Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -59

Sponsored

Shenba Ninnai Saranadainthen -59

அத்தியாயம் ­–59

 

இருவருமே அந்த நேரத்தை அந்த நிமிடத்தை, அந்த நொடியை ரசித்தபடி தங்களை மறந்து அமர்ந்திருந்தனர். கண்ணை திறந்த சித்தார்த்,வெளிச்சம் குறைய ஆரம்பித்து இருள் சூழ்ந்துக்கொண்டு வருவதைப் பார்த்ததும், “ஹே… மது கிளம்பலாமா?” இருட்ட ஆரம்பிக்குதுடா அப்புறம் சிறுத்தை வந்துவிட போகுது” என்றதும், “அச்சச்சோ…..!!! சொல்லாதீங்க சித்து எனக்குப் பயமாயிருக்கு” என அவனை இன்னும் நெருங்கி கையை இறுக பற்றிக்கொண்டாள்.

 

“அப்போ அப்படியே பயந்தபடியே என்னைக் கட்டிபிடிச்சிகிட்டே வா” எனச் சொல்ல. “ம்ம்ம்…. ரொம்ப தான் ஆசை” எனச் சொல்லிகொண்டே எழுந்தவள் தான் மேல் ஒட்டி இருந்த மண்ணை தட்டிவிட அமர்ந்திருந்த சித்தார்த், “ஆஹ்…”என கண்ணை கசக்க “என்ன சித்து கண்ணுல தூசி விழுந்துவிட்டதா? சாரி சாரி. இருங்க நான் ஊதிவிடுகிறேன்” என அவன் கண்ணை திறந்து ஊத அருகில் வந்ததும் சித்தார்த் அவள் கழுத்தில் சட்டென முத்தமிட்டதும், மதுவிற்கு அந்த முத்தம், ஏற்படுத்திய பரவசமும், கிளர்ச்சியும், சேர்ந்து எழ வெட்கத்துடன் அவனிடம் இருந்து விலகியவளை கையை பற்றி நிறுத்தியவன் தானும் எழுந்து அவள் தோள் மீது தன் கையைப் போட்டுச் சேர்த்து அணைத்தபடி நடக்க, “சித்து ப்ளீஸ் யாராவது பார்க்க போறாங்க சித்து, ப்ளீஸ் சித்து…..” என கெஞ்ச அவனோ அவள் சொல்வதை கேளாமல் அவளை சேர்த்து அணைத்தபடியே நடந்தான்.

 

“எல்லோரும் அவங்க வேலைல தான் கவனமா இருப்பாங்க. யாரு நம்மை பார்ப்பாங்கன்னு நினைக்கிற?” எனச் சொல்ல மது, “ஆஹா.. இந்த குளிருக்கு டீ சாப்பிட்டா நல்லாயிருக்கும்” எனச் சொன்னதும். அவ்வளவு தானே வா போய் ஒரு டீ சாப்பிடுவோம் என சற்று தூரத்தில் இருந்த ஒரு கடையை நோக்கி நடந்தான். சற்று வெளிச்சமான இடத்திற்கு வந்ததும், மதுவின் தோளில் இருந்து கையை எடுத்துவிட்டு, அவள் கையை பற்றியபடி அழைத்துசென்று, அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமரசொல்லிவிட்டுக் கடைக்காரரிடம் சென்று பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் மதுவின் அருகில் சிரிப்பொலி கேட்க மது திரும்பிப் பார்த்தாள்.

 

அங்கே மாலையில் தான் கண்ட அந்த ஐந்து பெண்களும் சிரித்தபடி இவளை தாண்டி கடையை நோக்கி சென்றனர். அவர்களைப் பார்த்ததும் மது அச்சச்சோ…. இந்த புன்னகை அரசிங்களா? இந்த நேரத்துக்கு இங்கே எதுக்கு வந்தாங்களோ. என் சித்துவை ஈவ்னிங்கே அந்த பார்வைப் பார்த்துக்கொண்டிருந்தாங்களே என எண்ணிக்கொண்டே சித்தார்த்தைப் பார்க்க சித்தார்த் அந்த பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

 

மது காதில் புகை வராதது தான் மிச்சம். இவருக்கு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு. வரட்டும் இன்னைக்கு ரூமுக்கு. இருக்கு இவருக்கு. இன்னைக்கு விடுற டோஸ்ல இனி, எந்த பெண்ணிடமும் நின்று பேசக்கூடாது. என மனதுக்குள் கருவிக்கொண்டே அமர்ந்திருக்க சித்தார்த் டீயுடன் வந்தான்.”இந்தாங்க மேடம் டீ” என கொடுத்தும் ஏதும் சொல்லாமல் வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.

 

“டீ இன்னும் கொஞ்சம் சூடாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என சித்தார்த் சொல்ல. “கடைக்காரன் டீ போட்டுகொடுத்ததும் எடுத்துக்கொண்டு வந்திருந்தால் சூடா இருந்திருக்கும். அரைமணி நேரம் ஈன்னு சிரித்து சிரித்து பேசிட்டு வந்தால் இப்படி ஆறி தான் போயிருக்கும்” என எரிச்சலுடன் சொன்னாள்.

 

விஷயம் புரிந்த சித்தார்த் சிரித்துக்கொண்டே, “என்ன மேடம் பொறாமையா?” என மெதுவாக அவள் நெற்றியில் ஒரு முட்டு முட்டி கேட்டதும். “எனக்கென்ன பொறாமை” என்று சொல்லிவிட்டு டம்ளரை அவனிடம் கொடுத்துவிட்டு நிற்க. “டீ தான் சூடாக இல்லை. ஆனால், மேடம் ரொம்பவே சூடாக இருக்காங்க போல. அதுவும் நல்லதுக்குத்தான் குளிருக்கு சும்மா கும்முன்னு இருக்கும்” என தோளை குலுக்க.

 

“இருக்கும் இருக்கும் ரொம்ப நினைப்புதான்” எனச் சொல்லிவிட்டு வேகமாக முன்னால் நடந்தாள். சித்தார்த் “ஹே மது நில்லு நானும் வரேன்” எனச் சொல்ல சொல்ல மது வேகமாக முன்னே சென்றவள் நின்றாள். சித்தார்த் மதுவின் அருகில் வரும் நேரம் அந்த ஐந்து பெண்களில் ஒருத்தி, “சார் மார்னிங் சன்ரைஸ் பார்க்க வருவீங்க இல்ல அப்போ பேசுவோம் சார். பாய் சார்” கொஞ்சி கொஞ்சி சொல்ல சித்தார்த் சிரித்தபடி கையசைத்துவிட்டு வந்தவன் மதுவின் கையை பிடித்தான்.

 

கடுகடுவென்ற முகத்துடன் நின்றிருந்தவளைப் பார்த்ததும் சிரித்தவனைப் பார்த்து, “என் நிலைமையை பார்த்தால் உங்களுக்கு சிரிப்பா இருக்க. விடுங்க என் கையை” என உதறிக்கொண்டு சென்றவளை.”ஹே சும்மா வாடி ரொம்ப தான் பிகுப் பண்ற” என கையை இறுக பற்றிக்கொண்டு  தாங்கள் தங்கி இருந்த ரிசாட்டிற்கு வந்தான்.

 

உள்ளே சென்று கதவை மூடியதும், “என்ன கோபம் உனக்கு மது டார்லிங்”  என பின்னாலிருந்து அணைத்தவனைத் தள்ளிவிட்டுவிட்டு அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டாள். சித்தார்த்தும் ஏதும் சொல்லாமல் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான். ஏற்ற இறக்கத்தில் நடந்து சென்றதால் இரண்டு கால்களும் கடுக்க ஆரம்பித்தன.

 

குளிரில் பசி வேறு வயிற்றை கிள்ள ஆரம்பித்தது. மெல்ல கதவைத் திறந்து பார்த்தவள் சித்தார்த் டிவி பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், “இங்கே நான் கால் வலியில் அவஸ்தைபட்டுக்கொண்டிருக்கேன். இவருக்கு இந்த நேரத்திற்கு டிவி ரொம்ப முக்கியம்” என முனகிக்கொண்டே கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

 

சற்றுநேரத்தில் ஹரியின் நண்பர் வீட்டிலிருந்து இரவு உணவு வந்து விட, சித்தார்த் வந்து மதுவை சாப்பிட அழைத்தான். இருந்த பசியில் ஏதும் சொல்லாமல் எழுந்து சென்று சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடிக்கும் வரை சித்தார்த்திடம் ஒரு வார்த்தை பேசவில்லை. சித்தார்த்தும் மௌனமாகவே சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

 

மது பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு, காலை பிடித்தபடி வந்து அமர்ந்தாள். மதுவின் முக வாட்டத்தை வைத்தே சாப்பிட்டு எழுந்தவுடனே சித்தார்த் கீசரை ஆன் செய்தான்.

 

பாதங்களை அழுத்தி விட்டுக்கொண்டு படுத்தவள் கண்களை மூட, அவளருகில் அமர்ந்த சித்தார்த் இதமாக அவள் பாதங்களை பிடித்துவிட ஆரம்பித்தான்.

 

கண்களைத் திறந்த மது, “சித்து என்ன செய்றீங்க நீங்க? விடுங்க” என எழுந்து அமர. “நீ ரொம்ப டயர்டா இருக்க பேசாமல்படும்மா நான் அழுத்திவிடுகிறேன்” என்றான். “இல்ல வேண்டாம் இப்போ பரவாயில்லை. ஏங்க விடுங்க, ஏங்க ஏங்க…”எனச் சொல்லச் சொல்லக் கேட்காமல் சித்தார்த் “நான் ஏற்கெனவே ஏங்கிட்டுத் தான் இருக்கேன். நீதான் என்னை இன்னும் ஏங்க வைத்துக்கொண்டு இன்னும் ஏங்க சொல்ற” என்று சொல்லிக்கொண்டே அவளுக்குப் பாதத்தை அழுத்திவிடுவதைப் பார்த்ததும் கண்களைக் கரித்துக்கொண்டு வர உதட்டைக் கடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

 

அவள் முகத்தைப் பார்க்காமலேயே, “போதும் பீலிங்க்ஸ் எல்லாம்.  கொஞ்சம் இரு வருகிறேன்” என்றவன் குளியலறைக்குச் சென்றவன்,இதமான கால் பொறுக்கும் சூட்டில் வெந்நீரை பாக்கெட்டில் கொண்டுவந்து சிறிது நீலகிரி தைலத்தை அதில் ஊற்றி “பாதத்தை கொஞ்சநேரம் வெந்நீரில் வைத்துக்கொள் மது வலிக்கு இதமாக இருக்கும்” எனச் சொன்னான்.

 

சிறிதுநேரம் மதுவும் காலை வெந்நீரில் வைத்திருந்தாள். அந்த நேரத்தில் சித்தார்த் குளித்துவிட்டு வந்தவன், “மது நான் ஹாலில் இருக்கிறேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் என்னை கூப்பிடு” எனச் சொல்லிவிட்டு ஹாலிற்குச் சென்றுவிட்டான். வெந்நீர் சூடு ஆறியதும் மது அந்த தண்ணீரை குளியலறையில் கொட்டிவிட்டு வரும் போது ஹாலை எட்டி பார்த்தாள்.

 

அங்கிருந்த திவானில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள். உங்களுக்கும் தானே கால் வலி இருந்திருக்கும். ஆனால், எனக்காக செய்த உங்களுக்கு நான் ஒன்றுமே செய்யவில்லையே. எதுக்கு எனக்கு இவ்வளவு கோபம் வருது. ச்ச என எண்ணிக்கொண்டு  கட்டிலின் மீது இருந்த தலையணையில் ஒன்றை கொண்டுவந்து அவன் தலைக்கு வைத்துவிட்டு ரஜாயை அவனுக்குப் போர்த்திவிட்டு அவன் தலையை கோதியவள் மெல்ல குனிந்து முதல் முறையாக அவன் நெற்றியில் தன் இதழ் பதித்துவிட்டு அவன் காதருகில் “ஐ லவ் யூ சித்து” எனச் சொல்லிவிட்டு வெட்கத்துடன் ஓடி சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள். மனம் நிறைய மகிழ்ச்சியுடன் இருந்ததாலும், உடல் சோர்வும் சேர்ந்து அன்று இரவு அவளை நிம்மதியான உறக்கம் தழுவியது.

 

காலையில் சித்தார்த் தான் முதலில் எழுந்தான். தன் மீது போர்த்தி இருந்த ரஜாயை பார்த்தவன், அப்போ நைட் மது நெற்றியில் முத்தம் கொடுத்து, காதில் ஐ லவ் யூ சொன்னதெல்லாம் நிஜமா, என சந்தோஷத்துடன் எழுந்தவன், நேராக சென்று மதுவின் பக்கத்தில் அமர்ந்தவன்,மதுவின் தலையை வருட, மது ஏதோ கனவில் இருந்திருப்பாள் போல புன்னகையுடன் “சும்மா இருங்க சித்து” எனச் சொல்லிக்கொண்டே அவனை நெருங்கி படுத்துக்கொள்ள, சித்தார்த் புன்னகையுடன், “ஹே மது” எனச் சொல்லியபடி அவளை அணைத்துக் கொண்டான். மதுவும் அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

 

சிறிதுநேரம் அந்த பரவசத்தை அனுபவித்தவன், நேரம் ஆவதை உணர்ந்து, “அவள் காதில் முத்தமிட்டுவிட்டு, “ஹே மை ஏஞ்சல் எழுந்துக்கோடா, சன் ரைஸ் போய் பார்த்துவிட்டு வருவோம்” எனச் சொன்னதும் கண்ணை திறந்த மது தான் இருந்த நிலையைக் கண்டவள் வெட்கத்துடன் அவனிடமிருந்து விலகினாள். நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முடியாமல் தவித்தாள்.

 

அவள் தவிப்பை உணர்ந்தவன், “கிளம்புடா” என்றதும், “ம்ம்…” என்றவள் முகத்தைக் கழுவிக்கொண்டிருவரும் கிளம்பி சென்றனர். இருவரின் மனமும் ஒன்றாக சங்கமித்திருந்த அந்த நேரம் அந்த நிலை இருவரையும் மௌனத்தில் ஆழ்த்தி இருந்தது. சுற்றிலும் இருந்த இடம் காலை நேர புத்துணர்ச்சியை அதிகமாக்கியது. சூரியன் மெல்ல மெல்ல தன் முகத்தை உலகிற்குக் காட்ட எழுந்துவர வர அவ்வளவு நேரமும் வெள்ளி கிரீடத்தை சூடி இருந்த மலைச்சிகரம் சிறிது சிறிதாக மஞ்சள் பூசிய புதுமணப்பெண்ணை போல அழகு மிளிர பரவசத்துடன் உயர்ந்து நின்றது. அந்த அழகை அங்கிருந்த அனைவரும் தங்கள் மனதில் சுமந்தபடி அங்கிருந்து கிளம்பினர்.

 

மதுவின் காதில், “இன்னைக்கு இந்த விடியல் நம் வாழ்விலும் மறக்க முடியாத விடியலாக இருக்க போகுது” எனச் சொன்னதும் மது புன்னகையுடன் அவன் தோளில் உரிமையுடன் சாய்ந்துக்கொண்டாள். தோளில் சாய்ந்தவளை தன் கையணைப்பில் கொண்டு வந்தவன், ” மது மை லவ்!” என மென்மையாக முணுமுணுத்தபடி அவன் அணைப்பை இறுக்கினான். மது நாணத்துடன் அவன் மார்பில் தஞ்சம் புக சித்தார்த்திற்குப் பெரும் சிலிர்ப்பை தந்தது. மதுவின் மனதிற்குள்ளோ சந்தோஷ சிதறல்களும், நாணப்பூக்களும் ஒருசேர மலர்ந்தது

 

தான் நடக்குமா என்று எண்ணி இருந்தது இன்று தன் கண்முன்னே நிஜமாகிக்கொண்டிருப்பதை நினைத்தபடியே, “மது உனக்குச் சம்மதமாடா” என கேட்டதும் அவன் நெஞ்சில் மேலும் தன்னை புதைத்துக்கொண்டவளை அணைத்தபடி நீ எனக்கு அந்தக் கடவுள் கொடுத்த பொக்கிஷம். உன்னை நான் என் கண்ணாக காப்பாற்றுவேன் என எண்ணிக்கொண்டான்.

 

அந்த நேரத்தில் இருவருக்குள்ளும் தங்களை பற்றி மட்டுமே எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த இனி,ய ஸ்பரிசத்தை அனுபவித்தவன் சற்று தன்னை மீட்டுக்கொள்ள சுற்றி பார்த்தான். அந்த இடத்தில் யாரும் இல்லாத போதும் யாராவது பார்த்திருந்தால்? என நினைத்தவன் புன்னகையுடன் மதுவுடன் இணைந்து ரிசார்ட்டை நோக்கி நடந்தான்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் கிளம்பி அங்கிருந்த மகாத்மா காந்தி நினைவிடத்தை சென்று பார்த்தனர். “மது கௌசாணியை இந்தியாவோட சுவிட்சர்லாண்ட்ன்னு சொல்வாங்க. இந்த நினைவிடம் முன்பு மகாத்மா காந்தி தன்னோட விடுமுறை நாளை இங்கே தான் கழிப்பாராம்.” என அவளுக்கு அனைத்தையும் சொல்லிக்கொண்டே வந்தான்.

 

அதன் பிறகு வழியில் சில கோவில்களையும், பாத் வே என்ற மிக நீளமான நடைபாதையில் இயற்கை அழகை கண்டுகளித்துக்கொண்டே சென்றனர். மாலை அங்கிருந்த பீம் தாலில் போட்டிங், சன்செட்டையும் பார்த்துவிட்டு  இரவு உணவை முடித்துக்கொண்டு ரிசாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

“மது நான் போய் போன் செய்துவிட்டு வந்து விடுகிறேன்” எனச் சொல்லிவிட்டு பால்கனியில் போய் நின்று கொண்டுப் போன் பேசிக்கொண்டிருந்தான். மது குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வரும் நேரம், காலையில் அவசரமாக கிளம்பும் போது கீழே ஊற்றிக்கொண்ட எண்ணையில் காலை வைத்ததும், அந்த புத்தம் புது டைல்ஸ் தரையில் ஊற்றி இருந்த எண்ணையின் மீது காலை வைத்ததும் “ஆ..ஆ ….. அம்மா….” என கத்திக்கொண்டே கீழே விழுந்துவிட சத்த்தம் கேட்டுச் சித்தார்த் , “மது என்னம்மா ஆச்சு” என கேட்டுக்கொண்டே உள்ளே ஓடிவந்தான்.

 

“ஆஹ்…. காலைல கிளம்பும் போது கை காலுக்கு எண்ணை தேய்த்தேன். அது கீழே கொஞ்சம் சிந்தி இருந்தது போல. நான் கவனிக்காமல் ஈர காலுடன் என்னை மீது காலை வைத்ததும் வழுக்கிவிட்டுடுச்சி” என வலி தாங்காமல் கண்களில் நீர் தேங்க, சொன்னதும் மதுவை மெல்ல தூக்கி நிறுத்தினான்.

 

“அய்யோ….. சித்து காலை ஊன்றவே முடியவில்லை” என கண்ணீருடன் அவன் மார்பில் முகம் புதைக்க. அவளை அப்படியே தூக்கி சென்று கட்டிலில் படுக்கவைத்தான்.”கொஞ்சம் பொறுத்துக்கோடா…. நான் போய் ரிசாட் மேனேஜரிடம்  ஹாஸ்பிட்டல் எங்கே இருக்கு? என கேட்டுக்கொண்டு வருகிறேன்” எனச் சொல்லிவிட்டுச் செல்ல. மது முழங்காலுக்கு கீழே இருந்த வலியில் துடித்தாள். வலது கையும் தோள்பட்டை விழுந்த வேகத்தில் தரையில் மோதியதால் வலது  தோள்பட்டையும் வலி தாங்க முடியவில்லை அவளால்.

 

ஐந்து நிமிடத்தில் சித்தார்த் வேகமாக வந்தான்.”மது இங்கே பெரிய ஹாஸ்பிட்டல் ஏதும் இல்லை. லோக்கலில் ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் வந்து பார்த்ததும், பிறகு நாம் முடிந்தால் நைனிட்டால் போய்டுவோம்.சரியா” என அவளை தான் மீது சாய்த்துக்கொண்டு அவள் கண்ணை துடைத்துவிட்டான். இப்போது அவளுக்கு அவள் வலியை விட சித்தார்த்தின் பாசம் தான் கண்ணீரை வரவழைத்தது.

 

சற்றுநேரத்தில் டாக்டர் வந்து பார்த்துவிட்டு, பெயின் கில்லர் கொடுத்துவிட்டு, “கால் தசை பிடிச்சிட்டு இருக்கு. பாதம் மூட்டுச் சுளுக்கி இருக்கு மூணு நாலு நாளைக்குக் காலை ஊன்றி நடக்காதீங்க. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்க. கை தோள்பட்டையில் லேசா ப்ளட்க்ளாட் ஆகி இருக்கு. அதன் வலி. பெயின் கில்லர் போட்டுத் தூங்கட்டும்” எனச் சொல்லிவிட்டுச் செல்ல சித்தார்த் மதுவிற்கு மாத்திரையை கொடுத்துவிட்டு,அவள் தூங்கும் வரை அவளை தன் மீதே சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

 

மறுநாள், காலையில் எழுந்தது முதல் சித்தார்த் மதுவிற்குத் தேவையான எல்லாவற்றையும் அவனே செய்தான். வலது கையில் வலி இருந்ததால், பல் தேய்த்து முகம் கழுவிவிட்டது முதல், உணவை ஊட்டிவிட்டது வரை அனைத்தையும் செய்தான். இரவில் அவள் கையை அசைத்துவிடாமல் இருக்க அவள் கையை தான் கையால் பிடித்துக்கொண்டு, படுத்திருந்தான்.

 

முழுதாக நான்கு நாள்களுக்குப் பிறகு, மது ஓரளவுக்குப் பிடித்துக்கொண்டு நடக்கத்தொடங்கினாள். அதன் பிறகே நைனிட்டால் சென்றனர். அதுவரை ஹரியின் நண்பர் தங்களது காரை சித்தார்த்திடமே அவசரத்திற்கு உதவும் நீங்கள் இங்கே இருக்கும் வரை நீங்கள் உபயோகபடுத்திக்கொள்ளுங்கள்  எனச் சொல்லி கொடுத்திருந்தார்.

 

அன்றுதான் அவர்கள் நைனிட்டாலில் தங்கப்போகும் கடைசி நாள். மது கொஞ்சம் காலை தாங்கியது போல நடக்க தொடங்கினாள். முதல் நாள் கூட மது அவனை மட்டுமாவது சென்று சுற்றி பார்த்துவிட்டு வரும்படி சொல்ல சித்தார்த் மறுத்துவிட்டான். இன்னொரு முறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனச் சொல்லிவிட மதுவிற்கு மனம் சற்று வாடியது. எல்லாம் என்னால் தான். இன்னைக்குக் காலும் பரவாயில்லை. நடக்க முடிகிறது. கையும் ஒன்றும் பிரச்சனை இல்லை என எண்ணியவள் சித்தார்த்தின் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

“என்ன மது இப்போ கால் எப்படியிருக்கு? வலி ஏதும் இல்லையே? இருந்தால் சொல்லும்மா” என ஆதரவுடன் கேட்டதும், புன்னகையுடன் “அதெல்லாம் ஒன்றும் இல்லை. வலியெல்லாம் இல்லை. எனக்கு உள்ளேயே அடைந்துகிடக்க கஷ்டமாக இருக்கிறது. இன்னைக்கு வெளியே போய் வரலாமா?” என கேட்டாள்.

 

“இல்லடா, இன்னைக்கு ஒரு நாளைக்கு ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே. நாளைக்கு ஊருக்குப் போனதும் எங்கேயாவது வெளியே போய் வரலாம்” என்றான். “ஹும்…எனக்கு ஒரே போர் அடிக்குது சித்து, எங்கயாவது போய் வரலாம். ப்ளீஸ்…” என அவன் தாடையை பிடித்து கொஞ்சுவது போல செய்ய சித்தார்த் சிரித்துக்கொண்டே, “சரி போகலாம் ஆனால், ஒன்று. உனக்கு கொஞ்சம் வலி தெரிந்தாலும் சொல்லிடனும். புரிந்ததா?”என்றதும். சரி என்றவள் மகிழ்ச்சியுடன் தயாரானாள்.

 

நாள் முழுதும் மகிழ்ச்சியுடன் சுற்றி திரிந்தனர். ஆனாலும் சித்தார்த் அவ்வப்போது கால் வலிக்கிறதா? என கேட்டுக்கொள்ள தவறவில்லை. இரவு கடை வீதியில் சுற்றி திரிந்தனர். இரவு உணவை முடித்துக்கொண்டிருவரும் தாங்கள் தங்கி இருந்த இடத்தின் அருகில் வரும்போது,அவர்கள் தங்கி இருந்த ரிசாட்டின் முன்னால் இருந்த மற்றொரு ரிசாட்டில் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருந்தனர்.

 

இவர்கள் இருவரும் தமிழில் பேசிக்கொண்டு வருவதைப் பார்த்ததும், “சார் நீங்க தமிழா?” என வந்து கேட்டனர். சித்தார்த்தும் ஆமாம் எனச் சொல்ல. பேச்சு இப்படியே தொடர்ந்தது. “சார் நைட் கேம்ப் பையர் இருக்கு வாங்க சார். மேடம் நீங்களும் வாங்க” எனச் சொல்ல மது “இல்ல நீங்க என்ஜாய் பண்ணுங்க” எனச் சொல்லிவிட்டு நடக்க தொடங்கினாள்.

 

“என்ன சார் எல்லோரும் ஒரே ஊர். வந்து கலந்துக்கொண்டால் எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்” எனச் சொல்ல சித்தார்த் மதுவைப் பார்க்க மது சரி என தலையாட்டவும்.  இருவரும் கேம்ப் பையரில் கலந்துக்கொண்டனர். கல்லூரி மாணவ மாணவிகளின் கொண்டாட்டத்தை கேட்க வேண்டுமா? அந்த இடமே களைகட்டியது. பாட்டும் டான்ஸுமாக நேரம் சென்றது.

 

 

ஒவ்வொருவரும் ஒவ்வொன்று செய்ய சித்தார்த்தின் முறை வந்ததும் அவனைப் பாட சொல்ல சித்தார்த் மதுவைப் பார்த்து சிரித்தான்.”சாரி நான் பாடல” என்றதும் மாணவர்கள் பாட சொல்லி கத்த, “என்னை விட என் ஒய்ப் நல்லா பாடுவாங்க” எனச் சொன்னதும்  “சார், ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு டூயட் பாடுங்க சார், பாடுங்க மேடம்” எனச் சொல்ல மது வெட்கத்த்துடன் மறுக்க சித்தார்த் சிரிப்புடன் வானத்தைப் பார்க்க பௌர்ணமி நிலா வானில் ஜொலித்துக்கொண்டிருந்தது.

 

“வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை…..”

என மதுவைப் பார்த்துக்கொண்டே பாட மது வெட்கத்துடன் சிரித்தபடி சித்தார்த்துடன் சேர்ந்து பாட

 

“பூங்காற்று அறியாமல் பூவைத்திறக்க வேண்டும்

பூக்கூட அறியாமல் தேனை ருசிக்கவேண்டும்”

என பாடிக்கொண்டே ஏற்கெனவே இளகி இருந்த சித்தார்த்தை காதலுடன் பார்க்க, அவளது காதல் பார்வையைத் தன் உள்ளத்தில் தாங்கியபடி

 

“அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு”

என்று மதுவின் கையை எடுத்து தான் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு  கண்ணை மூடி தன்னை மறந்த நிலையிலிருந்தான். மதுவும் சித்தார்த்தின் காதலை அவன் உருகி பாடிய விதத்தையும் எண்ணி மெய்மறந்து அமர்ந்திருக்க, சுற்றி அமர்ந்திருந்தவர்களின் கைதட்டல் இருவரையும் சுய உணர்வி்ற்கு கொண்டுவர இருவருமே தங்கள் இருந்த நிலையைக் கண்டதும் தங்களை மீட்டுக்கொண்டனர்.

 

சித்தார்த் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு மதுவை அழைத்துக்கொண்டு  தங்கள் இடத்திற்குச் சென்றான். அறைக்கு வந்ததும், மது சித்தார்த்தின் முகத்தைப் பார்க்காமல் வெட்கத்துடன் உள்ளறைக்குச் சென்றுவிட, பின்னாலேயே சென்ற சித்தார்த் மதுவின் முகத்தைத் தன் ஒற்றை விரலால் பற்றி நிமிர்த்தினான். பயத்துடன் படபடத்த விழிகளை தன் முத்தத்தால் ஈரமாக்கினான். மெல்ல அவன் இதழ் அவள் முகமெங்கும் விளையாட இறுதியில் தன் இணையைக் கண்ட சந்தோஷத்தில் இருவரின் இதழ்களும் முதல் முறையாக ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து சந்தோஷித்துக்கொண்டது. விலக நினைத்த போதும் கூட்டணியை முறித்துக்கொள்ள விருப்பம் இல்லாமல் இந்த நிலை தொடராதா? என்ற ஏக்கம் நிலவ மனமே இல்லாமல் தங்களை பிரித்துக்கொண்டன.

 

கண்களை மூடி நின்றிருந்தவளின் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன் அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை கண்டதும், “மது என்னடா உனக்குப் பிடிக்கவில்லையா?” என பதறினான். அவன் பதறிய குரலைக் கேட்டதும்,  அவன் மார்பில் முகம்புதைத்து குலுங்கி குலுங்கி அழுதாள். “மது உனக்குப் பிடிக்கவில்லை என்றால் எதுவும் வேண்டாம்” எனச் சொன்னவனின் வாயைத் தன் கரத்தால் அவசரமாக மூடினாள்.

 

“ஐயம் சாரி சித்து. ஐயம் சோ சாரி. நான் உங்களை ரொம்பவே சோதித்து விட்டேன். உங்களை ரொம்பவே தவிக்க வைத்துவிட்டேன். உங்களுடைய உணர்ச்சிகளோடு ரொம்பவே விளையாடிட்டேன். உங்களுடைய குணத்தாலேயே என்னையும் அறியாமல் நீங்க எனக்குள்ளே வந்துட்டீங்க சித்து. எந்த காரணத்திற்காகவும் நான் உங்களை இழக்கமாட்டேன் சித்து. நீங்க எனக்கு வேணும், உங்க காதல் எனக்கு முழுமையா வேணும். உங்க அன்புக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை. நீங்க என்னைக் காதலிக்கும் அளவுக்கு நான் உங்களைக் காதலிக்கேறேனா என்றே எனக்குச் சந்தேகமாக இருக்கு? ஆனால், என்னோட காதல் உண்மை சித்து. உங்க மேல் நான் வைத்திருக்கும் இந்த காதல் நிஜம். உங்களுடைய சந்தோஷத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன். ஐ லவ் யூ சித்து. ஐ லவ் யூ……” என சித்தார்த்தை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

 

மதுவின் கண்ணீரை கண்டவன், அவளை விருப்பம் இல்லையோ என்ற எண்ணம் தோன்றிய நேரத்தில் மதுவின் அழுகையும், அவள் காதலையும், அறிந்தவன், ஒரு நொடி தன்னை சுற்றி இயங்கிக்கொண்டிருந்த உலகமே தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது போல ஒரு உணர்வு அவனுக்குள் எழுந்தது.

 

ஆனாலும் தான் அவளிடம் உண்மையை சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற. அவள் தலையை வருடிகொடுத்தவன்.”மது நான் உன்னிடம் இருந்து ஒரு விஷயத்தை மறைத்துவிட்டேன். ஆனால், அதை நீ கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்” என்றான்.

 

” நீங்கள் என்னிடம் ஒரு விஷயத்தை மறைக்கிறீர்கள் என்றால் அது என் நன்மைக்காக தான் இருக்கும். அதனால் அதை தெரிந்துக்கொள்ளவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இனி,யாவது நான் உங்களை மன அமைதியுடன் வைத்திருக்க விரும்புகிறேன். அப்படியே நீங்கள் என்னிடம் அந்த உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும் என்றால், ஊருக்குச் சென்றதும் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். அதுவும் உங்களுடைய திருப்திக்காக” எனச் சொன்னவளைப் பார்த்த்தவன், “இல்லை மது நான்….” என ஆரம்பிக்கவும்“.ப்ளீஸ் சித்து” என அவனை இறுக அணைத்துக்கொள்ள, அதற்கு மேல் இருவருக்கும் இடையில் பேச்சு சுத்தமாக நின்று, அங்கு வளையல்களின் ஒலியுடன், செல்ல சீண்டல்களும், சிணுங்கல்களுடன், தனக்காகவே அந்தக் கம்பீர மனிதனின் காத்திருப்புக்கு, அவன் மனதில் தேக்கி வைத்திருந்த காதலுக்கு, அவனது நேசிப்புக்கு, அவனது பொறுமைக்கு ஈடாக தன்னையே அவனுக்குப் பரிசாக தந்தாள். இருவரும் ஒருவருக்குள் ஒருவர் உருகி கரைந்துக்கொண்டிருந்தனர்.

 

 

 

உன்னை சரணடைந்தேன் மன்னவா மன்னவா

இன்னும் என்ன  தேவை சொல்லவா சொல்லவா

இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும்

இது முடிகிற நேரம் உயிர் விட வேண்டும்

உடலும் மனமும் உனையே  தொடர

உன்னை சரண் அடைந்தேன் மன்னவா மன்னவா

 

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -62

அத்தியாயம்—62   தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்த மது ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முகம் முழுதும் வியர்க்க, அனிச்சை செயலாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *