Sponsored
Home / forum / ஒரு பூவின் ரகசியம் – ORU POOVIN RAGASIYAM by kodiuma

Sponsored

ஒரு பூவின் ரகசியம் – ORU POOVIN RAGASIYAM by kodiuma

ரகசியம் – 1

Please Register href=”index.php/register”/>Register o Login to view links!

அத்தியாயம் – 1

இடம் : பெங்களூர் , பெண்கள் விடுதி .

நேரம் : நள்ளிரவு பன்னிரெண்டு மணி .

அந்த விடுதியில் ஒரு அறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது . அந்த அறையில் பல்லூன் வெடிக்கும் சத்தம் , பெண்களின் ஆராவாரம் காதை பிளந்தது .

இதனால் மற்ற அறை மாணவிகள் , விடுதியை நடத்தும் வார்டன் என்று யாராலும் தூங்கவும் முடியாமல் , அவர்களை அதட்டவும் முடியாமல் சலித்தபடி இருந்தனர் . ஆனால் அங்கே புதிதாக விடுதியில் சேர்ந்த ஒரு மாணவியால் , அப்படி இருக்க முடியவில்லை .

அவள் நேராக அந்த அறை கதவை தட்டி , கதவு திறப்பதற்காக காத்து நின்றாள் . யாரும் கதவை திறப்பதாக தெரியவில்லை எனவும் , அவள் இன்னும் தன் பலம் கொண்டு அந்த அறை கதவை ஓங்கி தட்டினாள் .

சிறிது நேரத்தில் அங்கே கதவை திறந்த ஒரு பெண் , அவளை பார்த்து என்னவென்று தன் புருவம் உயர்த்தி வினவினாள் .

“ நீங்க கொஞ்சம் சத்தத்தை குறைச்சு கொண்டாடுங்க , இப்படி சத்தம் போட்டா , எல்லோரோட தூக்கமும் கெடுது “ என்று கூறிய பெண்ணை பார்த்து சிரித்தாள் அந்த பெண் .

“ இந்த விடுதிக்கு புதுசா வந்து இருக்கியா “ என்று கேட்டாள் அப்பெண் .

“ ஆமாம் ஏன் கேட்குறீங்க “ என்றாள் .

“ அதான் உனக்கு ரூல்ஸ் தெரியல , இவ்வளவு சத்தம் கொடுக்குறோம் யாராவது எங்களை வந்து கேட்டாங்களா , வார்டன் தான் வந்தாங்களா , இல்லையே . இதுலையே நீ புரிஞ்சு இருக்கணும் , ஆமா உன் பெயர் என்ன , எந்த காலேஜ் நீ “ என்று வினவினாள் .

“ என் பெயர் ஸ்ரீஜா , பைனல் இயர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் . பக்கத்துல இருக்கிற v.r.s . இன்ஜினியரிங் காலேஜ் ல படிக்கிறேன் . நீங்க என்ன படிக்குறீங்களா , இல்லை வேலை பார்க்குறீங்களா “ என்று அப்பெண்ணிடம் தன்னை பற்றி கூறி பதிலுக்கு அப்பெண்ணை பற்றி கேட்டாள் ஸ்ரீஜா .

“ ம்ம்.. அதை நீயே உள்ள வந்து தெரிஞ்சிக்கோ “ என்று அப்பெண் அவளை உள்ளே இழுத்துக் கொண்டு கதவை சாற்றினாள் .

அங்கே cd பிளேயரில் ஒலித்த பாட்டை அமர்த்தி விட்டவள் , பாடல் ஒலி நின்ற சத்தத்தை கேட்டு அங்கே இருந்த அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர் .

“ ஹலோ லேடீஸ் , இந்த பொண்ணு நம்ம விடுதிக்கு புதுசா வந்து இருக்கா , பெயர் ஸ்ரீஜா “ என்று கூறி அவளை பற்றிய தகவல்களை கூறினாள் .

“ இப்போ நம்ம ஸ்ரீஜாக்கு நான் யார் , என்ன வேலை பார்க்குறேன் எல்லாம் தெரியனுமா , கொஞ்சம் எடுத்து சொல்லுங்க “ என்று கூறிவிட்டு அங்கே இருந்த டேபிளில் ஏறி , ஒரு காலை மட்டும் டேபிள் மேல் வைத்துக் கொண்டு , மற்றொரு காலை ஆட்டிக் கொண்டே , அவர்களை பார்த்து எடுத்துக் கூறுமாறு தெனாவட்டாக போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தாள் .

“ ஹாய் ஸ்ரீஜா அவ பெயர் மதுஸ்ரீ , கோயம்புத்தூர் தான் அவ சொந்த ஊர் . அவங்க அப்பா சிங்காரமுத்து மினிஸ்டர் , அரசியல் ல பெரிய புள்ளி . அவங்க அம்மா வள்ளியம்மை குடும்ப தலைவி , அண்ணா தேவராஜன் அவங்க குடும்ப தொழில் ஜவுளி கடை வியாபாரம் பார்க்குறாங்க “.

“ அவங்க அண்ணி கல்யாணி வக்கீல் , கிரிமினல் லாயர் . அவங்க பையன் நிரஞ்சன் இப்போ U .K.G . படிக்கிறான் இதான் அவ குடும்ப வரலாறு “ என்று கூறி முடித்தாள் மதுவின் உற்ற தோழி அமுதா @ அம்மு .

“ அது சரி அவங்க என்ன படிச்சு இருக்காங்க , அவங்க என்ன பண்ணுறாங்க இப்போ . நான் அதை தான் கேட்டேன் , அதை சொல்லுங்க முதல “ என்று ஸ்ரீஜா சற்று அழுத்தி கேட்கவும் , மதுவிற்கு சிரிப்பு வந்தது .

“ நான் M.Phil கணிதம் முடிச்சு இருக்கேன் , இப்போ இங்க இருக்கிற St . Joseph காலேஜ் ல விரிவுரையாளரா வேலை பார்க்குறேன் . அப்படியே என் சீனியர் உதவியோட , நான் PHD பண்ணிக்கிட்டு இருக்கேன் “.

“ என்ன ஸ்ரீஜா , விவரம் போதுமா , இல்லை இன்னும் வேணுமா “ என்று மது அப்போதும் அதே தெனாவட்டு போஸ் கொடுத்து கெத்தாக கேட்கவும் ஸ்ரீஜா அவளை ஏற இறங்க பார்த்தாள் .

தலையை சரியாக வாராமல் , சும்மா கொண்டை மட்டும் போட்டுக் கொண்டு , முன் நெற்றியில் சிறிய அளவு முடியை மட்டும் தவள விட்டு இருந்தாள் . நெற்றியில் சிறிதாக ஒரு போட்டு , ஒரு கையில் பேஷன் ப்ரேஸ்லெட் , மற்றொன்றில் ஒரு வாட்ச் .

காதில் கடுக்கன் அளவு தோடு , கழுத்தில் சிறிய கயிறு போன்று செயின் , ஒரு வைட் டாப்ஸ் இடுப்பு வரைக்கும் , சாயம் போன ஜீன்ஸ் , தெனாவட்டான ஒரு போஸ் என்று அவள் பார்பதற்கு ஒரு பக்கா மார்டர்ன் சொர்ணாக்கா மாதிரி இருக்கவும் ஸ்ரீஜா சிரித்தாள் .

“ என்னது நீங்க கல்லூரி விரிவுரையாளரா , உங்களை பார்த்தா மார்டர்ன் சொர்ணாக்கா மாதிரி இருக்கு , பொய் சொல்லாம உண்மையை சொல்லுங்க “ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் .

இப்பொழுது சிரிப்பது , அங்கே இருக்கும் அனைவருடைய முறையானது . எல்லோரும் சிரிக்கவும் , ஸ்ரீஜா சட்டென்று தன் சிரிப்பை நிறுத்திவிட்டு , கையை இடுப்பில் வைத்துக் கொண்டு மதுவை முறைத்தாள் .

அவளின் முறைப்பை பார்த்து தனக்குள் சிரித்து விட்டு , பின்னர் கண் ஜாடையில் எல்லோரையும் அமைதி படுத்தினாள் . அதன் பின் பார்வையை ஸ்ரீஜா பக்கம் திருப்பி , அவளை தன்னருகே வருமாறு சைகை செய்தாள் .

அங்கே அவளின் அருகே சென்ற ஸ்ரீஜா , என்னவென்பது போல் பார்த்தாள் . மது அவளிடம் ஒரு பைலை நீட்டவும் , அதை வாங்கி பார்த்தவள் அதிர்ந்தாள் . ஏனெனில் அதில் மது கூறிய அனைத்தும் உண்மை , என்று கூறியது .

“ ஹே ஸ்ரீஜா , என்ன படிப்புக்கும் , ஆளுக்கும் சம்மந்தமே இல்லையேன்னு பார்க்குறியா . இப்போ தான இங்க சேர்ந்து இருக்க , இனி போக போக உனக்கே இது பழகிடும் “ என்று அமுதா அவளை தட்டி கொடுத்தாள் .

அப்பொழுது தான் ஸ்ரீஜா , தன்னை சுற்றி அனைவரையும் பார்த்தாள் . அவளுக்கு ஏதோ ஒரு ரவுடி கும்பலுக்குள் தெரியாமல் நுழைந்த ஒரு பீல் உருவானது .

இருந்தாலும் மதுவிடம் ஏதோ ஒன்று இருக்கிறது போல் உணர்ந்தாள் , அவளிடம் நட்பு பாராட்ட விருபினாள் . எனவே ஸ்ரீஜா , அவளை நோக்கி சிரித்த முகமாக , நட்பு கரம் நீட்டினாள் .

“ ம்ம்.. நீ செம பாஸ்ட் ஸ்ரீஜா , என்னை சீக்கிரம் புரிஞ்சுகிட்டு நட்பு கரம் நீட்டிட “ என்று மதுவும் சிரித்துக் கொண்டே அவள் புறம் கையை நீட்டி , அதை பற்றிக் கொண்டு அவள் நட்ப்பை ஏற்றுக் கொண்டாள் .

பின்னர் அங்கே புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் , மேலும் சில ஆரவாரமுடன் அந்த இடம் பழைய உற்சாகத்தோடு கலகலத்தது . சிறிது நேரத்தில் அந்த இடத்தை , எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்தனர் .

மதுவிற்கு ஸ்ரீஜாவை பார்க்கும் பொழுது , வேறு ஒரு முகம் அவள் நினைவில் வந்து அவளை வேதனை அடைய செய்தது . அவளின் முக மாற்றத்தை கண்டு கொண்ட அம்மு , ஸ்ரீஜாவை அவள் அறைக்கு அனுப்பி வைத்தாள் .

பின்னர் மதுவின் தோளில் கை வைத்து அழுத்தவும் , மது சுதாரித்துக் கொண்டாள் . பின்னர் அம்முவிடம் தூக்கம் வருகிறது என்று கூறி , அங்கே தன் கட்டிலில் படுத்துக் கொண்டு , போர்வையை இழுத்து மூடினாள் .

என்ன தான் கண் மூடி படுத்து இருந்தாலும் , அவளால் தூங்க முடியவில்லை . நடந்து போன சில கசப்பான சம்பவங்களின் நினைவில் , அவள் மனதில் மீண்டும் பாரம் ஏறியது . அதை நினைத்துக் கொண்டு படுத்தவள் , எப்பொழுது உறங்கினாள் என்று தெரியவில்லை .

நன்றாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை , அவளின் செல்பேசி காலை எட்டு மணியளவில் அவளை எழுப்பியது . எரிச்சலுடன் எடுத்து யார் என்று பார்த்தவள் , அவளின் அன்னை அழைப்பதை பார்த்து வேகமாக எடுத்து காதுக்கு கொடுத்தாள் .

“ என்ன மா திடிர்ன்னு இவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டு இருக்கீங்க , என்ன விஷயம் “ என்று எடுத்த உடனே கேட்டாள் .

“ அது சரி , அம்மா போனை போட்டு இருக்காளே , எப்படி இருக்கா என்னனு ஒரு வார்த்தை கேட்காம , நேரா விஷயத்துக்கு வாங்கன்னு சொல்லுற பிள்ளை நீ ஒருத்தி தான் டி “ என்று அவர் காலை சுப்ரபாரதம் வாசிக்க தொடங்கினார் .

“ ஹையோ வள்ளிம்மா , நேத்து தான செல்லம் உங்க கிட்ட எப்படி இருக்கீங்ன்னு கேட்டு , கொஞ்சிகிட்டே ஊர்ல இருக்கிற நடப்பன , பறப்பன , மிதப்பனன்னு இப்படி எல்லோரை பத்தியும் கேட்டேன் . வர வர உங்களுக்கு நியாபக மறதி அதிகமாகிட்டே இருக்கு , ஒரு நல்ல டாக்டர் கிட்ட முதல உங்களை காட்டனும் “ என்று மது அவரை உற்சாகத்துடன் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தாள் .

“ ஆரம்பிச்சிடியா , சரி , சரி பேசிகிட்டு இருக்க நேரம் இல்லை . நீ சீக்கிரம் குளிச்சிட்டு , எல்லாம் எடுத்து எடுத்து வச்சு தயாரா இரு . உன்னை கூப்பிட சிபி தம்பி வந்துகிட்டே இருக்கு , இங்க உங்க பெரியப்பா பொண்ணு லக்ஷ்மிக்கு நிச்சயம் ஆகிருக்கு “ என்று அவர் கூறியதை கேட்டவுடன் , அவள் கட்டிலில் இருந்து எழுந்து குதித்துக் கொண்டு இருந்தாள் .

“ ஹையோ சூப்பர் வள்ளிமா , இதை தான நீங்க முதல சொல்லி இருக்கணும் “ என்று குதித்தாள் மது .

“ அது சரி , உனக்கும் அவளுக்கும் தான் ஆகாதே . ஏதோ ஜென்ம விரோதி மாதிரி தான முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருப்ப , அவளை பார்த்தா . இப்போ அவளுக்கு முடிவு ஆகிருக்கு சொன்ன உடனே , இவ்வளவு சந்தோஷப்படுற என்ன விஷயம் “ என்று அவளை பற்றி அறிந்தவராக கேட்டார் .

“ வேற என்ன எனக்கு தான் ரூட் கிளியர் ஆகிருச்சே , ஷப்பா எப்போ டா இவளுக்கு முடியும்ன்னு காத்துகிட்டு இருந்தேன் . நல்ல வேலை , என் பீலிங்க்ஸ் புரிஞ்ச ஒரு நல்லவான் வந்து , இந்த லக்ஸ்சை தள்ளிகிட்டு போயிட்டான் “ என்று அவள் கூறியதை கேட்டு தலையில் அடித்துக் கொண்டார் வள்ளியம்மை .

“ உன்னை எல்லாம் திருத்த முடியாது , சீக்கிரம் கிளம்பு இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த சிபி தம்பி அங்க வந்திடும் “ என்று சில பல அறிவுரைகள் கூறி போனை வைத்தார் .

போனை வைத்தவுடன் , அவர் கூறிய சிபி தம்பி மதுவின் காதில் ஓடி அவளை பல்லை கடிக்க வைத்தது . கடிகாரத்தை பார்த்தவள் , செல்லை சார்ஜில் போட்டுவிட்டு , குளிக்க தேவையானதை எடுத்துக் கொண்டு , குளியறைக்குள் சென்று குளித்து விட்டு வந்தாள் .

அதன் பின் வேகமாக தான் எடுத்து செல்ல வேண்டியதை எல்லாம் எடுத்து ஒரு பெட்டியில் வைத்துவிட்டு , மீண்டும் ஒரு முறை சரிபார்த்து சார்ஜெரையும் செல்லையும் தன் கைபையில் போட்டுக் கொண்டு அறையில் இருந்து வெளியேறி கீழே லாபிக்கு வந்து சேர்ந்தாள் .

அங்கே அவள் வந்தவுடன் , முதலில் அவள் பார்த்தது திமிராகவும் , தெனாவெட்டாகவும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டு இருந்த சிபி தான் . இவள் வந்ததை பார்த்தவன் , அவனின் கண் அசைவில் அவனோடு வந்து இருந்தவர்கள் அவளின் பெட்டியை வாங்கிக் கொண்டு காருக்கு விரைந்தனர் .

“ இன்னைக்கு ஒழுங்கா நீ என் கூட கார் ல வருகிறது நல்லது , மீறி நீ ஏதாவது செய்ய நினைச்சா அப்புறம் உன்னை தொட்டு தூக்கிட்டு வர மாதிரி இருக்கும் . யோசிச்சு நல்ல முடிவா எடு , புரிஞ்சு இருக்கும் நினைக்கிறன் , நேரம் ஆகிருச்சு வண்டியில் ஏறு “ என்று சிபி கூறியதை கேட்டு , தன் பல்லை கடித்துக் கொண்டே வண்டியில் பின் பக்கம் ஏறி அமர்ந்தாள் .

அவள் அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்ததை பார்த்து , சிபி தனக்குள் புன்னகைத்துக் கொண்டான் . பின்னர் காரின் முன் கதவை திறந்து கொண்டு , டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் ஏறி அமர்ந்து அவரை வண்டியை எடுக்க கூறினான் .

அவனின் கட்டளைக்கு அடி பணிந்தவர் , காரை சீரான வேகத்தில் கோயம்பத்தூர் நோக்கி ஓட்ட தொடங்கினார் . நேற்றைய இரவில் சரியாக தூங்காமல் இருந்ததால் , காலையில் தான் நன்றாக தூங்க தொடங்கினாள் மது .

அதற்குள் அவளின் அன்னை எழுப்பிவிடவும் , கிளம்ப தொடங்கினாள் மது . இப்பொழுது சற்று தூங்கி எழுந்தால் தான் , அடுத்து மூளை சுறுசுறுப்பாக இருக்கும் என்று எண்ணியதால் , உடனே அங்கு இருந்த சிறிய தலையணையை கதவுக்கு அருகில் போட்டுக் கொண்டு , கதவு சரியாக லாக்காகி இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு , கால்லை நீட்டி படுத்து விட்டாள் .

அவள் படுத்து நன்றாக உறங்கியவுடன் , சிபி அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு தனக்குள் பொருமிக் கொண்டு இருந்தான் . அவன் இப்படி ஒரு சந்தர்பத்திற்காக தான காத்துக் கொண்டு இருந்தான் , அவளை கடத்த இதுவே சரியான சமயம் என்று எண்ணினான் .

“ டிரைவர் நீங்க வண்டியை அந்த பஸ் ஸ்டாப் கிட்ட நிறுத்துங்க , நீங்க பஸ்ஸை பிடித்து போங்க . நானே இவளை வேகமா அங்க கூட்டிட்டு வந்து விட்டுறேன் , அப்புறம் இவ எழுந்தா அவ எப்படி எல்லாம் ஒடுவாளோ தெரியாது “ என்று சிபி கூறியதை கேட்டு அவர் புன்னகைத்துக் கொண்டார் .

“ தம்பி பாப்பா நல்லா அசதியா இருக்கு , இப்போ அது அவ்வளவு சீக்கிரம் எழுந்துக்காது . நீங்க தைரியமா இருங்க , அது மட்டும் இல்லை , அய்யா என்னை இருந்து கையோட கூட்டிட்டு வர சொல்லி இருக்கார் “ என்று இருபது வருடம் , அங்கே வேலை செய்த விசுவாச டிரைவர் மணி கூறினார் .

“ ஹ்ம்ம்.. இந்த சந்தர்ப்பமாவது பயன்படுத்திக்கலாம் நினைச்சேன் , இதுவும் போச்சா . இன்னும் எவ்வளவு நாள் காத்து இருக்கிறது இவளை கடத்திட்டு போக , ஏதாவது சீக்கிரமா ஒரு வழி கிடைச்சா நல்லா இருக்கும் “ என்று மனதிற்குள் பொரிந்தான் சிபி .

அவனுக்கு தெரியவில்லை , இவளை கடத்துவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்று இல்லை என்று . இன்னும் சிறிது நாட்களில் அவனுக்கு இவள் பெரிய அதிர்சிகளை கொடுத்து , அவனை மிரள செய்ய போகிறாள் என்பதை இவன் அறிவானா .

மதியம் ஒரு ஊரில் நிறுத்தி சாப்பிட்டு விட்டு , மீண்டும் கார் பயணம் . அந்த பயணத்தில் சிபி இவளை எப்பொழுது கடத்துவது , என்று யோசித்தான் ஒரு புறம் . மற்றொரு புறம் சிபி வந்து சேர்ந்த விதத்தை நினைத்து , தனக்குள் பொரிந்து கொண்டு இருந்தாள் மது மற்றொரு புறம் .

இப்படி இவர்கள் ஒருவருக்கு ஒருவர் நினைத்துக் கொண்டு இருக்கையில் , இரவு எட்டு மணி அளவில் கோயம்பத்தூர் வந்து சேர்ந்தனர் . அந்த வீட்டை பார்த்து இறங்கிய மது , எப்பொழுதும் போல் அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டு இருந்தது .

பார்பவர்களுக்கு அவள் ரொம்ப நாள் கழித்து வீட்டிற்கு வந்ததால் , இப்படி அழுகிறாள் என்று தான் எண்ணுவர் . ஆனால் அவள் மனதின் ஆழத்திற்கு தான் , அந்த கண்ணீரின் ரகசியம் தெரியும் .

உள்ளே கார் வந்த சத்தத்தை கேட்டு , வீட்டில் இருந்து வெளியே வந்தார் வள்ளியம்மை . மது அதற்குள் தன்னை சுதாரித்து , அவரை பார்த்தவுடன் ஓடி சென்று அவரை கட்டி அனைத்துக் கொண்டாள் .

“ என்ன மதுமா இப்படி இளச்சிட்ட , வா முதல இங்க வெளியே கை , கால் கழுவிட்டு உள்ளே வா “ என்று கூறி அவளை உள்ளே அழைத்து சென்றார் .

மதுவின் இந்த கலங்கிய நிலையை பார்த்த சிபிக்கு , எரிச்சல் வந்தது .

“ இன்னும் நல்லா அழுவ டி நீ , உன் குடும்பத்தையே அழ வைக்குறேன் . எங்க குடும்பத்தை ஏன் டா பகைசிட்டோம்னு உங்க அப்பாவை வருத்த பட வைக்குறேன் , உன்னை சீக்கிரமே இவங்க கிட்ட இருந்து பிரிக்கிறேன் “ என்று மனதிற்குள் கருவிக் கொண்டான் .

வீட்டிற்க்குள் உள்ளே வந்த மதுவை , வள்ளியம்மை அவளை அமர வைத்து முதலில் சாப்பாடை கொடுத்து உபசரித்தார் . அவரின் அன்பில் எப்பொழுதும் போல் , அவள் கண்கள் கலங்கியது .

“ இது என்ன மது எப்போ பார்த்தாலும் இப்படி அழுகை , வீட்டுக்கு வந்த உடனே அழுதா நல்லதுக்கு இல்லை டா . அதான் உன்னை இங்கேயே இருக்க சொன்னேன் , நீ கேட்டா தான “ என்று அவர் பிரிந்து இருப்பதால் தான் மகள் அழுகிறாள் என்று நினைத்து கூறினார் .

ஆனால் அவள் அழுவதற்கு ஆயிரம் காரணம் இருக்கிறதே , அது ரகசியமாகவே இருக்கிறது .

“ சரி மா இனி அழ மாட்டேன் , ஆமா அப்பா எங்க . இந்நேரம் நான் வந்தா , என்னை வரவேற்க உனக்கு முந்தியே வந்து நிற்பாரே “ என்று தந்தையை பற்றி பேச்சு எடுத்தாள் .

“ அவர் கட்சி மீட்டிங் முடிஞ்சு , உங்க பெரியப்பா கூட ஒரு சோலியா வெளியூர் போயிருக்கார் . ராத்திரி பதினொரு மணிக்கு மேல தான் வருவார் , லக்ஷ்மிக்கு நிச்சய சடங்கு நாளைக்கு வைக்குறாங்க மது அந்த வேலையா தான் போய் இருக்காங்க “ என்று அன்னை கூறியதை கேட்டு புன்னகைத்து விட்டு , சாப்பிட்டு முடித்தவுடன் , கையை கழுவிவிட்டு , மேலே அவள் அறைக்கு வந்தாள் .

அறை கதவை பூட்டிவிட்டு , அவள் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு முதலில் குளிக்க சென்றாள் . குளித்துவிட்டு வழக்கம் போல் நைட்டி பண்ட் அணிந்து வந்தவள் , தன் அறை ஜன்னல் வழியே உள்ளே பைப் மூலம் கீழே தோட்டத்திற்கு வந்தாள் .

சுற்றி முற்றும் பார்த்துவிட்டு , அவள் தோட்டத்தின் பின்னே சென்றாள் . அங்கே அவள் சென்றதை பார்த்துவிட்டு , சிபி அவளை பின் தொடர்ந்து சென்றான் .

அங்கே ஓரத்தில் உள்ள மரம் நோக்கி சென்று , அங்கே தரையில் அமர்ந்து அந்த மண்ணை எடுத்து அழுது கொண்டே இருந்தாள் . அவள் அழுவதை பார்த்து , இவனுக்கு ஏன் இவ்வளவு அழுகிறாள் என்று புரியவில்லை .

அருகில் சென்றவன் , அங்கே அவள் உதிர்த்த வார்த்தைகளை கேட்டு அவன் ஸ்தம்பித்து நின்றான் .

பூவின் ரகசியம் வரும் …

 

About admin

Check Also

VISHNU_PRIYA’S அடைக்கலம் நான்.. உன் மார்பிலே! – 30

என் இனிய தமிழ் உறவுகளுக்கு, இதோ நீங்கள் எல்லாரும் ஆவலாகக் காத்துக்கிடந்த எபியுடன் வந்துட்டேன். படிச்சுட்டு கண்டிப்பா உங்க கருத்துக்களை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *