Sponsored

Dhinam... Dhinam... Sila Thavalkal...!!!

Discussion in 'General Discussion' started by Jeyanthi Padmanabhan, Dec 30, 2012.

 1. rams

  rams Contributor New wings

  Messages:
  4,918
  Likes Received:
  3,264
  Trophy Points:
  113
  [​IMG]
  * வீட்ல ஒரு சின்னக் குழாயை மாட்டணும்னா, அதுக்கு ஏதாவது ஆப் இருக்கானு ப்ளேஸ்டோர்ல தேடுவாரு!

  * தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பான்னு ஃபாரின் ட்ரிப் போவாரு, இன்ஸ்டாகிராம்ல #worldtraveler #newfaces #exploring ஹாஷ்டேக் எல்லாம் தெறிக்க விடுவாரு. ஆனால், பக்கத்து ஊருக்குப் போறதுக்கு இன்னும் Google மேப்ஸ் அப்டேட் ஆகலையான்னு தலையைச் சொரிவாரு!
  [​IMG]
  மேற்கண்டதில ஒண்ணு இல்லை... அதுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தெரிஞ்சா, கண்டிப்பா நீங்க கல்யாணம் பண்ணியிருக்கிறது ஒரு yo-yo யோக்கியரைத்தான் தான்!
   
   
 2. rams

  rams Contributor New wings

  Messages:
  4,918
  Likes Received:
  3,264
  Trophy Points:
  113
  பார்வை பறிபோனால் என்ன? இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்!  ‘‘உடலளவில் குறைபாடு இருந்தாலும், திடமான மனசிருந்தா வாழறதுக்கான வழிகள் ஆயிரம் கிடைக்கும். அதுக்கு ஓர் உதாரணமா நானே இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பரிதி வர்மா. 90 சதவிகிதப் பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி. 21 வயது எனெர்ஜி. ஐஐஎம் லக்னோவில் பட்டப்படிப்பை முடித்த இளம் மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்குரியவர். தற்போது ஜெய்ப்பூரில் வங்கிப் பணியில் இருப்பவரை, அலைபேசியில் தொடர்புகொண்டோம்.

  ‘`என் சொந்த ஊர் ஜெய்ப்பூர். என் அப்பா அம்மா மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள். பிறந்ததிலிருந்தே எனக்கு Macular Degeneration என்கிற பார்வைக் குறைபாடு இருந்துச்சு. வளர வளர,
  90 சதவிகிதம் பார்வையை இழந்துட்டேன். என் அப்பாஅம்மா சென்னை, ஹைதராபாத்னு நிறைய ஊர்களுக்கு மருத்துவம் பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா, டாக்டர்ஸ் இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ‘ஆனாலும், என்னால சாதிக்க முடியும், யாரோட உதவியும் இல்லாம வாழ நான் பழகிக்குவேன், அந்தளவுக்கு என்னை வளர்த்துக்குவேன்’னு என் பெற்றோர்கிட்ட நான் சொன்னபோது, என்னை அவங்க நம்பினாங்க. நிறைய தன்னம்பிக்கையை எனக்குள்ள விதைச்சாங்க’’ என்று சொல்லும் பரிதி வர்மா, தன்னுடைய 13 வயதிலிருந்து இன்றுவரை புத்தகங்களைப் பிறர் வாசிக்கச் சொல்லிப் படித்துவருகிறார். பள்ளி, கல்லூரித் தேர்வுகளையும் இவர் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதிக்கொடுக்கும் ‘ஸ்க்ரைப்’ முறைப்படியே முடித்திருக்கிறார்.
  [​IMG]
  ‘‘புத்தகங்கள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, அதுக்கு எனக்கு ஒருத்தர் உதவ வேண்டிய கட்டாயம். பெற்றோர், நண்பர்கள்னு பலரும் ஆர்வமா முன்வந்து தங்களோட குரலைக் கொடுத்தாங்க. இப்படி என் குறையை வெல்ல நானும் என்னைச் சுத்தி இருக்கிறவங்களும் வழிகளைத் தேடித் தேடித் தீர்வை அடைஞ்சோம். என்னோட இரண்டு கண்கள் அம்மாவும் அப்பாவும்தாம். என் முன்னேற்றத்தில் உரமா நிக்கிறது அப்பான்னா, என் உலகத்தில் அன்புக்குத் துளியும் குறை வராம பார்த்துக்கிறவங்க அம்மா. ஓர் இளம்பெண்ணுக்கான குதூகல உலகத்தை என்னையும் அனுபவிக்க வைக்கிறாங்க என் தோழிகள். இப்படி என்னைச் சுற்றி இவ்வளவு பாசிடிவ் வைப்ரேஷன் இருக்கும்போது,

  அதைப் பயன்படுத்தி என்னை நான் முன்னேற்றிக்கணும்தானே?!

  ஜெய்ப்பூர்ல உள்ள இன்டர்நேஷனல் காலேஜ் ஆஃப் கேர்ள்ஸ்ல பி.பி.ஏ முடிச்சிட்டு, CAT எக்ஸாம் எழுதி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்(IIM) லக்னோவில் எம்.பி.ஏ மார்க்கெட்டிங் அண்ட் ஹெச்ஆர் படிச்சேன். எம்.பி.ஏ படிக்கும்போதே மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் வீடியோ புரொடக்‌ஷன்ல டிப்ளோமா முடிச்சேன். CAT எக்ஸாம் எழுத நான் கோச்சிங் போன ‘கிங்ஸ் இன்ஸ்டிடியூட்’ நண்பர்கள் எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்தாங்க. எனக்கு ஐஐஎம்ல சீட் கிடைக்கவும் ‘ஐஐஎம்மில் பட்டப்படிப்பை முடித்த இளம் மாற்றுத்திறனாளி’ என்ற பெருமை கிடைக்கவும் அவங்க எல்லோரும் முக்கியக் காரணம். ‘இந்தப் பொண்ணுக்கு இதெல்லாம் தேவையா?’னு என் பின்னாடி நின்னு கேலி செஞ்சவங்களைவிட, என் திறமையை உணர்ந்து, பாராட்டி, என்னால முடியும்னு நிரூபிக்க உதவின குரல்களும் மனங்களும்தான் என் இறுதிவரை என் நெஞ்சோட வரப்போகுது’’ என்றவர், தன் கற்றல் முறை, தினசரி வாழ்க்கை பற்றிப் பகிர்ந்தார்.

  ‘‘வகுப்பறையில் ஆசிரியர் நடத்துறதைக் காதுகளால் கூர்ந்து கவனிப்பேன். பார்வைக் குறைபாடு உள்ளவங்க படிக்க உதவுற NVDA என்கிற சாஃப்ட்வேர் மூலம் அனைத்துப் பாடங்களையும் கற்றேன். தகவல் தொழில்நுட்பத் துறை மாற்றுத்திறனாளிகளுக்கான தீர்வை யோசிச்சிட்டே இருக்கிறது சந்தோஷமா இருக்கு’’ என்று சொல்லும் பரிதி வர்மாவுக்கு, அவரது ஆப்பிள் ஃபோனின் வாய்ஸ் ஓவர் சாஃப்ட்வேர், ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் குறித்துத் தகவல் சொல்கிறது.

  ‘`என் ஆடைகளைத் தேர்வு செய்றது என் அம்மாதான். பார்வை பறிபோன ஆரம்பத்தில் அம்மாதான் எனக்கு டிரெஸ் போட்டுவிடுவாங்க. பிறகு, நானே கைகளால் தடவி உள்பக்கம் வெளிப்பக்கம் தெரிஞ்சு, டிரெஸ் போட்டுக்க ஆரம்பிச்சேன். ஆனா, அதுக்கு அதிக நேரம் ஆகும். குறிப்பா, பரீட்சை நேரத்துல அதுவே பிரச்னையா இருக்கும்.

  அம்மா அப்பா கைக்குள்ளயே வளர்ந்துட்டு, ஐஐஎம் லக்னோவில் சீட் கிடைச்சபோது முதன்முதலா வீட்டைவிட்டு வெளியேறி ஹாஸ்டல் வாழ்க்கையில பயணிக்க ஆரம்பிச்சேன். எனக்காக என் அப்பா லக்னோவில் வீடு பார்த்துக் குடியேறிடலாம்னு சொன்னாங்க. ஆனா, ‘நான் தனிச்சு இயங்கப் பழகணும்ப்பா’னு சொல்லி மறுத்துட்டேன். ஹாஸ்டல்ல நான் கத்துக்கிட்டது நிறைய. ஷாப்பிங் போறது, இசை, இயற்கையை ரசிக்கிறதுனு முழுக்க முழுக்க நண்பர்கள் சூழ் உலகு அது. என்னால யார் துணையும் இல்லாம இருக்க முடியும்னு என்னை நானே நம்பின தருணம் அது” எனும்போது நீர் பூக்கிறது அவர் கண்களில்.
  [​IMG]
  ’`மாதவிடாய் நாள்கள்தான் என் வாழ்வின் வலி மிகுந்த நாள்கள். ஒரு நாள் க்ளாஸ்ரூம்ல இருந்தப்போ திடீர்னு பீரியட்ஸ் வந்திடுச்சு. என்ன பண்ணுறதுனு தெரியாம அழ ஆரம்பிச்சிட்டேன். தோழிகள்தான் என்னை ரெஸ்ட்ரூமுக்கு அழைச்சிட்டுப் போனாங்க. வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் அந்தச் சம்பவத்துலேருந்து என்னால மீள முடியல. அதன்பிறகு, தினமும் டிரெஸ் மாத்துற மாதிரி நாப்கினையும் பயன்படுத்துறேன்’’ என்கிறவர், தடைகளைத் தாண்டிச் சாதித்தவற்றையும் பகிர்ந்துகொள்கிறார்.

  ‘`எனக்கு மாடலிங் பண்றது பிடிக்கும். என் தோழி ஒருத்தி ஃபேஷன் டிசைனர். அவளோட தூண்டுதலால் கேட் வாக்கும் பண்ணியிருக்கேன். பள்ளி நாள்களில் கால்பந்து என்னோட பொழுதுபோக்கா இருந்துச்சு. நண்பர்கள் குரலை ஃபாலோ செஞ்சே பந்தை அடிச்சிருவேன். அந்தப் பந்தைப்போலத்தான் பல விஷயங்களும். கவனம் இருந்தால் போதும், தடைகளை வென்றிடலாம்.

  என் வாழ்க்கையில இரண்டு விஷயங்களை பெரிய அங்கீகாரமா நினைக்கிறேன். ஒன்று, ஜெய்ப்பூர் முதல்வர் வழங்கின ‘Woman of the Future’ விருது. மற்றொன்று, ஒரு சேவை அமைப்பு வழங்கிய ‘Kailash Satyarthi Award’. 2015-ல் இந்த விருதுகளை வாங்கினபோது நான் இளங்கலைதான் முடிச்சிருந்தேன். அந்த விருதுகள்தான் நான் இன்னும் அதிகமா சாதிக்கணும்னு உத்வேகம் கொடுத்தன. 20 வயசுல இந்த உலகத்தையே நான் எட்டிப் பிடிச்சிட்ட மாதிரி உணர்ந்தேன்’’ என்பவர், தன் தற்போதைய பணிச்சூழல் பற்றிப் பேசினார்.

  ‘`இப்போ ஜெய்ப்பூர், ஜனலட்சுமி பேங்க்ல கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்ஸிக்யூட்டிவாக வேலை பார்க்கிறேன். பெரிய பதவி, பொறுப்புக்கு முன்னேறணும் என்பதுதான் என்னோட லட்சியம். சக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வாழ்த்து, சில வார்த்தைகள் சொல்லணும். நம்மளால எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு நம்ம திறமையை வெளிப்படுத்தணும்; பயன்படுத்தணும். வாய்ப்புகள் விரைவில் கிடைக்க வாழ்த்துகள்!”
   
  vaisri02 likes this.
   
 3. rams

  rams Contributor New wings

  Messages:
  4,918
  Likes Received:
  3,264
  Trophy Points:
  113
  காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!
  காய்கறிகள் - பழங்கள்... ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவை. ஆனால், இவற்றைக் கவனமாகக் கையாண்டால்தான் ஆரோக்கியம் நம்மை வந்துசேரும். இல்லையென்றால் அவதிப்பட வேண்டியிருக்கும். கடைகளிலிருந்து வாங்குவதில் தொடங்கி அவற்றைப் பாதுகாப்பாக வைப்பது, சரியாகக் கழுவுவது, சரியான முறையில் சமைப்பது என எல்லாவற்றிலும் அதீத கவனம் அவசியம்.

  ஏன் கழுவ வேண்டும்?

  பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலின் மேல் மண் ஒட்டியிருக்கும். அந்த மண்ணில் காணப்படும் ஈ.கோலை (E-Coli) என்னும் பாக்டீரியாதான் பல்வேறு உபாதைகளை அதிகளவில் நமக்கு ஏற்படுத்துகிறது. சரியாகக் கழுவாமல் சமைப்பதால் இந்தப் பாக்டீரியா நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். முறையாகக் கழுவிவிட்டால் பிரச்னை ஏதுமில்லை.
  [​IMG]
  பூச்சிகளைக் கொல்வதற்காகப் பயன் படுத்தப்படும் மருந்துகள் அனைத்தும் தீங்கு ஏற்படுத்தும் உயிரிகளை மட்டுமல்ல, நம் உடலையும் சேர்த்தே அழிக்கின்றன. ஆகவே, பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகத் தேய்த்துக் கழுவுவதன்மூலம் பூச்சிக் கொல்லிகளைப் பெரும்பாலும் நீக்க முடியும்.

  எப்படிக் கழுவுவது?

  ஆப்பிள்

  ஆப்பிள் பழத்தின் தோற்றத்தைப் பொலிவுடன் காட்ட அதன்மீது மெழுகு பூசப்படுகிறது. கத்தியால் அந்த மெழுகைச் சுரண்டி எடுத்துவிட்டு, குழாயில் தண்ணீரைத் திறந்துவிட்டு, அதில் ஆப்பிளை நன்றாகத் தேய்த்துக் கழுவுவதன்மூலம் மெழுகு அகன்றுவிடும். தோலை நீக்கி ஆப்பிளைச் சாப்பிடுவது நல்லது. இதனால், தோலிலுள்ள சத்துகள் கிடைக்காமல் போகலாம். ஆனால், மெழுகு உடலில் சேராமல் தடுக்கப்படும்.

  கிழங்குகள்

  கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மண்ணுக்குக் கீழே விளையும் பொருள்களில் அதிகளவு மண் ஒட்டியிருக்கும். ஆகவே, நன்கு சுத்தமான பிரஷ்ஷால் தேய்த்து மண்ணை அகற்றிவிட்டு, பிறகு நீரில் கழுவலாம்.

  காளான்

  காளான்கள் மிகவும் மென்மையாக இருக்கு மென்பதால் தண்ணீரை அதிக வேகத்தில் திறந்து விட்டுக் கழுவக் கூடாது. மெலிதான பிரஷ்ஷைப் பயன்படுத்தி மேலேயுள்ள அழுக்கை நீக்கிவிட்டு, ஈரமான துண்டால் துடைத்து எடுக்கலாம்.

  திராட்சை மற்றும் பெர்ரி வகைகள்

  திராட்சை, பெர்ரி போன்ற பழவகைகளை அதிகநேரம் தண்ணீரில் மூழ்கச் செய்யக் கூடாது.

  10 - 15 நிமிடங்கள் கல்லுப்பு போட்டு ஊறவைத்து, அவற்றைத் தனியாக எடுத்துக் குளிர்ந்த நீரை மெதுவாகத் திறந்துவிட்டு அதில் கழுவினாலே போதுமானது. கழுவியதும், உலர்ந்த துண்டின்மீது தனித்தனியாகச் சற்று நேரம் வைக்கலாம். இதனால், நசுங்கிய திராட்சையில் உள்ள கிருமிகள் மற்ற திராட்சைகளுக்குச் செல்லாமல் தடுக்க முடியும்.

  கீரை வகைகள்

  கீரையின் தேவையில்லாத அடிப்பகுதியை வெட்டிவிட்டு, மற்ற இலைகளைச் சிறிது மஞ்சள் கலந்து, குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்க வேண்டும். பின்னர், 4-5 முறை அலசி எடுக்கலாம்.

  மூலிகை இலைகள்

  துளசி, தூதுவளை போன்றவற்றை ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் இலைகளைப் போட்டு நன்றாக அலசி எடுக்கவும். காய்கறி, பழங்களைக் கழுவுவதற்காகக் கடைகளில் விற்கப்படும் எந்தவிதமான வெஜிடபிள் வாஷ்களை யும் வாங்கிப் பயன்படுத்த வேண்டாம். அவற்றில் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் உணவோடு சேர்ந்து உணவின் தன்மையையே மாற்றிவிடும். இது உடலுக்கு ஏற்றதல்ல.

  தண்ணீரில் மட்டும் கழுவப் பிடிக்காதவர்கள், இரண்டு லிட்டர் தண்ணீரில், மூன்று டேபிள்ஸ்பூன் அளவு ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, காய்கறி, பழங்களைக் கழுவலாம். ஆனால், வினிகரின் அளவு அதிகமானால், உணவின் சுவையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தும். காய்கறிகளைக் கடைகளிலிருந்து வாங்கி வந்ததும், உடனே கழுவிவிட்டுப் பிறகு பத்திரப்படுத்த வேண்டாம். கழுவிய காய்கறிகளை அதிகநேரம் வைத்தால் அவை விரைவில் கெட்டுவிடும். எனவே சமைப்பதற்கு முன்னர் கழுவினால் போதுமானது. காய்கறிகளைக் கழுவுவதற்கு முன் உங்கள் கைகளைக் கழுவ மறக்காதீர்கள்!
   
  flower likes this.
   
 4. rams

  rams Contributor New wings

  Messages:
  4,918
  Likes Received:
  3,264
  Trophy Points:
  113
  பைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு


  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
   
   
 5. rams

  rams Contributor New wings

  Messages:
  4,918
  Likes Received:
  3,264
  Trophy Points:
  113
   
 6. rams

  rams Contributor New wings

  Messages:
  4,918
  Likes Received:
  3,264
  Trophy Points:
  113
  ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் கவனிக்க வேண்டியவை
  [​IMG]  கட்டிடத்துக்கு வலுச்சேர்ப்பது கான்கிரீட் கலவைதான். அடித்தளத்திலிருந்து கூரைவரை கட்டிடம் கான்கிரீட் கலவையின் பலத்தால்தான் நிற்கிறது. கட்டிடம் உறுதித்தன்மையோடு இருக்க இந்த கான்கிரீட் கலவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், இந்த அவசர உலகில் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க ரெடிமிக்ஸ் கான்கிரீட் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
  ரெடிமிக்ஸ் கான்கிரீட் வாங்கும்போது, அதைத் தயாரித்த நிறுவனத்திடம் இருந்து கான்கிரீட் கலவை தயாரிக்கப்பட்ட விதம், அதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம், அளவு உள்ளிட்ட விவரங்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக மேல்தளம் அமைக்கும் பணியில், கம்பி கட்டும் பணி முடிந்த நிலையில் அதற்கு அடியில் முட்டுக் கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலகைகளில் கான்கிரீட் கசியும் அளவுக்குத் துளைகள், இடைவெளிகள் இருக்கின்றனவா என்பதை ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் சரிபார்க்கவும். அப்படி இல்லாவிட்டால் கான்கிரீட் உறுதியாக இல்லாமல் போக வாய்ப்புண்டு.
  ரெடிமிக்ஸ் கான்கிரீட் வந்தவுடன், கான்கிரீட் தரமாக உள்ளதா, எந்தப் பணிக்காக வாங்கப்படுகிறதோ அதற்கேற்றவாறு அது உறுதியாக இருக்கிறதா என்பதையும் உடனடியாகச் சரிபார்க்க வேண்டும். ஒருவேளை பயன்படுத்திவிட்டு, பின்னர் அதில் ஏதாவது குறைபாடு இருப்பது தெரியவந்தால், பல நிறுவனங்கள் அதற்குப் பொறுப்பேற்காமல் ஒதுங்கி விடுவார்கள். சரிபார்க்கும்போது, கான்கிரீட் கலவையின் திரவ நிலை என்ன, அதன் வெப்ப நிலை என்ன, ஜல்லிகளின் அளவு என்ன, நாம் சொன்ன கிரேடில் அது இருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்.
  கான்கிரீட்டைக் கொட்டும் போது, அதில் தேவையற்ற கட்டிகள் எதுவும் உள்ளனவா என்பதையும் கண் கொட்டாமல் பார்க்க வேண்டும். ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் காற்றின் அளவு, அது உள்ளே தங்கும் அளவுக்கு இருந்தால், கட்டிடத்தில் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது நாளடைவில் கட்டிடத்தின் உறுதியைக் குலைத்துவிடும்.
   
  vaisri02 likes this.
   
 7. rams

  rams Contributor New wings

  Messages:
  4,918
  Likes Received:
  3,264
  Trophy Points:
  113
  வழிகாட்டி மதிப்பு குறைப்பு லாபமா?
  [​IMG]  தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொழிலைப் பொருத்தமட்டில் கடந்த இரு பத்தாண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டது. அதிகமான நிலப் பறிமாற்றங்கள் நடந்தன. மட்டுமல்லாமல் கட்டுமானத் துறையும் இதனுடன் இணைந்து வளர்ந்தது. பத்திரப் பதிவுத் துறையின் வருமானமும் அதிகரித்தது. ஆனால் 2012-ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியது. இது தமிழக ரியல் எஸ்டேட்டை மிகவும் பாதித்தது.
  இதைத் தொடர்ந்து சிறிய அளவிலான கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கிட்டதட்ட தொழிலைவிட்டே வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி நகரமான சென்னையின் ரியல் எஸ்டேட் தொழிலும் பாதிப்புக்குள்ளானது. ஏற்கனவே கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம், மணல் தட்டுப்பாடு எனப் பல அம்சங்களாலும் கட்டுமானத் தொழில் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
  ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் வளர்ச்சிக்குச் சில மாற்றங்கள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என இந்தியக் கட்டுமானச் சங்கமும் கிரடாயும் கோரிக்கை வைத்திருந்தன. அவற்றுள் முக்கியமானது வழிகாட்டி மதிப்பு குறைக்க வேண்டும் என்னும் கோரிக்கை. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஜெ.ஜெயலலிதா நிலத்தின் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
  அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவும் பதிவுத் துறை வருமானத்தை உயர்த்தும் விதமாகவும் சமீபத்தில் தமிழக அமைச்சரவை நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது தமிழக ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்த அளவில் இது முக்கியமான அறிவிப்பு. ஆனால் இது தமிழக ரியல் எஸ்டேட் துறைக்கு நன்மை பயக்குமா என்பது கேள்விக்குறிதான்.
  “தமிழகக் கட்டுமானத் துறையைப் பொறுத்தவரை இது நெருக்கடிக் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே கட்டுமானப் பொருளான சிமெண்ட் விலை கட்டுக்குள் இல்லாமல் பெட்ரோல் விலை போல நாள்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. பெட்ரோல் விலைகூட சில சமயங்களில் குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வரும். ஆனால் சிமெண்ட் விலை உயர்ந்துகொண்டுதான் வரும். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நிலத்தைப் பதிவுசெய்வதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது” என இந்தியக் கட்டுமானச் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினரும் ஐடியன் கட்டுமான நிறுவனத்தின் தலைவருமான சிறில் கிறிஸ்துராஜ் கூறுகிறார்.
  [​IMG]
  இந்த வழிகாட்சி மதிப்பு குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பதிவுத் துறைத் தலைவர் அறிவித்துள்ளார். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதமாகக் குறைக்கபட்டுள்ளதுடன் பதிவுக் கட்டணத்தை 4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதாவது நில விற்பனை, பரிமாற்றம், தானம், செட்டில்மென்ட் போன்றவற்றுக்கான பத்திரப் பதிவுக் கட்டணம் மூன்று சதவீதம் உயர்ந்துள்ளது. முதலில் நிலத்தின் வழிகாட்டி மதிப்புடன் 7 சதவீத முத்திரைத்தாள் கட்டணமும் 1 சதவீதப் பத்திரப் பதிவுக் கட்டணமும் செலுத்தி வந்தனர். இப்போது நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் பதிவுக் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
  “வழிகாட்டி மதிப்பு குறைத்துள்ளதால் நிலப் பரிமாற்றம் கண்டிப்பாகக் கூடும் என எதிர்பார்க்கலாம். இதனால் பதிவுத் துறைக்கு வருமானமும் அதிகமாகும். ரியல் எஸ்டேட்டும் வளர்ச்சி பெறும். ஆனால் பதிவுத் துறைக் கட்டணத்தை மூன்று சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றால் ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெறும்” என சென்னை ரியல் எஸ்டேட் சங்கமான க்ரியாவின் தலைவர் அஸீம் அகமத் தெரிவிக்கிறார்.
  நிலத்தின் வழிகாட்டி மதிப்பு குறைப்பு என்பது வெளிப்படையாகப் பார்ப்பதற்கு பெரிய மாற்றமாகத் தெரிந்தாலும் இதனால் இப்போது உள்ளதைவிடப் பெரிய அளவிலான மாற்றத்தை ஒன்றும் ஏற்படப்போவதில்லை என்கிறார் சிறில். ஒரு சதுர அடி நிலத்துக்கு ரூ. 1000 நில வழிகாட்டி மதிப்பு இருந்ததை இந்த அறிவிப்பால் ரூ.670வாகக் குறையும். ஆனால் பத்திரப் பதிவுக் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
  உதாரணமாக 1200 சதுர அடி நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 1 சதுர அடிக்கு ரூ.1000 எனக் கொண்டால் பத்திரப் பதிவுக் கட்டணம் மொத்தமாகப் பார்த்தால் 7.8 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனால் இது ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவாது என்கிறார் சிறில். ஆனால் இந்தக் குறைப்பு ரியல் எஸ்டேட் துறையில் நிலப் பரிமாற்றங்கள் நடக்க உதவும் என்பது அஸீமின் உள்ளிட்ட அத்துறைசார் பெரும்பாலனவர்களின் கருத்தாக இருக்கிறது.
  [​IMG]
  அவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் மிக முக்கியமான இன்னொரு கோரிக்கை, அங்கீகாரம் இல்லாத மனைகளைப் பதிவுசெய்வதில் உள்ள சிக்கல்களைக் களைய வேண்டும் என்பது. “இதற்கும் தெளிவான வழிகாட்டுதல்களை அரசு ஏற்படுத்த வேண்டும்” என்கிறார் சிறில். நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் அதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Keywords: தமிழ்நாடு ரியல் எஸ்டேட், ரியல் எஸ்டேட் தொழில், ரியல் எஸ்டேட் வளர்ச்சி, கட்டுமானத் துறை, பத்திரப் பதிவுத் துறை, பத்திர பதிவு வருமானம், வழிகாட்டி மதிப்பு உயர்வு, ரியல் எஸ்டேட் பாதிப்பு, கைட்லைன் வேல்யூ, பத்திரப் பதிவுக் கட்டணம், சிறில் கிறிஸ்துராஜ்
   
   
 8. rams

  rams Contributor New wings

  Messages:
  4,918
  Likes Received:
  3,264
  Trophy Points:
  113
  ஏழ்மையிலும் செலவாகாத நோட்டுகள்: நாணய சேகரிப்பில் விளிம்புநிலை மனிதர்
  [​IMG]
  தனது சேகரிப்புடன் லக்‌ஷ்மையா.


  உணவகத்தில் க்ளீனர் வேலை, கட்டிடத் தொழில், டீ மாஸ்டர், சப்ளையர் என அடிப்படை விளிம்பு நிலை வேலைகளைப் பார்த்துக் கொண்டே 180 வகையான ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் சேகரித்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த லக்‌ஷ்மையா.
  குறிப்பிட்ட சிலவகை நோட்டுகளையும், நாணயங்களையும் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ள லக்‌ஷ்மையா, இந்த சேகரிப்புக்காக சுமார் ரூ. 4 லட்சத்தை செலவிட்டுள்ளார்.
  8 வயதில் தன்னுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேறிய லக்‌ஷ்மையா, வேலைக்காக நகரம் புகுந்தவர். அங்கே நூர்கான் பஜாரில் உள்ள உணவகத்தில் க்ளீனராகச் சேர்ந்தார். நகரத்தில் உள்ள ஏராளமான உணவகங்களில் பணியாற்றியுள்ள லக்‌ஷ்மையா, பிஎஃப் கொடுக்க வேண்டும் என்பதற்காக எந்த நிறுவனமும் 3 மாதங்களுக்கு மேல் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்கிறார்.
  கட்டிடத் தொழிலாளியாகவும் வேலை பார்த்த லக்‌ஷ்மையா, ஏராளமான புறக்கணிப்புகளுக்கு மத்தியில் எதையாவது வித்தியாசமாகச் செய்ய முடிவெடுத்தார். 1989-ல் இருந்து ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் சேகரிக்க ஆரம்பித்த அவர், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலான தொகையை அதற்கே செலவழித்தார்.
  1999-ல் தன் சொந்த கிராமத்துக்கே திரும்பிய அவர், அங்கே டீ- மாஸ்டராகப் பணிபுரியத் தொடங்கினார். தன் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்தவர், தொடர்ந்து நாணய சேகரிப்பில் ஈடுபட்டார்.
  திரை நடிகர்கள் குறித்த புத்தக சேகரிப்பு
  அத்துடன் இன்னொரு ஆச்சரியத் தகவலையும் அவர் பகிர்ந்துகொள்கிறார். திரைப்பட நடிகர்கள் மற்றும் பாடகர்கள் குறித்த புத்தகங்களையும், பத்திரிகைகளையும் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் லக்‌ஷ்மையா. இதற்காக ரூ. 8 லட்சம் செலவழித்திருக்கிறார்.
  60 வயதிற்குப் பிறகு, ஓய்வு பெற்றுள்ள லக்‌ஷ்மையா, தெலங்கானா அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகையைக் கொண்டு வாழ்கிறார். ஆனால் இன்னும் பணிபுரிய ஆர்வமாய் இருக்கும் அவர், அனைத்து நாடுகளின் ரூபாய் நோட்டுகளையும் சேகரிப்பதே எனது லட்சியம் என்கிறார்.
   
   
 9. rams

  rams Contributor New wings

  Messages:
  4,918
  Likes Received:
  3,264
  Trophy Points:
  113
  இது வெறும் சுவர் அல்ல.. அன்பின் அடையாளம்


  [​IMG]  சுவர் என்றாலே அது ஏதோ தடுப்பு சம்பந்தமானது என்பதே நம் அனைவரது நினைவிலும் முதலில் வந்துநிற்கும். ஆனால், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பல் மருத்துவர் ஒருவர் வெறும் சுவரை அன்பை, இரக்கத்தை வெளிப்படுத்தும் இடமாக மாற்றியிருக்கிறார். அந்த யுவதியின் பெயர் ஷ்ரவானி சீனு நாயக்.
  அன்பின் சுவர் (A Wall of Kindness) இப்படித்தான் ஷ்ரவானி அந்த சுவருக்கு பெயரிட்டுள்ளார்.
  கேரள மாநிலம் கோழிக்கோடில் சிலர், தங்களை அடையாளப்படுத்தாமல் இலவச உணவு கூப்பன்களை விநியோகித்து வருகின்றனர். குறிப்பிட்ட சில இடங்களைத் தேர்வு செய்து அங்கு கூப்பன்கள் கிடைக்குமாறு செய்துள்ளனர். பசியால் வாடுபவர் எந்த தயக்கமும் இன்றி குறிப்பிட அந்த இடங்களுக்குச் சென்று உணவு கூப்பனை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இந்த உன்னதமான விஷயத்தை செய்பவர்களின் அடையாளம் இதுவரை யாருக்கும் தெரியாது. அடையாளம் ஏதும் தேடாமல் செய்யப்பட்ட அந்த உதவி பெருமளவில் பேசப்படுகிறது.
  இதனால் ஈர்க்கப்பட்டு, அதே பாணியில் சேவை செய்ய நினைத்தார் ஷ்ரவானி. இச்சேவையை தான் மட்டுமே செய்வதைவிட சேவை மனப்பான்மை உடைய பலரையும் இணைக்க நினைத்தார். அதன் விளைவே அன்பின் சுவர்.
  பிரிக்கும் சுவர் இல்லை.. இணைக்கும் சுவர்:
  தற்போதும் தெலங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் அடையாளத்தைத் தெரிவிக்காமல் தங்களிடம் உள்ள தேவையற்ற பொருட்களை பிறர் பயன்பாட்டுக்கு பலரும் அளிக்கிறார்கள்.
  ராஜீவ் காந்தி மைதானத்துக்கு எதிரே லயன்ஸ் மருத்துவமனை சுற்றுச்சுவரின் ஒரு சிறு பகுதியைத்தான் அன்பின் சுவராக மாற்றப்பட்டிருக்கிறது.
  அந்த சுவரில் தெலுங்கில் "இது அன்பின் சுவர்.. இங்கே உங்களுக்குப் பயன்படாத புத்தகங்கள், உடைகள், காலணிகள், பழைய பொருட்களை விட்டுச் செல்லுங்கள்" என எழுதப்பட்டுள்ளது.
  முதன்முதலில் கடந்த ஜூன் 4-ம் தேதி, ஒரு சிறுமி தனது புத்தகப் பையை விட்டுச் சென்றார். அடுத்தடுத்த நாட்களில் அங்கு உடைகள், காலணிகள், புத்தகங்கள் இன்னும் பல வகையானப் பொருட்கள் வைக்கப்பட்டன. அங்கே வைக்கப்படும் பொருட்களை தேவைப்படும் ஏழை எளியோர் மகிழ்ச்சியுடன் எடுத்துச் செல்கின்றனர்.
  உதவி செய்பவர்களின் அடையாளமும் இல்லை உதவி பெறுபவர்களின் அடையாளமும் இல்லை. ஆனால், இங்கு அன்பு பரிமாறப்படுகிறது.
  இந்த சுவர் தற்போது வெறும் சுவராக மட்டும் இல்லாமல் பலரை இணைக்கும் சுவராக இருக்கிறது.
  தனது முயற்சி குறித்து ஷ்ரவானி கூறும்போது, "முதன்முதலில் இந்த யோசனை தோன்றியவுடன் அது குறித்து எனது கணவர் மருத்துவர் சீனு நாயக்கிடம் கூறினேன். அவரின் ஒத்துழைப்பு, ஊக்கத்துடன் இப்பணியை சிறப்பாக செய்ய முடிந்தது" என பெருமிதம் பொங்கக் கூறினார்.
   
  flower, vaisri02 and SUMA89 like this.
   
 10. rams

  rams Contributor New wings

  Messages:
  4,918
  Likes Received:
  3,264
  Trophy Points:
  113
  சிபில் ஸ்கோர் பற்றிய இந்த அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்!


  CIBIL
  கடன் சம்பந்தப்பட்ட விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: “எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?
  [​IMG]
  CIBIL என்றால் என்ன?
  Credit Information Bureau (India) Limited. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் ( சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை ) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.
  யாருடைய விவரங்கள் சிபிலில் இருக்கும்?
  க்ரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும்.
  இதனால் என்ன பயன்?
  நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து சிபில் பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும்.
  கடன் பெறுவோர் விவரங்களை சிபில் எப்படிப் பெறுகிறது?
  ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும்.
  என்னென்ன தகவல்கள் இடம் பெறும்?
  க்ரெடிட் கார்ட் அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.
  ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்?
  [​IMG]
  சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 750க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும்.
  சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி?
  சிபில் இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.
  தவறான விவரங்கள் இருந்தால் எப்படி சரி செய்வது?
  சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி சரி செய்துக் கொள்ளலாம். உங்கள் வங்கி, சிபில் ரிப்போர்ட்டில் தவறுகளை சரி செய்துவிடும்.
  சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?
  க்ரெடிட் கார்ட் அல்லது பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பிப்பது, சரியாக கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது ஆகியவை உங்கள் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.
  கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரை குறைக்குமா?
  ஆமாம். நீங்கள் ஒவ்வொருமுறை க்ரெடிட் கார்ட் அல்லது கடனிற்கு விண்ணப்பிக்கும் போதும், சிபிலில் உங்களைப் பற்றிய விவரங்கள் அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையாக கருதப்படும். ஆண்டிற்கு 2 முறைக்கும் மேல் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அடுத்த வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கும்.
  சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?
  [​IMG]
  இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.
  ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும். நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
  பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.
  அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.
  நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?
  குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் ஏதும் இருந்தால் அதை வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அடுத்தவர் கடனெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம் க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்.
   
  flower likes this.
   

Share This Page


Sponsored