Sponsored

படித்ததில் பிடித்தது......

Discussion in 'SMS / Memes / Funny quotes' started by Uma dev, Sep 15, 2017.

  1. Uma dev

    Uma dev Bronze Wings New wings

    Messages:
    419
    Likes Received:
    548
    Trophy Points:
    113
    இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்
    இழந்தது எவை என இறைவன் கேட்டான்
    பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்
    பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்
    கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
    கோலம் மாறி அழகையும் இழந்தேன்
    வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்
    எதை என்று சொல்வேன் நான்
    இறைவன் கேட்கையில்
    எதையெல்லாம் இழந்தேனோ
    அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்
    அழகாகச் சிரித்தான் இறைவன்
    கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்
    உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
    "உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"
    "நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"
    சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
    தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்
    திகைத்தேன்
    இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
    வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்
    இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்
    இறைவன் மறைந்தான்..
    படித்ததில் பிடித்தது
     
    Priyariya, afnaan and ammuyoga like this.
     
  2. Uma dev

    Uma dev Bronze Wings New wings

    Messages:
    419
    Likes Received:
    548
    Trophy Points:
    113
    கணவனுக்கு உள்ள சிறப்புகள்
    கணவன் என்றால் கட்டிக்காப்பவன் என்றும் கொள்ளலாம்
    பணிக்குச் சென்று
    மனைவி, குழந்தை,
    குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் சுமக்கும்
    சுமைதாங்கி்
    பணிசெய்யும் இடத்திலும் வேலைச் சுமை, வீட்டில் மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகிய அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடமைச் சுமை.
    ஆண் என்பவன் ஆள்பவன்தான்
    என்றாலும் அலுவலகத்தில் பணியாள்தான். வீட்டிலும் பணியாள்தான்.
    மனைவியரே கொஞ்சம்
    கை கொடுங்கள். உயிருள்ளவரை
    உங்களை சுமந்து செல்லும் அந்த வாகனத்தை
    பத்திரமாய் பார்த்துக்
    கொள்ளுங்கள்
    மனைவியரே, அவனுடைய சுமைகளை சற்று நேரம் இறக்கிவைத்து இளைப்பாறும் இனிய
    வார்தைகளின் நிழலைத் தாருங்கள்.
    மனைவிக்கு நலமில்லையென்றாலும் குழந்தைக்கு நலமில்லையென்றாலும் நேரம் காலம் பார்க்காமல், சோர்வை பாராமல் மருத்துவரிடம் சுமந்து செல்லும் கணவனை புரிந்து கொள்ளுங்கள்
    உங்கள் மகளையும் மகனையும்
    கவனிப்பது போல் உங்கள் கணவனையும்
    கவனித்து கொள்ளுங்கள்
    உடல் மனம் இரண்டையும்
    மென்மை படுத்துங்கள்
    பணிமுடிந்து களைத்துபோனாலும் வரும் வழியில், பால் வேண்டுமா, காய் வேண்டுமா, வேறு ஏதேனும் வேண்டுமா என்று பரிவோடு கேட்கின்ற கணவனை பாராட்டுங்கள்.
    ஓய்வுபெறும் நாள்வரை அனைவருக்காகவும் உழைத்து, ஓய்வு பெற்றபின்னும் வீட்டுப்பணியை ஓய்வின்றி செய்கின்ற கணவனுக்கு
    தினமும் உங்கள் மடியில் சிறிது நேரம் ஓய்வு கொடுங்கள்.
    அவன் குடும்பத்திற்காக
    கரைந்துபோகின்ற ஒரு
    மெழுகுவர்த்தி.
    வாழ்க்கை முழுதும் கூடவே வருகின்ற ஒரு சம்பளமில்லா
    பாதுகாவலன்
    கடவுள் உன்னுடன்
    இருக்கமுடியாது என்பதற்காக அனுப்பிவைத்த காவலன்தான் கணவன்.
    அவன் கண்களில் சோர்வு
    வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
    மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். கணவன் கலங்கும் நேரம் வந்துவிட்டால் அங்கே செல்வம் தங்காது.
    புரிந்து கொள்ளுங்கள்.
     
    afnaan and ammuyoga like this.
     
  3. ammuyoga

    ammuyoga Pillars of LW LW WRITER

    Messages:
    2,250
    Likes Received:
    32,455
    Trophy Points:
    133
    அருமை....

    கூடுதலாக ஒரு குறிப்பு...

    கணவன் வெளியே செல்லும் போதும் திரும்ப வந்ததும், சிறு அணைப்பும், ஒற்றை முத்தமும் கொடுத்துப் பாருங்கள். நீங்கள் மட்டுமல்ல... குழந்தைகளையும் செய்யப் பழக்குங்கள் கணவனது களைப்பு காணாமல் போய் குதூகலம் வந்து ஒட்டிக் கொள்ளும். ஐ லவ் யூ... சொல்லிப் பாருங்கள் சும்மாயில்ல... இன்று அடிக்கடி உங்கள் நியாபகம் வந்தது என்னும் கூடுதல் குறிப்புடன். வந்த கோபம் கூட காணாமல் போய்விடும். நல்ல கணவனின் தேவைகள் இது போன்ற அன்பின் வெளிப்பாடுகள் தான் இவையே அதிக மாற்றத்தை உண்டாக்கும்.
     
    afnaan and Uma dev like this.
     
  4. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,225
    Trophy Points:
    133
    Worthful sharing sis TFS
     
    Uma dev likes this.
     
  5. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,225
    Trophy Points:
    133
    Hahaha ... tnx for sharing ,sis
     
    Uma dev likes this.
     
  6. Uma dev

    Uma dev Bronze Wings New wings

    Messages:
    419
    Likes Received:
    548
    Trophy Points:
    113
    தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .
    மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.
    மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார்.
    வருடங்கள் கடந்தன.
    ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.
    மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார்.
    தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.
    “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “
    இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.
    காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.
    இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன்.
    எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.
    மகன் ஆச்சரியப்பட்டான்.
    “பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.
    ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.
    இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.
    “மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.
    இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.
    ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன்.
    அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.
    வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.
     
     
Loading...
Similar Threads - படித்ததில் பிடித்தது
  1. K.Ramya
    Replies:
    10
    Views:
    483

Share This Page


Sponsored