Sponsored

DO 'S AND DONT'S IN THE PREGNANCY PERIOD

Discussion in 'Stethoscope' started by Namrita, Mar 25, 2014.

  1. Namrita

    Namrita Wings

    Messages:
    296
    Likes Received:
    6
    Trophy Points:
    0
    ஹாய்..ஹாய்... ஹாய்ய்ய்ய்ய்.....


    ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் கர்ப்பக்காலம் என்பது ஒருவித பயம் கலந்த சந்தோஷ தருணமாக இருக்கும்...

    அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... அவர்களின் வாழ்வில் புதிதாய் வந்துசேரும் ஒரு உயிர் என்று அந்த தருணத்தில் அதிக பெருமிதம் தான் இருக்கும்....

    அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் இருக்கும் என்று யாராலும் கூற இயலாது... அது கடவுளின் சித்தம்!!!!

    அதில் சிலவற்றை நாம் கடைபிடித்தால் கண்டிப்பாக நம்மில் இருந்து உருவாகி உலகிற்கு வரும் அடுத்த தலைமுறையினரை ஆரோக்கியமான, வலுவான உயிராக வெளிக்கொண்டு வரலாம்.....

    எனக்கு தெரிந்த, என் கர்ப்பகாலத்தில் நான் கடைபிடித்தவை மற்றும் என் மருத்துவர் கூறிய ஆலோசனைகளை இங்கே கூறுகிறேன்...

    நீங்களும் உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை கூறினால் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் மக்களே...!!!!


    தோழமையுடன்,


    நம்ரிதா.............
     
     
  2. Namrita

    Namrita Wings

    Messages:
    296
    Likes Received:
    6
    Trophy Points:
    0
    ஹாய் பிரண்ட்ஸ்,

    கர்ப்பத்தை உறுதி செய்ததும், அருகில் அல்லது உங்களின் குடும்ப மருத்துவரை சென்று அணுகவும்...

    அவர்களும் ஒருமுறை கர்ப்பத்தை உறுதி செய்வர்... பின் அவர்கள் இரத்த பரிசோதனை செய்யக் கூறுவர்... மேலும் நீங்கள் முதலிலேய.. அதாவது கர்ப்பத்துக்கு தயாராய் இருக்க விரும்புபவர்கள் எடுத்துக்கொள்ளும் "folic" (போலிக்) மருந்தை மேலும் ஒன்று அல்லது இரு மாதத்திற்கு எடுத்துக்கொள்ள கூறுவர்...

    இரத்தப்பரிசோதனையின் முடிவில் தங்களுக்கு சிவப்பணுக்களின் அளவைப்பொருத்து அதற்குரிய மருந்தையும் குடுப்பர்... கண்டிப்பாக அதை உட்கொள்ளவும்...

    "Hemoclobin" எனப்படும் "சிவப்பணுக்கள்" அளவு மிகவும் முக்கியம்... பொதுவாக பெண்களுக்கு 12-13 இருக்க வேண்டும்... மாதவிடாய் அளவு மற்றும் சரியான உணவுமுறை இல்லாததால் நம் (பெண்கள்) உடம்பில் இருக்கும் அணுக்களின் அளவு குறையும்....

    அதுவும் கர்ப்பகாலத்தில் நம்முள் இருக்கும் உயிரின் சுவாசத்திற்கு "Hemoclobin" மிக முக்கியமானது.... இந்த சமையத்தில் சிவப்பணுக்கள் சற்று குறையத்தான் செய்யும்... 12 எண் அளவு இருப்பவர்களுக்கு 11 அல்லது 10 ஆக குறையும்

    10 என்பது அதுவும் கர்ப்பகாலத்தில் மிக குறைந்த அளவே... எனவே முதலில் "Hemoclobin" அளவை நாம் முக்கியமாக கவனித்து சீராக உயர்த்த வேண்டும்... இல்லையேல் பிரசவ காலத்தில் தாய் அல்லது சேய்க்கு பிரச்சனையாகிவிடும்....

    இதனால் தாய்க்கு உயிர் இழப்புக்கூட ஏற்பட வாய்ப்புள்ளது.... முதலிலேயே இந்தப் பிரச்சனையை கண்டுபிடித்து அதற்குரிய மருந்துக்கள் மற்றும் உணவு பழக்கத்தில் சேர்க்க வேண்டியதை சேர்த்துவிடலாம்....
     
     
  3. Namrita

    Namrita Wings

    Messages:
    296
    Likes Received:
    6
    Trophy Points:
    0
    இரத்தத்திலுள்ள "Hemoclobin" அளவை உயர்த்த என்ன, என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்::::

    1) பேரிச்சம்பழம்:

    இது எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது( எனக்கு பிடிக்காது)... ஏன்னா சில பழம் ரொம்ப ஸ்வீட்டா இருக்கும்.. அது சிலருக்கு பிடிக்காம இருக்கும்...

    பிடிச்சவங்க, காலை-மாலை அல்லது சாப்ட தோணுறப்பலாம் 4 அல்லது 5 எடுத்து சாப்டுங்க...

    பிடிக்காதவங்க, 4 அல்லது 5 பழத்தை எடுத்துக்கோங்க, உள்ள இருக்குற கொட்டையை எடுத்துட்டு கொஞ்சம் பால் விட்டு நல்லாலாலா அரைச்சிக்கோங்க...

    ஜாம் மாதிரி கிடைக்கும் ஒரு பிரட் எடுத்து அதுல தடவி சாப்டுக்கோங்க... காலை-மாலை என இரண்டு ஸ்லைஸ் கண்டிப்பா சாப்டுங்க....

    2) நெல்லிக்காய்:

    பெரிய நெல்லிக்காய் இருக்கும்ல பா.... அதை சின்ன, சின்னதா கட் பண்ணி தேனில் முதல் நாள் இரவு ஊற வைத்து விடவும்... காலை முதல் மாலை வரை அதை சாப்பிட்டு காலி செய்துவிடவும்... ஒரு நாள் மட்டுமே அதை பயன்படுத்தவும்... தினமும் இதேப்போல் புதிதாக செய்து சாப்பிட சீக்கிரம் "Hemoclobin" அளவு கூடும்...

    இதன்படி சாப்பிட பிடிக்காதவர்கள்:

    நெல்லிக்காயை கட் பண்ணி மிக்ஸியில் போட்டு அரைத்து கிடைக்கும் சாரை, தேன் கூட கலந்து அப்படியே குடித்துவிடவும்...

    பிடிக்கவில்லை என்று எதையும் விடக்கூடாது... பின்னால் நமக்கு தான் பிரச்சனை ஏற்படும்...

    3) செவ்வாழைப்பழம்:

    தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர, மலம் கழிக்க சிரமம் இருக்காது மேலும் குழந்தைக்கு எடை அதிகரிப்பதுடன், சிவப்பணு உற்பத்தி சிரத்தையாக இருக்கும்!!!!


    இன்னும் இருக்கு நாளை சொல்கிறேன்... ஏதேனும் சந்தேகம் அல்லது உங்களின் கருத்துக்களையும் கூறலாம மக்களே....
     
     
  4. Namrita

    Namrita Wings

    Messages:
    296
    Likes Received:
    6
    Trophy Points:
    0
    "Hemoclobin" அளவை உயர்த்த இன்னும் சில குறிப்புகள் இருக்கிறது மக்களே... இதோ...

    1) உலர் திராட்சை அல்லது ஆங்கூர் திராட்சை:

    இதில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டையும் வைத்து இருந்தால் ஒரு நாள் ஒருவகை என்று பயன்படுத்தவும்...

    காலை எழுந்ததும் பால் குடிக்கும் பழக்கம் இருக்கும்... பால் குடிக்கும்முன் ஒரு 10 திராட்சைகளை எடுத்து நெய்யில் வருத்து, ஆறியதும் இல்லை சாப்பிடும் சூடில் இருக்கும்போது சாப்பிட்டுவிட்டு பாலை குடிக்க, இரத்த விருத்தியுடன், உடலில் தனி பளபளப்பு இருக்கும்....

    2) கீரை(பாலைக்கீரை-முருங்கைக்கீரை)

    கீரை ஒருநாள் விட்டு ஒரு நாள் என்று சேர்த்துக்கொள்ளவும்.... அதுவும் மேலே சொன்ன இரண்டு வகையிலும் இரும்பு சத்தும், கால்சியச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது...

    அதுவும் பாளக்கீரையை உப்பு போடாமல், முக்கால் வேகவைத்ததை சாப்பிட்டு வர நல்ல மாற்றம் தெரியும்...

    முருங்கைக்கீரை சாதாரணமாக வீட்டில் செய்வது போலேயே செய்து சாப்பிடவும், மேலும் சிறிது தண்ணீர் அதிகம்விட்டு கீரை வெந்ததும், அந்த நீரை வடிகட்டி சிறிது நல்லெண்ணெய் ஊற்றி குடிக்கவும்...
     
     
  5. Namrita

    Namrita Wings

    Messages:
    296
    Likes Received:
    6
    Trophy Points:
    0
    அன்பு தோழமைகளே,

    உங்கள் கர்ப்பம் உறுதி செய்ததும் உங்களின் அன்றாட பழக்க வழக்கம் மற்றும் நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்திக் கொள்ளவும்....

    ஏனெனில் நமது பழக்கத்தை தான் உள்ளிருக்கும் குழந்தை நாளை வெளி வந்தவுடன் அதையே பின்பற்றும்...

    அதாவது...
    காலை 6 மணிக்கு நாம் தினமும் எழுந்து பழகினால் பிறக்கும் குழந்தைக்கும் அந்த நேரத்தில் முழிப்பு வந்துவிடும்.... இரவு 8 முதல் 9-க்குள் உறங்கிவிட்டால் குழந்தையும் அந்த நேரத்திலேயே சரியாய் உறங்கிவிடும்....

    காலை உணவில் முளை-கட்டிய பருப்புகள், பழங்கள் என்று சுறுசுறுப்பு அளிக்கக்கூடிய புரோட்டின் உணவினை உட்கொண்டால் குழந்தைகள் காலையில் சுறுசுறுப்பாக இருப்பர்....

    இடையில் பழரசம், சூப் இப்படி குடிக்கவும்.... மதியம் மிதமான சாப்பாடுடன் கூடிய சிறிது தூக்கம் என்று இருந்தால் குழந்தையும் அந்த நேரத்தில் எந்த தொந்தரவும் செய்யாமல் உறங்குவர்...

    மாலை சீக்கிரம் எழுந்துக்கொள்ளவும் 4 முதல் 5'க்குள் எழும் பழக்கம் கொண்டிருங்கள்... மேலும் நடைப்பயிற்சி, பழங்கள் இப்படி மிதமான உணவு எடுத்துக்கொள்ள நமக்கு ஜீரண சக்தி சரியாக வேலை செய்யும்...

    மாலையில் புரோட்டின் உணவை தவிக்கவும்... இது குழந்தைக்கு சுறுசுறுப்பை குடுக்க, இரவு உறங்க கால தாமதம் ஆகும்... குழந்த பிறப்புக்கு முன்பும் சரி.. பின்பும் சரி... இந்த முறையே குழந்தைக்கு பழக்கமாக இருக்கும்

    இரவில் குறைவாக இல்லாமல் சரியான அளவு உணவு உட்கொண்டுவிட்டு சிறிது நேரம் நடக்கவும், இது ஜீரண சக்தியை அதிகரித்து, புளிப்பு ஏப்பம் வராமல் தடுக்கும்... மேலும் உறக்கம் முழுமையாக தழுவும்...

    பால் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்... தினம் 1 அல்லது 1.5 லிட்டர் பால் உட்கொள்ள வேண்டும்!!!!


    இதன்படி தினம் கடைபிடித்தால் குழந்தை பிறந்ததன் பின்னும் நேரத்துடன் தூங்கி, நேரத்துடும் எழும்... நமக்கும் இரவெல்லாம் கண்விழிக்க அவசியம் இல்லை..

    பின்குறிப்பு:

    இந்த முறையை நான் பின்பற்றியே கண்கூடாய் கண்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்...

    மீண்டும் வருவேன்

     
     
  6. umasundaram1

    umasundaram1 Wings New wings

    Messages:
    103
    Likes Received:
    52
    Trophy Points:
    48
     
Loading...
Similar Threads - DONT'S PREGNANCY PERIOD
  1. Kalai 1
    Replies:
    14
    Views:
    599
  2. Kalai 1
    Replies:
    0
    Views:
    231
  3. Kalai 1
    Replies:
    1
    Views:
    216
  4. lavender
    Replies:
    10
    Views:
    469
  5. Sree
    Replies:
    17
    Views:
    4,279

Share This Page


Sponsored