து நின்றான். என்ன என்பது போல புருவத்தை உயர்த்தினான். “விளையாடாதீங்க சித்து. நான் கீழே போறேன்” என அவனை சுற்றிக்கொண்டு செல்ல முயல அவள் இடுப்பை வளைத்து அருகில் இழுத்தான். “விடுங்க சித்து இதுக்குத்தான் உங்களை வரவேண்டாம் என்று சொன்னேன்” எனச் சொன்னாள்.

 

“நீ சொல்லுவ ஆனால், நான் கேட்கமாட்டேன். என்னைப் போய் சின்ன பையன்னா சொல்ற இந்த சின்ன பையன் என்னவெல்லாம் செய்றேன்னு பாரு” என்றபடி மதுவின் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான். மதுவின் கரங்கள் தானாக அவனை இறுக அணைத்தது. அது எவ்வளவு நேரம் நீடித்ததோ விலகும் போது இருவருக்குமே மூச்சு வாங்கியது.

 

“ஹே… மது எப்படியிருந்தது? என்னவோ நான் மட்டும்தான் ஆசையாக இருப்பது போல பிகுப் பண்ண” என ரகசிய குரலில் சொல்லிக்கொண்டே அவள் கழுத்தில் முத்தமிட்டவனை வேகமாக தள்ளிவிட்டுவிட்டுச் செல்ல முயன்றவளை இழுத்து தன் மீது சாய்த்துக்கொண்டான். “கொஞ்சநேரம் இருடீன்னா ரொம்ப தான் பிகுப் பண்றியே?” என்றவன் கட்டிலில் அமர்ந்து தன் மீது சாய்த்துக்கொண்டு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

 

சித்தார்த் இரவு உணவையும் அங்கேயே முடித்துக்கொண்டு கிளம்பினான். அவ்வளவு நேரம் சாதாரணமாக நடந்துகொண்டவளால் அதற்கு மேல் முடியவில்லை. கண்களில் கண்ணீர் கரைகட்டி நின்றது. அவளது முகத்தைப் பார்த்தனரோ என்னவோ யாரும் சித்தார்த்தை வழி அனுப்ப வெளியே வரவில்லை.

 

கார் கதவைத் திறந்துவிட்டு, “மது” என அழைத்தபடி திரும்பிய சித்தார்த்தை “சித்து” என இறுகக் கட்டிக்கொண்டு அழுதாள்.

 

“மது என்ன இது பதினைந்து நாள்தானே நிமிஷமா ஓடி போய்விடும். இங்கே பாரு நிமிர்ந்து என்னைப் பாருடா” என அவள் முகத்தைப் பற்றி நிமிர்த்தினான்.

 

“உங்களை விட்டு நான் தனியாக எப்படி சித்து இருப்பேன்?” என அழுதவளை “தினம் போன் செய் நானும் போன் செய்கிறேன். கண் எதிரில் இருக்கும் வரை கஷ்டமாதான் இருக்கும். பார்க்காமல் இருந்தா அந்த அளவுக்குத் தெரியாதுடா. ஓகே.இப்போ கண்ணை துடை” என அவனே துடைத்துவிட்டு, “நான் கிளம்பறேன்” என அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு கிளம்பினான்.

 

வீட்டிற்குச் சென்றதும் சிறிதுநேரம் அவளுடன் மொபைலில் பேசினான். சமாதானம் சொல்லிவிட்டுப் படுத்தவனால் தூங்கவே முடியவில்லை. எங்குப் பார்த்தாலும் மதுவே நிற்பது போல தோன்றியது. கட்டிலின் மேல்புற ஷோகேசில் இருந்த மதுவின் போட்டோவை எடுத்து அணைத்தபடி படுத்துக்கொண்டான்.

 

அடுத்துவந்த நாள்களை மது தான் செய்ய எண்ணி இருந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். முதல் வேலையாக சித்தார்த் தன் பெயரில் மாற்றி எழுதி இருந்த கம்பெனி ஷேர்களை சித்தார்த்தின் பெயரிலேயே மாற்றினாள். தான் கம்பெனி டைரக்டர் பதவியை ராஜினாமா செய்வதாக் சித்தார்த், ஜீவா, ரமேஷ் மூவருக்கும் தனி தனியாக கடிதம் எழுதினாள்.

 

சித்தார்த் ஆரம்பித்து கொடுத்த பேங்க் அக்கௌன்ட்டை முடித்துவிட்டு அந்த பணத்தை அப்படியே டிடி எடுத்து அதையும் அந்தக் கவரில் வைத்தாள். கடைசியாக வக்கீல் ஒருவரின் உதவியுடன், விடுதலை பத்திரம் ஒன்றையும் எழுதி அதில் தனக்கு சித்தார்த்துடன் வாழ விருப்பமில்லை. அதனால் தான் பிரிந்து செல்வதாகவும், அவன் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள சம்மதிப்பதாகவும் அந்த வரிகளை சொல்லும் போது உடைந்து போய் அழுதவளை வக்கீலே ஆச்சர்யமாகவும், சற்று கவலையுடனும் பார்த்தார். தன்னால் அந்த வரிகளை எழுத முடியாது என உணர்ந்து எழுதி கொடுக்க சொல்லி வாங்கி வந்தாள். வீட்டிற்கு வந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். பிறகு நடுங்கும் விரல்களால் அந்த விடுதலை பாத்திரத்தில் கையெழுத்து போட்டாள்.

 

எல்லாமே என் சித்துக்காக தானே என தன்னை தேற்றிக்கொண்டாள்.

 

மறுநாள் மாலை “அத்தை நாளன்னைக்கு என் ப்ரெண்ட் ஒருத்திக்குத் திருநெல்வேலியில் கல்யாணம். நான் போய் வரலாம்னு இருக்கேன்” என்றாள் ராஜியிடம், “நீ தேவகி அக்காவிடம் சொல்லிவிட்டாயா?” என்றார். “காலைலேயே சொல்லிட்டேன் அத்தை. அத்தையும் சரி சொல்லிட்டாங்க. நானும் என் பிரெண்ட்ஸ் இன்னும் 2 பேர் சேர்ந்து போய் வர இருக்கிறோம்.”

 

“சரி போய் வா நான் மாமாவிடம் சொல்லிக்கொள்கிறேன்.”தேங்க்ஸ் அத்தை” என்று ராஜியைக் கட்டியணைத்து முத்தமிட்டுவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.

சித்தார்த்திற்குப் போன் செய்து தான் சென்றுவர இருப்பதாக கூற, சற்று யோசித்த சித்தார்த், சம்மதம் சொன்னான்.

 

மது சிங்கப்பூர் கிளம்ப வேண்டிய நாள். வீட்டிற்குச் சென்று அனைவரையும் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் போல தோன்ற,காலையில் சித்தார்த்துக்குப் போன் செய்தாள். மறுநாள் காலையில் சித்தார்த்திற்கு  மது போன் செய்து பேசிவிட்டுத் தான் கிளம்புவதாக கூறிவிட்டு மீண்டும், “நான் போறேன் சித்தார்த்” என வந்த கண்ணீரை அடைக்கியபடி சொன்னாள். “என்னடா மது நாளைக்கு ஒரு நாள் தானே நடுவில் நாளை மறுநாள் ஈவ்னிங் உன்னைப் பார்க்க ஓடிவந்திடுவேன் இல்ல. நீ காலையில் வந்துவிடுவாய் இல்ல” என கேட்டுக்கொண்டதற்கு ஏதும் சொல்லாமல் அவன் எத்தனை மணிக்கு வீட்டிற்கு வருவான் என கேட்டுக்கொண்டு சற்றுநேரம் வேறுகதைகள் பேசிவிட்டுப் போனை வைத்தாள்.

 

அவன் வருவதற்குள் தான் சென்று அனைவரையும்  பார்த்துவிட்டு இந்தக் கவரையும் அவன் பார்வையில் படும்படி வைத்துவிட்டு வந்துவிடலாம் நேத்ராவின் திருமணத்திற்கும் தான் இருக்க முடியாது என எண்ணிக்கொண்டு  கவரையும் எடுத்துக்கொண்டு நேத்ராவிற்கு நல்லதாக அவளுக்குப் பிடித்த நிறத்தில் பட்டு புடவையும், பேர்ல் செட் ஒன்றும் குழந்தைகளுக்கும் டிரஸ்வாங்கிக்கொண்டு சித்தார்த் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.

 

மதுவைப் பார்த்ததும் அவளை ஆவலுடன் சூழ்ந்து அமர்ந்துக்கொண்டு பேசத்தொடங்கினார்கள். மது தான் நேத்ராவிற்கு வாங்கிய அன்பளிப்பைக் கொடுத்ததும் நேத்ராவின் மலர்ந்த முகத்தைப் பார்த்து சந்தோஷம் அடைந்தாள். அதே போல குழந்தைகளுக்கும் டிரஸ் வாங்கி எடுத்துக்கொண்டு வ்ந்திருந்ததை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு மற்றவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஆர்த்தி மதுவின் பாகில் இருந்து மொபைலை எடுத்து விளையாடிக்கொண்டிருக்க அதைக் கவனிக்காமல் பெரியவர்களின் பேச்சு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

 

சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றவளின் பின்னாலேயே ஆர்த்தியும் உள்ளே வந்ததைக் கவனிக்க வில்லை. வார்ட்ரோபை திறந்து, சித்தார்த்தின் t ஷர்ட் ஒன்றையும் எடுத்துக்கொண்டு அங்கேயே அவன் கண்ணில் படுவது போல கொண்டுவந்த கவரை வைத்துவிட்டுக் கட்டில் இருந்த ஷோகேசில் இருந்த சித்தார்த்தின் போட்டோவை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அழுவதை குழந்தை ஆர்த்தி பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.

 

கண்ணை துடைத்துக்கொண்டு t-ஷிர்ட்டையும், போட்டோவையும் தன் பாகில் வைத்துக்கொண்டு  திரும்பிய மது ஆர்த்தி நின்று தன்னையே பார்ப்பதை உணர்ந்த மது, அவசரமாக முகத்தை திருத்திக்கொண்டு, “ஆர்த்தி குட்டி” என கையை நீட்டினாள். “சித்தி …! ஏன் சித்தி அழறீங்க?”என்றதும் “ஒண்ணும் இல்லடா தூசு விழுந்துவிட்டது”என சமாளித்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு, ஆர்த்தியையும் அழைத்துக்கொண்டு கீழே வந்தாள்.

 

ஈவ்னிங் டிபனை முடித்துக்கொண்டு மது கிளம்பினாள். மது சென்ற அடுத்த பத்து நிமிடத்தில் சித்தார்த் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். “அண்ணா கொஞ்சம் முன்னாடி வந்ந்திருக்க கூடாது அண்ணி வந்திருந்தாங்களே” என்றாள் நேத்த்ரா.”மதுவா நான் காலையில் பேசினேனே ஒண்ணும் சொல்லவில்லையே” என ஆச்சர்யமாக் கேட்டான். “அது மட்டும் இல்ல எனக்கு ப்ரெசென்ட் வாங்கி வந்து கொடுத்தாங்களே என குழந்தை போல சிரித்துக்கொண்டே கொண்டுவந்து காட்டினாள்.

 

தேவகியும் சொல்ல யோசனையுடன் தன் அறைக்குச் செல்லும் போது, “சித்தப்பா, சித்தி எனக்கு டிரஸ் வாங்கி வந்து கொடுத்தங்களே, என கொண்டு வந்து காட்டவும் சித்தார்த் புருவத்தை சுருக்கி என்ன நாம இல்லாத போது வந்து போயிருக்கா. நேத்ராக்கு குழந்தைகளுக்கு டிரஸ் வாங்கி வந்து கொடுத்திருக்கா, என நினைத்துக்கொண்டே ஆர்த்தியுடன் பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

 

அதேநேரம் ஆர்த்தியின் ப்ராக் பாக்கெட்டில் இருந்த மதுவின் மொபைல் ஒலித்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என பார்த்த சித்தார்த் ஆர்த்தியின் பாக்கெட்டிலிருந்து  மொபைலை எடுத்தான். அதற்குள் மொபைல் தன் அழைப்பை நிறுத்தி இருந்தது.”என்னடா இது சித்தி போனை விட்டுட்டுப் போய்ட்டாங்களா? அதை நீங்க எடுத்து வச்சிகிட்டீங்க்ளா?” என சிரித்துக்கொண்டே கேட்டவன் மிஸ்ட் காலில் இருந்த எண்ணை பார்த்தான்.

 

அயல்நாட்டு அழைப்பு என புரிந்துக்கொண்டான். ஆனால், யார் என அவனுக்குத் தெரிய வில்லை. சரி என் முகத்தைக் கழுவிக்கொண்டு வருவதற்குள் மேலும் இரண்டு முறை கால் வந்து நின்றுவிட்டது. ஆர்த்திக்குட்டி சித்தி வேற என்ன சொன்னாங்க?” என்றான். குழந்தையும் பார்த்ததை மறைக்காமல், “சித்தி உன் போட்டோ பார்த்து அழுதாங்க. அப்புறம் உன் டிரஸ் அந்த போட்டோ எடுத்து பாகில்  வச்சிக்கிட்டாங்க” எனச் சொல்ல சொல்ல சித்தார்த்தின் முகம் வெகுவாக் குழம்பியது. மீண்டும் மொபைல் ஒரே ரிங்கில் கட்டாகிவிட, இந்த முறை சித்தார்த்தே அந்த எண்ணை தொடர்புக்கொண்டான்.

 

சித்தார்த் ஹலோ சொல்லும் முன், “ஏண்டி மது, எத்தனை முறை போன் செய்வது. நான் கிளம்பும் முன் எனக்குப் போன் செய்ய சொன்னேன் இல்ல. நான் முழுசா பேசுவதை கேட்டுவிட்டு அப்புறம் பேசு. நான் கரெக்டா ஏர்போர்ட் வந்துவிடுகிறேன். இமிக்ரேஷன் முடிச்சிட்டு நீ வா. நான் உன்னை ரிசீவ் பண்ணிக்கிறேன். மத்ததை நான் இங்கே பார்த்து உனக்கு வேண்டிய எல்லாம் ஏற்பாடும்  செய்துவிட்டேன்” எனச் சொல்ல சொல்ல சித்தார்த்தின் மனம் கோபத்திலும் ஆத்திரத்திலும் துடித்தது. மதுவின் தோழி பேசிக்கொண்டிருக்கும் போதே மொபைல் அணைத்தவன்  அவள் தன் மாமா வீட்டிற்குச் சென்ற நாள் முதல் நடந்த ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்தவனுக்கு ஒன்றுக்கொன்று முரணாக தோன்றியது. அப்படியானால் அவ கல்யாணத்துக்குப் போகவில்லை என்னைஇவிட்டு முழுதுமாக போக போகிறாளா? பிறகு எதற்கு இங்கே வந்தாள் என எண்ணி கண்களால் ரூமை அளந்தான். ஏதோ தோன்ற வார்ட்ரோபை திறந்தவன் கண்களில் பட்ட கவரை எடுத்து பிரித்தான்.

 

டிடி, ராஜினமா கடிதம், என ஒவ்வொன்றாக பார்க்க பார்க்க கடைசியாக விடுதலை பத்திரத்தை எடுத்து படித்தவனின் கண்களில் தெரிந்த கோபமும், ஆத்திரமும், கையில் கையிலிருந்தவற்றை தூக்கி எறிந்தான். கண்ணில் கோப தீ தெரிய ஒரு வெறியுடன் விடுதலை பத்திரத்தை மட்டும் கவரில் போட்டு எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினான்.

 

“மது பத்திரம் பார்த்து போய் வா, ரெண்டு நாள் தானே நாளைன்னைக்குக் காலையில் வந்துவிடுவாய் தானே, ஒன்றாகவே போயிட்டு ஒன்றாகவே வாங்க. போய் சேர்ந்ததும், போன் செய், நைட்டும் போன் பண்ணு. அதை செய்யாதே, இதை செய்யாதே” என ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்ல மது செயற்கையாக சிரித்தபடி நின்றுகொண்டிருந்தாள். விமலா வியர்த்திருந்த மதுவின் முகத்தைத் தன் முந்தானையால் துடைத்துவிட்டதும், அவளையும் மீறி கண்ணீர் வர சூட் கேசை எடுப்பது போல குனிந்துக்கொண்டாள்.

 

“கொடு மது நான் கொண்டு வருகிறேன்” என ராஜேஷ் வாங்கிக்கொண்டான். மது அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு நா தழு தழுக்க, “நான் போய்வருகிறேன்” என அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்தாள். கடவுளே இத்தனைப் பேர் சந்தோஷத்திலும் மொத்தமாக அழித்துவிட்டுப் போகிறேனே என்னை மன்னித்துவிடு. என எண்ணிக்கொண்டு  வாசலை நோக்கி நடந்தவளின் கண்களில் வேகமாக சித்தார்த்தின் கார் வந்து நின்று கோபத்துடன் வரும் அவன் முகத்தையும் அவன் கையிலிருந்த கவரும் கண்ணில் பட அதிர்ந்து நின்றாள்.

 

புயலென விட்டிற்குள் நுழைந்த சித்தார்த்தை அனைவரும் பார்க்க ராஜேஷ், “வா சித்தார்த், என்ன மதுவை வழி அனுப்ப வந்திருக்கிறாயா?”என சிரித்துக் கொண்டே கேட்டுக்கொண்டிருக்க, சித்தார்த் மதுவை முறைத்துக்கொண்டே அவளது திகைத்த முகத்தைப் பார்த்ததும் மதுவைப் பளாரென ஓங்கி கன்னத்தில் அறைந்தான். அவன் உள்ளே நுழைந்ததுமே திகைத்துப்போன மது அவனுடைய இந்த அதிரடி நடவடிக்கையால் மேலும்  திகைத்தாள்.

 

அவளை வழியனுப்ப ஹாலில் கூடியிருந்த அனைவரும் திகைத்து போயினர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட அனைவரும் நாம் இதில் தலையிடுவது நல்லதல்ல, அவர்கள் இருவரும் தனியாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டியது இது என்று உணர்ந்தவர்போல பார்வைகளை பரிமாறி, அனைவரும் அகன்றனர். இருந்தாலும் ஆளுக்கொரு கோணத்தில் இருந்து அவர்களைக் கண்காணிக்க தவறவில்லை.

 

“சே, நானும் பொறுத்து பொறுத்துப் போகிறேன், என்னோட பொறுமையா ரொம்பவே சோதிக்கிறே நீ, இத்தனை நாளா நினைக்கவில்லை. ஆனால்,  இப்போது  நினைக்கிறேன் உன்னை ஏன் தான் பார்தோமோ என்று” என வெறுப்புடன் அவளைப் பார்த்து கூறினான்.

 

திகைத்து விலகாமலேயே நின்றிருந்தவள், ஈனஸ்வரத்தில், “சித்தார்த்” என்று அழைக்க,

 

“என்ன சித்தார்த்?” ஏதாவது புது கதை வச்சிருக்கியா எனக்குச் சொல்ல”என்று உருமியவன்  இதற்கு என்ன அர்த்தம் என்று கையிலிருந்த கவரை அவள் முன் ஆட்டினான்.

 

ஒரு பயந்த பார்வையுடன் மலங்க மலங்க விழித்தவள் என்ன சொல்வது என்று புரியாமல் திகைப்புடன் நிற்கவும், மீண்டும் “சே” என்று ஒரு தலையசைவுடன் சோபாவில் போய் தொப்பென அமர்ந்தான். அவனை எப்படி அணுகுவது என்று புரியாமல் ‘மெதுவான குரலில், “சித்து” என்று அழைத்தவளை தீயென விழித்துப் பார்த்தவன் கண்களில் அவள் கன்னத்தில் இருந்த அவனது விரல் அடையாளமும்பட்டது.

 

வேகமா அடிக்கிறகாற்று  கூட, “உன்னை துன்புறுத்தக்கூடாதுன்னு நினைசிருந்தேனே பாவி!!, நீ பாவம் செய்து என்னையும் பாவியாக்கிட்டியே  உன்னை அடித்தது இங்க வலிக்குதுடி”ன்னு நெஞ்சை தொட்டு காட்டினான்

 

அவன் அருகே சென்று, அவன் தலைமுடியை கோதி தன்னோடுச் சேர்த்து அணைத்துக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பு இருந்தாலும் அவனை நெருங்கி தன் எண்ணத்தை நிறைவேற்ற தைரியம் இல்லாமல் நின்றவள்,

 

“முதல்ல என்னைக் கொஞ்சம் சொல்ல விடுங்க சித்து’ என்றாள். “ஓகோ, மேடம் இதுக்கு விளக்கம் வேற விளக்கம் வச்சிருக்கிங்களா?சொல்லுங்க கேட்கிறேன்” என்றான். நக்கலாக.

 

“ப்ளிஸ் சித்து” என்றவளை “என்னை அப்படி கூப்பிடாதடீ. உன் மனசு முழுக்க காதலோடு கூப்பிடுகிறாய் என தான் இத்தனை நாளாக நினைத்திருந்தேன். ஆனால், இன்னைக்குத்தான்டீ புரிந்துக்கொண்டேன் உன் மனசு முழுக்க விஷம் என்று” என இரைந்தான்.

 

அவள் பரிதாபமாக விழித்து, ப்ளிஸ் என்று வாயசைவில் சொல்லவும், ஒரு வேதனையான பாவனை அவன் முகத்தில் படிந்தது. சொல்லு என்பது போல அவன் கையசைவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

 

“உங்க நன்மைகாகத்தான் இப்படிச் செய்தேன்” என்றதும், என்னது என்பது போல அவன் ஒரு புருவத்தை நக்கலாக தூக்கினான்.

 

“நிஜமாவேதான் சொல்றேன், சி…..” என்று ஆரம்பித்து விட்டு மொட்டையாக, ஒரு மரத்த குரலில் நான் சொல்வதைச் சொல்லிவிடுகிறேன் அப்புறம் உங்க இஷ்டம் என்று சொன்னவள், மட மட வென்று தன் முடிவிற்கான  காரணத்தைச் சொல்லி முடித்தாள்.

 

அவள் பேச பேச வேறு வேறு பாவனைகள் அவன் முகத்தில் வந்து போயின. பேசி முடித்ததும் “நிறுத்துடீ” என்று எழுந்து நின்று இரைந்தவன்,அவளுடைய விடுதலை பத்திரத்தை எடுத்து அவள் முகத்தில் விசிறியடித்து, “இதில் எப்போது நீ கையெழுத்து போட்டாயோ அப்பவே நான் செத்துட்டேன்” என்று உச்சஸ்தானியில் உறுமவும்,
ஒரு நிமிடம் தலை கிறுகிறுக்க விழப்போனவள் தன்னை சமாளித்துக்கொண்டு “சித்து” என்று ஒரு பெரிய அலறலுடன் ஓடி வந்து அவன் காலடியில் விழுந்தாள். “வேண்டாம் வேண்டாம் உங்கள் வாயால் அப்படி ஒரு வார்த்தைச் சொல்லாதீர்கள். இந்த வார்த்தையை கேட்கவா நான் உயிரோடு இருக்கேன். என்னைக்குமே நீங்க நல்லாயிருக்கணும் என்று தான் நான் நினைக்கிறேன். அதற்காக தானே என் உயிராய் நினைத்துக்கொண்டிருக்கும் உங்களை விட்டு பிரிந்து போகவேண்டும் என நினைத்தேன். கடைசியில் உங்க வாயாலேயே இந்த வார்த்தையை கேட்கவா நான் உயிரோடு இருக்கவேண்டும். ஐயோ அம்மா என்னால் தாங்க முடியலையே” என்று கதற ஆரம்பிக்கவும்,பாறையாக இறுகி இருந்த அவன் நெஞ்சம் கற்பூரமாய் கரைய தொடங்கியது. அவன் கோபம் கொஞ்சம் குறைந்தது, அவள் கதறல் நிற்காமல் தொடர ஒரு நேரத்தில் அவன் அவள் மேல் இது வரை வைத்திருந்த காதலே வென்றது.

 

அவளை மெல்ல தூக்கியவன், மெதுவாக அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தான். அவனும் அருகே அமர்ந்து, ‘ மது, நீ என்னுடன் இருந்து எவ்வளவு சிக்கிரம் நான் செத்து போனாலும் எனக்குச் சந்தோஷம்தான். ஆனால், நீ என்னை பிரிந்து போனால் அந்த நொடியே நான் பிணம் தான்” என்று சொல்ல அவன் வார்த்தைகளை கேட்ட மது வேகமாக தலையை ஆட்டி, அவன் வாயை பொத்தியவள், “அப்படியெல்லாம் பேச்சுக்குக்கூட சொல்லாதீர்கள் சித்து” எனச் சொன்னவள் அதற்கு மேல் கதற அவள் உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றாக பெருக்கெடுத்தது. அப்படியே சரிந்து சோபாவை விட்டு இறங்கியவள் அவன் மடியில் முகம் புதைத்து தன் அழுகையை தொடர்ந்தாள்.

 

கண்ணை மூடி சோபாவின் பின்புறம் சாய்ந்த, சித்துவின் கரங்கள் அவள் முதுகை ஆறுதலாக நீவிக்கொடுத்தான். மது சித்தார்த்தின் காலடியிலேயே மயங்கி சரிந்தாள்.

 

தன் மடியிலிருந்து நழுவி விழுவதை உணர்ந்த சித்தார்த் மதுவின் நிலயைக் கண்டதும், “மது….மது…. இங்கே பாரும்மா மது கண்ணை திற மது ப்ளீஸ்… மது கண்ணை திறந்து என்னைப் பாரு மது” என செய்வதறியாமல் திகைக்க சித்தார்த்தின் சத்தம் கேட்டு ஓடிவந்தனர்.

 

ஆளாளுக்கு அவளை  கன்னத்தில் தட்டியும், தண்ணீரில் முகத்தை துடைத்தும் மயங்கியவள் அசைந்துகொடுக்கவே இல்லை. அதற்குள் தீபக் டாக்டருக்குப் போன் செய்து வரவழைத்தான். அதற்குள் சித்தார்த் தன்னையே திட்டிக்கொண்டு  தனக்குள்ளே உடைந்து நொறுங்கி போனான்.

 

டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, “கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர். சித்தார்த் நீங்க அப்பா ஆக போறீங்க” என டாக்டர் சொல்ல அவ்வளவு நேரமும், என்னவோ ஏதோவென நினைத்துக்கொண்டிருந்தவன், இந்தச் ச்ந்தோஷ செய்தி கேட்டதும், உலகத்தையே ஜெயித்தது போலயிருந்தது. ரொம்ப வீக்கா இருக்காங்க. நல்ல சத்துள்ள ஆகாரமாக கொடுங்க. ரொம்ப அதிர்ச்சியிலிருந்திருக்காங்க அதான் மயக்கமா இருக்காங்க இன்னும் கொஞ்சம் நேரத்தில் தெளிந்துவிடும்” எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

 

டாக்டர் சென்றதும் ஆளாளுக்கு சித்தார்த்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டுச் சித்தார்த்தை கிண்டல் செய்துக்கொண்டிருந்தனர். அனைவரையும் சமாளித்துவிட்டு வந்த சித்தார்த் தன் வீட்டிற்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்ல தேவகி உடனே மதுவைப் பார்க்க வருவதாக சொன்னார். சித்தார்த்தோ தானே நாளை மதுவை வீட்டிற்கு அழைத்து வருவதாகவும், மயக்கத்தில் இருக்கிறாள் என்றும், சொல்லி அவரை சமாதான படுத்தினான்.

 

மது லேசாக கண்ணை விழிக்க மொபைல் அணைத்துவிட்டு வேகமாக அவள் அருகில் வந்தான். “மதும்மா……!! தேங்க்ஸ்டா தேங்க்யூ மை ஸ்வீட்டி” என அவள் கன்னத்தில் முத்தமிட்டான். ஒரு கணம் புரியாமல் விழித்தவள் விஷயத்தை யூகித்து “சித்து” என முகம் சிவக்க நாணத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள். தன் காதலுக்குப் பரிசை தன் வயிற்றில் சுமந்திருக்கும் மனைவியை சந்தோஷத்துடன் அணைத்துக்கொண்டான்.

தன் மீது சாய்ந்திருந்த மதுவின் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் முத்தமிட்டான். கன்றி சிவந்திருந்த அவள் கன்னத்தைப் பார்த்தவன் வேதனையுடன் வருடியபடி, “வலிக்குதாடா” என்றான் மெதுவாக. மெல்ல தலையசைத்த மது, “வலிக்குது ஆனால், உங்களுக்கு வலித்ததை விட குறைவுதான்” என அவன் நெஞ்சை தடவி விட்டவளை  இறுக அணைத்துக்கொண்டான்.

 

“ச்ச….. எனக்கு ஏன் இப்படி கோபம் வருது…?, நீ என்னை பிரிந்து போவதை என்னால் தாங்க முடியவில்லை மது அதான் அந்த ஆத்திரத்தில் தான் நான் உன்னை இப்படி அடித்துவிட்டேன். சாரிடா” என கன்னத்தில் முத்தமிட்டான். “என் மேலேயும் தப்பு இருக்கு சித்து. நானும் செய்தது தப்புதானே. ஆனால், உங்களை பிரிந்து போய் நானும் நிம்மதியாக இருந்திருக்க முடியாது. நீங்க நல்லாயிருக்கணும் என்ற அந்த ஒரு விஷயம் தான் என்னை உங்களை விட்டுப் போக நினைக்கவைத்த்டது. நீங்களும் என்னளவுக்கு வேதனைபடுவீர்கள் என்பதை நான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. ஒருவேளை நான் சிங்கப்பூர் போயிருந்தா என்னை எப்படி கண்டு பிடித்திருப்பீர்கள்?” என்றவளின் முகம் பார்த்து நக்கலாக” நீ இங்க வாங்கின அறையை சிங்கபூர் வந்து நான் உனக்கு கொடுத்திருப்பேன்” என சிரிக்க, அவனைப் பார்த்து முறைத்தவளின் கன்னத்தைத் தட்டி, “உன்னைக் கண்டு பிடிப்பது அவ்வளவு கஷ்டம்னு நினைத்தாயா? என்னோட காதலே உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கும். ஏன் மது நீ உன்னையே இப்படி வருத்திக்கொண்டிருந்திருக்க? ராசி இல்லை அது இல்லை என்று” என்றான்.

“இல்லை சித்து நான் அனுபவித்த வேதனை உங்களுக்குத் தெரியாது. என்னை எப்படி என் மனசு வலிக்கும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் எத்தனைப் பேர் என் முன்னாலும் பின்னாலும் எத்தனை விதமான பேச்சு பேசி இருக்காங்க தெரியுமா? நான் அந்த வலியெல்லாம் என் மனசுக்குள்ளேயே போட்டுக் கொண்டு எங்க மாமா வீட்டில் கூட யாருக்கும் சொன்னதில்லை. காலம் எல்லா வலியையும் மாற்றுமென்று  பேசலாம். ஆனால், மனதில் பதிந்த அந்த காயத்தின் வடு காலம் முழுக்க நம்மோடவே இருக்கும். நான் செய்த காரியம் உங்க எல்லோருக்கும் முட்டாள் தனமாக இருக்கும். ஆனால், அந்த வலியையும் வேதனையும்  போதும்  என்ற அளவுக்கு நான் அனுபவிச்சிருக்கேன். என்னோட நிலையிலிருந்து பார்த்தால் மட்டும்தான் என்னோட உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடியும்”என கலங்கிய மதுவை வேதனையுடன் பார்த்தவன் அவளை தன்னுள்ளே புதைத்துக்கொள்வதை போல இறுக அணைத்துக்கொண்டான்.

” மது உன்னோட வேதனையும் வலியும் எனக்குப் புரியுது. இனி, தயவுசெய்து இதை போல தவறான முடிவு எடுக்காதேடா” என்றான். “இல்லை சித்து இனி, உங்களை விட்டுக் கனவில் கூட பிரியமாட்டேன்”.
“போதும் போனதெல்லாம் போகட்டும், இனி, நம்ம வாழ்க்கையில் நமக்குள்ளே பிரிவு என்ற வார்த்தையே வரக்கூடாது. உன் மனதில் என்ன இருந்தாலும் என் மேல் கோபம் இருந்தாலும் நீ நேரடியாக என்னை கேட்டுச் சண்டை கூட போடு. இப்படி உன் மனதிலேயே  மறைத்துவைக்க கூடாது புரியுதா?” என்றவனைக் காதலுடன் பார்த்து சரியென தலையை ஆட்டினாள்.

 

மறுநாள் காலையில் சித்தார்த் மதுவை அழைத்துக்கொண்டு கிளம்பினான். இருவரையும் ஆசிர்வதித்து, மதுவிற்கு ஏகப்பட்ட அறிவுரையும் சொல்லி அனுப்பிவைத்தனர். சித்தார்த் வீட்டிற்குச் சென்றதும், சந்தோஷத்துடன் மதுவை எதிர்க்கொண்டு  தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர். சுபாவும் போன் செய்து மதுவிடம் பேசி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தாள். சித்தார்த் ஹரியுடன் பேசிவிட்டு வந்தான்.

 

வெகுநேரம் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்த மதுவை “நீ போய் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ மது” என தேவகி அவளை அனுப்பிவைத்தார். சித்தார்த் தன் அம்மாவிடமும், நேத்ராவிடமும் வெகுநேரம் பேசிவிட்டு மலர்ந்த முகத்துடன், தன் நண்பர்களுக்கும் விஷயத்தைச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான். மது உறங்கிக்கொண்டிருக்க, அவளது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு மனம் நிறைய சந்தோஷத்துடன் அவள் கைகளை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு  கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

இரண்டு நாள்கள் கழித்து சித்தார்த் மதுவிடம், ஒரு கவரை நீட்டினான். பிரித்து பார்த்த மது அதில் சுவிட்சர்லாந்து செல்ல இரண்டு விமான டிக்கெட்டுக்கள் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யத்துடன் தன் கணவனைப் பார்த்தாள். “என்னடா செல்லம்ஸ் அப்படிப் பார்க்கிறாய்?” என கேட்டுக்கொண்டே தன் கையணைப்பில் கொண்டுவந்து நிறுத்திக்கொண்டான். “எதுக்குங்க இப்போ சுவிஸ் போக டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்திருக்கீங்க?” என்றாள்.

 

“நீதாண்டா கண்ணம்மா சிங்கப்பூர் பார்க்கணும்னு கிளம்பின. சிங்கப்பூர் என்ன சிங்கப்பூர் என் ஏஞ்சலை நான் சுவிஸ்க்குக்கூட்டிக்கொண்டு போகப்போறேன்” எனச் சொல்லிக்கொண்டே மதுவின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

 

அவனுக்குச் சிறிதுநேரம் ஈடுகொடுத்தவள், “டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ண வேண்டாமா?” என்றவளின் முகம் பார்த்து, “அதெல்லாம் நான் ஏற்கெனவே பேசிட்டேனே. ஒரு அனுபவசாலி டாக்டரான அம்மாவிடமும். வளர்ந்துவரும் டாக்டரான நேத்ராவிடமும், பேசி அப்பாவிடமும் பெர்மிஷன் வாங்கின அப்புறம் தான் இப்போ உனக்குச் சொல்றேன்” என்றான்.
“இன்னும் ரெண்டு நாள் தான். அதுக்குள்ளே பாக்கிங்கை முடிக்கணும்.” என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டுச் சென்றான்.

அடுத்துவந்த இருநாள்களும், இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. மது சித்தார்த்திற்க்கும், சித்தார்த் மதுவிற்கும் தெரியாமல் பரிசுப்பொருளை வாங்கித் தங்கள் சூட்கேசில் மறைத்துவைத்தனர். மூன்றாம் நாள் சித்தார்த் மதுவை அழைத்துக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு  பறந்தனர்.
நேராக டெல்லி சென்று சேர்ந்ததும், ஹரியும், சுபாவும் குழந்தைகளுடன் வந்திருந்து சுவிஸ் செல்லும் விமானத்தில் இருவரையும் ஏற்றிவிட்டுக் கிளம்பினர். மறுநாள் காலையில் சித்தார்த் மதுவுடன், ஜுரிச் விமான நிலையத்தில் இறங்கினான். அங்கே ஜீவாவின் உறவினர் ஒருவரின் உதவியுடன், அடில்ச்பெர்க் ஹில்சில் அமைந்திருந்த ஹோட்டலுக்குச் சென்றனர். ஜீவாவின் உறவினரிடமே எங்கேங்கே என்னென்ன இடத்திற்குச் செல்லலாம், என கேட்டுக்கொண்டான்.

ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த அறைக்குச் சென்று தங்கிக்கொண்டனர். குளித்துவிட்டு, அங்கிருந்த பழங்கால ஓவியர்களின் ஓவியங்களையும், அருகிலிருந்த புகழ்பெற்ற சர்ச் ஒன்றிற்கும் அழைத்து சென்றான். மேலும்  முடிந்தவரை சுற்றிவிட்டு இருவரும் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

பெட்ரூமிற்குச் செல்ல முயன்ற மதுவை, தோளில் கைபோட்டு “மது டார்லிங்! அந்த ரூமிற்கு இப்போது போகவேண்டாம்” என அவளை பக்கத்து அழைத்து சென்றான். “என்ன சித்து என்ன விஷயம்? ஏதாவது சர்ப்ரைஸ் வச்சிருக்கீங்களா?” என்றாள். “எஸ் .ஒரு சின்ன சர்ப்ரைஸ்” என்றான்.”என்ன சர் ப்ரைஸ் சித்து ப்ளீஸ் சீக்கிரம் சொல்லுங்களேன்?’என் சித்துவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சியவளை ரசனையுடன் பார்த்தவன், “மது நான் என்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ணிக்கொண்டிருக்கேன். நீ இப்படி கொஞ்சி கொஞ்சி பேசி என்னைத் தடுமாற வைக்காதே, பிறகு என் மேல் குற்றம் சொல்லி ஒண்ணும் கிடையாது” எனச் சொல் மது உதட்டை சுழித்து சிரித்தாள்.

அதைக் கண்ட சித்தார்த், “இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா அவஸ்தைப் படப்போற  மது என்னை ரொம்பச் சீண்டாதே” என்றபடி அவள் இதழ்களை சிறைசெய்தான்.

 

அவளை விலக்கிவிட்டு டவலை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான். பாத்ரூம் அருகில் சென்றதும், “மது அந்த ரூமை திறக்காதே, அந்தப் பக்கமே போகக்கூடாது புரியுதா?” என்றவனைப் பார்த்து சரியென தலையாட்டினாள்.

அப்படி என்ன இருக்கு அந்த ரூம்ல என யோசித்தபடியே மது அமர்ந்திருக்க, சித்தார்த் குளித்துவிட்டு வந்தான். சூட்கேசை திறந்தவனை,அவசரமாக, “சித்து சித்து கொஞ்சம் இருங்க” என்றவள், தன் சூட்கேசை திறந்து ஒரு கிப்ட் ராப் செய்திருந்த பெட்டியை சித்தார்த்திடம் கொடுத்தாள்.
“சித்து இது என்னோட முதல் கிப்ட் உங்களுக்காக நானே போய் வாங்கி வந்தேன். பிடித்திருக்கா? என்று சொல்லுங்கள்” என்றாள் வெட்கத்துடன். சித்தார்த் புன்னகையுடன் வாங்கிக்கொண்டான்.  “நீ குளித்துவிட்டு வா, டின்னற்கு நேரமாகுது” என மதுவை அனுப்பிவிட்டு கிப்ட் ரப்பை பிரித்தான். உள்ளே இருந்த உடையை பார்த்தவன் சிரித்துக்கொண்டே அதை அணிந்துக்கொண்டு வரவும், மது குளித்துவிட்டு வரவும் சரியாக இருந்தது.

ஓய்ட் அண்ட் ஓய்ட் த்ரெட்வொர்க் ஷெர்வானியில் சிரித்தபடி அட்டகாமாக நின்றுகொண்டிருந்தவனைப் பார்த்தவள் முகம் நிறைய புன்னகையுடன் அருகில் வந்தவள் பக்கத்திலிருந்த பூக்குவளையிலிருந்து ஒரு சிகப்பு ரோஜாவை ஷெர்வானியில் சொருகிவிட்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “ஐ லவ் யூ சித்து!” என்றவளின் உச்சியில் முத்தமிட்டான்.

 

“ஒன் மினிட்” என்று தன் சூட்கேசை திறந்து ஒரு பெட்டியை எடுத்தவன், ஹோட்டலுக்கு வரும்போதே ரிசப்ஷனிலிருந்து வாங்கி வந்த ஒரு பெட்டியையும் சேர்த்து அவளிடம் கொடுத்தான்.

 

“மது சீக்கிரம் கிளம்பி வா” என்று சொல்லிவிட்டுச் சோபாவில் அமர்ந்தான்.

கிப்ட் ரப்பை பிரித்ததும் அதன் மீது “டு மை ப்ரேஷியஸ் லிட்டில் ஏஞ்சல்” என எழுதி இருந்ததைப் பார்த்தவளுக்குக் கண்களில் நீர் கோர்த்தது. அட்டை பெட்டியைத் திறந்தவள் உள்ளே தூய வெள்ளை நிற புடவையிலிருபுறமும், வெள்ளைக் கற்களும், வெள்ளை சமிக்கியும் வைத்து முழுதும், த்ரெட் வொர்க் செய்திருந்த புடவையை வருடிகொடுத்தவள், பரவசத்துடன் அந்த புடவையை அணிந்துகொண்டாள். ரிசபஷனில் வாங்கி வந்த பெட்டியைத் திறக்கும் போதே அதன் வாசம் மூக்கை துளைக்க மது சிரிப்புடன், தனக்காக எவ்வளவு ஆசையுடன் இங்கே இதை வரவைத்திருக்கிறான், என எண்ணிக்கொண்டே பெட்டியைத் திறந்து, மல்லிகை சரத்தைத் தலையில் சூடிக்கொண்டாள்.

 

தன் கைப்பையிலிருந்த சிறிய டப்பாவை எடுத்து வெளியே வந்தாள். சித்தார்த் அவளுக்காக வெளியில் காத்திருக்க வெள்ளை உடையில் தேவதையாக ஜொலித்த தன் மனைவியைக் காதலுடன் பார்த்தான். அவள் பின்னால் வந்து நின்றவன் அவள் கழுத்தில் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்த செயினை  அணிவித்தான். அதில் சிகப்புநிற டாலரில் பொடிபொடியான வைரத்தில் MS என இருந்தது.

மதுவும், சித்தார்த்தின் கரத்தை பிடித்து தன் கையிலிருந்த சிறிய டப்பாவைத் திறந்து, அதிலிருந்த மோதிரத்தை எடுத்து சித்தார்த்தின் கரத்தில் அணிவித்தாள். மோதிரத்தைப் பார்த்த சித்தார்த், அதில் M என்ற எழுத்தை சுற்றி இருந்த கொடியாக  S என்ற எழுத்து இருந்ததைப் பார்த்து, “நம் இருவரின் மனமும் ஒரே மாதிரி யோசிப்பது இதிலேயே புரியுது இல்லையா மது?” என்றதும், அவ்வளவு நேரமும், சந்தோஷத்திலும், மன நிறைவிலும் திளைத்து திகைத்து  இருந்தவள் சித்தார்த்தை இறுக அணைத்துக்கொண்டு, “ஐ லவ் யு, ஐ லவ் யு, ஐ லவ் யு…. சித்து” என அவன் முகமெங்கும் தன் முத்திரைகளை பதித்து ஆனந்தக் கண்ணீர் விட, “ரிலாக்ஸ், மது ரிலாக்ஸ்….” என மெல்ல அவள் முதுகை இதமாக வருடிக்கொடுத்தான்.

 

“மது டார்லிங் உன் காதலை சொல்லிட்ட என் காதலை சொல்ல நான் வார்த்தைகளை தேடறேண்டா. இருந்தாலும் இப்போதைக்கு என் காதலையும் நான் இப்படியே சொல்லிக்கொள்கிறேன்” என்றவன் அவள் காதருகில் “ஐ லவ் யு” என ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தமாக சொன்னான். தன் காதலை சொல்ல வார்த்தை இல்லையென்றால் என்ன பொருள்? அவன் காதலுக்கு ஈடாக எதையுமே சொல்ல முடியாது என்று தானே,  இதற்கு ஈடாக தான் என்ன செய்வது என நினைத்துக்கொண்டவளுக்கு  பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தது.

எவ்வளவு நேரம் இருவரும் அணைத்த நிலையிலேயே நின்றிருந்தனறோ, “ஹே மது, கிளம்பலாமா? டின்னற்கு  நேரம் ஆகுது” என அவள் காதில் கிசுகிசுக்க மதுவும் புன்னகையுடன் கிளம்பினாள். ஹோட்டலுக்குச் சென்றதும், ரூப் டாப் கூட்டி சென்றான். அங்கே நின்ற மது “வாவ்” என ஆச்சர்யத்துடன் புன்னகைத்தாள். அந்த ரூப் டாப் முழுதும், வெஜிடபுள் கார்விங் செய்து அதன் நடுவில் மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கபட்டிருக்க அந்த இடமே ரம்யமாக இருந்தது. நடுவில் ஒரு டேபுளில் மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கப்பட்டு உணவு வகைகளும் சூடாக இருக்க கேசரோலில் வைக்க பட்டிருந்தது. “என்ன பிரின்சஸ் அப்படியே நின்னுட்டீங்க, வாங்க” என அழைத்து சென்றான்.

“சித்து எனக்காக நீங்க எவ்வளவு செய்றீங்க?” என திணறியவளை “இது உங்களுக்காக  மட்டும் இல்லை மேடம், என்னோட காதலை உங்களுக்குத் தெரியபடுத்த ஒரு சந்தர்ப்பம். அதே போல உங்க காதலை வேற வகையில் தெரியபடுத்துங்க” என புருவத்தை உயர்த்தி சிரிக்க மதுவும் அவன் புன்னகையில் தன்னை இணைத்துக்கொண்டாள்.
இரவு உணவை முடித்துக்கொண்டிருவரும், அறைக்குத் திரும்பியதும், கதவை மூடிய சித்தார்த் மதுவை தன் கைகளில் ஏந்திக்கொண்டு பெட் ரூமை திறக்கவும், சித்தார்த் மது இருவரின் மீதும் மேலிருந்து ரோஜா இதழ்களாக கொட்ட மது சந்தோஷ மழையில் நனைந்தாள்.

சித்தார்த் மதுவை இறக்கி விட்டுவிட்டுக் கதவை மூடிவிட்டுத் திரும்ப இரு கன்னத்திலும் தன் கைகளை வைத்துக்கொண்டு குதூகலத்துடன் இருந்தவளை சித்தார்த் ரசித்து காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

சித்தார்த் தன்னைக் கண் சிமிட்டாமல் பார்ப்பதை உணர்ந்த மதுவின் முகம் சிவந்தது. முகச்சிவப்பை மறைக்க முடியாமல் தலைகுனியும் போதே அருகில் வந்தவன் முகத்தை இரு கைகளாலும் தாங்கிக் கொள்ள மது சிணுங்கலான குரலில் “என்ன சித்து இது இப்படிப் பார்க்கறீங்க?புதுசா பார்க்கற மாதிரி” என்றாள்

சித்தார்த், “மது இந்தக் கிளைமேட்டுக்கு உன்னோட முகமெல்லாம் பளபளப்பா இருக்கேன்னு பார்த்தேன் இப்போ பனியில் கூட ரோஜாப்பூ பூக்கும என்பது உன்னோட கன்னத்தைப் பார்த்தத் தான் புரியுது” என்று சிவந்த கன்னங்களை விரல்களால் தடவியவாறு கூறினான்.

 

அவனுடைய விரல்கள் கன்னம், நெற்றி என்று வருடியவாறு உதட்டில் குவிய அவன் தொட்ட இடமெல்லாம் சிவப்பு ரோஜாக்களாக மலர்வதை ஆர்வத்துடன் ரசித்தவாறு “நான்தான் புதுசா பார்க்கற மாதிரியே பார்கிறேண்டா ஆனால், நீயும் தினமும் இதெல்லாம் புதுசு மாதிரியே இன்னும் முகம் சிவக்கிறாயே” என்றான்.

மேலும் சிவந்தவள் அவன் மார்பிற்குள் தன்னைப் புதைத்துக் கொள்ள முயலுகையில் விடாப்பிடியாக முகத்தை நிமிர்த்தி உதடுகளை அருகில் கொண்டுச் செல்ல மது கண்களை மூடிக் கொண்டாள்.

சித்தார்த், “மது இப்படி கண்ணை மூடிக்கொண்டால் பிடிக்கலைன்னு அர்த்தமா?” என்று கேட்க மது “என்ன சொல்றீங்க பிடிக்கலையா நான் ஏன் கண்ணை மூடினேன்னு தெரியாதா?” என்று கண்களைப் படக்கென்று திறந்தவாறு கேட்டாள்.
சித்தார்த், “ஹப்பா…! பிடிச்சிருக்கா அடடா எனக்குத் தெரியாம போயிடுச்சே” என்று போலி வருத்தத்துடன் உதடுகளைக் கன்னத்தில் புதைத்தவாறு கூறி “அப்போ பிடிச்சிருக்குத்தானே அப்புறம் எதுக்குக் கண்ணை மூடற” என்று வேண்டுமென்றே கேட்டவாறு மேலும் உதடுகளை நெற்றி  காது மடல்கள் கழுத்து என்று பரவ விட்டான்.

முகத்தில் ஒரு பரவசத்துடன் “எதுக்குக் கண்ணை மூடினேன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்ட மதுவின் குரல் கொஞ்சிக் குழைந்தது. சித்தார்த், “தெரியாதேடா எதுக்கு?” என்று கேட்ட உதடுகளுக்குக் காதல் விளையாட்டில் இந்த மாதிரி அர்த்தமற்ற கேள்விகளும் பதில்களும் சகஜம் என்பது புரிந்தது
.
மது ஏதோ பேச முயலுகையில் பேசியது போதும் என்பது போல உதடுகள் பொறுமையிழந்து மெல்ல முத்திரையைப் பதித்து மேலும் அழுத்தமாகப் பதிக்கவும் மதுவின் கைகள் அவனை சுற்றி தழுவிக்கொண்டன.

அவளை இறுக்கி அணைத்தவன் கைகள் அவள் தோள்கள், முதுகு என்று தடவிக் கொண்டே வந்து இடையை இருக்கவும் சட்டென்று நினைவு வந்தவனாக தன் பிடியைத் தளர்த்தவும் மது அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

 

கொஞ்சம் ஏமாற்றம் படர்ந்த முகத்தைப் பார்த்த சித்தார்த் அவளை அப்படியே தூக்கிப்படுக்கையில் கிடத்தி “குட்டிப் பையன் இருக்கானே இறுக்கமா பிடிச்சா அவனுக்கு வலிக்காதா?” என்று கைகளை மென்மையாக வயிற்றில் தடவியவாறு கேட்டான்.

சித்தார்த்தின் கைகள் விடாமல் வயிற்றைத் தடவிக் கொடுக்க மது நாணத்தை விடாமல் “ஏன் சித்து பொண்ணா இருக்குக் கூடாதா? நீங்க வேணும்னா பாருங்க பொண்ணாதான் இருக்கும்” என்றாள்.

“அப்படியா மது இரு பார்த்து சொல்றேன்” என்று சொன்னவன் அவள் வயிற்றில் தன் கன்னங்களைப் புதைக்க கூச்சத்தில் “மது ப்ளீஸ் சித்து விடுங்க” என்றாள்.

அவளை அசைய விடாமல் தடுத்தவன் அவள் வயிற்றில் உதடுகளைப்பதித்து சிறிது நேர விளையாட்டிற்குப் பிறகு, “பையன் தான் மது நான் கேட்டுட்டேன் அப்பான்னு கூப்பிடறான்…, அவனுக்கு கிஸ் கொடுத்தது போதுமாம் அம்மாவுக்கு நிறைய கொடுக்க சொல்றான்” என்றான்.

சிறிதுநேரம் பையன்தான் பொண்ணுதான் என்று செல்ல சண்டை போட்டாலும் சித்தார்த்தின்  கைகள் அவளோடு விளையாடுவதை நிறுத்தவும் இல்லை மதுவின் நாணம் குறையவுமில்லை.மது அவன் மென்மையான வருடல்களிலும் முத்தங்களிலும் தன்னைத் தொலைத்து அவன் கன்னத்தில் மெல்லிய முத்திரையைப் பதித்தாள்.
சித்தார்த், “மது எங்கே கொடுக்கணும்னு இவ்வளவு நாள்ல உனக்கு இன்னும் தெரியலையா?” என்று கேட்க அவன் ஆர்வமான கேள்விப் பார்த்து வேண்டுமென்றே, “தெரியலையே சித்து” என்றாள் அப்பாவியாக.
சித்தார்த், “உனக்குத் தெரியாதா? தெரியாதா… டார்லிங்” என அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சியபடி கேட்டதும், அவள் முகம் குங்குமமாய் சிவந்து எல்லாம் தெரியும் என்ற பதிலை சொல்லாமல் சொன்னது.

சுற்றியிருந்த ரோஜாக்களுக்குப் போட்டியாக சிவந்த முகத்தை அவன் மார்பில் பதித்துக் கண்மூடிக் கொண்டாள். தன் மனம் கவர்ந்தவளைமென்மையாக அணைத்துக் கொண்ட சித்தார்த் மனதிலும் அவன் அணைப்பில் தன்னை மறந்திருந்த மதுவின் மனதிலும் இதுவரை அனுபவித்த துன்பங்களும் வேதனைகளும் நினைவில் இல்லாமல் இன்பம் மட்டுமே நிலைத்திருந்தது. இனி, இந்த இன்பம் மட்டுமே அவர்களின் வாழ்வில் நிரந்தரமாக் இருக்கட்டும் என நாமும் வாழ்த்துவோம்.
புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்குச் சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -61

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.அத்தியாயம்—61   காலையிலிருந்து அனைவரும் பரபரப்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *