Sponsored
Home / Serial stories / Rajisri – இதயக்கள்வன – Idhaya Kalvan

Sponsored

Rajisri – இதயக்கள்வன – Idhaya Kalvan

இதயக்கள்வன்

களவாடல்3.


ஒரு பெண் இன்னுமொரு பெண்ணிற்கு முன்னிருந்து பின்னாகமாட்டி button போட்டு விட்டாள்.

அந்த பார்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் போல் இருந்தது.சட்டையை மாட்டிவிட்டவள் அதோடு நில்லாமல் அவள் தோழிகளிடம் நீங்க கிளம்புங்க நான் இந்த பெண்ணை homeல் விட்டுட்டு வரேன்.

ஏ வவேண்டாம் டி உங்க அக்கா திட்டுவாங்க என ஒருத்தி சொல்ல அது எப்பவும் நடக்கறது தான விடு எனவும்,

signal release ஆகவும் சரியாக இருந்தது. வண்டியைகிளப்பி கொண்டே யார் இந்த பெண் , எத்தனை அழகு இவள் மனம் நினைத்தவன் office வரவும் தன் எண்ணப் போக்கிற்கு கடிவாளமிட்டான்.

——————–,

அங்கு ராதா அந்த பெண்ணை homeல் விட்டுட்டு வீட்டை அடைய எப்போதும் ஆகும்நேரத்தை விட 1 மணி நேர தாமதம் ஆனது. பயந்து கொண்டே உள்ளே நுழைந்தவள், யாரோட சுத்திட்டு வர என்ற அக்காவின் பேச்சில் கூனி குறுகி போனாள்.

அழுது கொண்டே நடந்ததை கூறினாள். அப்போதும் விடாமல் உனக்கு சட்டை வாங்குமளவு பணம் எவன் கொடுத்தான் என்றே கேட்டாள். தனது தோழிகளிடம் வாங்கியதாக கூறினாள். அதை அப்படியே விட்டால் அவள் சுந்தரி அல்லவே, என்னவா இருந்தாலும் தெரிய தானே போகுது சரி சரி morning கு breakfast செய் என்று சென்ற அக்காவை பார்த்தவாறே உள்ளே சென்று ஒரு மூச்சு அழுதாள்.

பின் morning உணவு தயாரிக்க வேண்டும் தாமதமானால் அதற்கு கேவலமான சொற்களை கேட்க நேரிடும் என எழுந்து சென்றாள். தனது கை பாட்டுக்கு வேலை செய்ய அவள் நினைவு பழம் கணக்கு பார்த்தது.

——————–

அம்மா, அப்பாவுடன் இருந்தபோது எத்தனை சந்தோஷம். ஏம்மா என்னை விட்டு போனீங்க. உங்களை நினைத்து நினைத்து அப்பாக்கும் உடம்பு சரியில்லாமல் போச்சு அவராவது எனக்கு வேணும் மா அவரையும் உன்னோட கூப்பிடாத . கடவுளே அப்பாவை எனக்கு கொடுத்திடு என்று மானசீகமாக கடவுளிடம் மன்றாடி வேண்டினாள்.

ராதாவின் அம்மா கிருஷ்ணா,அப்பா குணாளன் இவர்கள் இருவருமே அன்புள்ள அன்யோன்யமான தம்பதிகள். இவர்களுக்கு இரு மகள்கள். சுந்தரி, ராதா என பெயரிட்டனர். சுந்தரி குணாளனை போல சுமாராக தான் இருப்பாள். ஆனால் ராதா கிருஷ்ணாவை போல பெண்ணுக்கே உரிய அத்தனை அழகுடன் மிளிர்தாள்.

அங்கு தான் அவளுக்கு பிரச்சனை ஆரம்பித்தது. சுந்தரிக்கு தான்அழகில்லை என்ற குறை எப்போதும் மனதில் இருந்தது. பெரியவள் ஆகஆக அது வளர்ந்து வன்மமாக வளர்ந்தது.

குணாளனும் கை நிறைய சம்பாதித்தார். கிருஷ்ணா சிக்கனமாக செலவு செய்து இருவரையும் படிக்க வைத்து தேவையான நகைகளையும் சேர்த்து வைத்தார்.

நல்ல வரன் வர சுந்தரிக்கு கல்யாணமும் நல்ல முறையில் செய்தனர். மாப்பிள்ளை ராஜேஷ் நல்லவனாக இருந்தான்.

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் மூத்த மகளை காண வேண்டி சென்ற கிருஷ்ணா திரும்பி வரும்போது ஒரு accidentல் உயிர் நீத்தார்.

மனைவி இறந்த துக்கத்தில் இருந்த குணாளனுக்கு இரு வாரத்திற்கு முன் mild heart attach வந்து hospitalல் admit செய்தனர். dr இடம் கேட்டதற்கு உங்க அப்பா மிகவும் tensionஆ இருப்பதாகவும் 2-3வாரம் observation ல இருக்கனும் என சொன்னார்.

அப்போது ராஜேஷ் தான் ராதாவ தன் வீட்டிற்கு அழைத்து வந்தான். அவன் எந்த கெட்ட எண்ணத்திலும் அழைத்து வரவில்லை, ஆனால் சுந்தரி பயந்தாள். தன்னை விட தங்கை அழகாக இருப்பதே அதற்கு காரணம். வந்த அன்றே ராதா அழைத்து கூறி விட்டாள்.

சும்மா சும்மா அத்தான் முன்னாடி வந்து அவரை மயக்குற வேலையெல்லாம் வச்சுக்காத. அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன். அதே மாதிரி 3 நேரமும் நீ தான் சமைக்கனும். உன்னை இங்க வேலைக்கு மாறி தான் நான் வச்சுக்குவேன் என்று கூறினாள்.

இன்று காலையில் கூட dr இடம் கேட்டதற்கு improvement இருக்கு ஆனால் இன்னும் 1 வாரம் இருக்க வேண்டுமென கூறிவிட்டனர், இந்த 3 வாரத்தில் ராதாவின் மெல்லிய மனதை குதத்தி கிழித்துவிட்டாள் சுந்தரி. இதையேல்லாம் நினைத்தவாறே பூரி கிழங்கு செய்து முடித்தாள்.

அவள் அப்பா குணமடைவாரா? ராதாவின் நிலை பழைய படி ஆகுமா?

களவு தொடரும்…………..

Click Here to Read The Post

About admin

Check Also

“ சிந்தை மயங்குதடி செல்லம்மா” -KALAINEEMU'S 1ST STORY comments…..

Thread Status: Not open for further replies. Lady’s Wings Roots of LW Staff Member Administrator …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *