Spiritual - the question and answer ... !!!

Discussion in 'Queries' started by rajan_alli, Nov 28, 2012.

 1. lilly

  lilly Guest

  திட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும்!

  என்ன தான் நம்ம வீட்டு குழந்தை, மனைவி என்று இருந்தாலும், திட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும். ஏன்னு கேட்கிறீங்களா? படிச்சுப் பாருங்க! சிலர் திட்டும்போது என் முன் நிக்காதே! எக்கேடோ கெட்டு நாசமாப் போ! என்றெல்லாம் கொதித்துப் பேசுவார்கள்.

  இப்படி திட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம். அந்தக்காலத்தில் பெற்றோர் கோபத்தில் குழந்தைகளைத் திட்டும்போது கூட, அமங்கலமான வார்த்தைகள் கலக்காமல், அதிலும் தர்மத்தைக் கடை பிடித்தனர்.

  நாசமத்துப் போ என்பது அதில் ஒரு வார்த்தை. நாசம் அற்று நல்லா இருக்கணும் என்பது இதன் பொருள். வீடெங்கும் பொருட்களை இங்கும் அங்கும் இறைக்கும் குழந்தையைக் கூட உன் கல்யாண கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? என்று தான் கோபிப்பர்.

  இதற்கு காரணமும் இருக்கிறது. ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும், வீட்டுத்தெய்வமான கிரகலட்சுமி கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக ஐதீகம். நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அப்படியே ஆகட்டும் என்று ஆசியளிப்பவள் அவளே. அதனால்,கோபதாபத்தில் கூட தவறான வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.


  courtesy : link
   
   
 2. Umaravi09

  Umaravi09 Contributor New wings

  Messages:
  2,100
  Likes Received:
  31
  Trophy Points:
  48
  சுவாமிக்கு நிவேதனப் பொருட்களை எடுத்துச் செல்வது எப்படி?

  கோவில்களிலே மடைப்பள்ளியிலிருந்து (சிவாச்சாரியார்கள்) நைவேத்தியம் எடுத்துச் செல்லும் பொழுது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

  அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அப்பொருள்களை அவர்கள் தங்கள்
  வயிற்றுக்கு மேலாகவோ அல்லது தோள்களுக்கு மேலாகவோ தான் தூக்கிச்
  செல்வார்கள்.

  அதே போன்று இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும்
  பொழுதும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

  இறைவனுக்குரிய நிவேதனங்கள்......

  சிவன் - வெண் பொங்கல், வடை, வெறும்சாதம். பார்வதி - சர்க்கரைப் பொங்கல்,
  உழுந்து வடை. விநாயகர்- மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல்,
  கொண்டைக்கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும்.

  முருகன்- வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த
  கடலைப்பருப்பு, தினைமாவு. பெருமாள் - லட்டு, வெண்பொங்கல்,
  புளியோதரை.

  மாத பிரசாதங்கள் பலன்கள்

  சித்திரை - தயிர் சாதம், நீர் மோர் - உடல்சூடு, எலும்புருக்கி நோய் விலகும்.

  * வைகாசி - பால், சர்க்கரை பொங்கல் - எல்லாவித வயிற்றுக் கோளாறு
  நீக்கி சுகமடைதல்.

  * ஆனி- தேன், தினை மாவு - மலட்டுதன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

  * ஆடி - வெண்ணை சர்க்கரை சேர்த்து - கொழும்பு சம்பந்தப் பட்ட நோய்கள் தீரும்.

  * ஆவணி - தயிர் சாதம் - காரியத்தடை, நோய்களில் இருந்து விடுபடுதல்.

  * புரட்டாசி - புளியோதரை, சர்க்கரை பொங்கல் - விஷகடி, தோல் சம்பந்தமான நோய்கள் விலகும்.

  * ஐப்பசி - உளுந்தவடை, ஜிலேபி - சீதளமான நோய் விலகும்

  * கார்த்திகை - தேங்காய் சாதம், எலுமிச்ச சாதம் - பெண்களுக்கு கர்ப்ப
  சம்பந்தமான நோய், அடி வயிறு நோய் தீரும்.

  * மார்கழி - வெண் பொங்கல், சுண்டல் - மஞ்சள் காமாலை, ஆஸ்துமா
  போன்ற நோய்கள் விலகும்.

  * தை - தயிர் ஏட்டில் தேன் சேர்த்து தானம் கொடுக்க - விபத்துக்கள்
  தவிர்க்கப்படும்.

  * மாசி - நெய்யுடன் சர்க்கரை - சிறு நீரகக் கோளாறுகள், மந்தம், வயிறு
  உப்பிசம் போன்றவை விலகும்.

  * பங்குனி - தக்காளி சாதம், தேங்காய் சாதம் - மனக்கிலேசம், மனக்
  காளாறுகள் பித்தம் போன்றவை விலகும்.
   
   
 3. Umaravi09

  Umaravi09 Contributor New wings

  Messages:
  2,100
  Likes Received:
  31
  Trophy Points:
  48
  கிழமை பிரதோஷ வழிபாடு பலன்

  ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்

  திங்கள் சோம பிரதோஷம் - நல் எண்ணம், நல் அருள் தரும்

  செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்

  புதன் பிரதோஷம் - நல்ல குழந்தை பாக்கியம் தரும்

  வியாழன் பிரதோஷம் - திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.

  வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்

  சனிப் பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.

  தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.

  ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.
   
   
 4. anuarun

  anuarun Contributor New wings

  Messages:
  3,857
  Likes Received:
  15
  Trophy Points:
  38
  Hi Uma & Lilly,

  Thnxs for the useful infos.
   
   
 5. samnmk

  samnmk Contributor New wings

  Messages:
  1,158
  Likes Received:
  11
  Trophy Points:
  38
  HI uma and lily,
  thanks for the infn
  Saras
   
   
Loading...

Share This Page