நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திரும&#

Discussion in 'Married Life' started by SudhaPrem, Jun 19, 2013.

  1. SudhaPrem

    SudhaPrem Contributor

    Messages:
    5,317
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்.


    திருமணம்:

    திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.


    நிச்சயிக்கப்பட்ட திருமணம்:

    இது திருமணம் அல்ல திருவிழா.அந்த அளவுக்கு திருமணம் கலை கட்டும்.எங்கும் மகிழ்ச்சியே நிலைத்து இருக்கும்.

    தான் ஆசை ஆசையாக வளர்த்த மகளுக்கு பெற்றோர்கள் தேடி தேடி மாப்பிள்ளை பார்ப்பார்கள்.நம்ம மகளை கண் கலங்காம பார்த்துக்குவானா.போற இடத்தில் நம் மகள் நல்லா இருப்பாளா என்று பார்த்து பார்த்து மாப்பிள்ளை தேடுவார்கள்.

    நல்ல இடம் கிடைத்துவிட்டால் தனது சொந்தங்களை எல்லாம் அழைத்து போய் காண்பித்து அவர்களும் மணப் பெண்ணும் சம்மதித்த பிறகு நல்ல நாள் பார்த்து நிச்சயம் பண்ணுவார்கள்.

    பிறகு திருமணப் பத்திரிக்கை அடித்து ஊர் ஊராக சொந்த பந்தங்களை தேடி தேடி அழைப்பர்.மகளுக்கு தேவையான பொருள்கள்,நகைகள் அனைத்தையும் சந்தோஷமாக வாங்கி தருவர்.

    திருமண நாள் அன்று அந்த இடமே சந்தோஷத்தில் திளைத்திருக்கும்.
    காப்பு நூல் கட்டுதல்,மங்கல நீர் கொண்டு வருதல்,மண மக்கள் ஒப்பனை,மணமகன் அழைப்பு,வேள்வித் தீ,அம்மி மிதித்தல்,பாத பூசை செய்தல்,அருந்ததி காட்டல்,அறம் செய்தல்,மங்கல அணி, சீதனம் கொடுத்தல் இது போன்று பல்வேறு சம்பிரதாயங்களுடன் பல திருமணங்களும்,பெற்றவர்கள் தாலி எடுத்து கொடுத்துஉற்றார் உறவினர் வாழ்த்தும்படியான சீர் திருத்த கல்யாணங்களும் நடைபெறும்.

    இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்த மணமக்களை உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்து விருந்து கொடுப்பர்.

    இந்த திருமணங்களிலும் 20 சதவீத மணமுறிவு ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் இருக்கிறது.அதிலும் 10 சதவீத ஜோடிகளை பெரியவர்கள் ஒன்று கூடி பேசி சேர்த்து வைப்பர்.

    இவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் மாமன் மடியில் உட்கார வைத்து காது குத்துவது,பெண் பெரிய மனுஷியானாள் உறவுகள் ஒன்று கூடி விழா எடுப்பதௌ என்று அவர்கள் கடைசி வரை பெற்றவர்களும் உறவினர்களும் உடன் இருப்பர்.

    காதல் திருமணம்:

    காதல் திருமணங்கள் பெரும்பாலும் பெற்றோருக்கு தெரியாமல் உற்றார் உறவினர் இல்லாமல் காவல் நிலையங்களிலோ அல்லது ரிஜிஸ்தர் ஆபிஸ்களில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி.

    இந்த நிகழ்ச்சியை நடத்திவைத்த நண்பர்கள் அவர்கள் வேலை முடிந்து விட்டது என்று வீட்டிற்கு கிளம்பி விடுவர்.இதற்கு பிறகு தான் அந்த தம்பதியருக்கு வாழ்க்கைன்னா என்ன என்பது தெரிய ஆரம்பிக்கும்.பெரும்பாலும் அந்த ஜோடிகளை பெற்றோர்கள் வீட்டிற்குள் சேர்த்து கொள்ளமாட்டார்கள்.

    இந்த ஜோடி சொந்தபந்தங்களை இழந்து அனாதை போல் தெருவில் நிற்கும்.70 சதவீத காதல் ஜோடி சில மாதங்களிலே பிரிந்து விடும்.காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறவங்க எல்லோரும் கண்ணியமா சந்தோசமா இருந்தா நமக்கும் முழு நம்பிக்கை வரும்.

    காதல், கல்யாணம், குழந்தை குட்டி ஆனப்பிறகு டைவர்ஸ் கேட்டு கோர்ட் படிகள்ல ஏறி இறங்கிக்கிட்டு இருக்காங்க. இந்த திருமண வாழ்க்கையில் பாதிக்கப்படுவது பெண்களே.

    30 சதவீத காதலில் ஜெயித்த ஜோடி இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.முதலில் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் அனுமதிப்பதில்லை,பிறகு அவர்களின் உடன் பிறந்தவர்களின் விஷேசங்களுக்கு கூட கலந்து கொள்ள அழைக்கப்படுவதில்லை.சில காதல் ஜோடி நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களின் திருமண ஆல்பங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுவதுண்டு தனக்கு இப்படி எல்லாம் நடக்கவில்லையே என்று.

    பள்ளியில் சேர்க்கும்போது தன் குழந்தைக்கு எந்த ஜாதி போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்படுவதுண்டு.அடுத்து இந்த குழந்தை பெரியவளாகி திருமணம் செய்ய எந்த ஜாதியில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்துவிடும்.பெரும்பாலும் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எளிதில் வரன் அமைவதில்லை.

    கலப்பு மணம் செய்து கொண்டவர் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் அந்த பெண்ணிற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடக்காது.ஓடிப்போனாளே அந்த பொன்னுடைய தங்கச்சி தானே இது இந்த இடம் வேணாம்பா என்று பலர் சொல்வதுண்டு.

    ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிபோனாள் அந்த குடும்பமே தலை குணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.


    பள்ளி பருவத்தில் ஏற்படும் காதல் வெறும் இனக்கவர்ச்சி.18 வயதுவரை உங்களுக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து
    செய்த பெற்றொருக்கு தெரியும் உங்களுக்கு யாரை மணம் முடித்த வைக்க என்று.

    காதல் செய்யுங்கள்...சிறிய வயதில் பெற்றோர்கள் மீதும் கல்வி மீதும்...காதல் செய்யுங்கள் திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியையும் நீங்கள் செய்யும் உங்கள் தொழிலையும்...காதல் செய்யுங்கள்...உங்கள் குழந்தையையும்,உங்கள் வயதான பெற்றோரையும்...காதல் வாழ்க...


    இப்போது சொல்லுங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நல்லதா அல்லது ஓடி போய் செய்து கொள்ளும் காதல் திருமணம் நல்லதா?

    by
    Ilayaraja Dentist


    தோழிகளே இந்த பதிவு முகநூலில் படித்தது. இது குறித்த உங்கள் கருத்துக்கள் என்ன???
     
    Last edited: Jun 19, 2013
     
  2. benzishafeek

    benzishafeek Contributor New wings

    Messages:
    1,561
    Likes Received:
    84
    Trophy Points:
    48
    hai sudha unmai thanpa arranged marriage-la than niraya plus irukkuma.china vayasula irunthu pillaikalukkaha onnu onna paarthu saeira petthavangalukku avanga kalyanattha patthi evvalavu paeriya karpanai irukkum.kandippa avanga thappu panna mattanga .
    love marriage-na orutthar supporttum irukkathu kalyanam mudincha puthusula unakku naan enakku nee-nu sollalam aana evvalavu naalaiku rendu paerum orutthar moonja innorutthar parka mudiyum .yarum illatha antha thanimai rendu paerkum orutthar mael innoruttharku kopam varum athu than pirivukku arambam .arranged marraigelae-yum sandai irukku aana oru levelku maela poha paeriyavanga vida mattanga aana love marraigela nallathu kaettathu solla yaarum mun vara mattanga.
    enakku thaerinja oru akka irukkanga avanga paer Radha avanga amma appa love marriage antha karanatthala ivangalukku varan paarkayilae niraya piracchanai yaenna amma appa rendu paerum vaera cast,avanga amma azuthanga naanga love panninathu en pizzha vaazhkaya paathikkuthaenu.ippo antha akkaku marriage aayiducchu
    enga familylayum love marriage nadanthu irukku ponnu veetula accept pannala maapilai veetula oru condition ponnu convert aahanum appo than pinnala kuzhanthaiku piracchanai varathunu ponnu matham marinanga kalyanam nadanthathu ippo avanbgalukku kuzhanthai irukku amma veetukku avanga husband kooda mattum eppavavathu poitu varuvaanga.avangalum nalla irukkanga(unmaya sollanumna engala kooda yaarum muslimnu solla mattanga aana antha akka eppavum head cover panni than iruppanga engalukkae avangala paartha accharyama irukkum)
     
     
  3. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    29
    Trophy Points:
    0
    அட அட அட என்னமா அள்ளிவிட்டுள்ளார்...:3_14_1:

    திருமணம் வெற்றிபெற காதல் அல்லது பெற்றோர் பார்த்தது என்பது மட்டும் காரணம் இல்லை.

    :102: அல்லது :s5742:?

    புரிதல், அன்பு, அன்னியோன்யம் போன்ற பல்வேறு காரணிகள் முக்கியமானது.

    படித்து முடித்து சுயமாக சம்பாதித்து, விவேகமாக சிந்தித்து செயல் படும் நிலையில் உள்ள தனி மனிதன் தன திருமணத்தை பற்றி முடிவெடுக்கலாம். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

    நீங்கள் குறிப்பிட தகவலில் உள்ள விவாகரத்து பற்றிய % எத்தனை தூரம் சரியானது என்றும் யோசிக்க வேண்டும்.:223:

    பெற்றோர் பார்த்த திருமணத்தில் தம்பதிகள் எதையும் தங்கள் பொறுப்பாக நினைப்பதில்லை. "நீங்கள் தானே பார்த்து திருமணம் செஞ்சி வெச்சிருக்கீங்க அதுனால நீங்க தான் காரணம்" என்ற நழுவல் இருக்கும். பின் தங்கள் ஜாதி, மதம் போன்ற வட்டத்தில் இருக்கும் நபர்களை தான் தேர்ந்தெடுத்து மணமுடிப்பார்கள்.

    காதல் திருமணம் அப்படி இல்லை. சுயமாக பொறுப்புடன் செயல்படும் நிலைமையும், தங்கள் செயலுக்கு தாங்களே பொறுப்பு என்ற தெளிவுடன்தான் திருமணத்தை செய்துக்கொண்டு வாழ தயாராவார்கள். குறை நிறையை மறைக்காமல், ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த காதல் திருமணம் மிகவும் மகிழ்ச்சியுடன் நீடிக்கும்.

    இனக்கவர்ச்சியில் திருமணம் முடித்தவர்கள் தங்களை காதல் திருமணம் செய்தவர்கள் என்று கூறுவது என்னை பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள பட மாட்டாது!

    சாதி, சமய, மொழி, நிறம் போன்றவை குறுக்கீடாக இல்லாமலும் விசாலமான எண்ணமும் நிபந்தனை இல்லா அன்பு, புரிதல், பாசம், நேசம் போன்றவையும் முக்கியமாக விவேகமான சிந்தனையும் இருக்கும்போது காதல் திருமணம் தோல்வியை சந்திக்காது.

    திருமணத்திற்கு தேவையான அடிப்படை காரணிகள் இல்லாமல் பெற்றோர் பார்த்த காரணத்தால் மட்டுமே, அவர்களின் சமாதானத்தால், துணையால் மட்டுமே திருமணம் வெற்றி பெறாது.

    பெற்றோர் நிச்சயிக்கும் திருமண முறை மட்டும் தான் சிறந்தது என்று நினைக்கும் எண்ணம் எப்போதிருந்து நடைமுறைக்கு வந்தது என்று தெரியவில்லை..எனக்கு!

    புராண இதிகாசம் முதல் கந்தர்வ விவாகம் மற்றும் பல முறைகளில் திருமண பந்தத்தில் இணையமுடியும் என்ற நிலை இருந்தது.
    சமூக மாற்றத்தில் மற்ற முறைகளை இப்போது நாம் அங்கீகாரம் செய்வதில்லை என்றாலும்கூட நாளை இப்போது கூறும் நடைமுறையும் மாற்றத்திற்கு உட்பட்டது என்று நாம் மறக்க வேண்டாம்.

    ஆகையால் திருமணம் வெற்றிபெற பெற்றோர் செய்து வைக்க வேண்டும் என்று மட்டும் கூறுவது தவறு.
     
     
  4. meenasan

    meenasan Wings

    Messages:
    649
    Likes Received:
    2
    Trophy Points:
    0
    Rawa kannu naan solla ninaithathai neenga sollitinga .....so.......in arranged mrg .......problems vantha parents serthu vaippanga........but antha pir santhsama irukirangala.....ithu always question mark.........entha mrg iruntha enna........irandilum +.._ undu.....


    Problemnu vanthuta namma han solve pannanum........maththvargalidam advice ketkalam... but avanga nammakkaga decision edukka kudathu......
     
     
  5. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    29
    Trophy Points:
    0
    மீனா டார்லிங் சரியா சொன்னீங்க.

    அவங்க அவங்க வாழ்க்கைய அவங்க அவங்கதான் வாழணும்!

    இதுல என்ன கொடுமைனா பல பேருக்கு திருமணம் ணா என்னனே தெரியலையே.

    வெறும் பேரமும், புற அழகும், பகட்டும், செல்வமும், படிப்பும் etc நல்ல வாழ்க்கையை தந்து விடுமா? யோசிக்க வேண்டிய விஷயம்.

    நம்ப பொண்ணு கல்யாணம் பண்ணி போகற எடம் பிக்கல் பிடுங்கல் இருக்காம ஒரே பையனா இருந்தா போதும், நம்ப வீட்டுக்கு வர பொண்ணு எல்லாம் அனுசரிச்சி போறவளா இருக்கணும், நம்ப பொண்ணு பண்ணறது எல்லாம் சரி..ஆனா மருமக நோ நோ தப்பு தப்பு. நம்ப பொண்ணு கிட்ட நீ உன் புருஷன முடிச்சி வெச்சிக்கோ அப்படின்னு அவனை என்னமோ ஒத்த ரூபா ரேஞ்சுல சில்லறைய கோவில் உண்டியல் ல போட முடிச்சி வெச்ச மாதிரி வைக்க சொல்லுவதும், ஆனா மருமக தன்னோட மகனை அப்படி...அப்படி கூட வேண்டாம் கொஞ்சம் ப்ரிவசியா இருந்தா கூட போதும்....

    இதை எல்லாம் தாண்டி அவங்க அவங்க வாழ்க்கைய ஓட்டறதே பெருசு.


    பல தம்பதிகளுக்கு நடுவில் பிரச்சினை வருவதே மத்தவங்க மூக்கை நுழைக்கும் போது தான்.

    கணவன் மனைவிக்கு அவர்களின் பெற்றோர்களே வெளிநபர் என்ற அளவில் தான் இருக்க வேண்டும், புரிந்துக்கொள்ள வேண்டும்.

    பெற்றோர் மற்றும் பெரியவர்கள் தேவையான நேரத்தில் அதுவும் பிள்ளைகள் ஆலோசனை கேட்கும்போது அவங்களின் அந்தரத்தில் நுழையலாம்.

    பெற்றவர்களுக்கு பிடித்தவாறு வாழ வேண்டும் என்று திணிக்க தேவையில்லை...

    பிள்ளைகளை தெளிந்த சிந்தனையுடன் சிந்திக்க தெரிந்த மனிதனாக வளர்ந்து அவர்களின் வாழ்க்கைக்கு அவரவர்கள் பொறுப்பேற்கும் வண்ணம் வளர்த்தால் போதும். வாழ்க்கை துணையை சுயமாகவோ அல்லது பெற்றோரின் துணையுடனோ சரியாக தேர்வு செய்யும் முதிர்ச்சி வரும்!
     
     
Loading...
Similar Threads - நிச்சயிக்கப்பட்ட திருமணம் காதல்
  1. Nathasaa Shiyan
    Replies:
    0
    Views:
    1,265

Share This Page