Sponsored

Know about Infertility and Treatments

Discussion in 'Infertility and Treatments' started by Rawalika, Nov 16, 2012.

  1.  
  2. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    28
    Trophy Points:
    0
     
  3. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    28
    Trophy Points:
    0
     
  4. SudhaPrem

    SudhaPrem Contributor

    Messages:
    5,317
    Likes Received:
    34
    Trophy Points:
    38
    குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு???????????

    10 முதல் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளலாம். பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. ஆணிடம் போதுமான அளவு உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்க செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருப்பதுடன், கருமுட்டை கருப்பைக்கு வரும் வழி அடைப்பு எதுவும் இன்றி இருக்க வேண்டும். கருவை வளர்க்கக் கூடிய பலமுள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டியதும் அவசியம். தாம்பத்தியமும் சரியாக இருக்க வேண்டும். இவை சரியாக இருந்தால் குழந்தை உருவாவதில் பிரச்னை ஏற்படாது.

    ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும். பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.

    ஆண்மை குறைபாடு மற்றும் உயிரணு குறைபாடுகளை மருந்துகளை கொண்டு சரி செய்ய முடியும். ஆண்களுக்கு உயிரணு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஹார்மோன் பரிசோதனை குறைபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மாதவிலக்கு குறைபாடுகள் உள்ள பெண்கள் முன்கூட்டியே பரிசோதிக்கலாம். ஆண், பெண் இருவருமே அதிக உடல் எடையைக் குறைப்பது மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு முறைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறைபாட்டுக்கு ஏற்ற சிகிச்சை முறையால் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்கிறார் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கல்பனா சம்பத்.

    பாதுகாப்பு முறை: குழந்தைப் பேறை உருவாக்க பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் வருமுன் காப்பதே நல்லது. பெண்கள் மாதவிலக்கு கோளாறுகள், பரம்பரை காரணங்கள் இருப்பின் முக்கூட்டியே பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ளலாம். மது , போதைப் பழக்கத்தை ஆண்கள் கைவிட வேண்டும். பாலியல் ரீதி யான குறைபாடுகளை மறைக்காமல் முன்கூட்டியே சிகிச்சை செய்து கொள்வது அவசியம். ஆண், பெண் இருவருமே தாமதமான திருமணம் மற்றும் 35 வயது வரை குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சத்தான உணவு, உடற்பயிற்சி, குறித்த காலத்தில் குழந்தை பெறுவது மற்றும் ஆணும் பெண்ணும் மகிழ்வான சூழலில் அன்பை பகிர்ந்து கொள்வது குழந்தையின்மைப் பிரச்னைக்கான வாய்ப்புகளை குறைக்கும்.
    -ஸ்ரீதேவி

    அவல் தோசை: அவல் மற்றும் 1 கப் தயிரை மிக்ஸ் செய்து ஊற விடவும். 1 கப் பச்சரிசி மற்றும் 1 கப் புழுங்கல் அரிசியை தனியாக ஊற விடவும். இதனுடன் வேக வைத்த ஒரு ஸ்பூன் சாதத்தை சேர்த்து அரைக்கவும். அவல் மிக்சையும் தனியாக அரைத்து அனைத்தையும் கலந்து இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

    ஓட்ஸ் வெஜ் அடை: கேரட் துருவியது அரை கப், கோஸ் அரை கப் ஆகியவற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரைக்கவும். ஒரு கப் ஓட்சில் தோசைப் பதத்துக்கு தேவை யான தண்ணீர் சேர்க்கவும். அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், அரை கப் கீரை மற்றும் உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அடையாகவும் சுடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.

    கருவேப்பிலைக் குழம்பு: வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், 5 வறமிளகாய், 2 டீஸ்பூன் துவரம்பருப்பு, 1 டீஸ்பூன் மிளகு, ஒரு கப் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கவும். 50 கிராம் புளியை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி புளிக்கரைசல் மற்றும் தேவை யான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். இதில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் உள்ளது.

    டயட்

    பரம்பரைக் காரணங்கள், தாமத மான திருமணம், அதிக எடை, தைராய்டு பிரச்னை, ஆண், பெண் வயது வித்தியாசம் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உருவாகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி இன்றி இருத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் ஜங்க் புட், கொழுப்பு உணவுகள் அதிகம் எடுப்பதைத் தவிர்க் கவும். முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகைகள், நல்ல கொழுப்பு உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச் சத்து, கால்சியம், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்கவும். எண்ணெய்யின் பயன்பாட்டை குறைக்கவும், சோயா பருப்பு, கீரை சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டு ஈரல் மற்றும் மீன் ஆகியவற்றை எண்ணெய்யில் பொரிக்காமல் குழம்பில் போட்டு சாப்பிடலாம். உப்பு அதிகம் உள்ள உணவு, ரீபைண்டு செய்யப்பட்ட மைதா, சேமியா, இனிப்பு ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மட்டுமே குழந்தையின்மை பிரச்னையைத் தீர்க்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

    பாட்டி வைத்தியம்

    * ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
    * அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.
    * அமுக்காரா, நெருஞ்சில், கோரைக் கிழங்கு தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து, தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டு, இடுப்பு, தொடை வலி குணமாகும்.
    * அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.
    * ஆடு தீண்டா பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.
    * ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.
    * இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.
     
     
  5. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    28
    Trophy Points:
    0
    மடிக்கணினிக்கு மடியைக் கொடுக்காதீர்!

    மடிக்கணினிக்கு மடியைக் கொடுக்காதீர்!

    (Thanks to Vikatan)​




    மடிக்கணினிக்கும் மடியில் மழலை தவழ்வதற்கும் தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இதோ இந்தச் சம்பவத்தைப் பாருங்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்காட் ரீட் - லாரா தம்பதிக்குக் கருத்தரிப்பில் பிரச்சனைகள் உண்டாகி இருக்கிறது. இது தொடர்பாக டாக்டரிடம் அவர்கள் ஆலோசனை செய்தபோது, 'உங்கள் கணவர் அதிகம் மடிக்கணினி பயன்படுத்துவாரா?’ என்று லாராவை டாக்டர்கள் கேட்டுள்ளார்கள். அவர் 'ஆமாம். அதற்கென்ன?’ என்று அலட்சியமாகக் கேட்க, 'இனி, மடிக்கணியை மடி மேல் வைத்து அவர் பயன்படுத்தக் கூடாது!’ என்று மருத்துவர்கள் சொல்ல அதிர்ந்துபோனார் அவர். ஆனால், அடுத்த மூன்றே மாதங்களில் லாரா கருத்தரித்தார். இன்று அவர்களுக்கு மகன் பிறந்து பத்து மாதங்கள் ஆகின்றன.

    மடிக்கணினிக்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு இருக்கும் என்பதை தன் மனைவி கருவுறும்வரை ஸ்காட் முழுமையாக நம்பவில்லை. ''லேப் டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் இப்படி ஒரு பாதிப்பு வரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை. டாக்டர் சொன்ன பிறகுதான் மடிக்கணினி விதைப்பையை வெப்பமாக்கி விந்தணுக்களைப் பலவீனப்படுத்தும் என்று அறிந்தேன்' என்கிறார்.



    இது ஒரு பக்கமிருக்க, 'ஃபெர்டிலிட்டி அன்ட் ஸ்டெர்லிட்டி’ என்ற பன்னாட்டு நல்வாழ்வு நிறுவனம் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில் 29 இளைஞர்களைத் தேர்வுசெய்து அவர்களை நீண்ட நேரம் மடிமேல் மடிக்கணினியைப் பயன்படுத்தச் செய்தனர். அவர்களின் விதைப்பையில் நுண்ணிய சென்சார்களைப் பொருத்தி வெப்ப மாறுதலைக் கண்டறிந்தார்கள். முடிவில் மடிக்கணினியை நீண்ட நேரம் மடிமேல் வைத்துப் பயன்படுத்துவது உஷ்ணத்தை உண்டாக்கி விந்தணுக்களைச் சிதைக்கிறது என்பது தெரியவந்தது. இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மடிக்கணினியின் சூட்டைக் குறைக்கப் பயன்படுத்தும் 'கூலர் பேட்கள்(Cooler Pad)’ எவ்விதத்திலும் விந்தணுக்கள் பாதிப்படைவதைத் தடுக்கவில்லை என்பதுதான். 'ஸ்க்ரோட்டல் ஹைப்பர்தெர்மியா(Scrotal Hyperthermia) என்னும் இந்தப் பாதிப்புக்கு அவ்வளவு அஞ்சத் தேவை இல்லை!’ என்று மருத்துவர்கள் கூறுவது கொஞ்சம் ஆறுதலான செய்தியாக உள்ளது. மடிக்கணியை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து நிரந்தரமாகக் கருத்தரிக்கும் வாய்ப்பை அழிக்காது என்கின்றனர்.

    இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தைப் பேறின்மை மருத்துவர் சரத் பட்டினாவிடம் பேசினோம்.

    'பொதுவாகவே விதைப்பை குளிர்காலங்களில் சுருங்கியும் வெயில் காலங்களில் சற்றுத் தளர்வான நிலையிலும் இருந்து, வெப்பநிலையைச் சமன் செய்யும் ஆற்றல் பெற்றவை. வெப்பநிலை அதிகமானால் அந்த உஷ்ணத்தைத் தாங்காமல் விந்தணுக்களில் டிஎன்ஏ ஃப்ராக்மென்டேஷன் (DNA Fragmentation) ஏற்படும் அளவு உயர்கிறது. நீண்ட நேரம் மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துவோர் மட்டுமின்றி, லாரி ஓட்டுநர்கள், அடுப்பின் அருகில் எந்நேரமும் இருக்கும் சமையல் காரர்கள், அனல் மிகுந்த இடங்களில் பணிபுரிபவர்கள் அனைவருக்குமே இந்தப் பிரச்னை வரலாம். அதிக நேரம் மடிக்கணினியைப் பயன்படுத்தும் பெண்களுக்குத் தொடைப்பகுதியில் நிரந்தரமாகத் தோல் கருத்துப் போகலாம். தோல் தொடர்பான பிரச்னைகள் வரவும் வாய்ப்புகள் உண்டு. மேற்குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியில் கூலர் பேட்களோ, மடி மீது தலையணை வைத்து அதன் மேல் மடிக்கணினியை இயக்குவதோ பயன் தராது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, மடிக்கணினியை மேசை மீது வைத்து இயக்குவதே சாலச் சிறந்த முறையாகும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மடிக்கணினியை மடி மேல் வைத்துதான் பயன்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால், கால்களை நன்கு அகட்டி வைத்துக்கொண்டு மடிக்கணினியைப் பயன்படுத்தினால் பாதிப்பு குறையும்' என்றார்.

    முடிந்தவரை மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்தாமல் மேஜையின் மீது வைத்துப் பயன்படுத்தி, சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். நிறையத் தண்ணீர் குடியுங்கள். போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள். சந்தேகம் இல்லை. ஆரோக்கியமான விந்தும் ஆரோக்கியமான சந்ததியும் சாத்தியமாகும்.


    - சூ.அருண்குமார்
     
     
  6. AmmuJ

    AmmuJ Pillars of LW LW WRITER

    Messages:
    1,504
    Likes Received:
    6,007
    Trophy Points:
    113
    Hi thanks for all your informations.....
     
     
  7. AmmuJ

    AmmuJ Pillars of LW LW WRITER

    Messages:
    1,504
    Likes Received:
    6,007
    Trophy Points:
    113
    Could u tell about irregular periods and how to get rid of that.... What are the things(i.e. food) need to get regular period?
     
     
  8. kalpanab23

    kalpanab23 Wings New wings

    Messages:
    14
    Likes Received:
    2
    Trophy Points:
    23
    Hi
    Thanks to share very useful info Sudha & Rawalika
     
     
  9. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    645
    Likes Received:
    697
    Trophy Points:
    113
     
Loading...

Share This Page


Sponsored