தோட்டாக்கள் பூவாச்சு 4

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Anusuya chellapandiyan, Sep 6, 2019.

 1. Anusuya chellapandiyan

  Anusuya chellapandiyan Wings New wings LW WRITER

  Messages:
  11
  Likes Received:
  15
  Trophy Points:
  23
  தோட்டாக்கள் பூவாச்சு

  பூ--4

  Anusuya Chellapandiyan:
  சினிமாக்களில் தாதாக்களும், டான்களும் சித்தரிக்கப்படும் முறைகளை போல அல்லாமல், சாதாரணமானதாகவே அவன் இருந்தான். இந்த இருபத்து எட்டு நாட்களில் அவன் பழக்க வழக்கங்கள் அவன் மீது அவளுக்கிருந்த கொஞ்ச நஞ்ச கோபத்தையும், கெட்ட அபிப்ராயத்தையும் மாற்றி இருந்தது. முதலில் தன் வீட்டார் மீது அவளுக்கிருந்த தவறான புரிதலையும், வருத்தத்தையும் மனதில் கொண்டிருந்தவள் அவர்களை அழைத்து பேசாமலே இருந்தாள். ரகுவீர் பேசச் சொல்லி வற்புறுத்த, அவன் கூறிய படி பேசித்தான் பார்க்கலாமே என்ற எண்ணத்துடன் தன் வீட்டாருக்கு அழைக்க, அவர்கள் அவளுக்காக துடிப்பதை அறிந்து கொண்டாள். அதன் பின் நிறைய அழுகையும், வருத்தங்களும் என்றிருந்த உரையாடல் மாறி, நிறைய சிரிப்பும், மகிழ்ச்சியும் மட்டும் அவர்களுடனான அவளது உரையாடலில் இடம் பெற துவக்கியது. ஒரே மாவட்டத்தில் இருந்தாலும் அவர்களும் இவளை வந்து பார்க்கவில்லை. இவளும் அவர்களை வாருங்கள் என்று அழைக்கவோ, அவர்கள் அழைத்தும் அங்கு போகவும் இல்லை. ஏனென்று காரணம் கேட்ட கணவனிடம் "மெதுவாக போகலாம் ஒரு நாள்" என்றவள் மேற்கொண்டு அவன் எதும் கேட்கும் முன் வேறெதாவது கேட்டு பேச்சை மாற்றி விட முதலில் விட்டு விட்ட ரகுவீர் வற்புறுத்தி கேட்ட பின், "அர்ஜுன் அண்ணா இன்னும் என்கிட்ட பேசல வீர். அவர் வந்து அழைச்சா நாம போகலாம். அதுவரை வேண்டாம்" என்று அழுகையை அடக்க முடியாமல் நகர போனவளை, இழுத்து தன்னோடு அமர்த்தியவன் "அழுதுடு பேபி. உன் உணர்வுகளை என் முன் வெளிப்படுத்த இன்னும் தயங்குகிறாயா? " என்றதும் அவன் தோள்களில் சாய்ந்தவளின் கண்ணீர்த்துளிகளின் மென் சூடு அவன் சட்டையைத் தாண்டி அவன் மார்பை நனைத்தது.


  இத்தனை நாட்களில் அவள் அவனை பற்றியும், அந்த வீட்டை பற்றியும் நிறைய அறிந்து கொண்டாள். இரண்டு தளங்களில் அமைந்துள்ள அந்த வீடு அவனது உழைப்பில் உருவாகியிருந்தாலும், அமைந்திருந்த இடம் அவர்களது குடும்பத்தின் பூர்வீக நிலம். இவன் தந்தையோடு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாததால், அவரின் ஒரே மகனான இவனுக்கு சொந்தமாகி இருக்கிறது. அவர்கள் இப்போது இருக்கும் ஒரு ஹாலும் அதையொட்டி அமைந்த சிறிய சமையல் அறையும், படுக்கை அறையும் அவர்கள் பயன்பாட்டுக்காகவும் மற்ற ஒரு அறை முழுக்க அவனது பயன்பாட்டுக்காகவும் முதல் தளத்தில் இருக்க, தரைத்தளம் ஒரு பெரிய ஹால் மற்றும் சமையலறை மற்றும் நான்கைந்து பெரிய அறைகளுடன் இருந்தது. கீழ் தளம் முழுக்க பூட்டியே இருந்தாலும் வாரம் ஒரு முறை வீட்டைச்சுற்றியிருக்கும் தோட்டத்தை பராமரிக்க அவன் நியமித்திருக்கும் கணவன் மனைவியான தொழிலாளர்கள் இருவரும் சுத்தம் செய்து வைப்பதை தேவி கவனித்திருந்தாள்.

  அதிகாலையிலே தனது எழும் கணவன் டிரெட்மிலில் ஓடிக்கொண்டே தன் வேலைகளை திட்டமிடுவதையும், அவளுக்கு முன்பு குளித்து விட்டு வந்து தினசரிகளில் முழ்குபவன், அவள் குளிக்கும் முன்பு அணிய தேர்வு செய்யும் உடையின் நிறத்திற்கு ஏற்ப தனது உடைகளை தேர்வு செய்து அணிய ஏதுவாக எடுத்து வைத்துவிட்டு மீண்டும் செய்தி தாளில் கண்ணாவதையும், இப்போதெல்லாம் தன்னையறியாமலே ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.  முதலிரண்டு நாட்கள் ஆர்டர் செய்த உணவு வீட்டுக்கு வர, மூன்றாம் நாள் அவன் சமைத்து பரிமாற, அந்த உணவை உண்டவள் மனதில் "இவனுக்கு தெரியாத விஷயமே இல்லையா?" என்று தோன்றாமல் இல்லை. அதன் பின் வந்த நாட்களில் அவனோடு சேர்ந்து சமையலறை வேலைகளை பகிர்ந்து கொள்ள அவனும் மறுக்கவில்லை. ஆறிலிருந்து ஏழு மணிக்குள் காலை டிபன் மற்றும் மதிய உணவை இருவரும் சேர்ந்து தயாரிப்பதும், காலை உணவை அவனுடன் சேர்ந்து உண்பதும் அவளுக்கு பிடித்து போனது. அதன் பின் அவனுக்கான மதிய உணவை இவள் பேக் செய்து தருவதற்குள் தயாராகி வருபவன், விடைபெறும் முன் அவள் நெற்றியில் முத்தமிடாமல் செல்வதில்லை. அதன் பின் அவளும் எவ்வளவு நேரம் தான் தன் வீட்டாரோடு பேசுவதில் செலவிட முடியும்?

  சமூக வலைதளங்களும் சலித்து போக, இயற்கையோடு செலவிட நினைத்து வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தை இரண்டு சுற்று சுற்றிவிட்டு, கீழிருந்தே இரண்டாக பிரியும் ஒரு மாமரத்தின் கீழே அமர்ந்து விடுவாள்.

  மதிய உணவு தான் தேவிக்கு, அவனின்றி கடனுக்கு என்றிருப்பது போல தோன்றும். அவனின் வருகை இரவுக்கு முன் இல்லை என்றானதால், இரவு எளிமையாக ஏதாவது செய்து வைத்து விட்டு காத்திருக்கவும் செய்தாள். இரவு உணவை அவனோடு சேர்த்து சிறு உரையாடலோடு உண்பதும், அதன் பின் மாடியில் அவள் கைகளை பிடித்து கொண்டு அவன் நடக்க, வாா்த்தைகள் இல்லா அந்த மெளனம் ஏதோ பெரிய நிறைவைத் தருவதை இருவருமே உணர்ந்து தான் இருந்தனர்.


  அவள் எண்ண வரையறைப்படி நடப்பதெல்லாம் நல்லதாக நடந்திருந்த காரணத்தால், அவனது வாழ்வின் கருப்பு பக்கத்தை மறந்தே போயிருந்தாள்.
  அவளுக்கு பிடித்த நிறைவான குடும்ப வாழ்க்கை அமைந்து விட்டது போல உணர்ந்து அவனிடம் தன் மனக்கதவிற்கான சாவியை தர விரும்பி அன்றைய இரவுக்காக தவம் இருக்கலானாள்.


  வழமை போலன்றி இரவு உணவை உண்ணாமல் "நீ சாப்பிடு தேவி. இன்றைக்கு ஈவ்னிங் ஒரு சின்ன மீட்டிங் ஃப்ரெண்ட்ஸ் கூட. அங்கேயே சாப்பிட்டாச்சு நான்" என்று மென்மையாகவே கூறி படுக்கையறைக்கு சென்றுவிட்டான்.

  எத்தனை மென்மையாக அவன் கூறினாலும், அவளுக்குள் ஏதோ சரியில்லை என்று தோன்றியது. பெயருக்கென்று உணவை கொரித்தவள் அனைத்தையும் சரிபார்த்து, படுக்கையறைக்கு வர கட்டிலில் ஒரு மூலையில் அவன் தள்ளி படுத்திருந்தான்.
  எப்போதும் போல தன்னிடத்தில் படுத்தவளுக்கு இன்னும் அவன் உறங்கவில்லை என்று தோன்றியது. இருந்தும் எதும் பேசாமல் இருந்தாள். எப்போதும் இரவில் தன்னை பிடிவாதமாக அணைத்துக் கொண்டு படுத்துறங்குபவனின் இந்த ஒதுக்கம் அவளுக்கு புதிராய் இருக்க, மேலும் நிமிடங்களை கரைக்க இஷ்டமின்றி அவன் தோளைத் தொட்டாள். அதுவரை இறுக்கமாக இருந்தவன் அவளை வழக்கம் போல இழுத்து அணைத்து கொண்டான்.


  "என்ன ஆச்சு?"
  என்ற அவளது குரல் அவளுக்கே கேட்கவில்லையோ?!

  முதன் முறை அவன் விரல்கள் தடுமாற்றத்துடன் தன்னுடலில் அத்துமீறுவதை அறிந்தும், அவள் தடுக்கவில்லை.

  இருள் கவ்விய வானத்தில் மேக வாசல் வழி அவ்வப்போது நிலா எட்டிப்பார்க்கவும் மீண்டும் மறையவுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க, அவன் உதடுகள் எனும் தூரிகை கொண்டு அவளுடலில் வண்ணம் தீட்டி ஆரம்பித்தான்.  முத்தச் சத்தமும் மூச்சு சத்தமும் நிறைந்த அந்த இரவில், அவர்கள் இருவரின் நோக்கமும் ஒருவரை மற்றவருள் நிறைத்து விடுவதாக இருந்தது.
  காலையில் கண்விழித்தவள் அருகில் கணவன் இல்லாமல் போக, குளித்துவிட்டு ஈரமாய் இருந்த கூந்தலை கிளிப்பிற்குள் அடக்கி விட்டு, தயாராகி கணவனைத் தேட, பின்னிருந்து அவளை அணைத்தவன், கீழே அழைத்துச் சென்று, புதிதாய் வேப்ப மரத்தின் கீழ் பிரவேசித்திருந்த ஊஞ்சலில் அவளை அமர வைக்க, மகிழ்ச்சியுடன் ஊஞ்சலில் ஆடியவளைப் புன்னகையோடு
  பார்த்தபடி நின்றான் ரகுவீர். ஆடிவிட்டு வா என்று சைகை செய்து அவன் நடக்க ஆரம்பிக்க, இரவு கூடலின் போது அவன் பல முறை அவளிடம் காதலை கூறியிருந்தாலும் அவள் கூறாமல் போன பதிலை கூற அவள் மனம் எத்தனித்தது. ஊஞ்சலாட்டத்தை நிறுத்திவிட்டு, கீழே இறங்கியவள் அவனை நோக்கி,


  "அத்தான்" என்று கத்த நின்று அவளை நோக்கியவன், அவள் அடுத்து கூறிய "ஐ லவ் யூ"வில் நான்கே எட்டில் அவள் அருகில் வந்து அணைத்தவன் பேசத் தொடங்கும் முன் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு ரகுவீரின் கழுத்துப் பக்கம் நெருங்கிய படி செல்ல, சுதாரித்து நகர்ந்து சென்று தன் இடுப்பிலிருந்த அதி நவீன பிஸ்டலை எடுத்து சுட ஆரம்பித்தான் ரகுவீர் அல்ல R.D.


  புன்னகையோடு தொடங்கிய வாழ்க்கையில், புல்லட் சத்தம் ....

  தோட்டாக்கள் பூவாகுமா?
   
  gunasundari and Ramya kannan like this.
   
 2. archanalawrence

  archanalawrence Wings New wings

  Messages:
  47
  Likes Received:
  50
  Trophy Points:
  38
   
Loading...

Share This Page