சுகமான சுமை -12

Discussion in 'Tamil Novels Flash Fiction (Short Stories)' started by latharaghu, Mar 17, 2017.

Thread Status:
Not open for further replies.
 1. latharaghu

  latharaghu Pillars of LW New wings LW WRITER

  Messages:
  57
  Likes Received:
  168
  Trophy Points:
  53
  ரிஷி பார்பதை பார்த்த சுந்தரமூர்த்தி என்ன தம்பி பார்கிறிங்க அவள் இந்த வீட்டு தேவதை என்றார்
  ஆமாம் எனக்கு கூட அவள் தேவதைதான் என்றான் மனதிற்குள் அதற்குள் அலமேலு பூரணி தம்பிக்கு சாப்பாடு வை என்றவுடன் மற்ற எதை பற்றி யோசிக்காமல் சாப்பிட அரம்பித்தான்

  சாப்பாடு முடிந்தவுடன் சுந்தரம் தம்பி இப்ப சொல்லுங்க தோப்பு பேசி முடிச்சிடலாமா என்றார்
  எனக்கு பிடிச்சிருக்கு விலையும் தோதாவந்தா அப்பாகிட்ட பேசி முடிச்சிடலாம் சார் என்றான்
  இப்பதான் சொன்னேன் தாத்தானு கூப்பிடுங்க என்று என்றார்
  சாரி சரிங்க தாத்தா நீங்க பேசி ஏற்பாடு பன்னுங்க நான் அப்பாகிட்ட பேசிகிறேன் என்றான்
  அதன்பிறகு வேலை ஜருராக நடக்க ஒரு நல்ல நாளில் தோப்பை ரிஷி பெயருக்கு ரிஜித்தர் செய்யபட்டது
  அன்று ரிஷியின் தந்தை சுந்தரதிடம் ரொம்ப நன்றி அய்யா என் பிள்ளைக்கு கூட இருந்து உதவி செய்தற்கு என்றார்
  இதில் என்ன சண்முகம் இருக்கு நம்ம பிள்ளைக்கு நான் செய்யாமா வேற யார் செய்வா சொல்லு என்றார் அப்புறம் உன் தொழில் எப்படி போகுது என்றார்
  நல்லா போகுது இப்பகூட இந்த தோப்ப வாங்கினது பழங்க ஏற்றுமதி செய்யதான் என்றார்
  நல்லா செய் எதாவது உதவி வேண்டும் என்றாலும், கேளு என்றார்
  கட்டாயாமா என்பிள்ளை இங்கதான் இருப்பான் அவன கொஞ்சம் பார்துக்கொள்ளுங்கள் அவன் படிச்சது எல்லாம் வெளிஊரில் இப்பதான் காலேஜ்முடிச்சு தொழில் தொடங்கி இருக்கான் அது நல்லபடியாக நடக்கனும் என்றார்
  நல்லா நடக்கும் உன் பிள்ளை நல்ல பையன் நீ கவலைபடாதே என்றார்.
  நாட்கள் வேகமாக ஒட ரிஷியும் தோட்டதில் வேறு சில பழங்களையும் பயிரிட்டான் எஞ்சிய இடங்களில் கீரை காய்கறி என்று பயிரிட்டான்
  வேளாண்கல்லூரியின் உதவியுடன் சரியான உரம் மண் தரம் பற்றி அறிந்து அதற்கேற்றார் போல் பயிரிட்டான்
  வாரம் இரண்டுநாள் சென்னைக்கு சென்று அங்குள்ள அலுவலக வேலையையும் பார்து கொண்டு இருந்தான்
  அப்படி ஒரு நாள் தோப்பை பார்வை யிட்டு கொண்டிருக்கும் பொழுது எதிர் திசையில் யாரோ வேகமாக ஒடிவருவது போல் இருந்தது யார் என்று திரும்பி பார்பதற்குள் இவன் மீது மெத்தென்று ஒரு உருவம் மோதியது கிழே விழ இருந்தவரை லேசாக அணைத்தபடி பிடித்து யார் என்று பார்தான்
  அது அதிதி
  அவனால் அவளிடம் இருந்து பார்வையை திருப்பமுடியவில்லை கிட்டதட்ட அவளை பார்த்து 6 மாதங்கள் மேல் ஆகிவிட்ட்து வேலை பளுவில் அவளின் நினைவு வந்தாலும் சின்ன பெண் என்பதால் அவன் அவளிடம் பேசுவதை தவிர்த்துதான் இருந்தான்
  ஆனால் இன்று அவள் வந்து அவன் மீது மோதியது ஒரு பூஞ்சோலை வந்து மோதியது போல் உணர்ந்தான் அவளை லேசாக அனைத்தபடியே அவளை பார்தவன் திடுக்கிட்டான்
  அவளை பார்தாள் எதையோ கண்டு பயந்தவள் போல் இருந்தால்
  ஏய் அன்னு கூல் டவுன் என்றான் அவள் காதோரமாக
  பயத்தில் இருந்தவள் அவனுடைய அன்னு என்ற அழைப்பை கூட உணரவில்லை
  ஏய் கூல் பேபி ரிலாக்ஸ் என்று அவளை அன்னைத்து என்னாச்சு என்றான் அவன் மார்பில் ஒன்றி இருந்தவளை பார்த்து அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை
  அவளோ தெரிந்த ஒருவரை கண்டவுடன் நிம்மதியடைந்த்து போல் இருந்தது
  அவள் பயந்துபோய் இருப்பதை பார்தாவுடன் அங்கு அருகில் இருந்த நாற்காலியில் அவளை அமர செய்து அவன் கையிலுருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்து குடி என்றான்
  மறுக்காமல் வாங்கி குடித்தவளிடம்
  தோப்புக்கு வந்தியா என்றான்
  ஆமாம் என்றவளிடம்
  எதுக்கு இப்படி ஒடிவந்த கூட தாத்தா வரல என்றான்
  இல்ல தாத்தாவுக்கு உடம்பு சுகமில்ல வீட்டுல போர் அடிச்சுதுனு அதனால் நான் தனியாதான் வந்தேன் என்றாள்
  அதுக்கு எதுக்கு இப்படி பயந்து வர என்றான்
  இல்ல அங்க யாரோ என்ன பின் தொடர்ந்து வந்தமாதிரி இருந்தது
  மருதண்ணன் இல்லையா என்றான்
  இல்ல மருதன்ன மனைவிக்கு உடம்பு சரியில்ல அதான் அவர் டவுன் ஆஸ்பிட்டலுக்கு போயிருகாரு என்றாள்
  அவர் இல்லனு தெரியுது இல்ல நீ ஏன் தனியா வந்த என்றான்
  இல்ல ஆதேஷ் கூடவந்தான் அவன் பிரண்டு எதோ விளையாட கூப்பிட்டானு போய்ட்டான் அதான் என்றாள்
  பேசி கொண்டிருந்தவன் அவளுடைய கையில் ஏற்பட்டிருந்த காயத்தை பார்து ஏய் இது என்ன அடிப்படிருக்கு என்று அவள் கையை பிடித்தான்
  பார்தால் கனுகாலிலும் அடிபட்டிருந்த்து
  ஏய் என்ன அடிபட்டிருக்கு என்னாச்சு என்றான்
  அங்கு பின் தொடர்ந்து வந்தவங்க என்ன பிடிக்க வந்தாங்க நான் பயந்துட்டேன் அவங்க எங்கையை பிடிச்சு முறுகினாங்க எப்படியோ அவங்கள தள்ளிவிட்டுட்டு ஒடிவந்தேன் என்றாள்
  என்ன சொல்ற நீ என்றான் ஆமாம் யாரோ என்ன பிடிக்க வந்தாமாதிரி இருந்தது என்றாள்
  இரு நான் போய் யாருனு பார்துட்டு வரேன் என்றான் அவனுங்களை என்ன செய்றேன் பாரு என்றான் கோவமாக
  இல்ல அதெல்லாம் வேண்டாம் வீட்டுக்கு தெரிஞ்சா சங்கடபடுவாங்க விட்டுங்க என்றாள்
  என்ன நீ இது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா என்றான் நீ அவனுங்கள பாத்தியா என்றான்
  இல்ல ஒரு ஆளுதான் இருந்தான் ஆனா முகத்த மூடிட்டு இருந்தான் நான் பார்க முடியல என்றாள்
  சரி நீ எங்கூட வா நாமபோய் யாருனு பார்கலாம் என்றான்
  வேண்டாம் நான் வீட்டுக்கு போறேன் கால் ரொம்ப வலிக்குது என்றாள்
  இரு நான் கூட்டிட்டு போய் விடுரேன்
  ஐய்யோ அதெல்ல்லாம் வேண்டாம் நான் போயிடுவேன் என்றாள்
  இல்ல இப்ப உன்னை நான் தனியா அனுப்புவது அவ்வளவு சேப்டி இல்ல
  வெளியாட்களோட வந்தா பாட்டி திட்டுவாங்க என்றாள்
  சரி தான் ஆனா உன்ன தனியா அனுப்புவது சரி யில்ல நடந்த சொல்லாம் என்றான்
  ஐய்யோ வேண்டாம் வீட்டுல எல்லாரும் பயந்துடுவாங்க வேண்டாம் என்றாள்
  ஆனா இது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா மறைகிறது தப்பு என்றான்
  சரிதான் நானே வீட்டுல பொறுமையா சொல்லிகிறேன் இப்ப வேண்டாம் என்றாள்
  ம் சரி அப்ப இப்ப நீ விட்டுக்கு போனதும் உன் கை காலில் என்ன காயம் கேட்பாங்க இல்லையா
  ஆமாம் ஒன்னு செய் உன்ன ஒரு சைகிள்காரன் இடிச்சுட்டான் நான் அங்கிருந்தேன் சுந்தரம் சார் பேத்தினு நாந்தான் கூட்டிட்டு வந்தேன் சொல்றேன் என்றான்
  ம் வந்து என்றவளிடம்
  வந்துமில்ல போயிமில்ல உன்ன தனியா அனுப்பமுடியாது என்றான்
  சரி என்று தலையாட்டிவளிடம் பைக்கிள் வருவ இல்ல என்றான்
  ம் ஆகாஷ் அண்ணாவோட பைக்கிள் போவேன் என்றாள்
  அம்மாதாயே நான் உன் ஆகாஷ் அண்ணா இல்ல ரிஷி நீ ரிஷினே நினை அண்ணா கிண்ணானுலாம் நினைக்காதே என்றான்
  அவன் சொல்வதை புறிந்து கொள்ளாமல் அப்புறம் இங்க நடந்ததை
  வீட்டில் சொல்லாதிங்க என்றாள்
  ம் சரி என்றான்
  அவள் அன்று நடந்ததை வீட்டில் சொல்லியிருந்தால் பின்னே ஏற்பட்டிருந்த விளைவுகளை தவிர்திருக்கலாம்
  (தொடரும்)
   
   
 2. latharaghu

  latharaghu Pillars of LW New wings LW WRITER

  Messages:
  57
  Likes Received:
  168
  Trophy Points:
  53
  சுகமான சுமை -13

  ரிஷி அதிதியை வீட்டுக்கு அழைத்துசென்றதை இரு கண்கள் சினத்துடன் பார்த்து கொண்டிருந்தது
  அதிதி ரிஷியுடன் பைக்கிள் அமர்ந்து செல்வதை அவ்வூரில் ஒருசிலர் பார்துகொண்டு இருந்தனர பொதுவாக அதிதி யாருடனும் அவ்வளாவாக பேசுபவள் இல்லையென்பதால் யாரும் தவறாகவும் நினைக்கவில்லை
  வீட்டு வாசலில் வண்டியை ரிஷி நிருத்தவும் வாயில் அமர்ந்துகொண்டிருந்த அவளது பாட்டி என்ன அதிதி என்னாச்சு என்று கேட்டவாறே அவள் அருகில் வந்தார் பேத்தியை பற்றி அவருக்கு தெரியும் ஆதலால் தான் ரிஷியுடன் வண்டியில் வந்ததை அவர் தவறாக நினைக்கவில்லை
  ஒன்னும்மில்ல பாட்டி நான் வரும்பொழுது ஒரு சைக்கிள்காரன் அதிதியை இடித்துவிட்டான் காலில் கையிலும் அடிபட்டுவிட்டது அதான் நான் கூட்டிட்டு வந்தேன் என்றான்
  என்னது அடிப்பட்டுவிட்டதா அவர் போட்ட சத்ததில் அந்த குடும்பமே அங்குதான் குழுமியிருந்தது என்ன எது என்று கேட்டவர் அனைவரிடமே அதே பொய்யை இருவரும் மாறி மாறி தெருவித்தனர்
  அவளுடைய சித்தப்பா நம்ம புள்ளையை தெரியாதவன் யாரு இப்படி செஞ்சது அவன என்னசெய்கிறேன் பார் என்று சத்தமிட்டு கொண்டிருந்தார்
  ஆனால் அவளுடைய தாத்தா இருவர்முகத்தையும் பார்த்து ஒன்றும் கூறாமல் பிள்ளையை ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க என்றார்
  இல்ல தாத்தா வேண்டாம் நான் வீட்டுல மருத்து போட்டுகிறேன் கால்தான் கொஞ்சம் வலிக்குது அம்மாவா தைலம் தேய்க சொல்கிறேன் சரியாக போய்விடும் என்றாள்
  அதற்குள் அலமேலு ரிஷியிடம் தம்பி ரொம்ப நன்றி எங்கபிள்ளையை பெரிய உதவி செஞ்சிருக்கிங்க என்று கூறினாள்
  சரிம்மா எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் தோப்புக்கு கிளம்பனும் நான் வரேன் எனற ரிஷியிடம் சாப்பிட்டுவிட்டுதான் கிளம்பனும் என்று வறுப்புறுத்து
  சாப்பிடவைத்தனர்
  ரிஷி எல்லோரிடமும் விடைபெற்று தாத்தவிடம் சொல்வதற்க்காக அவரை தேடும்பொழுது வேலையால் அவனிடம் வந்து ஐயா உங்கள அவங்க ரூமுக்கு கூப்பிடுராங்க என்றான்
  சரி என்ற ரிஷி தாத்தவின் ரூம் கதைவை தட்டிவிட்டு உள்ளே சென்றான் தாத்தா அவருடைய இசி சேரில் சாய்ந்தபடி அமர்ந்துகொண்டு எதையோ யோசித்து கொண்டிருந்தார்
  தாத்தா என்ற அவனது அழைப்பில் நிமிர்ந்தவர் வாப்பா என்றார் கூப்பிடிங்கலாமே என்றவனிடம்
  ஆமாம் என்றவர்
  ரிஷி நான் உன்னிடம் உண்மையை கேட்கிறேன் தோப்பில் என்ன நடந்தது நீங்க இரண்டு பேரும் பொய்சொல்றிங்கனு எனக்கு தெரியும் என் என்றாள் என் பேத்திக்கு பொய் சொல்லி பழக்கமில்லை அவள் கண்களே அவளை காட்டி கொடுத்துவிட்டது அவள் எங்கள் எல்லோருக்காவும் பார்பவள் எங்களுக்கு எந்த கஷ்டத்தையும் தரகூடாது என்று நினைப்பவள் ஆகையாள் நிச்சயம் சொல்லமாட்டாள் என்ன் நடந்த்து என்று நீ சொல் என்றார்
  ரிஷி தாத்தா அதுவந்து என்று யோசித்தவன் பின்பு நடந்த அனைத்தையும் கூறிவிட்டான் அதிதி கேட்டுகிட்டதானால தான் நான் உண்மையை சொல்ல என்றான்
  கடவுளே என் பேத்திக்கு எந்த தீங்கு நேரக்கூடாது என்று நினைத்தேனோ அது இப்ப நடந்துடும் போல இருக்கிறதே கடவுளே என்றார்
  தொடரும்
   
   
 3. latharaghu

  latharaghu Pillars of LW New wings LW WRITER

  Messages:
  57
  Likes Received:
  168
  Trophy Points:
  53
  சுகமான சுமை-14
  ரிஷி சுந்தரித்திடம் சார் எதாவது பிரட்சனையா என்றான் அவர் அமைதியாக இருக்க சார் எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்க என்றான்

  அவர் அவனை பார்த்து இன்னைக்கு நீங்க பன்ன உதவிக்கு நன்றி தம்பி என் பேத்தியை கடத்தபார்த்து இருக்காங்க நல்ல வேலை அவள் எப்படியோ தப்பித்துவிட்டாள் ஆனால் இதுல இருந்து என் பேத்தியை எப்படி காப்பத்துறதுனு தான் தெரியல என்றார்

  அவர் சொன்ன விசயத்தை கேட்ட ரிஷியால் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை இவர் என்ன சொல்கிறார் என்றே அவனுக்கு விளங்கவில்லை

  சார் அன்னுவையை யார கடத்த பார்த்த என்றான்

  பெரியவர் அவனிடம் தம்பி அது அவளுடைய முறைப்பையன் செந்துரு என்றார்

  என்ன என்றவனிடம் தம்பி இங்க என்னால் ஒன்றும் பேசமுடியாது நான் உங்களிடம் பிறகு பேசுகிறேன் நான் உங்களை உங்கள் தோப்பில் வந்து பார்கிறேன்

  அப்புறம் அதிதியுடைய அண்ணன் ஆகாஷ் உங்களிடம் கேட்டாலும் சைக்கிள் இடிச்சிடுச்சி என்றே சொல்லுங்க வேற எதுவும் சொல்ல வேண்டாம் என்றார்

  அவனுக்கு உண்மை தெரிஞ்சா அவர்களை என்ன செய்வான் என்றே தெரியாது ஆகையால் அவனிடம் எதுவும் கூறாதீர்கள் என்றார்

  அவன் குழப்பத்துடன் அவரிடம் விடைபெற்று சென்றான்

  இரவு பார்வதி சுந்தரதிடம் நீங்க காலையில இருந்து சரியாகவே இல்ல அன்னுவுக்கு அடிபட்ட்த நினைச்சி கவலை படுகிறிர்களா என்றார்

  அவளுக்கு ஒன்னுமில்ல இப்பதான் அலமேலு அவளுக்கு வைத்தியரிடம் இருந்து தைலம் வாங்கி தேச்சிவிட்டா இப்ப பராவயில்லை தூங்கிறா நீங்க கவலை பாட்திங்க என்றார்

  அவர் பார்வதியிடம் பாரு நான் ஒன்னு சொல்லட்டுமா என்றார் எனன்ங்க என்றார்
  வந்து நம்ம அன்னுக்குட்டிக்கு சீக்கிரம் கல்யாணம் செய்துவிடலாம் என்றார்


  என்னது என்றவரிடம்


  அவளுக்கு இப்பதான் 18 வயசே ஆக பொழுது அதுக்குள்ள கல்யாணமா விளையாட்திங்க உங்க பேத்தி காதில் விழுந்தா அவ்வளவுதான்

  அவள் எவ்வளவு கனவு கான்றா நல்லா படிக்கனும் இங்கயே எதாவது தொழில் தொடங்கனுமென்று

  நீங்க என்னவென்றால் அவளுக்கு கல்யாணம் பன்ன்னும் சொல்றிங்க என்றார்

  அவர் இல்ல பாரு நம்ம பேத்தி சந்தோசமா இருக்கனும் என்றாள் அவளுக்கு சீக்கிரம் திருமணம் முடிக்கனும் என்றார் உறுதியாக

  கணவர் சொன்னதை கேட்ட பார்வதி அவருடைய பேச்சில் இருந்தே எதோ ஒரு பிரட்சனை என்று யுகித்தவர்
  செண்பகத்தால் எதாவது பிரச்சனையா என்றார் மேலும் இன்னிக்கு அதிதிக்கு ஏற்பட்ட காயம் அவர்களால் ஏற்பட்டதா என்றார்


  அவர் மௌனமாக இருக்க அப்ப அவங்கதான் காரணமில்ல இருக்க இப்பவே பெரியவனிடமும் சின்னவனிடமும் சொல்லி என்ன பன்றேன் என்றார் கோவமாக

  பாரு அவசரபடாதே இப்படி அவசரபட்டா நம்மபிள்ளைக்குதான் நாளைக்கு பிரட்சனை அதனால் இப்ப எதுவும் பேசவேண்டாம் பிறகு பேசிக்கலாம் என்றார்

  அது எப்படி அவனுங்க் பிள்ளையை சைக்கிள் இடிக்கலாம் என்றார் அவருக்கு அதிதி கடத்த முயற்சி செய்யபட்டாள் என்று தெரியாது

  தெரிந்து இருந்தால் முன்பே தன் மகன் மற்றும் பேரனிடம் பேசியிருப்பார் .


   
  SUMA89 likes this.
   
Loading...
Thread Status:
Not open for further replies.

Share This Page