Sponsored
Home / Novels / Ithu Kathalendraal / Ithu Kaathalendraal -4

Sponsored

Ithu Kaathalendraal -4

Part-4

 

உன் மூச்சுக் காற்றின் வெப்பத்தில்

என் மூளை வேலை நிறுத்தம் செய்கிறதே

இது காதலென்றால்……………..

எக்ஸாம்க்கு நேரமாகி விட்டதால் வேகமாக வந்த ஷிஜி யின் முகத்தில் ஒரு துப்பட்டா வேகமாக வந்து விழுந்ததால் தடுமாறி கீழே விழுந்தாள். அவள் கீழே விழுந்த சப்தம் கேட்டு கூட்டம் கூடியது.

சே…. யார் இது துப்பட்டா காற்றில் பறந்தது கூட தெரியாம………… பாவம் இப்போ இவளுக்கு அடி பட்டுடுச்சே………….” கூட்டத்தில் யாரோ ஒருத்தி சொன்னாள்.

பேசிட்டு இருக்காம முதல்ல அவள எழுப்பி விடுங்க. யாராவது தண்ணி கொண்டு வாங்க“. ஷிஜி வலி பொறுக்காமல் கண்களை மூடி வலியை அடக்கிக்கொண்டிருந்தாள். அவளது காலின் கட்டை விரலில் நகம் பிய்த்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. குட்டி விரல் இசகு பிசகாக அடிபட்டு வீங்கி போயிற்று. கண்களை இருட்டிக் கொண்டு மயக்கம் வரும் போல் இருந்தது.

இதுங்க எல்லாம் ஏன்தான் டிரஸ் போட்டுட்டு அலையிதுகளோ பின் பண்ணினா என்ன செய்யும். பார் வாய தொறக்குதுகளா“. கூட்டத்தை பார்த்து மினி டீம்,”ஹேமா அங்க என்னடி கும்பலா இருக்கு வா என்னன்னு பாக்கலாம்.

கும்பலை விலக்கி விட்டு பார்த்த மினி அதிர்ந்தாள். அவசரமாக தனது துப்பட்டாவை தோளில் தேடினாள். நிலைமையின் தீவிரத்தை உடனே புரிந்து கொண்டு , வேகமாக தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு ஷிஜி யின் அருகில் சென்றாள்.

ஐ’ம் சாரி, இது என்னோட துப்பட்டாதான். எனக்கே தெரியாம காத்துல பறந்து வந்துடுச்சு போலதண்ணீர் பாட்டிலை அவளுக்கு குடிக்க கொடுத்தாள்.

கூட்டத்தில் அனைவரும் மினியை அர்ச்சனை செய்ய துவங்கவும் எக்ஸாம்க்கு மணி அடிக்கவும் சரியாக இருந்தது. நிகழ் காலத்துக்கு திரும்பி அனைவரும் ஹாலை நோக்கி சென்றனர்.

மினி,”ஹேமா வினோ நீங்க போங்க நான் இவங்கள கூட்டிட்டு வாறேன்“.

மினி அவங்க கால்ல ரத்தம் வருது பாரு முதல்ல அத கவனி எக்ஸாம்க்கு பத்து நிமிஷம் லேட்டா போனா ஒண்ணும் ஆயிடாது“, ஹேமா சொல்லிக்கொண்டே அவளது கர்சீப்பை தண்ணீரில் நனைத்து ஷிஜியின் கட்டை விரலில் கட்டி விட்டாள்.

குட்டி விரல் கூட வீங்கி இருக்குடி ஹோச்பிடல் போனாதான் சரிவரும்போல. நான் இவங்கள கூப்பிட்டு போறேன் நீங்க ஹால்க்கு போங்க“, மினி.

மினி ஹால்க்கு போக சொன்னதும் தான் ஷிஜிக்கு சுய உணர்வு வந்தது.”இல்லை நான் எக்ஸாம் எழுத போயே ஆகணும். எக்ஸாம் முடிச்சு வந்து மீதியை பார்த்துக்கலாம்“.

என்ன நீங்க விளையாடுறீங்களா? கால் வீங்கி இருக்கு இப்போ போய்“, மினி.

மினி,………என்ன அப்படி பார்க்குறிங்க. உங்க பிரண்ட்ஸ் உங்கள அப்படிதானே குப்பிட்டாங்க. மினி தானே உங்க பேரு. இன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம் இது ஈவென் செமஸ்ட்டர் வேற. இப்போ விட்டா எழுதுறது கஷ்டம்.சோ எக்ஸாம் முடிச்சு வந்து நீங்க எங்க கூப்ட்டாலும் வாறேன். இப்போ என்ன விட்டுடுங்களேன் ப்ளீஸ்“.

உங்களால நடக்க முடியுமா. நீங்க எந்த ஹால் நான் கூட்டி போய் விடுறேன்“.

எனக்கு B block ரூம் no.12 உங்களுக்கு

எனக்கு F block…………..”. “மினி ஏற்க்கனவே லேட் ஆயிடுச்சு. 2 block-ம் எதிர் எதிர் சைடு ல இருக்கு. நீங்க போங்க நான் போய்க்கறேன்“.

வினோ, ஹேமா எங்கடி ஆள காணோம் போயிட்டாளா “.”சாரி உங்க நேம் நான் கேக்கவே இல்ல நீங்க…………” “ஐ’ம் ஷிஜி செகண்ட்  இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஓகே

அவ ஷிஜியோட ஸ்கூட்டியை ஸ்டாண்ட்ல போட போய் இருக்கா அதோ வாறாஅனைவரும் விடை பெற்று கிளம்பும் போது அவர்களை நோக்கி லதா வந்து கொண்டிருந்தாள்.

ஷிஜி, எக்ஸாம் எழுத போகலையா ஆமா இவங்க எல்லாம் யாரு. நீ ஏன் இப்படி நடக்குற“.

ரத்தம் தோய்ந்து இருந்த அவளது விரலை பார்த்து ,” கால் புல்லா ரத்தம். என்ன ஆச்சு சொல்லுடி“.

லதா முதல்ல எக்ஸாம் எழுதுவோம். அப்புறம் விவரமா சொல்லுறேன். நீங்க எல்லோரும் கிளம்புங்க“.

ஓகே பார்த்து போங்க லதா அவங்கள கை தாங்கலா கூட்டிட்டு போங்க. எக்ஸாம் முடிச்சு உங்களை வந்து பார்க்குறேன்“.

மினி, ஹேமா,வினோ F block குக்கும்………….. ஷிஜி, லதா B block கும் சென்று எக்ஸாம் எழுதினர்.

ஷிஜி, வலி பொறுக்க முடியாமல் ஹாலில் முனங்கவும், மேம் வந்து என்வென்று கேட்க அவளது நிலைமையை பார்த்து காலை தூக்கி வைத்துக் கொள்ள ஒரு ஸ்டூல் கொடுத்தார்கள்.

இங்கு மினியோ மிகவும் பதட்டத்தில் இருந்தாள். கணக்குக்கு விடை வருவேனா என்று அடம் பிடித்தது.அம்மா சொன்னதை கேட்டு பின் பண்ணி இருந்தா இப்படி நடந்தே இருக்காது எல்லாம் என் தப்பு.வர வர ஒரு பொறுப்பே இல்லாம போயிட்டு எனக்கு. சே…. அவ அங்க என்ன கஷ்டப் படுறாளோ எப்படி எக்ஸாம் எழுதுறாளோ. தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். அவளது தவிப்பை பார்த்து வினோ ஜாடையில் என்ன என்று கேட்டு…………. பதட்டப் படாமல் எழுதுமாறு சொன்னாள். அதன் பிறகு எழுத துவங்கினாள் மினி.

ஒரு வழியாக மூன்று மணி நேரத்தை கடத்தி விட்டு பெல் அடித்தது. முதல் ஆளாக பேப்பரை கொடுத்துவிட்டு ஷிஜியை தேடி ஓடினாள் மினி. அங்கு போய் சேர இருபது நொடிகள்  தான் ஆயிற்று. காற்று வேகத்தில் சென்று ஷிஜியின் முன்னால் மூச்சிரைக்க நின்றாள்.

 

சுஷினின் கார் அந்த 12 மாடி கட்டிடத்தின் முன் நின்றது. காரை விட்டு இறங்கியதும் செக்யூரிட்டி வந்து சாவியை வாங்கிக் கொண்டார். “என்ன முத்து நீங்க வாரிங்க, எங்க டிரைவர்“.

தம்பி, இன்னைக்கு அவனோட குழந்தைக்கு உடம்பு சரி இல்லையாம். காலையிலேயே வந்து சொல்லிட்டு போனான். உங்களுக்கு போன் போட்டானாம் லைன் கிடைக்கலையாம் இரண்டுமணி நேரத்தில்  வந்துடுறதா சொன்னான்“.

அப்போ நானே காரை பார்க் பண்ணிடுறேன் கீயை தாங்க“.

இவர்களை பார்த்த படியே வந்தான் பிரகாஷ். “குட் மோர்னிங் சார், மே ஐ……………….”

சுஷின் ஏதோ சொல்ல வந்து பிறகு எதுவும் சொல்லாமல் கீயை அவனிடம் கொடுத்து விட்டு லிப்டை நோக்கி சென்றான். இந்த 12 மாடி கட்டிடத்தில் அவனது அலுவலகம் ஐந்தாவது மாடியில் இருந்தது. மின்தூக்கியில் (லிப்ட்) சென்று ஐந்தாவது மாடியில் வெளியே வந்தான். அவனது துரித நடையே அவன் வருவதை உணர்த்த அனைவரும் காலை வணக்கம் சொல்ல, அனைவரின் வாழ்த்துக்கும் ஒரு தலை அசைப்பையே தந்து விட்டு குளிரூட்டப்பட்ட தனது அறையின் உள் சென்று சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

அவனது கையொப்பத்துக்காக இருந்த பைல் களை ஒன்று ஒன்றாக பார்த்துக் கொண்டிருந்தான். அறையின் கதவு மெலிதாக தட்டும் ஓசை கேட்டது.”எஸ் கம் இன்“. அனுமதி கிடைத்ததும் பிரகாஷ் உள்ளே வந்தான்.

சொல்லுங்க பிரகாஷ் ஏதாவது ப்ரோப்ளமா இல்ல என்கிட்டே ஏதாவது சொல்லணுமா“.

என்னசார்……………. என்ன போய் நீங்க வாங்கன்னு சொல்லிட்டு இருக்கீங்க“.

நீங்கதானே காலைல எனக்கு சொன்னிங்க மரியாதை குடுக்க சொல்லி. நான் அதை மீற முடியுமா“.

காலையில் தான் அவனை குட் மோர்னிங்சார்என்று சொன்னதைத் தான் அவன் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து புன்னகைதான்.

……. அப்படியா அப்போசரி நீ என்ன அப்படியே சொல்லு நானும் உன்ன சார்னே சொல்லுறேன் ஓகே“.

பின்ன என்னடா வந்த சார்ன்னு சொன்ன நீபாட்டுக்கு டிரைவர் வேலை பார்க்குற. நான் உன்னை என்றைக்காவது குறைச்சலா சொல்லி இருக்கேனா. நீ தான் விலகி விலகி போற. மரியாதை எல்லாம் குடுக்குற. என்ன உன் பிரெண்டாவே நினைக்க தோணாதா. இல்லைன்னா நான் தான் உன்னை அப்படி நடத்த வில்லையா ம்ம்…… . பதில் சொல்லுடா“.

சுஷின் இதுல இவ்வளவு வருத்தப் படுற அளவுக்கு என்ன நடந்தது. ஆபீஸ் ஸ்டாப்ஸ் முன்னாடி உன்ன நான் அப்படி குப்பிட மாட்டேன்னு உனக்கே தெரியும். நீ என்னதான் சொன்னாலும் நான் இந்த விஷயத்துல கேட்க்கப் போவது இல்லை சரியா.இந்த ஆபீஸ விட்டு வெளியே உன்னை சார்ன்னு சொன்னா நீ கேளு ஓகே “.

சரி விடு என்ன நீ பேர் சொல்லி கூப்பிடுற நேரம் வராமலா போய்டும், உன்னை அப்போ வச்சுக்கறேன்“.

அதை அப்போ பார்த்துக்கலாம்“. “இப்போ உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் வந்தேன்“. அவனது குரலில் இருந்த மாறுதல் சுஷினை அலுவலக பணிக்கு இழுத்து வந்தது.

சொல்லு பிரகாஷ் ஏதாவது முக்கியமான விஷயமா“.

ஆமா நாம கிரானைட் லாரி ஒண்ணு ஆந்திரா கிட்ட விபத்து ஆயிடுச்சு. லோட் புல்லா டேமேஜ் ஆயிடுச்சு நமக்கு நஷ்டம் கொஞ்சம் தான் ஆனா……………”

ஆனா என்னடா சொல்லு ஏதாவது  நம்ம டிரைவருக்கு……………”

சேசே …. அந்த லாரில கஞ்சா இருந்து இருக்குடா………………”

வாட், பிரகாஷ் இது எவ்வளவு பெரிய விஷயம் நீ இவ்வளவு நிதானமா சொல்லிட்டு இருக்க. அப்பாவுக்கு தெரியுமா? இது யாரோட வேலைன்னு எனக்கு தெரியும் விடு நான் பார்த்துக்கறேன். ஆனா இந்த விஷயம் மீடியாவுக்கு தெரிஞ்சா, இந்த கம்பெனி பேரே கெட்டு போய்டும்டா வெளிநாட்டு கம்பெனி எல்லாம் ஆடர்ஸ திரும்ப கேக்க ஆரம்பிசுடுவாங்க“. எதற்கும் அவ்வளவு சீக்கிரம் கலங்காத சுஷின் கலங்குவதை பார்த்த பிரகாஷ் வேகமாக சொன்னான்.

நானே இது வெளியே வராத மாதிரி செஞ்சுட்டேண்டா. ஆனாலும் உனக்கு சொல்லணுமேன்னுதான்…………….”

தனது சேரில்  இருந்து எழுந்து ஓடி வந்து நண்பனை தழுவிக் கொண்டான். இருவரது கண்களும் கலங்கின. “பிரகாஷ் நீ எனக்கு செஞ்சது சின்ன உதவி இல்லடா என் குடும்ப மானம் சம்பந்தப் பட்டது. உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலடா“.

நீ எனக்கு வாழ்க்கையவே தந்து இருக்கும் போது இது சாதாரணம்டா. ஆனாலும் இத பண்ணினவங்க யாருன்னு உனக்கு தெரியும் னு சொன்னியே அது …………………..”

சுஷின் தலையை மெதுவாக ஆம் என்பதற்கு அடையாளமாக அசைத்தான். “என் பெரியப்பா குடும்பம்தான் இதை பண்ணி இருப்பாங்க. குடும்பப் பகையை தீர்த்துக்க சமையம் பார்த்துட்டு இருக்காங்க. இதுக்கு உடனேயே ஒரு முடிவு கட்டணும். நீ அப்பா கிட்ட இதைப்பற்றி எதுவும் சொல்லாதே சரியா“.

 

சுஷின் தனது கோபத்தை அடக்க முயற்சி செய்தான். “சே என்ன மனுஷங்கடா குடும்பத்துல பகைன்னா அத பெரியவங்களே முடிச்சுக்கணும் அதைவிட்டு தொழில்ல காட்டுறது என்னால மன்னிக்கவே முடியலடா. இது அப்பாவுக்கோ இல்ல அம்மாவுக்கோ தெரிஞ்சா மனசு ரொம்ப கஷ்டப்படுவாங்க. அதுசரி நீ எப்படிடா…………. அதைவிட உனக்கு எப்படித் தெரியும்“.

லாரி ஆக்சிடென்ட் ஆனதும் டிரைவர் வண்டியை விட்டுட்டு ஓடிட்டான். அதைவிட நம்ம லோட் எல்லாம் யாரோ வேணும்னு ஒடச்ச மாதிரி இருந்து இருக்கு. ஆனா கஞ்சா மட்டும் நல்ல வெளியே தெரியிற மாதிரி இருந்து இருக்கு. இதைப் பார்த்துட்டு அந்த இன்ஸ்பெக்டருக்கே கொஞ்சம் டவுட் வந்து இருக்கு. எல்லா பேப்பர்ஸ்சும் கரெக்டா இருந்து இருக்கு. அவர் வேற நேர்மையான ஆளு போல நேர ஆபீஸ்க்கு கால் பண்ணி இருக்காரு நம்ம செக்யூரிட்டி எனக்கு போன் பண்ணி விஷயத்த சொன்னார். நான் உடனே வினோத்தை போய் பார்க்க சொல்லி கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணி வெளியே வராம பார்த்துட்டோம்“.

………… எப்படியோ அவர்க்கு மனசாட்சி இருக்கப் போய் இதோட போச்சு இல்லன்னா…………… நினைக்கவே…………..”

அதுதான் எதுவும் ஆகலையே அப்புறம் நீ ஏன் டென்ஷன் ஆகற. வந்து ரொம்ப நேரம் ஆச்சு நான் போய் என் வேலையைப் பார்க்குறேன். உன்னை மாதிரியா உட்க்கார்ந்த இடத்துல இருந்தா எனக்கு வேலை முடியுமா. நான் என் சீட்டுக்குப் போறேன்“. சூழ் நிலையின் இறுக்கத்தை தளர்த்த சகஜமாக பேசினான் . அதற்குப் பலன் இருந்தது.

உன்னை யாருடா அலையச் சொன்னது இந்த கம்பெனியோட GM நீ உன் வேலைய மட்டும் பாக்காம மார்க்கெட்டிங் வேலைய யாரு பார்க்க சொன்னது. கேட்டா நாமளும் ஒரு கண் வைக்கணும்னு கதை விடுவ. ஆனாலும் நீ இருக்குற தைரியத்தில் தாண்டா நான் இந்த சீட்ல MD-யா உட்க்கார்ந்து இருக்கேன்“, நண்பனை நெகிழ்ச்சியுடன் கட்டிக் கொண்டான்.

சரி சரி ரொம்ப ஐஸ் வைக்காத பிறகு ஜலதோஷம், காய்ச்சல்  எல்லாம் வந்தா என்னால சம்மாளிக்க முடியாதுடா“.

அதுக்குதான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கெஞ்சிகிட்டு இருக்கேன். நீதான் கேக்கவே மாடிக்க. எனக்காவது என் தங்கச்சிக்கு முடிச்சதுக்கு அப்புறம்தான்……………”.

இந்த கதைய என்கிட்டே விடாதேடா. உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சு இரண்டு வருஷம் ஆகுது. நீதான் எந்த பொண்ணோட போட்டோ காமிச்சாலும் இந்த பொண்ண பார்த்தா கட்டிக்கணும்னு தோணலைன்னு ஒரே டயலாக்க திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்க. ஒரு பொண்ண பார்த்தா அழகா இல்ல, கண்ணு பெருசா இருக்கு, காது நீளமா இருக்கு, மூக்கு சப்பையா இருக்கு இப்படி ஏதாவது குறை சொல்லி ஒதுக்குனாலும் பரவாயில்லை. எனக்கு என்னமோ நீ ஒரு பொண்ண மனசுல வச்சுகிட்டு அந்த மாதிரிப் பொண்ண தேடுற மாதிரி இருக்கு. ஆனா எந்தப் பொண்ணுன்னுதான் தெரியல. நீயே சொல்லிடுடா“.

அப்படி எந்தப் பொண்ணாவது என் மனசுல இருந்தா உனக்குத் தெரியாம இருக்குமாடா. அம்மா காட்டுற பொண்ணுங்க எல்லாமே அழகாதான் இருக்குறாங்க ஆனா அந்தப் பொண்ணுங்களைப் பார்த்தா என் தங்கச்சிங்க மாதிரி, ப்ரெண்ட் மாதிரிதான் இருக்கே தவிர, அதுக்கும் மேல அவ கூடவே இருக்கணும், அவள வச்சக் கண்ணு வாங்காம பார்க்கணும் பாத்தா உடனேயே கட்டிக்கணும், இப்படி தோணவே மாட்டிக்கிடா. எந்தப் பொண்ணப் பார்த்து எனக்கு இந்த பீல் எல்லாம் வருதோ அவளை உடனே கட்டிப் பேன்டா.

நீ அப்படி ஒருத்திய சீக்கிரம் கண்டு பிடிக்க என் வாழ்த்துக்கள்டா“.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே டெலிபோன் அதன் வேலையை சரியாய் செய்தது. அது சுஷினின் பர்சனல் லைன் ஆதலால் சுஷின் போனை எடுத்தான். மறுபுறம் பேசியவளின் குரலைக் கேட்டதும் ஒருநொடி அவனது முகம் யோசனையில் சுருங்கியது. ஆனால் பேசிய விஷயத்தை கேட்டதும் பதட்டமாக ஆனால் உறுதியான குரலில் நீ அங்கேயே இரும்மா நான் உடனே ஹோச்பிடல்க்கு வாறேன். அதுவரை நீ எதுவும் யார்கிட்டயும் சொல்லாதே. டாக்டர்கிட்ட போனை குடு நான் பேசுறேன்“.

போன் கை மாறியதும். டாக்டர் நான் சுந்தரத்தோட பையன் சுஷின் அவ என் தங்கச்சி உடனே அவளுக்கு வேண்டிய ட்ரீட்மென்ட் செய்ங்க நான் இப்பவே அங்கே கிளம்பி வாறேன்“.

சுஷின் தங்கை என்று சொன்னதும் அவனை விட பிரகாஷ் அதிகப் பதட்டம் அடைந்தான். ஆனால் அது சுஷினுக்கு தெரியாமல் மறைத்தான். “சுஷின் உன் தங்கைக்கு என்னடா ஆச்சு. ஏதாவது ப்ரோப்ளமா நானும் கூட வரவா“. சாதாரணமான குரலில் வினவியதால் அவனது உள்ளத்தின் தவிப்பு சுஷினுக்கு தெரியவில்லை.

ஷிஜிக்கு ஒண்ணும் இல்லடா, சுமாவுக்குத் தான் பிரச்சனை. நான் உடனே போகணும் வந்து விஷயத்தை சொல்லுறேன் ஓகே“.

பிரகாஷின் முகம் மட்டுமல்ல மனமும் அமைதி அடைந்தது. சுஷின் கவனித்து இருந்தால் தெரிந்து இருக்கும் பிரகாஷின் முக மாறுதல்கள். அவன்தான் சுமாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தானே.

ஹோச்பிடல் நோக்கி அவனது i 10 பறந்தது………………..அங்கே தனது கனவு தேவதையை சந்திக்கப் போவது தெரியாமலேயே………………….

About lavender

Check Also

Ithu Kaathalendraal -48

PART  –  48.   வீட்டிற்கு வந்த பின்பு சுஷினிர்க்கு இருப்பே கொள்ளவில்லை. மினி தன்னை விரும்புகிறாள் என்பது மீனாட்சியின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *