Self evaluation

Discussion in 'Karuththu Kalam' started by revathisiva, May 30, 2017.


Sponsored
  1. revathisiva

    revathisiva Wings New wings

    Messages:
    31
    Likes Received:
    45
    Trophy Points:
    38
    என்கிட்ட பல குறைகள் இருக்குனு சொல்றாங்க. நான் செய்வதில் ஏதேனும் குற்றம் கண்டறிந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.இப்படி வருந்துபவர்களுக்கு தெளிவறிய ஒரு வழி உள்ளது.

    "சுய மதிப்பிடுதல்"

    உண்மையில் நம்மை தவிர வேரு யாராலும் நம்மைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்க முடியாது.நாம் செய்யும் செயலின் பலன் நமக்கு தெரியும்.ஒரு செயலை செய்தால், அதனால் ஏற்படும் லாப நஷ்டம், நாம் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியையும் ஈடுபாட்டையும் பொருத்து அமையும்.

    குறைகள் இல்லாத மனிதன் யாருமே இல்லை.அதற்காக நாம் குறைகளை களைய முயற்சி மேற்கொள்ளாமல் இருப்பதும் இல்லை.

    நம்மை பற்றி குறை கூறுபவர்களில் பாதி பேர் தீமைக்காகவும் , பாதி பேர் நன்மைக்காகவும் கூறுபவர்.இவர்களில் யார் நல்லவர்? யார் தீயவர்? யார் நமக்கான அக்கறையுடன் சொல்கிறார்கள் என்பதை அறிய சுய மதிப்பிடுதல் மிகவும் முக்கியம்.

    நாம் செய்யும் செயலுக்கு முழுப் பொறுப்பும் நம்மை மட்டுமே சேர்ந்தது என்றாலும், மற்றவருக்கு ,நம் செயலில் உள்ள தவறுகள் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.நாமும் அறிந்து கொள்வோம்தான் என்றாலும், அதற்கு கால தாமதம் நிச்சயம் ஏற்படும். அவர்கள் வெளியில் இருந்து பார்ப்பதால் எளிதில் கண்டு கொள்வர்.

    நம்மை விரைவில் மேம்படுத்திக்கொள்ள, மற்றவரின் அறிவுரையோ அல்லது விமர்சன மொழிகளோ நிச்சயம் தேவை.அதற்கு நாம் யாரை நம்புவது மற்றும் நம்முடைய பல குறைகளையும் அறிய சுய மதிப்பிடுதல் அவசியம்.

    எப்படி மதிப்பிடுவது?

    சிறிது நேரம், தங்களை மூன்றாம் நபராய் பாவித்து அமைதியாய் சிந்தியுங்கள்.

    1.உங்களையே நீங்கள் கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.

    2.உங்களின் நற்பண்புங்களைப் பட்டியல் இடுங்கள்.அதுமாதிரி தீமையையும்.

    3.நீங்கள் செய்த செயலுக்கு நீங்களே விமர்சகராய் இருந்து விமர்சியுங்கள்.இதில் உங்களுக்கே உங்களின் தவறுகள் புரியும்.

    4.ஒரு செயலை செய்வதில் எங்கெங்கு இடருகிறது என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

    5.அடுத்தவர் சொல்லும் வார்த்தையை அப்படியே ஏற்பதற்குப் பதில்,அதனை நடுநிலையோடு யோசியுங்கள்.இதிலே உங்களுக்கு தெரிந்து விடும் எதிரிலிருப்பவர் எம்மாதிரி என்று.

    6.தவறுகள் அதிகம் இருந்தால் அதை அலட்சியப் படுத்தாதீர்கள்.நமக்கு மட்டுமே தெரிந்தது என்று எளிதில் எண்ணி கடந்து விடாதீர்.அவைகளை களைய சற்றேனும் முயற்சி செய்யுங்கள்.

    7.மிகவும் முக்கியமானது,உங்களுக்கு நீங்களே உண்மையாய் இருப்பது.

    நண்பர்களே ! என்ன இவள் இப்படி ஒரு பெரிய உரை மாதிரி போட்டிருக்கிறாள் என்று எண்ணுகிறீர்களா?

    முன்னர் கூறியுள்ள மாதிரி வருந்தியது வேறு யாருமில்லை. நான்தான்! எனக்கு உதவியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சுய மதிப்பீடு ஒவ்வொரு மனிதனையும் செம்மையாக்கும்.நீங்கள் சுய மதிப்பிடுதல் பற்றி ஏற்கெனவே அறிந்து இருப்பீர்கள், இருந்தாலும் என் மொழியில் பகிர விரும்பியதால் உங்களிடம் பகிர்கிறேன்.

    நன்றி :)
     
    girija chandru likes this.
     
  2. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    1,952
    Likes Received:
    1,113
    Trophy Points:
    133
    very nice view of thoughts, revathi..... thank you
     
    revathisiva likes this.
     
Loading...

Share This Page