Sponsored

பிரார்த்தனை - prarthanai

Discussion in 'Short Stories' started by Yazhvenba, Sep 18, 2017.


Sponsored
 1. Yazhvenba

  Yazhvenba Pillars of LW LW WRITER

  Messages:
  175
  Likes Received:
  750
  Trophy Points:
  113

  படைப்பைப் பற்றி
  சிறு கதை. பிரார்த்தனையைப் பற்றியும், மெய்வழிச் சாலை என்னும் ஊரின் சிறப்பைப் பற்றியும் கூறும் கதை. உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பிழைகள் இருப்பின் குறிப்பிடவும்.
  ----------------------------------------------------------------------------------------------  அரங்கநாதர் கோயிலில் கூட்டம் நிறைந்திருந்தது. வழிபாட்டு தரிசன வரிசை மிகவும் நீண்டு இருந்தது. கூட்டத்தின் நடுவில் வரிசையில் கலையரசி காத்துக் கொண்டு இருந்தாள்.
  "எப்போதும் போல பிறந்தநாள் அப்பகூட லேட்டா எழணுமா. அம்மா சொல்கிற மாதிரி நம்ம பெரிய சோம்பேறிதான். எப்பதான் பொறுப்பு வருமோ. சாமிகிட்ட இத சரி பண்ண சொல்லணும்" என்று மனதினில் எண்ணிக்கொண்டே வரிசையில் நடந்து சென்றாள்.

  பெருமாளுக்கு துளசி மாலையைக் கொடுத்துவிட்டு பிரார்த்தனை என்று ஒரு பட்டியலை கண்களை மூடிக்கொண்டு ஒப்பிக்க ஆரம்பித்தாள். அன்று சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷ தினம் என்பதனால், எப்பொழுதையும் விட பெருமாள் அலங்காரம் அத்தனை அழகாய் இருந்தது. பல வண்ண மலர்களாலும் துளசி மாலைகளைக் கொண்டும் நன்றாய் அலங்கரித்திருந்தனர். கண் குளிர தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தில் வந்து அமர்ந்தாள் கலையரசி. அப்போது அவளுக்கு பரிட்சயமான குறல் அழைக்கவே குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப்பார்த்தாள்.

  அவளுடன் பணிபுரியும் அருண் தனது குடும்பத்தினரோடு அமர்ந்திருந்தான். "என்ன கலை சுண்டல் சாப்பிட வந்தியா" என்று நக்கலான தோரணையில் கிண்டலடித்தான். கலையும் விடுவதாய் இல்லை "ஆமாம் அருண், நாம எல்லாம் ஒரே இனமாச்சே. உன்னைப் போலவே சுண்டலுக்காக கோயில் வாசம்" என்று இவளும் நக்கல் செய்ய அனைவரும் சிரித்தனர். அருணின் மகன் பைரவ் மிகவும் சமர்த்தாய் கலை கூப்பிட்டவுடன் அருகே வந்தான். கலைக்கு குழந்தைகள் என்றாலே கொள்ளைப் பிரியம். ஊரில் இருந்தால் அவள் அக்கா மகன் சூர்யாவை விடவே மாட்டாள். அவன் நினைவு வரவே பைரவ்வை அதிக நேரம் கொஞ்சி மகிழ்ந்தாள். அவள் பிறந்தநாளுக்காக அவளது தோழிகளுக்கு வாங்கியிருந்த இனிப்பின் எண்ணம் வரவே பையில் இருந்து இனிப்பினை எடுத்து அனைவருக்கும் தந்தாள்.

  பைரவ் அதை வாங்கியவுடன் கோயில் சுவற்றில் வரைந்திருந்த கிருஷ்ணரைக் காட்டி "அம்மா நீங்க சொன்ன மாதிரியே எனக்கும் குடுத்துட்டார்மா" என்று தன் மழலைக் குரலில் அழகாய் மொழிந்தான். கலை எதுவும் புரியாமல் பைரவயும் அவன் அம்மா லதாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

  லதா சிரித்துக்கொண்டே கதையை விளக்கினாள். சிறிது நேரம் முன்பு குட்டி கிருஷ்ணர் லட்டுடன் இருப்பதைப்பார்த்த பைரவ் "நானும்தான குட்டிப் பையன் எனக்கு தராம யாரு அந்த பையனுக்கு மட்டும் லட்டு குடுத்தது. எனக்கும் கொடுக்க சொல்லுங்க" என அடம் பிடிக்க தொடங்க லதாவோ அவனை சமாதானம் செய்ய ஒரு வழி ஆகிவிட்டாளாம். அங்க இருக்கறது சாமி படம் நீ கேட்டா கண்டிப்பா சாமி கொடுக்கும் ஆனா கொஞ்ச நேரம் ஆகும் நீ வேண்டிக்க னு ஏதேதோ சொல்லி சமாளிச்சேன் போற வழில வாங்கிட்டு போகணும்னு இருந்தேன் நீங்களே கொடுத்துட்டீங்க என்றாள்.

  பைரவ் அடம் பிடித்ததை எண்ணிப் பார்க்க அவளுக்கு சிரிப்பாய் இருந்தது.பைரவும் அத்தை பிறந்தநாள் வாழ்த்து அத்தை என கொஞ்சும் குரலில் அவன் தாய் சொல்லி தந்ததை சொல்லி முத்தமிட்டு விளையாடினான்.

  அவர்கள் இல்லம் திரும்பவே கலை தங்கும் விடுதிக்குச் சென்றாள். பிறந்தநாளன்று பெற்றோரோருடனும் உறவினரோடும் கழிக்க முடியாத கவலை கலைக்கு சிறிதும் இல்லாது போகுமளவு இன்றைய தினம் அமைந்தது எண்ணி மிகவும் மகிழ்ந்தாள். இரவு படுத்துக் கொண்டே பைரவின் சேட்டைகளை பற்றியே எண்ணிக்கொண்டிருந்தாள். அவனுடய வேண்டுதல் எவ்வளவு விரைவாய் நிறைவேறிவிட்டது என்று எண்ணிச் சிரித்தாள். அப்படியே அனைவருக்கும் அமையுமாயின் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணம் சென்றது அவளது பட்டியல்களையும் எண்ணி இதெல்லாம் எப்பொழுது நடக்குமோ என்றும் எண்ணலானாள். பைரவிற்கு தன்மூலம் வேண்டுதல் நிறைவேறியது போல நம்முடைய வேண்டுதல்களும் யார் மூலமேனும் நிறைவேறுமா என்று எண்ணிப் பார்த்தாள். அப்போது அவளுடைய தோழி சாலை மிதுனாவிடம் பேசியதை நினைவு கூர்ந்தாள். அவர்கள்தான் எவ்வளவு பக்தியுடன் இருக்கின்றனர் என எண்ணி வியந்தாள்.

  சாலை மிதுனா வின் சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே மெய்வழிச்சாலை அங்கு வாழ்பவர்கள் அனைவரும் சாலை ஆண்டவரை பின்பற்றும் மக்கள். அனைவரும் குடிசைகளில் வாழ்ந்துக்கொண்டு மின்சாரம்கூட உபயோகிக்காமல் அவர்களது கடவுளின் கொள்கைகளை உள்ளது உள்ளபடியே பின்பற்றுபவர்கள். நாம் அனைவரும் நமக்கேற்றார் போல வழிபடும் முறைகளை மாற்றிக் கொள்கிறோம். நம்மில் சிலருக்கு முட்டைகூட சைவம் இன்னும் பல பல மாற்றங்கள். ஆகையால் மிதுனாவின் மீது அவளுக்கு நல்ல மரியாதை.

  அவளின் பெயரிலுள்ள சாலை என்பதுகூட அவள் ஊரில் உள்ள அனைவரின் பெயரிலும் இருக்கும். அவர்கள் இனத்தின் ஆண்கள் தலைப்பாகையை எப்பொழுதும் அணிந்து இருப்பார்களாம். அவர்களுடைய வேண்டுதல் பற்றி கூற வேண்டுமெனில் அது இன்னும் மேன்மையானது. இறைவனடி சேர வேண்டும் என்று மட்டுமே வேண்டிடுவர். அதாவது, அவர்களின் இனத்தவர்கள் இறந்த பின்னர் அவர்கள் உடல் ஜில்லென்று ஆவது இல்லையாம் அவர்கள் உடல் ஒரு வித சூட்டுடனே இருக்குமாம் வியர்த்துக்கொண்டே இருக்குமாம் இறந்த பின்னர் மேலும் பொலிவு அதிகமாகுமாம். அவ்வாறு இருப்பின் அதனையே அவர்கள் இறையடி சேர்ந்தார் போல் எண்ணிக்கொள்வாராம். கடவுளிடம் அவர்கள் எப்போதும் அதைக்கொடு இதைக்கொடு என்று வேண்ட மாட்டார்களாம். எந்த கவலையாயினும் அதற்காக இறைவனை வேண்ட மாட்டார்களாம். ஏன்னெனில் ஏதோ ஒரு மனிதனால் நடத்தக்கூடியதை கடவுளிடம் வேண்டிட மாட்டார்களாம். அதாவது பைரவின் வேண்டுதல் கலையால் நிறைவேறியது போலதான்.

  நம் வாழ்விழும் அப்படித்தான் பலரின் நியாயமான பிரார்த்தனைகள் நம்மால் நிறைவேற்றிட முடியும். நாம் சாதாரணமாக செய்யும் சிறிய உதவி கூட ஒரு மனிதன் வேண்டி தவமிருக்கும் வரமாக இருக்கலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல சிறிய உதவி கூட பெரும் பலன் தரும் ஏன் பெரும் கவலையைபக் கூடப்போக்கும். அதை எல்லாம் எண்ணிக்கொண்டே கலை நித்திரையில் ஆழ்ந்தாள். பொழுது விடிந்தது. அலுவலகத்திற்கு கிளம்பினாள். வழியில் இருந்த விநாயகரை வேண்டினாள் வழக்கம்போல பக்கம் பக்கமாக பிரார்த்தனை னை செய்யாமல் கண்ணை மூடி அளவான பிரார்த்தனைகளோடு முடித்துவிட்டாள். அதில் பிறரின் வேண்டுதல்களை என்மூலமும் நிறைவேற்று என்பதும் அடங்கும். பிறரின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தால் நம் பிரார்த்தனைகளும் விரைவில் நிறைவேறும் என்று ஆணித்தனமாய் நம்பலானாள்.

  குறிப்பு: இந்த கதையில் பகிர்ந்துள்ள மெய்வழிச்சாலை என்ற ஊரினைப் பற்றிய குறிப்புகள் உண்மையாகும். மேலும் விவரங்களுக்கு விக்கிபீடியா-வில் தெரிந்து கொள்ளலாம்.
   
  Revz, Durga Elango and Shanthi Vairam like this.
   
 2. Eegai Chandrasekar

  Eegai Chandrasekar Wings

  Messages:
  2
  Likes Received:
  0
  Trophy Points:
  21
   
   

Share This Page


Sponsored