Sponsored
Home / forum / Hamida_ Yaarai Ketathu Ithayam

Sponsored

Hamida_ Yaarai Ketathu Ithayam

என்னுரை:

தோழிகள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் நலமா?

இதோ அதோ என்று இழுத்தடித்து, ஒருவழியாக உங்களை சந்திக்க வந்தே விட்டேன் தோழிகளே…..

முதன் முதலாக உங்களை அடைமழையில் நனைத்த ஞாபகம் இன்னமும் என் நினைவுகளில் பசுமையாகவே இருக்கிறது.

இடைப்பட்ட காலத்தில் என்னுடைய முதல் மூன்று படைப்புகள் அச்சிலேறிய அதிசயம் நடந்தேறி இருப்பினும், “யாரைக் கேட்டது இதயம்…!” என்ற இந்த நான்காவது படைப்புடன் உங்களை சந்திக்கும் வேளையிலும், முதல் கதையின் போது அனுபவித்த அதே படபடப்பு மாறாமலே இருக்கிறது, என்று நான் சொல்வதை நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும்.

கதை நாயகன – சுமந்த் நாராயண்
கதை நாயகி – ஷ்ரேயா

நான் படைக்கும் ஹீரோக்கள் என்னையும் அறியாமல் உங்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று விடுகிறார்கள்.

விசு சித்திக்…

கிஸ்ஸை மிஸ் செய்த நரேன்….

Mr கண்ணியம்…தன்வீர்

இந்த வரிசையில் சுமந்த்துக்கு எந்த இடம் கிடைத்தாலும் சரி, அது உங்கள் மனத்தில் உயர்ந்த இடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஷ்ரேயா….அவளுடைய கேரக்டர் அனாலிசிஸ்…நான் செய்வதை விட நீங்கள் செய்வதே பொருத்தமாக இருக்கும்.

கதை….வழக்கமான கதை இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். இது முழுநீள காதல் கதை அல்ல…ஆனால் இதில் உருக வைக்கும் காதலும் உண்டு….கூடவே கொஞ்சம் கண்ணீர், வெறுப்பு, குரோதம், துரோகம் போன்ற கசப்புச் சுவைகளும் முகத்திலறையும் எதார்த்தங்களும் சரிவிகித சமானமாய் கதையெங்கும் விரவியிருக்கும்.

“பயங்கர பில்டப்பா இருக்கே…” என்ற உங்களின் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது.

காத்திருங்கள்….

முதல் பதிவு வெள்ளி மாலை பதிவிடுகிறேன்…

வாசித்து விட்டு கீழ் கண்ட திரியில் வந்து சொல்லுங்கள்…இது வழக்கமான கதையா? இல்லையா? என்று…..

தளத்தை புதுப்பொலிவுடன் மாற்றியமைத்து, அனுதினமும் தளத்தின் மேன்மைக்காக செயலாற்றும் அட்மின் தோழி மஞ்சுளா செந்தில்குமார் அவர்களின் தொடர்ந்த நல்லாதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். என்னுடைய புதிய முயற்சிக்கான உங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மஞ்சு.

அன்புடன்
ஹமீதா.

Hamida_ Yaarai Ketathu Ithayam

 

About ladys wings

Check Also

VISHNU_PRIYA’S அடைக்கலம் நான்.. உன் மார்பிலே! – 30

என் இனிய தமிழ் உறவுகளுக்கு, இதோ நீங்கள் எல்லாரும் ஆவலாகக் காத்துக்கிடந்த எபியுடன் வந்துட்டேன். படிச்சுட்டு கண்டிப்பா உங்க கருத்துக்களை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *