Shanthini Shanu's "Ennul Eriyum Karigaiye" - Story

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Jaasmin, Aug 23, 2019.

 1. Jaasmin

  Jaasmin Roots of LW Administrator

  Messages:
  8
  Likes Received:
  59
  Trophy Points:
  33
  சாந்தினி ஷானு அவர்கள் தனது "என்னுள் எரியும் காரிகையே" என்னும் புதிய கதையோடு வந்து விட்டார். கதையின் நிறை, குறைகளை கூறி அவரை உற்சாகப் படுத்துங்கள் தோழமைகளே!!!!

  வாழ்த்துகள் சாந்தினி!!!!

  கமெண்ட்ஸ் திரியின் இணைப்பு:

  https://ladyswings.in/community/threads/7921/
   
  sumee, Sumi4865@rollo, mala and 4 others like this.
   
 2. Shanthini Shanu

  Shanthini Shanu Wings New wings LW WRITER

  Messages:
  12
  Likes Received:
  41
  Trophy Points:
  33
  ஹாய் மக்கா…

  ரொம்ப லேட்டா வந்துட்டேன்…
  கேட்டதும் திரி அமைத்துக்கொடுத்த மஞ்சு அக்கா க்கு நன்றிகள் பல. மூணு நாள் முன்னாடியே வந்திருக்கணும் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இப்போ தான் வர முடிந்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழிகளே.


  கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலான இடைவேளைக்கு பிறகு என்னுடைய அடுத்த கதையான “என்னுள் எரியும் காரிகையே” மூலம் உங்களை சந்திப்பதில் மிக மகிழ்ச்சி. நானும் ஒரு கதை எழுதி இருக்கிறேன் என்பது மறந்திடுச்சு. அப்பப்போ யாராவது என் முதல் கதை “என் இரவின் கனவு நீ” போடுற ரிவிவ் தான் கண்டிப்பா அடுத்து கதை எழுதணும் என்று ஊக்குவிச்சது. இதோ அதுக்காகவே ஓடி வந்துட்டேன்.


  என்னுள் எரியும் காரிகையே…

  நாயகன்: யுகன் என்னும் யுகேந்திரன். அழுத்தகாரன், கோவக்காரன் ஆனா நல்லவன்


  நாயகி: சிற்ப்பா என்னும் சிற்பிகா
  அன்பானவள், பொறுமையானவள் ஆனால் மிகப்பெரும் தவறு செய்தவள்.
  தான் செய்த தவறால் தன்னை வெறுக்கும் கதாநாயகன். அவன் காதலை திரும்ப பெறுவாளா… வாங்க சேர்ந்து பயணிப்போம்.


  கண்டிப்பா உங்களோட ஆதரவு எனக்கு வேண்டும் பிரெண்ட்ஸ். நிறை குறை எல்லாம் சேர்த்து என்னை வழிநடத்தனும்.


  நன்றி…
   
   
 3. Shanthini Shanu

  Shanthini Shanu Wings New wings LW WRITER

  Messages:
  12
  Likes Received:
  41
  Trophy Points:
  33
  என்னுள் எரியும் காரிகையே…

  டீசர் 1

  “பார்க்குக்கு வந்தா பராக்கு பாக்கணும் இப்படி என்னை பார்த்தா எப்படி?” என்று அருகில் இருந்தவன் கண்களை பார்த்தவாறு மெல்லிய சிரிப்போடு கேட்டாள் சிற்பா.


  “நான் உன்னை பார்க்கதான் இங்க வந்தேன்” என்று அதே புன்னகையுடன் கூறினான். என்ன அவன் சிரிப்பில் ஆர்வம் இருந்தது அவள் சிரிப்பில் வெட்கம் இருந்தது.


  “அதான் வீட்டில ஆபீஸ்லன்னு எப்போவும் பாக்குறீங்களே…”


  “அங்க எல்லாம் இப்படி உக்கார்ந்து பார்க்க முடியாது டார்லிங்” என்றபடி அவள் இடது கையை எடுத்து தன் வலது கை விரல்களோடு கோர்த்தபடி கேட்டவன், “நீ சொல்றதை பார்த்தா பார்க்குக்கு வேற எதுக்குத்தான் வரணும் போல” என்றான்.


  “வேற எதுக்கு என்றபடி அவள் அவன் முகம் பார்க்க…” அவன் விஷம சிரிப்பை கண்டவள் “ச்சீ… நான் வீட்டுக்கு போறேன் உங்க பார்வையே சரி இல்லை” என்று சிணுங்கலுடன் எழுந்தாள்.


  “ஹேய் சிற்பா…” என்று அவள் கையை பிடித்து தன் அருகில் அமறவைத்தவன், “ இவ்ளோ கூட்டமா இருக்க பார்க்க பார்த்தும் என்னை சந்தேகப்படுறியே” என்று கேட்க அவள் அவனை பாவமாய் பார்த்தாள்.


  “கல்யாணம் முடியுற வரை டிஸ்டன்ஸ் மெய்ன்டெயின் பண்ணனும்” என்று கூறியவளை பார்த்து வாய்விட்டு சிரித்தான் யுகன்.


  “என்ன… என்ன சிரிப்பு…” சற்று காரமாய்த்தான் கேட்டாள் கூடவே கொஞ்சம் கெஞ்சலாய்.


  “இவ்ளோ நடந்த அப்புறமும் இப்படி ஒரு கண்டிஷன் போடுறியே அதான்” என்றான்.


  “அது வேற இது வேற” என்று கூறியவள் தலையை குனிந்தபடி தன் கையை அவனிடம் இருந்து பிரிக்க முயன்றாள்; வெட்கமாம்.


  “பிடிச்ச உன் கையை விடுறதா இல்லை” அவன்ஆழ்ந்த குரலில் இருபொருள்பட கூற வெடுக்கென்று நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள்.

  இத்தனை நாள் அவன் காதலை வாய்வார்த்தையாக சொன்னாலும் ஏதோ கடமைபோல சொல்கிறான் என நினைத்தவள் எண்ணம் இன்று தவிடுபொடியானது. அவன் கண்கள் முழுவதும் காதலை பிரதிபலித்து லேசர் கதிர்களாய் அவள் கண்கள் வழி இதயத்தை ஊடுருவியது.


  டீசர் 2


  இடியென இடிக்கும் இதயத்தை தன் இடது கையால் அழுத்தி பிடித்துக்கொண்டு அவன் அறைக்கதவை தட்டினாள் சிற்பா.
  அனைவரும் உறங்கும் இந்த நடு இரவில் கூட அவன் விழித்துதான் இருப்பான் என்று எண்ணம் கொண்டாளோ; தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை தட்ட எத்தனிக்கும்போது கதவு திறந்தது.


  கதவை முழுதாய் திறந்தபடி வெறித்த பார்வையோடு அவளையே பார்திருந்தான் யுகன்.


  “நான்…நான்…” என்று பயத்தில் தட்டு தடுமாறியவளுக்கு கண்ணீர்தான் வந்ததே ஒழிய அதற்குமேல் வார்த்தை வரவில்லை.
  தன் தலையை மட்டும் உள்ளே செல் என்பதுபோல் செய்கை செய்தவனை கண்டு பயத்துடன் அவள் உள்நுழைய கதவை தாழிட்டு கொண்டான் யுகன்.
  அவனையும் அவன் தாழிட்டுகொண்ட கதவையும் சற்று நடுக்கத்துடன் பார்க்க, அவளை நோக்கி வந்தவன் பார்வை என்னவோ வேங்கையின் பார்வையை ஒத்து இருந்தது.


  “நான்…பே…பேசணும்…” என்று அவன் தன்னை நோக்கி வரும்முன் கூற அதற்குமுன் அவளை நெருங்கியிருந்தான் அவன்.


  “நமக்கிடையில் பேச ஒண்ணுமே இல்லை…” என்று கூறியவன் கட்டிலையும் அவளையும் மாறி மாறி பார்க்க தவித்துபோனாள் அவள்.


  “நான் பேச மட்டும்தான் வந்தேன்” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய அவனுக்கோ கோபம் தலைக்கேறியது.
  தன் இரு கைகளாலும் அவள் தோள்களை பற்றியவன் “என்ன உன் தவறை நியாயப்படுத்த வந்தியா” என்று சத்தம் இல்லாமல் மெதுவாய்தான் கேட்டான். அதிலே அவனது அடக்கப்பட்ட கோவம் அப்பட்டமாய் தெரிய அதை காணும் சக்தியற்று தலை குனிந்தாள் அவள்.


  “இல்லை வேற பேசணும். நான் என் தப்பை நியாயப்படுத்த மாட்டேன் தெரியாம பண்ணாலும் ரொம்ப பெரிய தப்பு…” என்று கூறி தலையை நிமிர்த்தி அவனை அழுத விழிகளோடு எரிட்டாள்.


  அவள் விழிகளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ கைகளை எடுத்தே விட்டான்.


  “நான் வேற சொல்லணும்” என்று அவள் மறுபடியும் அவனை பார்த்தே சொல்லிவிட்டு மீண்டும் தலையை குனிந்துகொண்டாள்.


  அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்கும் தெரியும் அவன் அறிவான் என்று அவளுக்கும் தெரியும் என்பதால் பேச்சற்ற நொடிகளாக கடந்தன. இருவருமே சொல்லவும் கேட்கவும் தைரியமற்று இருந்தனர்.
   
   
 4. Shanthini Shanu

  Shanthini Shanu Wings New wings LW WRITER

  Messages:
  12
  Likes Received:
  41
  Trophy Points:
  33
  என்னுள் எரியும் காரிகையே..

  அத்தியாயம் ஒன்று
  “நானுங்களை முழுசா நம்புறேன். என்னை விட்டு போகமாடீங்க. எனக்கு பயம் கிடையாது. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை...” என்று அவள் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வர அத்தனை வெறுப்பு வந்தது அவனுக்கு. அவள்மீது மட்டும் அல்ல தன்மீதும்தான்.

  “அவதான் சொன்னாள் என்றால் உனக்கு எங்க போச்சு புத்தி ச்சீய்...” என்று தன்னையே நினைத்து அருவருத்து கொண்டான் யுகன் என்னும் யுகேந்திரன். அவனது சிவந்திருந்த கண்கள் முழுவதும் ரௌத்திரத்தையே பிரதிபலித்தது.

  அவன் இவ்வாறு தன் அறையில் கோப முகமாய் சுழன்றுகொண்டு இருக்க, அதற்கு நேர் கீழே இருந்த அறையில் சோக ஓவியமாக வீற்றிருந்தாள் சிற்பா எனும் சிற்பிகா.

  சற்று நேரத்திற்கு முன் யுகன் தன்னை தள்ளிவிட்டு சென்ற அதே இடத்தில் அழுது கரைந்தவளை தேற்றுவார் யாரும் இல்லை.

  யுகன் தன்னை ஏமாற்றவில்லை எனினும் அதற்கு சமமான பலமான அடியை அவளுக்கு கொடுத்துவிட்டான் ஆம் காதல் தோல்வி.

  பிரிந்தவர் கூட இணைந்திட முடியும் ஆனால் அவளின் நிலை... வெறுப்பவன் அன்பை பொழிவானோ?...

  எவ்வளவு நம்பினாள் அவனை.தன் வாழ்க்கை முழுமைக்கும் இனி அவன் மட்டுமே என நம்பினாளே. ஆனால் இங்கு நம்பிக்கை என்னும் வார்த்தை பயன் இல்லாமல் இன்று பொய்த்துப்போனதே. அவனல்லவா அவளிடம் நம்பிக்கை இழந்தான்.

  இத்தனை நேரமும் தேம்பி...தேம்பி... அழுதவள் சோர்ந்து போய் தரையில் சரிய அவன் அறைந்த கன்னம் தரையில் பட்டு இன்னும் எரிந்தது. மேலும் அழுகை அடக்கமாட்டாத அழுகை....

  அறியாது செய்த பிழை அவள் வாழ்வையே கேள்விக்குறி ஆக்கியது. தவறுக்கு தண்டனை சரி ஆனால் அவனை இழப்பது கொடுமை அல்லவா அவளுக்கு...

  எவ்வளவு நேரம் அழுதாளோ “சிற்ப்பா” என்ற குரலில் தன்னை சரிசெய்து முகம் கழுவி தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

  வெளியே அவளை எதிர்பார்த்து சக்கர நாற்காலியில் காத்திருந்தார் ராஜம் பாட்டி. ஆம் அந்த வீட்டின் ராணி. யுகனின் தந்தை வழி பாட்டி. சக்கர நாற்காலியில் கூட அத்தனை கம்பீரமாய் வீற்றிருந்தார். இருக்காதா பின்னே முன்னாள் கமிஷ்னரின் மனைவி அல்லவா...

  தன்னை ஒன்றுக்கு மூன்று முறை கண்ணாடியில் பார்த்து சமன் செய்துவிட்டே அறையை விட்டு வெளியே வந்தாள் சிற்ப்பா.

  “போலாம் பாட்டி...” என்றவள் முகம் போலி பிரகாசத்தை தத்து எடுத்து.

  “சரி டா..” என்று அவர் கூற அவரின் கூர்விழிகளோ அவளை கூர்மையாய் நோக்கியது. அவள் அவரது சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு செல்ல; அவள் விழிகளுக்குள் இருக்கும் கவலையை ஒரு நொடியில் கண்டுகொண்டார் ராஜம். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. இந்த வீட்டில் அவள் வந்த நாள்தொட்டே கவனிக்கிறார் அவ்வப்போது அவள் முகம் சோகத்தை மறைத்து புன்னகைப்பதை. அது அவளுக்கு மட்டுமே கைவந்த கலையோ என்றும் தோன்றும்.

  சொல்லிக்கொள்ள உறவுகள் என்று யாரும் இல்லாமல் இருப்பவளை அணைத்து ஆறுதல் படுத்த; ஆறுதல் மொழி கூற அவருக்கும் ஆவல்தான், ஆனால் அதை செயலில் காட்ட விரும்பினார். ஏனெனில் அவள் வாய்வார்த்தையாக தன்னை பற்றி சொல்லாதபோது அவர்மட்டும் பெரிதாக என்ன செய்துவிட முடியும்.

  வீட்டின் அருகில் இருக்கும் பூங்காவிற்கு செல்லும்வரை இருவரும் அமைதியாகவே இருந்தனர். சிற்ப்பா யுகனை பற்றிய எண்ணங்களில் வர ராஜம் சிற்பாவை பற்றி யோசித்தார்.

  சில நேரம் அவள் ஏதோ ஆபத்தில் இருக்கிறாளோ என்று தோன்றும். அவளுக்கு உறவுகள் இருக்க கூடுமோ என்று தோன்றும். ஏன் அவள் பல நேரங்கள் உடுத்தும் உடை வைத்து அவள் ஒரு பணக்கார வீட்டு பிள்ளையாக இருப்பாள் என்றும் நினைத்ததுண்டு. ஆனால் அவரோ அவ்வீட்டில் உள்ளவர்களோ “தான் ஒரு அனாதை” என்று அவள் கூறியதில் இருந்து அவளை பற்றி எதுவும் கேட்கவில்லை. அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று அவள் பாதுகாப்பை தேடி வந்திருக்கிறாள் என்பது மட்டுமே.

  அங்கு அவர்கள் செல்ல வருணும் அங்குதான் அமர்ந்திருந்தான். வருண் தீப்பிழம்பு செய்தி சேனலில் வேலை செய்பவன். சிற்ப்பாவும் அங்குதான் பணிபுரிக்கிறாள். அதன் தலைவர் தான் யுகன்.

  யுகனின் தந்தை தாத்தா இருவரும் போலீஸ் துறையில் இருக்க யுகனோ பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்தான். அவனது தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை புரிபவர்கள் தான் வருணும் சிற்ப்பாவும். இதில் சிற்ப்பா மட்டும் யுகனின் வீட்டில் தங்கி இருப்பது பெரிய கதை.

  ராஜமும் சிற்ப்பா வும் வருண் இருப்பதை கவனித்து அவன் அருகே செல்ல, அவர்களை கவனித்தவன் புன்னகையுடன் அவர்களை வரவேற்றான்.

  “என்னப்பா இங்க இருக்குற?” ராஜம் பாட்டிதான் அவனை பார்த்து கேட்டார்.

  “சும்மாதான் பாட்டி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்ன்னு தான்”

  “சரிப்பா....” என்றபடி அவர்கள் இருவரும் பேச ஏதோ சிந்தனை வயப்பட்டவளாய் வருணை பார்த்து லேசாய் சிரித்துவிட்டு அவர்களை விட்டு விலகி சென்றாள் சிற்ப்பா.

  “என்னப்பா வருண் சிற்ப்பா ஒரு மாதிரி இருக்காளே சேனல்ல ஏதாவது பிரச்சனையா?” என கேட்டார் ராஜம்.

  “இல்லையே பாட்டி காலையில கூட என்னோட விவாதம் பண்ணிட்டுத்தானே வந்தாள்” என்றான் அவனும் அவளையே கவனித்தவாறு.

  “ விவாதாமா ஏன் எதுக்கு...”

  “ நானா வம்பை விலைக்கு வாங்கின கதை பாட்டி அது...” என்று சோகம் போல் காமெடியாக சொன்னவனை பார்த்து சிரித்தார் அவர்.

  அவனோ காலை சேனலில் நடந்ததை அவரிடம் விவரிக்க துவங்கினான்....

  காலை அலுவலகத்தில் யாரையோ கோபமாக திட்டிக்கொண்டிருந்தாள் சிற்ப்பா அருகில் அவளுடன் வேலை செய்யும் அவள் தோழி டின்சி, அவளது முகமும் கவலையும் கோபமுமாக இருந்தது.

  “என்னடா இங்க சத்தம்..” என்று கேட்டபடியே அவர்கள் இடையே புகுந்தான் வருண்.

  “எல்லாம் இந்த நியூஸ் தான் வருண் பாரு மூணு வயசு குழந்தையை போய் ரேப் பண்ணி இருக்கான்.... இவனை எல்லாம் அங்கையே கொல்ல வேண்டாம்...”என்று அச்செய்தியை கம்ப்யூட்டர் திரையில் காட்டி அவள் ஒருபுறம் கோபமாய் கூற..

  “பிடிச்சு போலீஸ்கிட்ட கொடுத்திருக்காங்க எதுக்கு ஓசி சோறு சாப்பிட்டு தப்பிச்சு போகவா” ஒருபுறம் ஆதங்கமாய் பேசினாள் டின்சி.

  “மூஞ்சை பாரு ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி முழிக்குரத்தை” என்று அந்த கயவனின் புகைப்படத்தை சினத்துடன் நோக்கினான் வருண்.

  “மனசே ஆரலை... ஒவ்வொரு தடவையும் இந்த மாதிரி நியூஸ் படிக்குறப்போ கோபம் அழுகை கழிவிரக்கம் எல்லாம் சேர்ந்து வருது” சோர்ந்து போனவளாய் கூறினாள் சிற்ப்பா.

  அதன் பின் சிலநொடிகள் மூவருக்கும் இடையில் கனத்த அமைதியே நிலவியது.

  வருணோ டின்சியை மேலோட்டமாக பார்த்தான். ஸ்லீவ்லெஸ் இறுக்கமான பனியன் டாப் மற்றும் லோஹிப்பில் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். கையை தூக்கினாலே அவளது வெற்றிடை சிறிது தெரியும் எனும் அளவில் இருந்தது அவள் உடை, அது அவளது இயல்பு. அவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ சற்றே கோபமான குரலில்,

  “என்ன பண்ண சிற்பா பொண்ணுங்க கொஞ்சம் ஓவர் மார்டர்னா ட்ரெஸ் போடுறதுதான் இந்த மாதிரி ரேப் க்கு எல்லாம் காரணம். கலாச்சாரம் வேண்டாம்” என்று கேவலமாக வாய்விட்டு சொல்லிவைத்தான் டின்சியை பார்த்தபடி.
  அவன் தன்னை பார்த்துதான் அவ்வாறு சொல்கிறான் என்பதை புரிந்த டின்சி அமைதியாக கோபத்தோடு அவனை பார்க்க அதை அறியாத சிற்பாவோ அவனை அழுத்தமாய் நோக்கினாள்.


  “வெல்... ஹாம்.... இன்னொரு கேஸ் பார்த்தியா?... கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி” என்று அதே நாளின் அடுத்த செய்தியை கூறினாள் சிற்பா.

  “அடச்சி... புருஷன் வேண்டாம்னா டிவோர்ஸ் பண்ணிட்டு போக வேண்டியது தானே; ஏன் கொலை எல்லாம் பண்ணனும்” என்று எகிறினான் வருண்.

  “அவ புருஷனுக்கு ஏற்கனவே தெரியுமாம் வருண். தன் பொண்டாட்டிக்கு இன்னொருத்தன் கூட கனெக்ஷன் இருக்குன்னு தெரிஞ்ச அப்புறம் ஏன் அவ கூட வாழனும்” என்று பதில் கூறினாள் சிற்பா.

  “மண்ணாங்கட்டி, அவளுக்கு வெக்கம் மானம் இல்லாமல் இருக்கலாம் அவனுக்கும் இருக்க கூடாதா? ஊருக்கு பயந்து அட்ஜஸ்ட் பண்ணி இருக்கான்” என்றான்

  “ஊசி இடம் கொடுக்காமல் நூலு நுழையுமா சொல்லு... இவன் இடம் கொடுத்தான் அவ கொலை பண்ணிட்டா சிம்பிள்” என்று அசால்ட்டாக கூற, இருவரின் வாக்கு வாதத்தையும் அமைதியாய் கவனித்தாள் டின்சி. அவளுக்கு தெரியும் சிற்பா எப்படியும் வருணுக்கு தக்க பதில் கொடுப்பாள் என்று.
   
  Sarnayarajan, sumee, pop pop and 4 others like this.
   
 5. Shanthini Shanu

  Shanthini Shanu Wings New wings LW WRITER

  Messages:
  12
  Likes Received:
  41
  Trophy Points:
  33
  மேலும் சிற்ப்பா, “மே பி அவன் கொஞ்சம் வீக்கான ஹஸ்பெண்டா இருக்கலாம், அதனால கள்ள காதலனை செட் பண்ணி கொன்னுட்டா” என்று நக்கலாக கூற வெகுண்டான் வருண்.

  “அதுக்காக கொலை செய்யணுமா கொஞ்சம் கூட மனசு உறுத்தலை அவளுக்கு. ஒரு உயிர் என்ன சாதாரண விஷயமா... இவளை சும்மா விட கூடாது....” என்று கெட்ட வார்த்தைகளும் கலந்து ஆவேசமாய் அவன் பேச,

  “சில் வருண் சில்... எதுக்கு இவ்வளவு ஆவேசம்” என்று சமாதனப்படுத்தினாள் சிற்பா.

  “பின்ன என்ன சிற்பா, ஒருத்தி கள்ளக்காதலன் கூட சேர்ந்து கணவனை கொன்னிருக்கா அவளுக்கு சப்போர்ட் பண்ற” என்றான்.

  “நீ மட்டும் ரேப் பண்ணுன அந்த பொறுக்கி கு சப்போர்ட் பண்ணுற, பொண்ணுங்க உடலும் உயிரும் சாதாரண விஷயமா” என்று சற்று நக்கலாக அவன் பாணியில் கேட்க வருணுக்கு சிற்பா ஏன் இவ்வாறு பேசினாள் என புரிந்தது.

  “அது வந்து நான் பொண்ணுங்க போடுற ட்ரெஸ் தான் இதுக்கு காரணம்ன்னு சொன்னேன்” என்றான் அருகில் நின்ற டின்சியை பார்த்தபடி. அவன் குரலில் கூட தவறு செய்த தயக்கம் இருந்தது.

  “நானும் காரணம்தான் சொன்னேன் வருண்... எவ்வளவு பெரிய தப்பு பண்ணா என்ன ஒரு சின்ன காரணம் கண்டிபிடிச்சா போச்சு” என்றவள் பின் ஆதங்கமாய்

  “எப்படிடா மூணு வயசு குழந்தையை ரேப் பண்ணா கூட பொண்ணுங்க போடுற ட்ரெஸ் தான் காரணம்னு சொல்லுறீங்க...”
  வெட்கி தலை குனிந்தான் வருண்.

  “ஐநூறு வருசத்துக்கு முன்னாடி நம்ம ஆயா எல்லாம் சேலையும் சுடிதாருமா போட்டு நடந்தாங்க ?... மேலாடை கூட நிறையபேர் போடலையே... உங்க வக்கிரம் எங்க உடையில் இருக்கா? உடலில் இருக்கா? இல்ல உங்க மனசிலா?” யாரையோ தாக்க சென்ற தன் வார்த்தைகள் எங்கே போய் நிற்கிறது என்பதை உணர்ந்தான் வருண்.

  “சும்மா அந்த பெண்ணுக்கு சப்போர்ட் ட்டா பேசுனா உனக்கு இவ்ளோ கோபம் வருது ம்ம்ம்... இங்க எந்த பெண்ணும் கள்ளக்காதலுக்கு சப்போர்ட் பண்ணலை ஆனா உன்னை மாதிரி ஆளுங்கதாண்டா ரேப் பண்ணுற பொறுக்கி க்கு எல்லாம் ஆதரவா பேசறீங்க.... மூணு வயசு குழந்தை அதுக்கு ஏதாவது தெரியுமா?.. அந்த குழந்தை நிலை ல இருந்து யோசிச்சு பாரு?..” என்று கூறியவளின் குரல் கமரியது. சற்று சமாதானம் அடைந்தவள் அல்ல தன்னை தேற்றியவள்,
  “ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணும் அவளுடைய உறுப்புகள் மட்டுமே புனிதமானது இல்ல. தன் உயிரணுக்களை பெண்ணோட கருவறைக்குள் பாதுகாப்பா கொண்டுசெல்லும் ஆணும்தான். ஆனா இந்த கொடியவர்கள் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கோ அல்லது பெண்களுக்கோ ஆண்களை உலகிலே கேவலமான கொடுராமான ஆயுதங்களாதான் காட்டுறங்க. நீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க... இனியாவது இந்த ட்ரெஸ் அ விட்டு வேற ஏதாவது சரியான காரணம் கண்டுபிடிங்க” என்று நக்கலாக கூறியபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

  தான் பேசிய பேச்சு அதிகபடித்தான் என்று எண்ணியபடி போகும் அவளை சங்கடத்துடன் பார்க்க அவன் அருகில் வந்த டின்சி, “என் ட்ரெஸ் பிடிக்கமாதானே அவகிட்ட அந்தமாதிரி பேசின, நான் மார்டன் ட்ரெஸ் போட்டா உனக்கு என்ன?...” என்று கேட்டபடி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.


  வருணும் அவள் என்ன ட்ரெஸ் போட்டா எனக்கு என்ன என்று தனக்குத்தானே கேட்டபடி அமர்ந்திருந்தான்.


  “இதுதான் பாட்டி நடந்தது...” என்று வருண் ராஜம் பாட்டியிடம் கூற அவரோ உனக்கு இது தேவையா என்ற பாவனையில் பார்த்தார்.


  “சரி அதைவிடுங்க பாட்டி; மேடம் என்ன திடீர்னு டல் ஆகிட்டாங்க போல” என்று தொலைவில் எதையோ வெறித்தபடி நின்ற சிற்பாவை பார்த்தபடி கேட்டான்.


  “ஆமாப்பா, எதையோ பறிகொடுத்தவ மாதிரி இருக்கா அதான் உன்கிட்ட விசாரிச்சேன்”


  “தெரியலையே, அவ இங்க வேலைக்கு சேரும் முன்னாடி உள்ள அவ வாழ்க்கை ஒரு வேளை சோகமா இருக்கலாம். நமக்கு என்ன தெரியும்” என்றான்.

  “அதைப்பற்றி அவளா எதுவும் நம்மகிட்ட சொல்லாதப்போ நாம எப்படி கேக்க. அதுவும் அனாதை னு சொன்ன அப்புறம்... நல்ல பொண்ணா தெரியுதா அவளை வற்புறுத்தவும் மனசு வரலை” என்றார் பாட்டி.


  “ ஆமா பாட்டி சிற்ப்பா நிஜமாவே ரொம்ப நல்லவ தான் அமைதியான பொண்ணு வேற. அவ ஏதோ இக்கட்டில் மாட்டி அங்க இருந்து தப்பிக்க இங்க வந்ததா யுகன் சொல்லிருக்கான்”


  “அவனுக்கு எப்படி தெரியும்” என்று சந்தேகமாக கேட்டார் பாட்டி. அவருக்கு தெரிந்தவரை அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள் அவ்வளவே; அதைத்தாண்டி அவர்கள் இருவரும் பேசியதை அவர் ஒருமுறை கூட கண்டதில்லை.


  “எனக்கு எங்க தெரியும் அவனுக்கு ஒரு கெஸ் அதை சொன்னான்” என்றான்.

  “ஓஹ்...” என்றவர் பின் வேலை ஆபீஸ் என்று அவனிடம் பேசி கொண்டிருக்க சிறப்பாவும் அங்கு வந்து சேர்ந்தாள்.

  அவர்கள் மூவரும் இணைந்து பேசி விடை பெரும்போது மாலை 7.30 ஆகி இருந்தது. சிற்ப்பா அவர்களுடன் இருந்தாளே ஒழிய பெரிதாக ஒன்றும் பேசிவிடவில்லை.
  அடுத்த பத்து நிமிடத்தில் அவர்கள் வீட்டை அடைய ஹால் சோபாவில் அமர்ந்தபடி அவர்களை சிரிப்புடன் வரவேற்றார் ராஜேந்திரன். ராஜம் பாட்டியின் அவர். பெயரில் மட்டும் பொருத்தம் இல்லாமல் உருவம் குணம் என அனைத்திலும் பொருந்தி வாழும் தம்பதிகள்.

  “வாங்க....வாங்க... அவுட்டிங் எல்லாம் முடிஞ்சிடுச்சா..” என்று கம்பீர குரலில் கேட்டபடி வாசல்வரை வந்து மனைவியின் சக்கர நாற்காலியை தள்ள துவங்கினார்.
  முதுமை பருவத்திலும் கம்பீரமாய் இருந்தவரை பார்க்கையில் என்றும் போல் இன்றும் யுகன்தான் அவள் கண்முன் வந்து நின்றான்.

  யுகனின் நிறமும் முகசாயலும் அவன் தாயை போல் இருந்தாலும் உயரமும் உடற்கட்டு அப்படியே தன் தாத்தாவை கொண்டு இருப்பான்.


  பாட்டி தாத்தா இருவரும் பேசியபடியே அவர்கள் அறையில் நுழைய சோர்ந்துபோய் ஹால் சோபாவில் அமர்ந்தவளுக்கு இன்று நடந்தவையே கண்முன் ஓடியது.


  அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்தவள் உடை கூட மாற்றாமல் யுகனை காணவே பெரும் ஆவலுடன் காத்திருந்தாள்.


  “ச்சே... பேசமா சேனல்ல வச்சே பார்த்திருக்கலாம். இப்போ அவர் வர்ற வரை வெய்ட் பண்ணனும்” என்று புலம்பியபடி தடதடக்கும் இதயத்துடன் காத்திருக்க பட்டென்று கதவை திறந்து ஆறடி அய்யனார் போல உள்நுழைந்தான் யுகன்.


  தன்னவனை கண்டதும் முகம்மலர எழுந்து அவள் செல்ல நான்கடி வைத்த பின்தான் அவனது கோப முகத்தை கண்டாள் அவள். அத்தனை கோபமாய் தீ கங்குகளை ஒத்திருந்தது அவன் முகம்.

  “என்னாச்சு...” என்று பதட்டத்துடன் அவன் அருகில் வர கல் போல இறுகி நின்றவன் தன் இரும்பெனும் கரங்களால் ஓங்கி அவளை அறைந்திருந்தான்.


  “ஆஆ...” என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தவளுக்கு ஒரு நொடி என்னவென்று புரியவில்லை புரிந்த மறுநொடி நீயா என்னை அடித்தாய் என்பதைப்போல அதிர்ச்சியாய் எழுந்தமர்ந்து அவனை நோக்கினாள்.


  கண்கள் குளம்கட்ட கன்னம் பச்சைமிகளாய் அரைத்து தடவியதுபோல் எரிந்தது.


  “துரோகி...” என்று சற்றும் கோபம் குறையாமல் அவளை அழைத்தவன் குனிந்து அவள் குரல்வளையை தன் வலக்கையால் அழுத்தமாய் பற்றியபடி எழுப்ப பேச முடியாமல் போனாள் பாவை.
  என்னவென்று தெரியாமல் அவன் கோபத்திற்கான காரணம் புரியாமல் அவனிடம் அகப்பட்டு மூச்சுக்காற்று வாங்க போராடிக்கொண்டு இருந்தாள் அவள்.
  அவளோ அவனை கொன்றுவிடும் வேகத்தில் இன்னும் அழுத்தமாய் நெருங்கினான் அவள் குரல்வளையை. அவள் கண்கள் சொருகும் வேளை “ச்சே...” என்றபடி அவளை உதறி தள்ளியவனிடம் மருந்துக்கும் இரக்கம் இல்லை.
  இம்முறை கட்டிலில் மல்லாக்க விழுந்தவள் ஒருபுறமாக சரிந்து வேகமாய் இருமினாள் கூடவே ஆழமூச்சுகள் வேறு.


  “உன்னை போய்... ச்சே... இவ்வளவு கேவலமான பிறவியா நீ...” என ஆத்திரத்தில் கத்தியவன் அவள்முன் சில புகைப்படங்களை வீச மேலும் அதிர்ந்தாள் அவள்.

  ‘இது எப்படி இவனிடம்’ என்றபடி அதே அதிர்ச்சியுடன் அவனை பார்க்க,

  “எங்க எல்லாரையும் நல்லவ மாதிரி நடிச்சு ஏமாத்திட்ட இல்ல, அதிலும் என்னை...” என்று வலதுகை ஆள்காட்டி விரலால் தன்னை சுட்டி காட்டியவன் அதற்குமேல் பேச முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டான்.

  அவன் கோபத்திற்கான காரணம் அறிந்துகொண்டவள் சற்று தன்னை நிலைநிறுத்தி எழுந்து நின்றாள்.


  “கொஞ்சம் நான் சொல்லுறதை கேளுங்க...” என்று அவள் கூறி முடிக்கும்முன், “ஷட் அப்” என்று கத்தினான் அவன். அவனது சத்தத்தில் தானாகவே அவள் கைகள் இரண்டும் அவள் வாயை மூடியது. கண்களோ அதுபாட்டிற்கு அருவியாய் கொட்டியது.


  “எவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்க, ஏமாற்றுக்காரி..” என்று வெறுப்பாய் அவன் கூற தலையை தாழ்த்திக்கொண்டாள் அவள் மனமோ இல்லை...இல்லை... என அரற்றியது.


  “நீ ஒரு கொலைகாரி...” என்ற அவனது அடுத்த குற்றச்சாட்டில் அம்பு தைத்த மானாக தவித்தாள்.

  “இல்லை...” என்று அவனை நோக்கி வர பலம் கொண்ட மட்டும் அவள் தோள்களை பற்றி தரையில் அவன் தள்ள பின்பக்கமாக விழுந்தாள் அவள்.

  என்னவென்று சொல்லுவாள் ஒருவகையில் அதுவும் உண்மைதானே என்று எண்ணியவளுக்கு மேலும் அழுகை கூடியது. தன்மீதே வெஞ்சினமும் எழுந்தது.

  “உனக்கு பயங்கரமான தண்டனை நிச்சயம் கிடைக்கும் அதுவும் என் கையால். அதுவரை இங்க இரு” என்று எச்சரித்துவிட்டு சென்றவன் கதவை திறக்கும் முன் மறுபடியும் திரும்பி அழும் அவளை கூர்ந்து நோக்கி “வீட்டில் யாருக்கும் ஏதும் தெரியக்கூடாது” என்று மிரட்டிவிட்டு சென்றான்.

  நடந்ததை எண்ணியவளுக்கு மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்து வர தான் ஹாலில் இருப்பதை உணர்ந்து எழுந்து தன் அரை நோக்கி செல்ல எத்தனிக்க மாடிப்படி அரவம் கேட்டு திரும்பி பார்த்தாள்.


  அவன்தான் யுகன் கருப்புநிற டீசர்ட்டும் ஜீன்சுமாய் இவளையே முறைத்தவண்ணம் வந்துகொண்டு இருந்தான்.


  காரிகையே....
   
   
Loading...

Share This Page