Sponsored


Sponsored


lady'swings Contests

Discussion in 'Awards, Contests & Winners' started by Lady's Wings, Oct 7, 2016.

  1. bhuvana.mn

    bhuvana.mn Wings New wings

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    21

    Sponsored


    Nice opportunity. Where to registerfor the contest?
    thanks
    bhuvana
     
     
  2. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,458
    Likes Received:
    3,334
    Trophy Points:
    113
    Admin Post
    அன்புத் தோழிகளே.....

    எல்லோரும் எப்படி இருக்கீங்க...9 ம் தேதி இரவு வரை நல்லா இருந்த நாம் அன்னைக்கு ஒரு 8 மணிக்கு மேல எல்லோருமே ஒரு மாதிரி ஆகிட்டோம்..இல்லையா...ஓரறிவு உயிரி முதல் ஆறறிவு உயிர்களான மனிதம் வரை சுழற்சி முறை தான் வாழ்க்கை என்பது நமக்குத் தெரியும் தானே.....
    பணம் என்ற மந்திரக் கயிறு தன் பலம் இழக்கும் போது அதன் பின்னணியில் சுழன்றுக் கொண்டிருந்த மனிதர்களான நாம் சற்றே தடுமாற தான் வேண்டி தானே இருக்கிறது..

    அதற்கு நாமும் விதி விலக்கல்ல. நம் தளத்தில் அறிவித்த பரிசுப் போட்டிகளுக்குப் படைப்புகள் அனுப்ப வேண்டிய நேரத்தில் இந்த பணப் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதாலும்,

    தோழிகள் பலரின் வேண்டுதல்களுக்கு இசைந்தும், படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் இன்னும் நான்கு நாட்களுக்கு அதாவது 16.11.2016 நள்ளிரவு பனிரெண்டு மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    எழுத்தாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் படைப்புகளை விரைந்து அனுப்பி வைக்கும் படி மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
     
    venila, girija chandru and Srjee like this.
     
  3. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,458
    Likes Received:
    3,334
    Trophy Points:
    113
    Admin Post
    அன்புத் தோழிகளுக்கு இனிய மாலை வணக்கம்.

    பரப்பரப்பும் விருவிறுப்புமாய் நடந்து முடிந்த, லேடிஸ் விங்க்ஸ் பிறந்தநாள் மற்றும் தீபாவளிப் போட்டி முடிவுகள் குறித்த இனிய தகவலை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள வந்துள்ளேன்.

    போட்டி முடிவு பற்றிய அறிவிப்புகள் கிணற்றில் போட்ட கல்லாக, மூழ்கிக் கிடக்கிறதே என்ற சிந்தனை உங்கள் எண்ணம் நனைத்து இருக்கலாம்.

    அலாவுதீன் அற்புத விளக்கு உரசப்படப் போகிற தருணத்தை நாம் நெருங்கிவிட்டோம்.

    ஆம் தோழிகளே...! இன்னும் இரு தினங்களில் போட்டி குறித்த முடிவுகள் நம் தளத்தில் வெளியிடப்படும்.

    நம் மேன்மைமிகு நடுவர்கள் உங்கள் படைப்புகளை உரசிப் பார்த்து முத்தான முதல் மூன்றை தேர்ந்தெடுத்து கொடுத்து இருக்கிறார்கள்.

    இந்த இடத்தில் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற எழுத்தாளர்களுக்கும், அவர்கள் எழுத்தை ஆர்வமுடன் வாசித்து விமர்சனம் நல்கிய வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் இந்தப் போட்டியில் பல விதங்களில் எனக்கு துணையிருந்த முக நூல் நட்புகளுக்கும், எங்களுடன் புதிதாய் கரம் கோர்த்து இருக்கும் எழுத்தாளர்களுக்கும், போட்டியில் நடுவர் பதவி ஏற்று எங்களை கௌரவித்து இருக்கும்,
    நவரச நாவல்களின் ராணி திருமதி. காஞ்சனா ஜெயதிலகர் அவர்களுக்கும்,
    நம்பிக்கை நாயகர் திரு. ஏகலைவன் ஐயா அவர்களுக்கும்,
    ஹைக்கூ கலைஞர் திரு. மு. முருகேஷ் ஐயா அவர்களும்
    எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் வளர்த்து நாம் வளர்வோம். நாம் வளர்ந்து தமிழ் வளர்ப்போம்.


    நன்றி...! வணக்கம் ....!

    உங்களை மற்றும் ஒரு இனிய அறிவிப்போடு சந்திக்கும் வரை.....
    உங்களிடமிருந்து விடை பெறுவது....


    உங்கள் அன்புத் தோழி...!
    மஞ்சுளா செந்தில்குமார்.
     
     
Loading...
Similar Threads - lady'swings Contests
  1. vanavil
    Replies:
    0
    Views:
    1,207

Share This Page