வேதாளம் - தெறிக்க விடலாமா

Discussion in 'Movies and TV' started by Sudha Ravi, Nov 14, 2015.

 1. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings New wings LW WRITER

  Messages:
  7,890
  Likes Received:
  4,281
  Trophy Points:
  113
  வேதாளம் – தெறிக்க விடலாமா

  படம் ஓட ஓட சூடு ஏறுச்சு
  பாட்டு கேட்க கேட்க காது வலிச்சுது
  போக போக ஒன்னும் புரியல
  ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல

  புலி அடிச்சதுல மிச்சம் இருந்த உயிரு வேதாளம் அறைஞ்சதுல மொத்தமா போச்சு. நம்ம தல தெறிக்க விடலாமா தெறிக்க விடலாமான்னு சொல்லி சொல்லி தியேட்டருக்கு வந்தவங்களை எல்லாம் தெறிக்க விட்டுடாருப்பா. அதுவும் இந்த வேதாளம்ன்னு எதுக்கு பேரு வச்சாங்கன்னே புரியல பா புரியல....

  வேதாளமா மாற போறாரு சொன்னப்ப நான் கூட அந்நியன் மாதிரி நினைச்சு ஆன்னு வாயை திறந்து கிட்டு பார்த்தா சிரிச்சாரு பாருங்க தல.....ஹப்பா தாங்க முடியலடா சாமி...........அப்படியே எகிறி குதிச்சு ஓடிடலாம்ன்னு பார்த்தா என்னை மாதிரியே ஒரு கூட்டம் வாசலில் நிற்குது.....

  ஆனா தல இந்த படத்தில் பெண்களை பத்தி பேசிய வசனங்கள் அருமை அருமை.......இப்போ வருகிற படங்கள் எல்லாம் பெண்களை குறித்து ரொம்ப கேவலமான வசனங்கள் தான் எழுதி இருக்காங்க........அந்த வகையில் இந்த படத்தின் வசனகர்த்தாவுக்கு ஒரு சல்யுட்......

  மத்தபடி படத்தில் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒண்ணுமே இல்ல....படம் முடிஞ்சு வெளில வந்தவங்க எல்லாம் பேரழகன் சூர்யா மாதிரி வெளில வந்தோம் எல்லார் முதுகிலேயும் தான் வேதாளம் ஏறி உட்கார்ந்துடுச்சே.....இதுல பாதி பேருக்கு காது வலி எல்லாம் நேரே ent ஐ பார்க்க போயாச்சு..........................
   
   
 2. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,339
  Trophy Points:
  113
  Achacho thalayum kavuthuttaaraa...? haahaa appo idhuvum cancel than, Thoonkavanam eppadi irukkunu sollunka kka, nalaikku porom..
   
  Last edited: Nov 14, 2015
   
 3. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings New wings LW WRITER

  Messages:
  7,890
  Likes Received:
  4,281
  Trophy Points:
  113
  தூங்கவனத்துக்கு என் பொண்ணு வர மாட்டேனுட்டா கமல் படம் அசிங்கமா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டா......அதனால தான் இந்த படத்துக்கு போனோம்...............
   
   
 4. Hameeda

  Hameeda Bronze Wings New wings LW WRITER

  Messages:
  3,894
  Likes Received:
  375
  Trophy Points:
  113
  ஹ ஹ ஹா...சுதா சுட சுட சூப்பர் விமர்சனம்...

  தல தெறிக்க விட்டாரோ இல்லையோ நீங்க விமர்சனம் போட்டு நம்ம தளத்தை தெறிக்க விடறீங்க...

  அடி எப்படி..புலியை விட பலமா இல்ல அதை விட குறைச்சல் தானா??

  உங்களை பேரழகன் சூர்யா மாதிரி...ஹ ஹ ஹா...முடியல போங்க...

  இப்படி மாத்தி மாத்தி புலி வேதாளம் எல்லாம் அடிச்சா தமிழ் மக்களின் நிலை நிச்சயம் பேரழகன் சூர்யா மாதிரி தான் ஆகும்.

  ஆனாலும் பாலாபிஷேகம் தேனாபிஷேகம் எல்லாம் தொடர்ந்துட்டே தான் இருக்கும்...

  இதுவும் கடந்து போகும்...விடுங்க...

  புண்பட்ட மனத்தை தூங்காவனம் பார்த்துட்டு வந்து விமர்சனம் போட்டு ஆத்திக்கோங்க டியர்...
   
   
 5. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings New wings LW WRITER

  Messages:
  7,890
  Likes Received:
  4,281
  Trophy Points:
  113
  புலி வேதாளம் ரெண்டுமே சமம் தான்..............இதுல தல fans டான்ஸ் வேற .......தல சீன்ல வந்தாலே எழுந்து நின்னு ஆட ஆரம்பிச்சிடுறாங்க.........நமக்கு ஏற்கனவே படத்தை பார்த்து உள்ளுக்குள்ள எல்லா பார்ட்ஸசும் ஆட்டம் கண்டு இருக்கு........இதுல இவங்க டான்ஸ் ஆடினா எப்படி இருக்கும்........
   
   

Share This Page