Sponsored

Penne vizhithezhu!

Discussion in 'Poems' started by shanthinichandra, Dec 11, 2017.


Sponsored
  1. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    1,815
    Likes Received:
    3,121
    Trophy Points:
    133
    உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவனின் பிரிவினால்
    ஊமையாய் அழுகிறது உன் இதயம்
    உடைந்த உள்ளத்தை தேற்ற வழி இன்றி
    திக்குமுக்காடி தவிக்குது மனசு.
    வாரி கொடுத்த அன்பின் பரிசாய் கண்கள் கண்ணீரை சொரிகின்றன..
    ஒவ்வொரு விடியலும் இனி கண்ணீருடனே கரைய.
    உன்னையே வாட்டி வதைப்பததினால் தான் இனி என்ன பயன்
    ?
    இன்று உன் உயிர் நெஞ்சம் வருந்தினாலும்
    நாளை நீ தேறத்தான் வேண்டும்.
    பாவை உன்னை அவன் வஞ்சித்து செல்ல
    வருந்தி நோவது மட்டும் நீ தனியாளாக ஏன்
    ?
    பெண்ணே நீ ஒன்றும் விட்டில் பூச்சி அல்ல..
    அன்பை கொடுத்ததிற்கு பதில் தண்டனை பெறுவதற்கு...
    அன்பை மட்டுமே கொடுத்ததினால் இளகிய இதயம் கொண்டவள் என்ற எண்ணத்தால்
    இரக்கமில்லாமல் உன் இதயத்தை நோகடிப்பதற்கும்
    இரணியனா அவன்
    ?
    மீண்டும் மீண்டும் கீறிப் கிழிப்பதற்கும் நீ என்ன காகித புத்தகமா??


    பெண்ணே,
    இன்றைய சோகம் நாளை நிச்சயம் மாறிவிடும்
    இழந்த உன் சிரிப்பு நாளை மீண்டும் தொற்றிக் கொள்ளும்
    இருண்ட உன் வாழ்வு நாளை மீண்டும் மலர்ந்து விடும்
    இயலாமையில் நீ வாடுவதை இன்றோடு விட்டு விடு
    இயன்றதை செய்ய மட்டும் துணிந்து விடு
    நாளை மீண்டும் விடியல் தோன்றும்
    நம்பிக்கை உன்னுடன் கை கோர்க்கும்
    நல்லவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள் இவ்வுலகில்
    நாடி தேடி வருவர் அதையும் நீ பார்ப்பாய் மிக விரைவில்
    உனக்காக நீ வாழாவிடினும் பெண்மணியே
    உன் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் வேண்டும்
    அதையேனும் மட்டும் நீ உணர்ந்துகொள்....
    பெண்ணே விழித்தெழு... உன்னை உயர்த்திக் காட்டு...
     
     
  2. Manisha Rajendran

    Manisha Rajendran Wings New wings

    Messages:
    51
    Likes Received:
    57
    Trophy Points:
    38
    nice poem
    i like this line
     
    shanthinichandra likes this.
     
Loading...

Share This Page


Sponsored