Sponsored


Dhinam... Dhinam... Sila Thavalkal...!!!

Discussion in 'General Discussion' started by Jeyanthi Padmanabhan, Dec 30, 2012.

Sponsored


 1. rams

  rams Contributor New wings

  Messages:
  4,979
  Likes Received:
  3,310
  Trophy Points:
  113

  Sponsored


  மார்கழிச் சங்கு மரபை மறக்காத மடப்புரம் துரைராஜ்


  [​IMG]
  சங்கு ஊதி துரைராஜ்
  [​IMG]
  கடந்த மார்கழி இரவில் ஆக்கூர் பகுதியில் சங்கு ஊதிச் செல்லும் துரைராஜ்.
  [​IMG]
  பொங்கலின்போது, சங்கு ஊதி துரைராஜுக்கு பொருட்கள் வழங்கும் பெண்.
  [​IMG]

  மா
  ர்கழி மாதத்தில் வரும் இரவுகள் சங்கொலி கேட்காமல் விடிந்ததில்லை. மார்கழிச் சங்கு வழக் கொழிந்து போனதால் அதைப்பற்றி இன்று பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது ஒரு காலம்.
  கிராமத்து ஓட்டுவீட்டில் மார்கழிப் பனியில் போர்வைக்குள் முடங்கி ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது சில சமயம் நடுநிசியிலும், சில நேரம் அதிகாலையிலும் கேட்கும் அந்த சங்கொலியும் அதைத் தொடர்ந்து வரும் மணியோசையும் சிறு வயதில் பயத்தை கொடுக்கும். பின்னர் அதுவே ஒருவித அமானுஷ்யத்தை ஏற்படுத்தியது.
  இப்படித்தான் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவயதினராக இருந்த பலருக்கு மார்கழிச் சங்கு அறிமுகமாகி இருக்கும். மார்கழி மாதத்தில் நடக்கும் அதிகாலை பஜனைக்கு மக்களை துயிலெழச் செய்யவே இந்த சங்கநாதம் இசைக்கப்பட்டது என பிரிதொரு நாளில் தெரியவந்தது.
  சங்கொலியை எழுப்புவதற்காகவே ஓவ்வொரு பகுதியிலும் அதற்கென ஆட்கள் இருந்தனர். மார்கழி மாதம் முழுவதும் அவர்களுக்கான பணி இதுதான். பின்னர் வரும் பொங்கலன்று பச்சரிசி உள்ளிட்ட பொருட்களை சங்கு ஊதிகளுக்கு மக்கள் வழங்குவார்கள். அறுவடை நெல்லும் வழங்குவதுண்டு.
  மார்கழி மாத்தில் ஒலித்த சங்கு கால மாற்றத்தால் ஒழிந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நாகை மாட்டத்தின் பல பகுதிகளில் சங்குகள் ஒலித்து வந்தன. தற்போது மார்கழி இரவுகள் நிசப்தமுடன் கழிகின்றன. சங்குகளும் இல்லை.., சங்கு ஊதிகளும் இல்லை.
  இப்படியான நிலையில்தான் பெரிய மடப்புரம் துரைராஜ் இன்றும் பாரம்பரியத்தை கைவிடாமல் மார்கழிச் சங்கை ஊதிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சில நாட்கள் முன்பு கடந்து போன மார்கழி மாதத்தில் கூட சங்கு முழங்கியிருக்கிறது.
  தொன்று தொட்ட பாரம்பரியத்தை இன்றளவும் தோளில் சுமந்துள்ள அந்த பெரியவருக்கு 90 வயதுக்கு மேல் இருக்கும். செம்பனார்கோவில் அருகேயுள்ள முக்கரும்பூர் பெரிய மடப்புரம் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் மனைவி தனலட்சுமியுடன் வசித்து வருகிறார். நாம் சங்கு ஊதியை சந்தித்தோம். . “என்னுடைய அப்பா பெயர் ஆழ்வார். மார்கழி மாதத்தில் அப்பா சங்கு ஊத போகும்போது சின்ன வயசிலேர்ந்து நானும் அவர் கூடவே போவேன். அப்புறம் அப்பாவுக்கு பிறகு நான் இந்த வேலையை செய்ய ஆரம்பிச்சேன். எத்தனை வயசிலேர்ந்து செய்ய ஆரம்பிச்சேன்னு எனக்கே தெரியாது. இப்போ எனக்கு எத்தனை வயசு ஆகுதுன்னும் தெரியாது. உத்தேசமா 90 வயசுக்கு மேல இருக்கும்.
  மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். இம்மாதத்தில் மக்களை நோய், நொடிகள், பேய் பிசாசுகள் அண்டும் என மக்கள் அப்போது பயந்தார்கள். காலரா நோய், கடுமையான பஞ்சம் வந்தப்பல்லாம் அந்த பயம் அதிகமாக இருந்தது. இந்த சங்கு ஊதுவதால் பேய், பிசாசுகள், நோய்கள் அண்டாது என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.
  நாதத்தில் ஓங்கிய நாதம் சங்கநாதம். மிக பலம் பொருந்திய நாதம் இது. அதனால்தான் சங்கொலி எழுப்பப்படுது. நம்மால முடியிற வரைக்கும் செய்யணும்ங்கிற உறுதியோட விடாம இந்த வேலையை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.
  மார்கழி மாதத்துல 30 நாளும் சுற்று வட்டாரத்தில் உள்ள மாத்தூர், முக்கரும்பூர், மடப்புரம், ஆக்கூர் உள்ளிட்ட கிரமங்களுக்கு போய் சங்கு ஊதிட்டு வருவேன். முதல் நாள் மாலையே வீட்டிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை வரை இதைச் செய்வேன். பல இடங்களில் இந்த சங்கின் ஓசை மறைந்துவிட்டது” என வேதனைப்பட்ட துரைராஜ் மிகவும் துயரப்படும் விஷயம் “எனக்கு அப்புறம் இந்த வேலையை செய்ய யாருமில்லை” என்பதுதான்.
  நாடகக் கலைஞரும் கூட
  சங்கை ஊதிக் கொண்டு, சேமங்கலம் என்ற வட்ட வடிவ பித்தளை தட்டில் மணியோசை போல தட்டிக்கொண்டு செல்லும் இவரை தெரியாதவர்கள் இல்லை.
  ஆக்கூரைச் சேர்ந்த கே.கார்த்திகேயன் கூறும்போது, “மார்கழி மாதம் 30 நாட்களும் கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் தனது வீட்டிலிருந்து பல கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு பெரியவர் துரைராஜ் நடந்தே செல்வார். பகல் பொழுதில் இவர் சைக்கிளில் சுற்றி வருவதை பார்க்கலாம். எனக்குத் தெரிந்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வேலையை விடாமல் செய்து கொண்டிருக்கிறார். இவர் சிறந்த நாடகக் கலைஞரும் கூட. ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியில் இவரது மிக அபாரமான ஆஞ்சநேயர் வேட நடிப்பால் அந்தக் காலத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர்” என்றார்.
  நீங்க நாடகக் கலைஞராமே எனக் கேட்டபோது, பல நாடகக் கம்பெனிகளில் பணியாற்றி இருப்பதாகவும் தஞ்சாவூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆஞ்சநேயர் வேடமிட்டு நடித்துள்ளதையும் நினைவு கூர்கிறார்.
  அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்பதால் இரவு நேரத்திலேயே புறப்பட்டு சென்று சங்கு ஊதத் தொடங்கி விடுவதால் சிலப் பகுதிகளில் நள்ளிரவிலும், சில பகுதிகளில் அதிகாலை நேரத்திலும் சங்கநாதம் கேட்கும். அதனால்தான் “நீ ஊதுற சங்கை ஊது, நான் எழுந்திரிக்கிறப்போ எழுந்திரிக்கிறேன்” என்ற வழக்கு மொழி பிறந்ததாக கூறுவதுண்டு.
  காலில் செருப்பு இல்லாமல் சென்றுதான் சங்கு ஊத வேண்டுமாம். அதனால் இவர் சங்கு ஊதும் நாட்களில் செருப்பு அணிவதில்லை. பயத்தைப் போக்கும் நோக்கிலும், தீயன அண்டாது என்ற நம்பிக்கையிலும் இவரிடம் பலர் விபூதி வாங்கிப் பூசிக்கொள்வது வழக்கமாக இருக்கிறது.
  ஒரு தலைமுறையே அறிந்திராத ஒரு வழக்கத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்துவரும் சங்கு ஊதி துரைராஜின் சேவை, தொன்றுதொட்ட நமது பாரம்பரியத்தை அழிந்துபோகாமல் தன் உயிர் உள்ளவரை தக்க வைக்க வேண்டும் என வேட்கையாகவே தெரிகிறது. தொடரட்டும் துரைாஜின் பணி.
   
   
 2. rams

  rams Contributor New wings

  Messages:
  4,979
  Likes Received:
  3,310
  Trophy Points:
  113
  பட்ஜெட் 2018-19: விலை கூடும், குறையும் பொருட்கள்

  [​IMG]
  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், மொபைல் போன், மோட்டார் சைக்கிள், பழரசங்கள், காலனிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை இனி அதிகரிக்கும்.
  2018-19-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.
  அதில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும்நாட்களில் இந்த வகை பொருட்கள் விலை உயரும்.
  அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து தோல் உரிக்காமல் இறக்குமதி செய்யப்படும் முந்திரி, சோலார் பேனலில் பயன்படுத்தப்படும் ஒருவகை கண்ணாடி, காதுகேளாதோருக்கான இயந்திரங்களுக்கான பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளன.
  விலை உயரும் இறக்குமதி பொருட்கள்
  1.
  இறக்குமதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள்
  2. மொபைல் போன்கள்
  3. வெள்ளி, தங்கம்
  4. காய்கறிகள், பழரசங்கள், குறிப்பாக ஆரஞ்சு, கிரான்பெரி
  5. சன்கிளாஸ் (மூக்குக் கண்ணாடி)
  6. சோயா புரோட்டீன் தவிர்த்த சமையலுக்கு பயன்படுக்கும் பொருட்கள்
  7. பெர்பியூம் (வாசனை திரவியம்), கழிவறை பொருட்கள்
  8. சன்ஸ்கீரன், சன் டேன், மணிகியூர், பெடிகியூர் லோஷன்கள்
  9. பற்பசை, பல்மருத்துவத்தில் பயன்படும் பேஸ்ட், பவுடர்கள்
  10. முகச்சவரம் செய்ய பயன்படும் பொருட்களுக்கான மூலப்பொருட்கள்.
  11. டியோடரன்ட்டுகள்
  12. பஸ், டிரக்கில் பயன்படும் ரேடியல் டயர்கள்
  13. பட்டுத் துணி
  14. காலணிகள்
  15. ஸ்மார்ட் வாட்ச்
  16. எல்சிடி, எல்இடி, டிவி பேனல்கள்
  17. நாற்காலி, மேசைகள்
  18. மெத்தைகள்
  19. விளக்கு
  20. கைக்கடிகாரம், பாக்கெட் கடிகாரம், கடிகாரம்
  21. பொம்மைகள், குழந்தைகள் விளையாடும் சிறு பொம்மைகள்.
  22. வீடியோ கேம் பொருட்கள்
  23. உள்ளரங்கு, மைதான விளையாட்டுகளில் பயன்படுத்தும் உபகரணங்கள்.
  24. சிகரெட், லைட்டர்கள், மெழுகுவர்த்தி
  25. பட்டம்
  26. சமையல் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய்
  விலை குறையும் இறக்குமதி பொருட்கள்
  1.
  கச்சா முந்திரி
  2. சோலார் பேனல் அமைக்க பயன்படும் ஒருவகை கண்ணாடி
  3. காதுகேளாதார் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான பொருட்கள்.
  4. மின்னணு பொருட்களுக்கு பயன்படும் சிறிய திருகு உள்ளிட்ட பொருட்கள்.
   
   
 3. rams

  rams Contributor New wings

  Messages:
  4,979
  Likes Received:
  3,310
  Trophy Points:
  113
  மத்திய பட்ஜெட் 2018: 50 முக்கிய அம்சங்கள்

  2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.
  இந்நிலையில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  பட்ஜெட்டின் 50 முக்கிய அம்சங்கள்:
  1. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது.
  2. விவசாயிகளின் வருவாய்க்கு உயர்த்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  3. இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும்.
  4. நடப்பு நிதிநிலை ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி விகிதம் 7.2- 7.5 சதவீதத்தை எட்டும்.
  5. அரசியல் லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.
  6. வேளாண்மை உற்பத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
  7. அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு.
  8. வரி ஏய்ப்பு குறைந்துள்ளது.
  9. அரசு கொள்கை முடிவு எடுப்பதில் இருந்த தேக்க நிலையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். -அருண் ஜேட்லி
  10. பிரதமர் கிராம சாலை திட்டம் வேளாண் மையங்களை இணைக்கும்
  11. வேளாண் கட்டமைப்பு வசதிகளுக்கு 22000 கோடி ஒதுக்கீடு
  12. இயற்கை வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க நடவடிக்கை
  13. இந்தியாவின் பொருளாதாரம் 2.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  14. விவசாயிகள் கடன் அட்டைத்திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறைக்கும் விரிவாக்கம்
  15. சேவைகள் மக்களின் இல்லத்திற்கே கொண்டு செல்லப்படுகின்றன. அல்லது அவரது வங்கிகளை அடைகின்றன.
  16. வேளாண் ஏற்றுமதிக் கொள்கை எளிதாக்கப்பட்டுள்ளது.
  17. உணவு பதப்படுத்துதல் துறைக்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
  18. வேளாண் ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் அளவை எட்ட வாய்ப்பு.
  19. 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும் -நிதி அமைச்சர்
  20. மீன் மற்றும் இறால் வளத்துறைக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  21. கிராமப்புறங்களைச் சேர்ந்த 8 கோடி மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
  22. டெல்லியில் மாசுக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய நடவடிக்கை.
  23. அடுத்த நிதி ஆண்டிற்குள் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.
  24. 2020-ல் அனைவருக்கும் வீடு. கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதிக்கென பிரத்யேக நிதி.
  25. 2022-க்குள் அனைவருக்கும் வீடு.
  26. ஊரக சாலைத்திட்டத்தின் கீழ் 3 கோடியே 21 லட்சம் ஊரக வேலை வாய்ப்பு.
  27. ஆசிரியர் பயிற்சியில் ஒருங்கிணைந்த பி.எட் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  28. பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சித் தர புதிய திட்டம். ஒருங்கிணைந்த பி.எட். திட்டம் அறிமுகம்.
  29. கல்வித்துறைக்கு ரூ 1 லட்சம் கோடி முதலீடு. நவோதையா பள்ளிகள் அடிப்படையில் புதிய ஏகலைவன் பள்ளிகள்.
  30. நேர்மையான ஊழலற்ற அரசை வழங்க உறுதி.
  31. ஊரகப் பகுதிக்கு கூடுதல் நிதி வழங்க முடிவு.
  32. வளர்ச்சிப் பாதையில் உற்பத்தித் துறை.
  33. வேளாண், கல்வி, ஊரகத்துறை, சுகாதாரம் ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம்.
  34. சுகாதார இந்தியாவை உருவாக்க ஆயுஷ்மான் இந்தியா திட்டம்.
  35. அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து.
  36. 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி வீதம் ஏற்படுத்தப்படும்.
  37. 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
  38. ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு.
  39. சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கு 1.35 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு .
  40. கங்கையை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் .
  41. முத்ரா கடன் திட்டத்திற்கு ரூ 3லட்சம் கோடி.
  42. மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்.
  43. ஷெட்யூல்டு வகுப்பினர் நலனுக்காக ரூ 56919 கோடி ஒதுக்கீடு.
  44. காசநோயாளிகள் நலனுக்காக ரூ 600 கோடி ஒதுக்கீடு -நிதி அமைச்சர்
  45. வேலைவாய்ப்பை பெருக்குவதே அரசு கொள்கைத் திட்டங்களின் மையம் ஆகும் .
  46. ஸ்மார்ட் மற்றும் அம்ரூத் நகரங்களுக்கு ரூ 2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு
  47. நாட்டின் 10 பிரபலமான சுற்றுலாத் தலங்கள் நாட்டின் அடையாளமாக உயர்த்தப்படும் .
  48. கட்டமைப்புத் துறையில் ரூ 50 லட்சம் கோடி முதலீடு செய்ய பரிசீலனை
  49. 9000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை நடப்பு நிதி ஆண்டிலேயே அமைத்து முடிக்கத் திட்டம்.
  50. 4000 கி.மீ. ரெயில்வே பாதைகள் மின் மயமாக்கப்படும்.
   
   
 4. rams

  rams Contributor New wings

  Messages:
  4,979
  Likes Received:
  3,310
  Trophy Points:
  113
  சரக்கு வாகன ஓட்டிகளே மறந்துவிடாதீர்கள்...இன்று முதல் 'இ-வே' பில் கட்டாயம்

  தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் இ-வே பில் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
  சரக்கு வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ பொருட்களை எடுத்துச் செல்லும் போது சரக்கு வாகன ஓட்டிகள் இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகும்.
  கடந்த 15 நாட்களாக சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இ-வே பில் முறை நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று முதல் முறைப்படி இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகிறது.
  இ-வே பில் என்றால் என்ன?
  மாநிலங்களுக்கு இடையே சரக்குகளை எடுத்துச் செல்லும்போது எந்த விதமான இடையூறும் இன்றி எடுத்துச் செல்ல இ-வே பில் நடைமுறை உதவும். அதாவது, ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு அனுப்பினாலோ அல்லது 10 கி.மீ தொலைவுகூட அனுப்பினாலோ, ஜிஎஸ்டிஎன் போர்டலில் சென்று இ-வே பில்லை உருவாக்க வேண்டும்.
  அதாவது பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால், ஜிஎஸ்டி வர்த்தகரின் பெயர், எந்த இடத்துக்கு பொருட்கள் செல்கிறது, இன்வாய்ஸ் எண், தேதி, பொருட்களின் மதிப்பு, எச்எஸ்என் கோட், வாகனத்தின் எண், அல்லது ரயில்வே, விமானம் குறித்த விவரம், காரணம், வாகன எண் ஆகியவற்றை அந்த இ-வே பில்லில் குறிப்பிட வேண்டும். ரூ. 50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை 10கி.மீ தொலைவு அனுப்பினால்கூட இந்த பில் கட்டாயம். ஒரு பொருள் பலரிடம் கைமாறி 3 பில்கள் போட்டிருந்து அதன் கூட்டு மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் இ-வே பில் கட்டாயமாகும்
  இ-வே பில் இல்லாவிட்டால் என்ன ?
  இ-வே பில் இல்லாமல் சரக்குகளை அனுப்பி, அது வருவாய் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், சரக்குகளின் மதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு அபராதம் சரக்கின் உரிமையாளருக்கு விதிக்கப்படும்
  எந்த மாநிலங்களில் அமலாகிறது ?
  தமிழகம், ஆந்திரா, பிஹார், கர்நாடகம், புதுச்சேரி, சிக்கிம், தெலங்கானா, கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 14 மாநிலங்களில் அமலாகிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை வேகமாக கொண்டு செல்லவும், சுங்கச்சாவடிகளில் லாரிகள் காத்திருப்பை தவிர்க்கவும் இந்த நடைமுறை பயன்படும்.
  எங்கு தேவையில்லை
  துறைமுகம், விமான நிலையம், ஏர் கார்கோ நிலையம், சுங்கவரி அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து பொருட்களை கொண்டு செல்லும் போது பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், இ-வே பில் தேவையில்லை.
  எத்தனை மணிநேரம் செல்லுபடியாகும் ?
  சரக்குகளை கொண்டு செல்லும் தொலைவைப் பொறுத்து இ-வே பில் செல்லுபடியாகும். 100 கி.மீ தொலைவுக்கு உள்ளாக ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு சென்றால், அந்த இ-வே பில்லின் காலக்கெடு பில் போடப்பட்ட நேரத்தில் இருந்து 24 மணி நேரம் மட்டும் செல்லுபடியாகும். 100 கி.மீ மேலாக இருந்தால், ஒவ்வொரு 100 கி.மீட்டருக்கும் கூடுதாலாக ஒருநாள் செல்லுபடியாகும். இ-வே பில் காலக்கெடு முடிந்துவிட்டால், புதிய இ-வே பில் சரக்குகளின் உரிமையாளரால் உருவாக்கப்பட்டு அதன்பின்புதான் சரக்குகள் கொண்டு செல்லப்பட வேண்டும் . இல்லாவிட்டால்,அபராதம் விதிக்கப்படும். இந்த இ-வே பில் லாரிகள் மட்டுமின்றி, விமானம், ரயில் மூலம் அனுப்பப்படும் சரக்குகளுக்கும் கட்டாயமாகும்.
   
   
 5. rams

  rams Contributor New wings

  Messages:
  4,979
  Likes Received:
  3,310
  Trophy Points:
  113
  வருங்கால வைப்பு நிதியில் சலுகை: பட்ஜெட்டில் பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல்

  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பெண்கள் சம்பளத்தில் இருந்து செலுத்தும் தொகை 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  ஆனால், இந்த சலுகை இந்த அறிவிப்பு அமலுக்கு வந்தபின் புதிதாக பணியில் சேரும் பெண்களுக்கே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை இன்று (வியாழன்) தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெண்கள் பயன்பெறும் வகையில் சில அறிவிகப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:
  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பெண்கள் சம்பளத்தில் இருந்து செலுத்தும் தொகை 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பெண்கள், ஆண்கள் என அனைவருமே 12 சதவீதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்க வேண்டும். இதில் பெண்களுக்கான பங்களிப்பு தொகை 8 சதவீதமாக பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பணி வழங்கும் நிறுவனங்கள் தற்போது செலுத்தும் பங்கு தொகையில் எந்த மாற்றமும் இருக்காது.
  இதன் மூலம் பெண்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தின் அளவு தற்போதை உள்ளதை விடவும் இனிமேல் சற்று கூடுதலாக இருக்கும். எனினும் புதிதாக பணியில் சேரும் பெண்களுக்கே இந்த திட்டம் பொருந்தும்.
   
   
 6. rams

  rams Contributor New wings

  Messages:
  4,979
  Likes Received:
  3,310
  Trophy Points:
  113
  தினமும் காலையில் ஒரு டம்ளர் சாத்துக்குட&

  தினமும் காலையில் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
  ஜூஸ்களிலேயே மிகவும் ஆரோக்கியமானது சாத்துக்குடி ஜூஸ் எனலாம். ஏனெனில் இது எந்த பிரச்சனை இருந்தாலும் குடிக்க ஏற்ற ஓர் அற்புதமான ஜூஸ். 6 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரும் குடிக்க ஏற்றதும் கூட. சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த சாத்துக்குடியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் தனித்துவமான சுவை அனைவருக்குமே பிடிக்கும் வகையில் இருக்கும். இப்படிப்பட்ட சாத்துக்குடி விலைக் குறைவில் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. இந்த சாத்துக்குடியை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால் உடலைத் தாக்கும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். Proven Health Benefits of Drinking Sweet Lime Juice in the Morning ஏனெனில் சாத்துக்குடியில் வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்திருப்பதோடு, இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளன. சாத்துக்குடியில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவெனில், இதில் கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கள் மிகவும் குறைவு.
  சாத்துக்குடியின் ஜூஸில் மட்டுமின்றி, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் தோலை உலர வைத்து பொடி செய்து, குடிக்கும் பானங்களில் சிறிது சேர்த்து குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையடையும். சரி, இப்போது ஒருவர் தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்துக் காண்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

  இரைப்பைக் கோளாறுகள்:

  இரைப்பைக் கோளாறுகள் இரைப்பைக் கோளாறுகளான அஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவற்றை சரிசெய்ய சாத்துக்குடி உதவும். இதற்கு குறிப்பிட்ட அஜீரண கோளாறுகளைத் தடுக்கும் திறன் உள்ளது. மேலும் இது இரைப்பையில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும். முக்கியமாக இதனை காரமான அல்லது சூடான உணவுகளை உட்கொண்ட பின் குடித்தால், செரிமானம் சீராக நடைபெறும்.

  அடிநா சதை அழற்சி :
  அடிநா சதை அழற்சி காலையில் எழுந்ததும் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், அது அடிநா சதையில் உள்ள அழற்சியை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அடிநா சதை அழற்சியானது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படக்கூடியவை. சாத்துக்குடியில் உள்ள வைட்டமின் சி, இந்த அழற்சியை எதிர்த்துப் போராடி, உடலை நோய்த்தொற்றுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.

  ஆரோக்கியமான செரிமானம்:
  ஆரோக்கியமான செரிமானம் சாத்துக்குடி ஜூஸ் செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்கும். அதுவும் இது கார்போனிக் அமிலம் மற்றும் வாய்வை வெளியேற்றி, செரிமானத்தை மேம்படுத்தும். ஆய்வுகளில் சாத்துக்குடி ஜூஸ், குடலின் இயக்கத்தை அதிகரித்து, நாள்பட்ட மலச்சிக்கலை சரிசெய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால், சாத்துக்குடி ஜூஸை சில நாட்கள் தொடர்ந்து குடித்து வாருங்கள்.

  எடை குறைவு:
  எடை குறைவு எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள், தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸைக் குடிப்பது நல்லது. அதிலும் 2-3 மாதங்கள் தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். அதே சமயம் உணவு பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடும், சரியான உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம்.

  இரத்த சுத்தம்:
  இரத்த சுத்தம் சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள், இரத்தத்தில் உள்ள நச்சுமிக்க பொருட்கள் மற்றும் மெட்டபாலிச கழிவுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எனவே இரத்தத்தை சுத்தம் செய்ய நினைப்போர் தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

  ஆஸ்துமா:
  ஆஸ்துமா அலர்ஜியால் வருவது தான் ஆஸ்துமா பிரச்சனை. அதாவது முச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்கும் பிரச்சனை. ஒருவர் காலையில் தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். ஆய்வு ஒன்றில் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், தொற்றுக்களால் சுவாச பாதை சுருங்குவது தடுக்கப்படுவதோடு, சுவாச பாதையில் உள்ள தசைகளை மென்மையாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

  சளி :
  சளி பொதுவாக சளி பிடித்திருக்கும் போது ஜூஸ் எதையும் குடிக்கக்கூடாது. ஆனால் சாத்துக்குடி ஜூஸைக் குடிக்கலாம். ஏனென்றால் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். ஒருவர் தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர உட்பொருட்கள், உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் சக்தியின் அளவு அதிகரிக்கும்.

  ஸ்கர்வி :
  ஸ்கர்வி வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படுவது தான் ஸ்கர்வி என்னும் ஈறு நோய். இந்த வைட்டமின் சி சாத்துக்குடியில் ஏராளமான அளவில் உள்ளது. எனவே ஒருவர் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸை அன்றாடம் தவறாமல் குடித்து வந்தால், இந்த கொடிய ஈறு நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

  ஆர்த்ரிடிஸ்:
  ஆர்த்ரிடிஸ் சாத்துக்குடி ஜூஸ் புளிப்பாகவும், அதிக அசிடிட்டி கொண்டதும் கூட. இத்தகைய சாத்துக்குடியை ஒருவர் தினமும் ஜூஸ் வடிவில் எடுப்பதால், உடலின் pH அளவை சமநிலையில் பராமரிக்கப்பட்டு, ஆர்த்ரிடிஸ் மற்றும் கீல்வாதம் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கப்படும். மேலும் சாத்துக்குடி ஜூஸ் திசுக்களில் யூரிக் அமிலம் தேங்குவதைத் தடுக்கும். இதன் விளைவாக வாத நோய் ஏற்படும் அபாயமும் குறையும்.

  ஆரோக்கியமான சருமம்:
  ஆரோக்கியமான சருமம் காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களால் சரும திசுக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். மேலும் இது முகத்தில் அடிக்கடி வரும் பிம்பிளை நீக்குவதோடு, முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களையும் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை தூண்டிவிட்டு, சருமத்தை எப்போதும் இளமையுடன் வைத்துக் கொள்ளும்.

  தொண்டைப்புண் :
  தொண்டைப்புண் தொண்டைப்புண் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியானல் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரால் தயாரிக்கப்பட்ட சாத்துக்குடி ஜூஸில், 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இப்படி குடிக்கும் போது தொண்டையில் சிறிது நேரம் ஜூஸை வைத்து மெதுவாக விழுங்குங்கள். இதனால் தொண்டையில் உள்ள புண் விரைவில் குணமாகிவிடும்.

  நல்ல மனநிலை:
  நல்ல மனநிலை சாத்துக்குடி ஜூஸால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, இது மனநிலையை மேம்படுத்தும். ஒருவர் தொடர்ந்து சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளையில் செரடோனின் உற்பத்தியைத் தூண்டி, உடல் மற்றும் மனதை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும்.

  வாய் துர்நாற்றம்: வாய் துர்நாற்றம் காலையில் எழும் போது பலரும் கடுமையான வாய் துர்நாற்றத்தை சந்திப்பார்கள். தினமும் காலையில் முகத்தைக் கழுவி, பற்களைத் துலக்கும் முன் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், அது வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். ஒருவேளை பற்களைத் துலக்கிய பின் குடித்தால், அதில் உள்ள அமிலம் பற்களின் எனாமலை அரித்துவிடும்.

  நீர்ச்சத்தை அதிகரிக்கும்:
  நீர்ச்சத்தை அதிகரிக்கும் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் இருக்கும் போது, உடல் மிகவும் சோர்வாகவும், களைப்புடனும் இருக்கும். ஆனால் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸைக் குடித்தால், அது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோ, உடலின் மெட்டபாலிச செயல்முறையை அதிகரித்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.

  கல்லீரல்:
  கல்லீரல் உடலில் கல்லீரல் மிகவும் முக்கிய பணியைச் செய்கிறது. எனவே இத்தகைய கல்லீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது நல்லது. இதனால் சாத்துக்குடியில் உள்ள சத்துக்கள், கல்லீரல் நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து, உடலை சுத்தம் செய்யும் பணியை சிறப்பாக நடைபெறச் செய்யும். மேலும் கல்லீரலின் ஆரோக்கியமும் மேம்படும்.

  புற்றுநோய்:
  புற்றுநோய் சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் நோய்க்கிருமி விளைவால் ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதைக் குறைப்பதோடு, அதன் வளர்ச்சியைத் தடுத்து அழிக்கவும் செய்யும். எனவே புற்றுநோய் தாக்காமல் இருக்க வேண்டுமானால், தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடியுங்கள்.

  இதய நோய்:
  இதய நோய் காலையில் எழுந்ததும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்தால், அது இதயம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். குறிப்பாக அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுத்து, பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.​
   
   

Share This Page

Sponsored