உன்னை விட மாட்டேன்... என்னுயிரே-3

Discussion in 'LW Writers & Their Works' started by Padmini Selvaraj, Mar 21, 2020.

 1. Padmini Selvaraj

  Padmini Selvaraj Wings New wings

  Messages:
  29
  Likes Received:
  39
  Trophy Points:
  33
  அத்தியாயம்-3
  “எந்த ஜான்சி ராணியா இருந்தாலும் அடக்கி காட்டறவன் தான் இந்த ஆதித்யா...இவள் எம்மாத்திரம்?? ... இவளை எப்படி அடக்கி காட்டறேன் பார் “ என்று மனதினில் சூளுரைத்தான் ஆதித்யா...

  அவன் உடல் விரைத்து முகம் கடினமாகியது ஒரு சில மணித்துளிகள்.. அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு உடனேயே இயல்பு நிலைக்கு மாறினான்..

  அவன் முக மாற்றத்தை சரண்யாவும் கவனித்தாள்.. ஆனால் அவன் முகம் உடனே மாறியதால், தான் கண்டது நிஜமா என்ற சந்தேகம் அவளுள்ளே...

  “அப்படியா!!! நல்ல வேளை சிஸ்டர்.. முன்னாடியே சொன்னிங்க.. நான் பாட்டுக்கு இவ பவர் தெரியாமல் ஏதாவது செய்ய போய் என் கையை காலை உடைச்சிட போறா.. இனிமேல் எச்சரிக்கையாக இருந்துக்கறேன் “என்று பயந்தவன் போல நடித்தான் ஆதித்யா..

  “அது!! .. இந்த பயம் போதும் ப்ரதர்.. நீங்க பொழச்சுக்குவீங்க “ என்று சரண்யாவும் சிரித்தாள்..

  “ஏ குரங்கு.. எவ்வளவு நாள் திட்டம் என்னை இப்படி பழி வாங்க “ என்று சரண்யாவை முறைத்தாள் பவித்ரா..

  “ஐ!! அண்ணி நீங்களும் ரௌடியா??? எங்க காலேஜ்ல நானும் ரௌடி தான் “ என்று விஜய் சேதுபதி மாதிரி இழுத்து கூறினாள் அருகில் நின்ற ஜனனி !!

  “நீ ரௌடி இல்லடீ.. வாயாடீ “ என்று அவளின் காதை திருகினான் ஆதித்யா
  “ஐயோ !! விடுண்ணா.. வலிக்குது. உனக்கு எப்ப பாரு என் காது தான் குறி “ என்று ஆதித்யாவின் பிடியிலிருந்து விடுபட்டவள்..


  “சரி அண்ணி. உங்க ஃப்ரெண்ட் வந்திட்டாங்க உங்களுக்கு கம்பெனி கொடுக்க... என் ஃப்ரெண்ட்ஸ் அங்க எனக்காக காத்திட்டு இருக்காஙக.. நான் போய் அவங்க ஜோதியில ஐக்கியம் ஆகிக்கிறேன்..

  ஏதாவது உதவி வேணும் னா ஜனனி னு கூப்பிடுங்க... இல்லை இல்லை மனசுல நினைங்க போதும். உடனே இந்த ஜனனி வந்து நிப்பா” என்று சிரித்து கொண்டே குதித்து ஓடினாள்..

  “ஷ்ஷ் அப்பா... எப்படி டீ ?? நீ போற இடம் எல்லாம் உன்னை மாதிரியே மாட்டுது ?? “ என்று மெல்ல முனகினாள் சரண்யா

  “எப்படி .. நீ எங்கிட்ட மாட்டின மாதிரியா?? “

  “ஹே!! நான் ஒன்னும் உன்னை மாதிரி கிடையாது.. நான் ரொம்ப அமைதியான பொண்ணாக்கும்... என்ன?? உன்னோட பழக்க தோஷத்துல கொஞ்சம் கொஞ்சமா உன்னை மாதிரியே மாறிட்டேனு எல்லாரும் சொல்றாங்க”

  “எப்படியோ.. நீயும் என்னை மாதிரி னு ஒத்து கிட்ட இல்லை.. அது போதும். அப்ப நீயும் ரௌடி தான்..” என்று சிரித்தாள் பவித்ரா..

  அவளின் சிரிப்பையே ரசித்து இருந்தான் ஆதித்யா... அதுவும் அவளின் கன்னத்து குழி அவனை இன்னும் இம்சித்தது...

  “இவள் சிரித்தே ஆளை மயக்கிடுவாள் போல “ என்று பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டான்

  அதற்குள் மரகதம் அங்கு வந்து

  “சரி வாங்க.. எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடலாம்..

  நிஷாந்த், திரும்பவும் எழுந்திருச்சு போயிடாதா!! சாப்பிட்டு விட்டு தான் எழுந்திருக்கனும் சரியா” என்று அவர்களை அமர வைத்தார்..

  அவன் அருகில் அமர என்னவோ போல் இருக்கவும் சரண்யாவையும் தன் அருகில் இழுத்து அமர்த்தி கொண்டாள். அதை கண்டதும் மனதுக்குள் சிரித்து கொண்டான் ஆதித்யா..

  மணமக்கள் சாப்பிட அமரவும், இதுவரை மற்றவர்களை படமெடுத்து கொண்டிருந்த புகைப்படக்காரரும், வீடியோ காரரும் அவர்கள் அருகில் வந்தனர்..

  “சார்.. நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விடற மாதிரி ஒரு காட்சி எடுக்கனும்.. “ என்றனர் ஆதித்யா வை பார்த்து

  அதை கேட்டதும் பவித்ரா

  “அதெல்லாம் வேண்டாம்.. நீங்க நாங்க சாதாரணமாக சாப்பிடற மாதிரியே எடுங்க .. “என்று அவசரமாக மறுத்தாள் பவித்ரா..

  “இல்லை மேடம்... நீங்க ஊட்டி விட்டால் இன்னும் ஆல்பம் சூப்பரா இருக்கும்.. நீங்க ஊட்டி கூட விட வேணாம்.. ஜஸ்ட் ஆக்ட் மட்டும் பண்ணுங்க... நாங்க அதை எடிட் பண்ணிக்கிறோம் “ என்று கெஞ்சினர்..

  அதை கேட்ட ஆதித்யா,

  “ஆக்ட் எல்லாம் இல்லை.. நிஜமாகவே செஞ்சுடலாம் சுந்தர்.. நீங்க ஷார்ட் ரெடி பண்ணுங்க “ என்று பவித்ராவை பார்த்து கண்ணடித்தான்..

  “ஐயோ !! இவன் வேணும் னே என்னை பழி வாங்கறானா?? இதெல்லாம் தேவையா “ என்று அவனை முறைத்தவளை கண்டு கொள்ளாமல்

  “கூல் டவுன் பேபி!! “ என்று இலையில் இருந்த இனிப்பை எடுத்து அவளின் வாயில் வைத்தான்..

  அவளின் இதழில் அவன் விரல் படவும் மீண்டும் மின்சாரம் பாய்ந்ததை போல உணர்ந்தவன் அவளின் செவ்விதழ்களை மெல்ல வருடினான் மற்றவர்கள் அறியாமல்..

  பவித்ராவுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை..

  ஒரு மனம் அவனின் செய்கையை ரசித்தாலும் மறுபாதி, இப்படியா பொது இடத்தில் சீண்டறது என்று மறுவி கொண்டே அவனின் கையை நறுக்கென்று கடித்தாள்..

  அவளின் இந்த திடீர் கடியை எதிர்பார்க்காததால் ஆ வென்று அலறினான்..
  அதை கண்டு அனைவரும் சிரித்தனர்..


  “ராட்சசி.... இப்படியா கடிப்ப?? இரத்தம் வருதுடி” என்று பொய்யாக மெல்ல முனகினான்..

  “அப்படிதான் வேணும் “ என்று மனதுக்குள் குத்தாட்டம் போட்டவள் அடுத்து அவளுடய முறை எனவும் திக் என்றது..

  “ஐயோ!! இப்ப இவன் பழி வாங்க என்று என்ன செய்ய போறானோ??? “ என்று பயந்தவள்

  “அண்ணா, ஏற்கனவே எடுத்த ஷாட் ஏ போதும். அதை வச்சு எப்படி வேணாலும் எடிட் பண்ணுங்க.. இனிமேல் வேணாமே!! “ என்று கெஞ்சல் பார்வையில் முடித்தாள்..

  “அதெல்லாம் சரி வராது பேபி... நான் பண்ண மாதிரி நீயும் செய்யனும்.. அப்பதான் ஆல்பம் நல்லா வரும்.. இல்லை சுந்தர்..? “ என்று போட்டோ கிராபரை உதவிக்கு அழைத்தான் ஆதித்யா..

  “ஆமாம் மேடம்.. ப்யூ செகண்ட்ஸ் தான்.. நாங்க சீக்கிரம் எடுத்தடறோம் .ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்று அதே பார்வையை அவளிடம் திருப்பினார்..

  வேற வழி இல்லாமல் அவள் இலையில் இருந்த இனிப்பை எடுத்து நடுங்கும் விரல்களுடன் அவன் அருகில் கொண்டு வந்தாள்..

  “ப்ளீஸ் கடிச்சிடாத....” என்ற கெஞ்சல் பார்வை வேறு..

  கண்ணை இறுக்க மூடி கொண்டு அவள் ஊட்டி விடவும் அவளைப் போல கடிக்காமல் அவளின் விரல்களை மென்மையாக முத்த மிட்டான்..

  அவனுடைய கடியை எதிர்பார்த்தவளுக்கு அவனின் இந்த அதிர்ச்சி முத்தம் இன்னும் பலமாக தாக்கியது அவளுள்ளே..

  சட்டென்று அவள் கையை இழுத்து கொண்டாள்..

  “இதுக்கு அவன் கடிச்சே இருக்கலாம் “ என்று முனுமுனுத்தாள்..

  இவர்களின் இந்த விளையாட்டு மிக அழகாக பதிவாகியது..

  “ரொம்ப சூப்பரா வந்திருக்கு சார்!! ” என்று சிரித்தவாறே நகர்ந்தனர் அவர்கள்

  “ஐயோ!! இவனோடஇந்த தொல்லையை இவனுங்க க்லோசப் ல வேற பார்த்து இருப்பாங்களே!! “ என்று நொந்தவள் அடுத்து இவனை என்ன செய்யலாம் என்று யோசித்தாள்..

  அவள் யோசித்து முடிக்கும் முன் வெளியில் சென்று இருந்த ப்ரேம் அங்கு வந்து
  “மச்சான்.. சீக்கிரம் சாப்பிட்டு முடிங்க.. அடுத்து ரிசப்ஷனுக்கு ரெடியாகனும்..
  சிஸ்டர்... நீங்க தான் சீக்கிரம் கிளம்பனும்.. அடுத்து உங்களுக்கு மேக்கப் போட அந்த கேர்ள்ஸ் வந்துட்டாங்க “


  “என்னது ??? மறுபடியும் மேக்கப் ஆ “ என்று அதிர்ந்தாள்..

  அதை கண்டு சிரித்தாள் சரண்யா..

  “உனக்கு வேணும் டீ.. காலேஜ் ஆண்டு விழா அப்போ கூட ஒரு நல்ல புடவை கட்டிக்கோ.. கொஞ்சமா மேக்கப் போட்டுக்கோ என்றால் எவ்வளவு தூரம் ஓடுவ... நல்ல இடத்துல தான் வந்து மாட்டியிருக்க.. “ என்று பவித்ராவின் காதில் சொன்னாள் சரண்யா...

  “யெஸ் பேபி.. சீக்கிரம் ரெடியாகு.. இப்பதான் நிறைய விஐபி ஸ் வருவாங்க. இந்த ஆதித்யாவின் மனைவி ஜொலிக்க வேண்டாமா??? சீக்கிரம் கிளம்பு “ என்று சிரித்தான்..

  “ஆமாம். இவன் பெரிய டாட்டா பிர்லா.. இல்ல அம்பானி.. நிறைய விஐபி வருவாங்களாம்” என்று அர்ச்சனை பண்ணி கொண்டெ எழுந்து சென்றாள்...

  அங்கு மணப்பென் அறையில் அலங்காரம் ஆரம்பிக்கவும் அவர்களின் இன்னொரு தோழி கவிதா பவித்ராவை காண அங்கு வந்தாள்..

  “வாடி கவி.. இதுதான் நீ வர்ற நேரமா?? “ என்று பவித்ரா அவளை பார்த்து முறைத்தாள்..
  “சாரி டீ .. கிளம்ப கொஞ்சம் லேட்டாயிருச்சு.. அதான் ரிசப்ஷனுக்கு முன்னாடியே வந்திட்டேன் இல்ல...நம்ம கேங் எல்லாம் வந்திருக்காங்க.. அப்புறம் மாப்பிள்ளை எப்படி இருக்கார் ? ” என்றாள் கவிதா


  பவித்ரா பதில் சொல்லு முன்

  “ஹே!! கவி... மாப்பிள்ளை சூப்பரா இருக்கார் தெரியுமா!! நீ சொன்னா நம்ப மாட்ட.. நம்ம ஜான்சிராணி அடியோட மாறிட்டா!! என்ன வெட்கம்!!! .. என்ன ரொமான்ஸ்!!! மணமேடையில.. என்னாலயே நம்ப முடியல நம்ம பவித்ராவா இது என்று ” என்றாள் சரண்யா

  “நிஜமா டீ ..சே!! நான் மிஸ் பண்ணிட்டனே 1! “

  “அதுக்கு தான் எப்பவும் சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும் கல்யாணத்துக்கு போக கூடாது.. முகூர்த்தத்துக்கும் போகனும் டீ....”

  “யாரு?? நீ சொல்ற... ஏதோ பவித்ரவுக்கு துணையா இருக்கனும்னு ஆன்ட்டி கூப்பிட்டாங்கனு நீ முன்னாடியே வந்துட்ட.. இல்லைனா முகூர்த்தத்துகே போய் என்ன பண்றோம்னு எனக்கு சொல்லி குடுத்ததே நீ தான டீ “ என்று சரண்யாவை வாரினாள் கவிதா...

  “ ஹீ ஹீ தெரிஞ்சுடுச்சா.... சரி அதை விடு.. மணமேடையில் நடந்த கூத்தை நீயே கேளு... ”
  “அதெல்லாம் ஒன்னும் இல்லை கவி. நீ அவ சொல்றதெல்லாம் நம்பாத!! “ என்றாள் பவித்ரா வெட்கத்துடன்...


  “என்னது நான் பொய் சொல்றேனா??? சரி. அப்ப நான் போய் அந்த சீன் மட்டும் திரும்ப டெலிகாஸ்ட் பண்ண சொல்றேன். அப்ப தெரியும் யாரு உண்மைய சொல்றாங்கனு “ என்று நகர முயன்றாள் சரண்யா..

  அவளை பிடித்து நிறுத்தினாள் பவித்ரா
  அதற்குள் அலங்காரம் முடியவும் அந்த பேச்சை விட்டனர் பெண்கள்..


  ரிசப்ஷன் ஆரம்பிக்கவும் மணமகன் அறையில் இருந்து வந்து மணமேடையில் நின்றிருந்தான் ஆதித்யா.. பவித்ராவின் புடவைக்கு பொருத்தமாக மெரூன் கலரில் கோட் அணிந்து இன்னும் கம்பீரமாக இருந்தான்..

  அதற்குள் பவித்ரா வரவும் அவன் பார்வை அவளிடம் சென்றது..

  மெருன் கலர் பட்டுபுடவையை வடக்கத்திய ஸ்டைலில் அணிந்து அதற்கு பொருத்தமாக தலை அலங்காரமும், அணிகலன்களும் இன்னும் அவளின் அழகை கூடுதலாக எடுத்துக்காட்டியது..

  ஒரு நிமிடம் இமைக்க மறந்து அவளையே பார்த்து இருந்தான் ஆதித்யா

  “யப்பா.. எப்படி இவள் மட்டும் எந்த விதமான அலங்காரத்திலும் ஜொலிக்கிறாள்..?
  இவள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்.. இல்லைனா என் திட்டம் நிறை வேறாது “ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டவன் அருகில் வந்தவளை ஆங்கிலேயர் பாணியில் கை பிடித்து வரவேற்று தன் அருகில் நிறுத்தி கொண்டான்..


   
  fatima20 likes this.
   
 2. Padmini Selvaraj

  Padmini Selvaraj Wings New wings

  Messages:
  29
  Likes Received:
  39
  Trophy Points:
  33
  பின் இருவரும் எந்த விளையாட்டும் இல்லாமல் அவர்களுக்கு கொடுத்த மாலையை மற்றவர் கழுத்தில் மாற்றி கொண்டு வணக்கம் தெரிவித்தனர்..

  ப்ரேம் முதலாவதாக வந்து தன் வாழ்த்தை தெரிவித்து தன் பரிசினை அளித்தான்.
  பின் ஒவ்வொருவரும் மேடைக்கு வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்..


  அவன் ஒவ்வொருவரும் வரும் பொழுதும் ஏதாவது ஒரு கம்பெனி பெயரை சொல்லி M.D என்று அறிமுகப் படுத்தினான்.. அதில் சில பெயர்கள் அவள் கேள்வி பட்ட முன்னனி நிறுவனங்களின் பெயராக இருந்தது.

  அதை உணர்ந்ததும், இதுவரை ஒருவித மயக்கத்தில் இருந்த அவளுடைய மாய லோகம் மெல்ல மெல்ல மறைந்து அவளின் அறிவு விழித்து கொள்ள ஆரம்பித்தது...

  “அப்படினா உண்மையிலயே இவன் அவ்வளவு பெரிய ஆளா??” என்று சந்தேகம் மனதில் வந்தது...

  அதுவரை தலையை குனிந்து கொண்டும் வருபவர்களை மட்டும் பார்த்து பேசி கொண்டும் இருந்தவள் மெல்ல நிமிர்ந்து தன் முன்னே பார்த்தாள்...

  அப்பொழுது தான் தெரிந்தது அது எவ்வளவு பெரிய திருமண மண்டபம் என்று..

  “நேற்று கூட ஏதோ சரண்யா சொன்னாளே இந்த மணடபத்தை பற்றி.. சே!! அப்பொழுது இருந்த மனநிலையில் எதையும் கவனிக்க வில்லையே..”

  அந்த மண்டபத்தின் பிரம்மாண்டமும் அதில் முன்னே அம்ர்ந்திருந்த பெரிய பெரிய மனிதர்களும் அவளை முதன் முதலாக மிரள வைத்தது..

  இவ்வளவு பெரியவன் தன்னை ஏன் மணந்தான் என்ற கேள்வி மீண்டும் குடைந்தது அவளுள்ளே!!

  அதற்கு மேல் யோசிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவர் வரவும் அவர்களின் அறிமுகத்தையும் வாழ்த்து மற்றும் பரிசையும் வாங்கவே சரியாக இருந்தது...

  ஏற்கனவே குழம்பி கொண்டிருந்த அவள் மனதை மேலும் குழப்ப என அடுத்து வந்தனர் பெண்கள் கும்பல்...

  அனைவரும் ஆதியை கட்டி தழுவி வாழ்த்தினர்..அதிலும் சில பெண்கள் அவனை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தனர் ..

  அவன் அனைத்தையும் இயல்பாக எடுத்து கொள்ள. பவித்ராவிற்கு தான் என்னவோ போல் இருந்தது..இதுவரை மறந்திருந்த அவனின் குணமும் ‘அந்த’ சம்பவமும் ஞாபகம் வந்தது அவளுக்கு..

  இவன் ஏன் தன்னை மணந்தான் என்ற கேள்வி மீண்டும் வந்து குழப்பத்துடன் இப்பொழுது சிறிது அச்சத்தையும் கொடுத்தது அவளுக்கு..

  அதற்குள் அவளின் இயல்பான குணம் தலை தூக்கி

  “அப்படி என்னதான் செய்துடுவான் பார்த்துக்கலாம் !! “ என்ற தைரியத்தை கொடுக்க ஒரு வித நிமிர்வுடன் அந்த பெண்களை அளவெடுத்தாள்....

  அந்த பெண்கள் அனைவரும் ஆதியின் பக்கம் தான் இருந்தனர்.. இவளை ஒரு பொருட்டாகவும் மதிக்க வில்லை.. மாறாக அவளை ஒரு வித பொறாமையுடன் பார்த்தனர்.

  அதில் சிலர்
  “ஆதி டார்லிங்.. I’m waiting for you long time.. you cheated me..போயும் போயும் இவளை போய் செலெக்ட் பண்ணியிருக்கீங்களே.. “ என்று தங்கள் ஆதங்கத்தை தீர்த்து கொண்டனர்..


  அதில் ஒரு பெண் ”டார்லிங்.. அப்ப இனிமேல் நாம வீக் என்ட் சந்திக்க முடியாதா?? “ என்று சோகமாக கேட்டாள்..

  “நோ நோ பேபி... We will meet. Don’t worry” என்று சிரித்து கொண்டே பவித்ராவை பார்த்தவன் அவளின் பார்வையில் இருந்த கோபத்தை கண்டு மனதுக்குள் சிரித்து கொண்டான்..

  அவள் எவ்வளவு கோபத்தில இருக்கிறாள் என்று அறிந்தவன்
  “இதுதான் ஆரம்பம் டீ. இன்னும் நிறைய இருக்கு உனக்கு” என்று மனதுக்குள் கொக்கரித்தான்..


  அதற்குள் அவளருகில் வந்தவன் “கூல் பேபி... It’s just for fun. Don’t take it as serious” என்று சமாதானம் செய்ய முயன்றான்..

  அதை கண்டு கொள்ளாமல்
  “இந்த கூத்தை எல்லாம் தனியா வச்சுங்கங்க.. இந்த மாதிரி பொது இடத்தில், அதுவும் மணமேடையில வேண்டாம் “ என்று அவனை முறைத்தாள்..


  இவர்கள் சண்டை தொடரும் முன்னே அதை நிறுத்தும் வண்ணம் மேடை ஏறினார் அடுத்து வந்தவர்.

  அவரை கண்டதும் பவித்ராவிற்கு அதிர்ச்சியாக இருந்தது..

  ஆம் அவளுடைய எம் டி தான் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்..
  “இவர் எப்படி இங்கே?? இவருக்கு நான் பத்திரிக்கையே வைக்கலயே.. அதுவும் இல்லாமல் இவரை பார்ப்பதே அரிது.. எப்பவாது வருடாந்திர மீட்டிங்கில் பேசுவார்.. அவரை எட்டி நின்றே பார்த்தவளுக்கு அவரே தன் திருமணத்திற்கு வந்திருப்பது அதிர்ச்சியாக இருந்தது..


  அருகில் வந்தவர் நேராக ஆதியை பார்த்து

  “வாழ்த்துக்கள் மை டியர் சன்.. கடைசியா நீயும் சம்சார கடலில் மாட்டி கிட்ட!! வெற்றி பெற வாழ்த்துக்கள் “என்று கைகுழுக்கினார் சிரித்து கொண்டே..

  “ஏன்டா ராஸ்கல்.. மறுமகள் என் ஆபிஸ் ல் தான் வேலை செய்யறானு சொல்லவே இல்லை.. எனக்கே இப்பதான் நம்ம மேனேஜர் சொல்லி தெரியும் உன்னோட காதல் விளையாட்டு “என்று சிரித்தார்..

  பின் பவித்ராவை பார்த்து

  “என்ன மறுமகளே.!! . நீ தான் இவனை முந்தானையில் முடிஞ்சு வச்சுக்கனும்.. பார்த்த இல்ல எத்தனை பெண்கள் இவனுக்காக சுத்தி கிட்டு இருக்காங்கனு.. இனிமேலாவது இவன வீட்டோட இருக்கிற மாதிரி பார்த்துக்கோ” என்றார்..

  பவித்ராவோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாததால், மெல்லியதாக புன்னகைத்தாள் மெல்ல தலையை ஆட்டி...

  “ஐயோ!! அங்கிள்.. நீங்க வேற.. ஏற்கனவே அவ கோபத்தில இருக்கா.. இதுல நீங்க வேற எண்ணய ஊத்தாதிங்க.. என்னோட கல்யாண ஜோதியை மலரும் முன்னே அணைச்சிடாதிங்க” என்று பயந்தவன் போல நடித்தான் ஆதித்யா..

  “அது ... இந்த பயம் இருக்கட்டும்” என்று சிரித்தவாரே தன் பரிசினை கொடுத்து வாழ்த்தி விடைபெற்றார்..

  அதற்கு அடுத்து அவளின் மேனேஜர் மோகன் வந்தார்..

  அவரும் வாழ்த்துக்களை சொல்லி,
  “ஆதி சார்.. உங்களை இப்படி பக்கத்துல பார்க்கறதே கஷ்டம்.. பவித்ராவோட அருளால இன்று உங்களை கை பிடித்து குலுக்கவே முடிந்தது.. பவித்ரா வுக்குதான் ரொம்ப நன்றி”
  “அதோடு நீங்க ரெண்டு பேரும் எனக்கு தான் நன்றி சொல்லனும்” என்றவரை இருவரும் புரியாமல் பார்த்தனர்...


  “நான் மட்டும் அன்று பவித்ராவை கட்டாய படுத்தி அந்த பங்சனுக்கு கூட்டிட்டு வராமல் இருந்திருந்தால், நீங்க ரெண்டு பேரும் சந்தித்திருக்க முடியாது.. உங்களுக்குள் காதல் மலர்ந்திருக்காது..

  அதனால் நீங்க ரெண்டு பேரும் இப்படி ஜோடியா இருக்க நான் தான் காரணம். எனக்குத்தான் நீங்க நன்றி சொல்லணும் ” என்று பெருமையாக கூறினார்..

  ஆதி “நீ தான் எங்க பிரச்சனைக்கு பிள்ளையார் சுளி போட்டதா??? என்று மனதுக்குள் புகைந்தவன்

  “ஒ மோகன்... அப்படியா!! அப்ப நன்றி என்ன... உங்களை தனியா நல்ல்ல்ல்லா கவனிச்சுக்கறேன் “என்று கை குழுக்கினான் ஆதித்யா..

  பவித்ராவுக்கோ
  “இவர் பாட்டுக்கு காதல் கத்தரிக்கானு உளறாரே!! இவனை நான் எப்ப காதலிச்சனாம்” என்று திட்டிகொண்டே புன்னகைத்தாள்..


  அதற்கு பிறகு அவளுடைய காலேஜ் கேங் மேடை ஏறினர்..

  இதுவரை ஒரு வித இறுக்கத்தில் இருந்தவள் தன் நண்பர்களை பார்த்ததும் மனசு லேசாகியது.. அனைவரிடமும் சிரித்து பேசினாள்.. இதை கண்ட ஆதிக்கு

  “இவ்வளவு நேரம் உம்முனு இருந்தவள் இப்ப இப்படி இளிக்கிறாளே!! “ என்று கோபமானான்.. அவனின் கோபத்தை ஓரக் கண்ணால் கண்டவள்

  “ஆஹா!! நல்ல சான்ஸ் இவனை வெறுப்பேத்த “ என்று மேலும் சிரித்து பேசினாள்..
  அதிலும் ஆனந்த் கிட்ட இவள் பேசும் பொழுது ஏனோ இன்னும் வித்யாசமாக தெரிந்தது ஆதிக்கு..


  அனைவரும் வாழ்த்து சொல்லி விடைபெறும் பொழுது ஆனந்த் மட்டும் ஆதியிடம்
  “எங்கள் பவித்ராவை நல்லா பார்த்துக்கோங்க மிஸ்டர். ஆதித்யா!!. She is hard but sweet!! . Both of you have a happy married life” என்று மனதார வாழ்த்தி கை குலுக்கினான்..


  அதை கேட்டதும் பவித்ராவிற்க்கு கண்கள் கலங்கியது..

  இதுவரை வந்த அனைவரும் ஆதியிடமே பேசினர்..ஏன் இவளின் உறவினர்களும் கூட இவளை ஒருவித பொறாமையோடு தான் பார்த்தனர்.. யாரும் இவள் நல்லா இருக்கனும் என்று வாழ்த்தவில்லை..

  இந்த நண்பர்கள் தான் இவள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தியவர்கள்.. அதிலும் ஆனந்த்... இவளுக்காக பேசுகிறானே!! .. அவனை எவ்வளவு தூரம் திட்டியிருப்பாள்..

  அதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் தனக்காக பேசவும் அவளின் மனம் நெகிழ்ந்து போனது.. அது அவளின் முகத்தில் அப்படியே தெரியவும் ஆதியின் முகம் இன்னும் இறுகியது..

  அவர்கள் விடை பெற்று சென்றதும் அவன் அருகில் சென்றவள்..

  “கூல் பேபி...It’s just for fun. Don’t take it as serious” என்று அவனுடைய வார்த்தைகளையே திருப்பினாள்..

  அதை கேட்டதும் அவளின் நாடகம் புரிந்தது ஆதிக்கு..

  “ராட்சசி!! நான் செஞ்சதையே எனக்கு திருப்புகிறாளே!! இவளிடம் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கனும்” என்று மெல்ல சிரித்து கொண்டான்..

  அவனின் எண்ணம் புரிந்தவளாக

  “அது!! அந்த பயம் இருக்கட்டும்” என்று கை நீட்டி மிரட்டினாள் யாரும் அறியாதவாறு...
   
   
 3. Padmini Selvaraj

  Padmini Selvaraj Wings New wings

  Messages:
  29
  Likes Received:
  39
  Trophy Points:
  33
  ரிசப்ஷன் ஒரு வழியாக முடிந்து அடுத்து ஆதியின் வீட்டிற்கு கிளம்பினர்..
  சரண்யாவையும் உடன் அழைத்தாள் பவித்ரா..

  “நீயும் வா சரண். நான் தனியா இருக்கனும் இல்ல .. கொஞ்ச நேரம் இருந்துட்டு போய்டலாம்”

  “ஹே !! நீ எங்க தனியா இருக்க போற??? உன் ஹீரோ உன்னை அப்படி யெல்லாம் தனியா விட்டுட மாட்டார்.. வேணா ஒன்னு செய்.. காலைல முகூர்த்தம் முடிந்ததும் ரூம்ல என்ன நடந்ததுனு சொல்லு. அப்ப நான் உன் கூட வர்ரேன்” என்று கண்ணடித்தாள்..

  “சீ போடி “என்று கன்னம் சிவந்தாள் பவித்ரா...

  “இது போதும் ஜான்சி ராணி.. இப்பவும் போல எப்பவும் சந்தோஷமாக, கொஞ்சம் ஜாக்கிரதையா இரு..

  எனக்கு கொஞ்சம் வேலை இருக்குடி.. நான் கிளம்பனும்.. இன்னொரு நாள் வர்றேன். உனக்கு துணையாகத்தான் ஜுனியர் ரௌடி ஜனனி இருக்கா இல்லை.. அப்புறம் என்ன கவலை?? ” என்று அவளை கட்டி அணைத்து விடை பெற்றாள் சரண்யா..

  அதன் பிறகு ஆதியும் பவித்ராவும் மலர்களால் அழங்கரிக்க பட்டிருந்த அந்த BMW காரில் பின்னால் அமர, ப்ரேம் காரை ஓட்டினான்.. மற்றவர்கள் பிற கார்களில் பின் தொடர்ந்தனர்...

  “உனக்காக இந்த காரை புக் பண்ணினேன் பேபி... எப்படி இருக்கு?? “ என்று அவளை பார்த்து புன்னகைத்தான்..

  அவளிடம் ஒரு வியப்பை எதிர்பார்த்தவனுக்கு அவளின் மெல்லிய புன்னகை வியப்பாக இருந்தது.. இந்த கார் எல்லாம் ஒன்னும் பெரிதில்லை என்பது போல இருந்தது அவளின் அந்த புன்னகை..

  இதே மற்ற பெண்களா இருந்தாள் “வாவ் என்று வாயை பிளந்து , அவனை கட்டி கொண்டிருப்பர் .. அட்லீஸ்ட் ஒரு தேங்க்ஸ் ஆ வது இருந்திருக்கும். இவள் என்ன இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறா” என்று திகைத்தாலும் அவளின் அந்த புன்னகையை ரசித்தான் ஆதி..

  மெல்ல காரின் இருக்கையில் சாய்ந்தவள் அப்படியே உறங்கி போனாள்..

  காலையில் சீக்கிரம் எழுந்ததாலும் இதுவரை அழுத்தி வந்த பாரம் நீங்கியதாலும் நிம்மதியாக உறங்க முடிந்தது அவளுக்கு...

  அவள் அறிந்திருக்க வில்லை இதுதான் அவள் கடைசியாக நிம்மதியாக உறங்குவது என்று..

  ஆதியோ தன் அருகில் உறங்குபவளையே இமைக்காமல் பார்த்தான்.. அவனின் வலது கையை எடுத்து அவளின் கழுத்தை சுற்றி பின்னால் வைக்கவும் பவித்ரா மெல்ல அசைந்து அவனின் தோழில் சாய்ந்து உறங்கினாள்..

  அவளின் அந்த மெல்லிய அழுத்தம் அவனுக்கு சுகமாக இருந்தது..

  “ஷ் அப்பா!! .. ஐந்து அடி உயரம்கூட இல்லை.. இந்த குட்டச்சியை இது மாதிரி நெருக்கத்தில், என் அருகில் கொண்டு வர என்ன கஷ்டபட வேண்டியதாயிற்று???..
  எத்தனை திட்டம் போட்டு அவனருகில் கொண்டு வந்தான் என்று அவனுக்கு மட்டுமே தெரியும்..

  “பெரிய பெரிய டீலெல்லாம் கூட சுலபமாக வெற்றி பெற்றவன் இவளை தன் அருகில் கொண்டு வருவதற்குள் எவ்வளவு கஷ்ட பட வேண்டியிருந்தது..

  ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து, பயந்து பயந்து செய்ய வேண்டியிருந்தது..தாலி கட்டும் வரைக்குமே பயந்து கொண்டிருந்தான் அவளுக்கு உண்மை தெரிந்தால் அப்பவே அவனை விட்டு விலகிடுவாள் என்று..

  இன்று அனைத்தும் விலகி அவள் மனைவியாக அவள் அவனருகில்!!!

  நினைக்கையிலயே ஒரு வித புது சுகம் மற்றும் நிம்மதி பரவியது அவனுள்ளே...

  அதையும் மீறி
  “லுக் பேபி.. நான் தான் ஜெயித்தேன். என் கணக்கு எப்பவும் தப்பாகாது.. எப்பவும் ஜெயிக்க பிறந்தவன் இந்த ஆதித்யா!! “ என்ற வெற்றி புன்னகை அவனுள்ளே!!

  ஆதித்யாவிற்கு தெரியவில்லை.. அவன் போடும் கணக்கை விட அந்த ஆண்டவன் போட்ட கணக்கு தான் எப்பவும் சரியாக வரும் என்று!!!

  ஆதித்யாவின் திட்டம் என்ன?? அது நிறைவேறுமா??? தொடர்ந்து படியுங்கள்...

  ******தொடரும்******
   
   
 4. Mounika Arunachalam

  Mounika Arunachalam Wings New wings

  Messages:
  26
  Likes Received:
  19
  Trophy Points:
  23
   
Loading...

Share This Page