Sponsored

Kaviya Krishnan _ Nijamaaga Nee irunthal Nizhalaga Naan Iruppen

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Kaviya_Krishnan, May 21, 2017.

 1. Kaviya_Krishnan

  Kaviya_Krishnan Bronze Wings New wings LW WRITER

  Messages:
  131
  Likes Received:
  647
  Trophy Points:
  113
  Thank you :)
   
   
 2. ugina

  ugina Bronze Wings New wings

  Messages:
  1,210
  Likes Received:
  692
  Trophy Points:
  113
   
 3. Nitha6

  Nitha6 Wings New wings

  Messages:
  70
  Likes Received:
  62
  Trophy Points:
  38
   
 4. shivasubbaiah

  shivasubbaiah Wings New wings

  Messages:
  11
  Likes Received:
  9
  Trophy Points:
  23
  Nice update mam. Starting super.
   
   
 5. Kaviya_Krishnan

  Kaviya_Krishnan Bronze Wings New wings LW WRITER

  Messages:
  131
  Likes Received:
  647
  Trophy Points:
  113
  அத்யாயம் - 3

  மறுநாள் காலை எப்பொழுதும் போல் தாமதமாக எழுந்தவள் அரக்கபறக்க கிளம்பி அப்பா-அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆதி’யின் வீட்டிற்க்கு கிட்ட தட்ட ஒடினாள். அங்கே கமகமக்கும் பொங்களில் நெய் விட்டு சாப்பிட்டு கொண்டிருந்தான் நம் ஆதி...அதை பார்த்ததும் அவனின் முதுகில் இரண்டு போட்டவள் அவனது தட்டை இழுத்துக்கொண்டு சாப்பிட அரம்பித்தாள்...இது தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான் என்பதால் ஆதி ஒரு சின்ன சிரிப்போடு அவள் தலையில் கொட்டிவிட்டு சென்றான். எப்பொழுதும் பதிலுக்கு பதில் கொடுக்கும் அவள் சாப்பிடும்பொது அமைதியின் சிகரம் அகிவிடுவாள்... ஹெஹெஹெ...

  பின் ஆதியை இழுத்து கொண்டு அவளின் ஸ்கூட்டியில் பறந்தாள்....
  அவர்கள் ஒரு குடிசை வீட்டின் முன் சென்று நிற்க உள்ளெ ஒரு பதின் வயது பெண் ஒடுங்கி படுத்து கொண்டு இருந்தாள். அவள் ஒரு 21 வயது பையனால் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறாள் என்கின்ற செய்தி அறிந்ததும் அதிர்ந்துதான் போய்விட்டது அவள் மனம்...காரணம் காதலாம்...

  அவன் காதல் சொல்லி இவள் மறுத்த காரணத்தினால் அவன் நண்பர்களுடன் இனைந்து இப்படி செய்து விட்டான் என்று அந்த பெண் திக்கி திணறி சொல்லிமுடிக்க அந்த பெண்ணுடைய தாயின் கண்களில் அப்படி ஒரு வலி இதையெல்லாம் குறித்துகொண்ட ஆதி...மிராவை கூப்பிட்டு அப்பெணை புகைப்படம் எடுக்க சொல்ல...சுட்டெரிக்கும் பார்வை ஒன்றை அவனுக்கு பரிசாக தந்தால்...பின் அவனை வெளியிலிருக்க சொல்லிவிட்டு இன்னும் சில விஷயங்களை கேட்டரிந்து கொண்டு விடைப்பெற்றனர்...!!!

  “கொஞ்சமாச்சு அறிவு இருக்கா? சின்னப்பொண்ணு அவளோட வாழ்க்கையை பாழ் பண்றமாதிரி அவள போட்டோ எடுத்து இதொட இணைக்கலாம்னு நினைக்கிற?”

  “அம் சாரி மீரா...எதொ ஒரு ஆர்வகோளாறுள பண்ணிட்டேன்”

  “சரி சரி வா போகலாம்”

  அங்கு மதியும் வீராவும் சேர்ந்து சித்துவை எழுப்ப படாது பாடுப்பட்டுக்கொண்டு இருந்தனர்... நிங்கள் நினைப்பது சரியே அவன் ஒரு தூங்குமூஞ்சி...

  “டேய் சித்து எழுந்துடு ...”

  “ம்ம்....இன்னும் ஒரு டூ மினிட்ஸ் ப்ளிஸ் மதி”

  “ஐயோ இப்போவே 8:30 டா இன்னும் இவள அங்க விட்டுட்டு போவதற்குள்ள...”

  “என்னது? 8:30’ஆ? என்ன வீரா இவ்ளோ நேரம் என்னடா பண்ணிங்க என்ன எழுப்பாம? “

  “டேய் கொலவெறில இருக்கேன் சிக்கிரம் போய் ரெடி ஆகு...!!! “

  அவன் அடுத்த இருவதாவது நிமிடம் ரெடி ஆகி சாப்பாட்டு அறையில் இருந்தான்...பத்து நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு சித்துவின் காரில் கிளம்பி மதியை அவள் இடத்தில் விட்டுவிட்டு மிதி இருவரும் அவர்கள் இடத்திற்க்கு சென்றனர்.
  என்னடா இது? நேற்று காட்டரிங் செர்விஸில் என்றார்கள் இன்று என்ன என்னவோ நடக்கிறதே என பார்க்கிறிர்களா? சொல்கிறென்...

  முதலில் நம் நாயகி...மீரா...யுஜி முடித்தவுடன் புரவஸ்னல் போட்டொகிராபி கொர்ஸ் முடித்துவிட்டு தனியார் பத்திரிக்கை ஒன்றில் போட்டொகிராபி செக்ஸனில் ஹெட் ஆக பணியாற்றிக்கொண்டு இருக்கிறாள்...ஆதி பிஜி முடித்துவிட்டு ரிப்பொட்டராக பணி ஆற்றிக்கொண்டு இருக்கிறான். வீரா ஒரு தனியார் கம்பனியில் மேனேஜர்’ராக பணியாற்றுகிறான், அவனுக்கு மேல் தளத்தில் சித்து ஒரு கன்ஸ்ட்ரக்ஸன் கம்பனி ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருக்கின்றான்.

  இதில் விட்டு போனது நம் மதி மட்டுமே...அவளின் பயம் அவளை வெளியில் வேலைப் பார்க்கவிடவில்லை...ஆனால்...மீராவின் சில தைரிய செயல்களினால் அவளை பற்றி அறிந்த ஒரு 25 வயது பெண் தன் குழந்தையுடன் தன்னை ஏமாற்றிய கணவனிடம் இருந்த்து தப்பி வந்து இவளிடம் சரண்புகுந்திருந்தாள்...!!!

  மீராவோ...மீனை பகிர்ந்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுகொண்டுங்கள் என்ற பழபொழியை நம்புவபள்...எனவே அவர்களுக்கு என்று ஒரு தனி வீடும்...வீட்டிலிருந்தே சாப்பாடு கட்டி 10ருபாய் 20ருபாய் என விற்று அவர்கள் வாழ்க்கையை பார்த்துகொள்ள வழி காட்டினாள்...!!! இவர்களை தொடர்ந்து பல பெண்கள் வர....கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னேறி இப்பொது 20 பேர் கொண்ட காட்டரிங் செர்விஸாக மாறியது.

  இவர்களை பார்த்த மதி...தனியாக தவிக்கும் இவர்களே இப்படி இருக்கும்போது நாம் ஏன் ஏதாவது சாதிக்க கூடாது என தோன்றவே மீராவிடம் சொல்லி அப்பெண்களுடன் தன்னை இணைத்துக்கொண்டாள்...!

  அன்றில் இருந்து இன்றுவரை மதி அந்த பெண்களுக்கு வழிக்காட்டியாய் திகழ்கிறாள். அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் மீராவுக்கும் சில பிரச்சனைகள் இருக்கிறது அவளுக்கு மட்டுமே தெரிந்த சில உண்மைகள் சில ரகசியங்கள்...பார்ப்போம்...அவள் அதில் இருந்து வெளி வருக்கிறாளா? அவள் வாழ்க்கையில் நடக்கபோவது என்ன?

  நேசத்துடன்,
  கவி

  சில வார்த்தைகள்: https://www.ladyswings.in/community/threads/5436/
   
  selviesan, Uma dev, Jan and 11 others like this.
   
 6. Kaviya_Krishnan

  Kaviya_Krishnan Bronze Wings New wings LW WRITER

  Messages:
  131
  Likes Received:
  647
  Trophy Points:
  113
  அத்யாயம் - 4

  அன்று காலை எப்பொழுதும்போல் ஐந்து மணிக்கெல்லாம் அவனால் எழுந்து ஜாக்கிங் செல்ல முடிய வில்லை...!!! ஏன்? அவளை பார்த்ததிலிருந்து இப்படி தான்...யாரும் எதிர்காத அவனை எதிர்பார்க்காத வகையில் கை நீட்டி அடித்து விட்டு கூலாக சாரி சொல்லிவிட்டு சென்றவள். அவனின் கண்ணுக்குள் நின்றுகொண்டு இம்சை செய்பவள்.

  அவன்... ரிஷி யாதவ்...யாருக்கும் பயப்படாதவன்...யாரையும் பயம் கொள்ள செய்பவன்...அவனை புடிக்காதவர்களுக்கு அவன் ஒரு தாதா...அவனை புடித்தவர்களுக்கு அவன் தெய்வம்...!!! அந்த உலக அழகியாவே இருந்தாலும் அவன் ரிஷி தான்...அதாவது அந்த ரிஷி முனிவர் போல்...ஆனால் அவனை மயக்கவும் ஒரு மேனகையும் இருக்கிறாள் என அறிந்தது அவளை பார்த்தவுடன்தான்...அவள், நம் நாயகி மீரா...அதே போல் அவன் உலகிற்க்கே ரிஷியாக இருந்தாலும் அவளுக்கு அவன் யாதவ கண்ணனே...!!!

  ரிஷி படுக்கையில் புரண்டது போதும் என எழுந்து ஜன்னலிடம் வந்தான்...அங்கு இருந்து கீழே பூத்து குலுங்கி கொண்டு இருந்த சிகப்பு ரோஜாக்களை பார்த்ததும் அவளை முதல் முதலில் பார்த்து நியாபகம் வந்தது. அன்று அவனுக்கு வந்த தகவலின்படி ஒரு பெண்ணை துறத்திய கும்பலை காலி செய்ய அவனுடய ஸ்கார்பியோவில் சென்று கொண்டு இருந்தான்...!!! அந்த காட்டு பகுதியில் நுழையும்போதே பார்த்துவிட்டான், அங்கு ஒரு பெண் 10 அடியாட்களுடன் சண்டையிட்டு கொண்டு இருப்பதை...என்ன ஏது எதை பத்தியும் யோசியாமல் இறங்கி சண்டையிட ஆரம்பித்துவிட்டான்...

  இதில் அவன் கவனிக்காதது அந்த பெண்ணும் ஒருதருக்கு இரண்டு பேர் என ஒரே நிமிடத்தில் பந்தாடி கொண்டு இருப்பதை, அவள் கவனிக்காமல்விட்டது அவன் புதிதாக அவளை காப்பாத்த அவர்களுடன் சண்டையிட்டு கொண்டு இருப்பதை, இப்படியே தொடர்ந்து கொண்டு இருந்ததை முடிவுக்கு கொண்டு வர அவர்கள் இருவரும் மிஞ்ச இவள் அவனை பளார் என ஒன்று கொடுக்க...இதை எதிர்ப்பார்க்காத இவன் திகைத்து போய் இருக்க...அவள் பின்பு தான் கவனித்தாள் அவன் சினிமா ஹிரோப் போல் இருந்ததை பின் நாக்கை கடித்து சாரி சொல்ல...இது எதுவும் அவன் மனதில் பதியவில்லை, அவன் கவனித்தது எல்லாம் அவள் கண்களின் மாயஜாலத்தையும், உதட்டின் வடிவழகையும் தான்...!!!

  அடுத்த சந்திப்போ ஒரு துணிக்கடையில் நிகழ்ந்தது. அவள் ஏதோ ஒரு கிப்ட் ஷாப்பில் அவள் நண்பர்களுடன் நின்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்தவன் இவளைக் கண்டு காலில் ஆணியடித்தது போல் நின்றுக்கொண்டு இருந்தான். அவள் ஏதோ கூறி கொண்டே நாக்கை கன்னதில் முட்டி உடனே கண்ணடித்து உடனே புருவத்தை ஏற்றி இறக்கினாள். அவளின் அந்தோ பரிதாபம் அவள் தோழி சட்டென நகர்ந்துவிட நொடிப்பொழுதில் இது அனைத்தையும் அவனை பார்த்து செய்திருந்தாள்.

  அவனின் அந்தோ பரிதாபம் அவள் அவனை மறந்துவிட்டது. அவள் எப்போழுதும்போல் நாக்கை கடித்து சாரி என உதட்டசைவில் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அவனோ தன்னைச்சுற்றி உலகம் நின்றுவிட்டது போன்ற ப்ரமையுடன் அவள் உதட்டின் மேல் இருக்கும் கண்ணுக்கு தெரியாத மச்சம் அவன் கண்களில் மட்டும் சிக்கி... அதில் அவன் சிக்கி பித்தனாகி போனான் இன்னும் தெளியவில்லை. இதை எதையும் அறியாத மீரா நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தாள்.

  நேரமாக ஆக கனவுகளிலிருந்து கலைந்து எப்பொழுதும் போல் அரக்க பரக்க எல்லாத்தையும் முடித்து கொண்டு மீரா அலுவலகம் வர, அவனும் நினைவுகளில் இருந்து கலைந்து அதே அலுவலகம் வந்து சேர்ந்தான். அங்கே அவர்கள் இருவருக்கும் ஒரே பிரச்சனையால் தலைவலி வந்து சேர்ந்தது.

  நேசத்துடன்,
  கவி

  சில வார்த்தைகள்: https://www.ladyswings.in/community/threads/5436/
   
  selviesan, Uma dev, fasmi and 9 others like this.
   
 7. Kaviya_Krishnan

  Kaviya_Krishnan Bronze Wings New wings LW WRITER

  Messages:
  131
  Likes Received:
  647
  Trophy Points:
  113
  அத்யாயம் - 5

  மீரா எப்பொழுதும்போல் கிளம்பினாலும் மதிக்கு எதோ தேவை என ஆதி அவளுடனே சென்றுவிட மீரா தனியாக அலுவலகம் வந்து சேர்ந்தாள். ரிஷியோ காரில் வந்துகொண்டு இருக்கும்போது மீராவை பற்றி தான் நினைத்து கொண்டு இருந்தான்...அவள் பெயர், ஊர், எதுவும் தெரியாது....ஆனால் அவன் நினைத்தால் கண்டுபிடிக்க முடியும்...ஆனால் அவன் அதை செய்யவில்லை...யாரும் அசைக்க முடியாத அவன் மனதை அவள் அசைத்துவிட்டாள்..ஆனால் அதை காதல் என பகுத்தறிய அவன் விரும்பவில்லை. விதி யாரைவிட்டது?

  நினைவுலகிலிருந்து விலகி பக்கத்தில் இருக்கும் அந்த பத்திரிக்கை கையில் கிடைத்தது...எப்பொழுதும் அலட்சிய படுத்தும் அப்பத்திரிக்கையை இன்று கையில் எடுத்தான்...அது இவர்களின் கெட்டநேரமோ?

  பிரித்ததும் அவன் கண்களில் பட்டது அவனின் புகைப்படமே...ஒரு பெண்ணின் கையை பிடித்துகொண்டு மறுகையில் அப்பெண்ணுடைய கணவனை அடிக்கும் காட்சியை மிக தெளிவாய் படம் பிடித்து இருந்தார்கள். அதில் இருக்கும் செய்தியை படிக்க படிக்க அவன் கண்களில் ரௌத்திரம் நிரைந்தது....!!!

  நேரே அந்த பத்திரிக்கை அலுவலகதிற்க்கு வண்டியை விரட்டினான்...!!! ஆம் அவன் ஸ்கொர்பியோவில் அவன் மட்டுமே பயணம் செய்வான், அவன் ஆட்களுக்கு என்று தனிவண்டி உண்டு. நேரேச்சென்று பார்க்கிங்கில் வண்டியை செலுத்தும்போது ஒரு வண்டியை இடித்து தள்ளிவிட்டு உள்ளெ செல்ல அவனை திட்ட என வந்த காவலாளி அவனை கண்டதும் திகைத்து அவன் பின்னால் ஓடி அவன் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் வழிவிட்டு நின்றான்...!!!

  அவனை கண்ட அனைவரும் திகைத்து நிற்க மேல் அதிகாரிகள் அனைவரும் ஓடிவர யாரையும் கண்டு கொள்ளாமல் அவன் மீரா என்ற எழுத்து பலகையிட்ட இடத்திற்க்கு வந்து நின்றான்...!!! நம் மீராவோ இது எதையும் கவனியாமல் அனைவருக்கும் முதுகாட்டி அமர்ந்து எங்கோ எடுத்த சில புகைபடங்களை வைத்து எனமோ எழுதிக்கொண்டிருந்தாள் ...!!!

  “மிஸ்.மீரா”

  “யெஸ்”

  அவளை கலங்கடிக்க நினைத்தவன் கலங்கிபோய் நின்றான் அந்த திருமுகத்தை பார்த்து...!!!

  “ஹெலோ பாஸ் கொஞ்சம் முழிங்க...”

  “என் முகத்துல அப்படி என்ன இருக்கு இப்படி பாத்துட்டிருக்கிங்க”

  “என்ன சார்...”

  “ஹெல்லொலொலொலொலொ.......!!! “

  கூப்பிட கூப்பிட பேசாமல் இருந்தவனை கண்டு அலுத்துபோய் அவன் காதில் பலமாக கத்தினாள்...அவள் அப்படி செய்ததும் நினைவு கலைந்தவன் அவளை கவனித்தான்...!!! ரோஜா நிறத்தில் உடை அணிந்து ரொஜாவாக நின்றுக்கொண்டிருந்தாள்...அவள் அழகை ரசித்துக்கொண்டு இருந்தவன் கண்களில் மீண்டும் அந்த பத்திரிக்கை பட....கண்களில் தோன்றிய கோபத்துடன் அதை கையில் எடுத்து அவள் முன் அந்த புகைப்படத்தை காண்பித்தான்.

  “என்ன? இதுக்காகவே கூப்பிடிங்க?”

  “யு....இது என்ன?”

  “ஒ....”

  அவளுக்கு அந்த புகைபடம் பார்த்ததும் தான் அவனை இனம்காண முடிந்தது...!!!

  “பார்த்தா தெரியல? நீங்க பண்ற அட்டகாசம், ஆராஜகம்”

  “எனது...நானா?”

  “ஆமா பின்ன? ஒ... இதுக்கு பேர் உங்க ஊர்ல வேறயோ”

  அதற்க்குள் அங்கு சினியர் எடிட்டர் வந்துவிட்டார்...என்ன பிரச்சனையென தெரியாவிட்டாலும் வந்து இருப்பது யார் என தெரிய....!!!

  “ஐயொ மீரா என்னமா பண்ற நீ?”

  “நிங்க சும்மா இருங்க சார்...இந்த மாதிரி படிக்காத ஆளுங்களுக்கு இது ஒரு வேலையா போச்சு...”

  “வாட்...”

  “என்ன வாத்து கொழி? கோட் ஸுட் மாடிக்கிட்டு இங்கிலிஷ்’ல பேசிட்டு ரௌடி தானம் பண்றது இப்போ ஒரு பொழப்பா போச்சு”

  “லுக்...உங்கிட்ட எதையும் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்ல பட்...இதுல ஒரு பொண்ணோட பேர் சேர்ந்து இருக்கிறதால சொல்றென்”

  அவள் ஒரு அலட்சிய பார்வையுடன் நாற்காலியின் மேல் ஒரு கையை ஊன்றிக்கொண்டு ஸ்டையிலாக நின்று கேட்டுக்கொண்டு இருந்தாள். இதை பார்த்ததும் கோபம் கொண்டவன். அந்த நாற்காலியை இழுத்து போட்டு கொண்டு அவள் தடுமாறுவதை லட்சியம் செய்யாமல் அமர்ந்தான்.

  “ஹெய்...லூசு இப்படியா இழுப்ப...”

  “ஐயோ மீரா அமைதியா இருரேன்மா”

  அவள் எப்பொழுதும் போல் திட்டி வைக்க...சினியர் எடிட்டரோ...அவரின் செல்லபிள்ளைப்போல் இருக்கும் மீராவை கண்டிக்க முடியாமல் திண்டாடினார்.

  “இதோ பாரு...அந்த பொண்ண அவளோட புருஷன் தப்பா வேற ஒருத்தன் கூட சேத்து...ச்சா....அதுனால தான் நான் அவன அடிச்சி அந்த பொண்ண அவன் கிட்ட இருந்து காப்பாற்றி ***விமன்ஸ் ஹொம்’ல சேத்துருக்கேன்...உனக்கு வேனும்னா அங்க போய் விசாரிச்சிகோ..நாளைக்கே இதுக்கு மனிப்போட மறுப்பு சொல்லி நுயுஸ் வந்தாகனும் புரிதா?”

  இதை கேட்டு மீரா குழம்பினாள்...ஏனென்றால் அவளுக்கு வந்த நுயுஸ் வேறு...!!! கண்ணுல அவளோட குழப்பம் அப்பட்டமா தெரிய...அவள் பேசவே இல்ல...எடிட்டர் தான்...

  “வி ஆர் சாரி சார்...உங்கள பத்தி தெரியாம இப்படி நடந்துப்போச்சு”

  அதற்க்குள் அவரும் அந்த செய்தியை பார்த்துவிட கோபமே வராத அவருக்கும் கோபம் வந்தது...மீராவை முறைத்துகொண்டே அவனிடம் மனிப்பு கேட்டார். இவர் வேறு ஏன் இப்படி முறைக்கிறார் என மேலும் குழப்பினாள் நம் நாயகி.

  “நான் கொஞ்சம் உங்க போட்டோக்ராபர் கிட்ட கொஞ்சம் பேசனும் எல்லாரும் போறிங்களா?”

  “எல்லாரும் போய் வேலைய பாருங்க பா...!!! மீரா மிட் மீ அப்டர் திஸ்”

  “ஒகே சார்”

  “மீரா”

  “ஹான்...என்ன?”

  “ம்ம்...வெறுமையே.. கோட் ஸுட் மாடிக்கிட்டு இங்கிலிஷ்’ல பேசிட்டு ரௌடிதானம் பண்ணகூடாதுனு தான் உங்க சட்டமா? ஒரு டாப் மோஸ்ட் பத்திரிக்கை'ல வேலை செய்ற பொண்ணு மட்டும் ரௌடிதானம் பண்ணலாமா?”

  அவன் தன் கன்னத்தை தேய்த்துக்கொண்டே கேட்டான். அவளோ திறந்த வாய் மூடாமல் பார்த்துகொண்டு இருக்க

  “என்ன அப்படி பார்க்குற?”

  என்று கேட்டு...அவளை போலவே நாக்கை கன்னத்தில் முட்டி உடனே கண்ணடித்து உடனே புருவத்தை ஏற்றி இறக்கினான். அவள் மேலும் தன் முட்டை கண்ணை விரித்து முழிக்க...அவன் சிரித்து கொண்டே...

  “இந்தா...இது உனக்கு”

  அவனுடைய விசிடிங் கார்டை எடுத்து அவள் கையில் திணித்துவிட்டு சென்றான்...!!! அதை பிரித்து பார்த்த அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்த்துவிடும் போல் இருந்தது.

  நேசத்துடன்,
  கவி

  சில வார்த்தைகள்: https://www.ladyswings.in/community/threads/5436/
   
  Uma dev, fasmi, Jan and 13 others like this.
   
 8. Ani

  Ani Wings New wings

  Messages:
  69
  Likes Received:
  59
  Trophy Points:
  38
  Story super mam.
   
   
 9. Gashini

  Gashini Wings New wings

  Messages:
  118
  Likes Received:
  112
  Trophy Points:
  63
  Super mam.next ud kaga wait pannuram.
   
   
 10. Kaviya_Krishnan

  Kaviya_Krishnan Bronze Wings New wings LW WRITER

  Messages:
  131
  Likes Received:
  647
  Trophy Points:
  113
  Thank u
   
   
Loading...

Share This Page


Sponsored