ஆத்ம போதம்

Discussion in 'Religious places & Spiritual people' started by Vanaja Sundararajan, Jul 21, 2017.

 1. Vanaja Sundararajan

  Vanaja Sundararajan Wings

  Messages:
  2
  Likes Received:
  4
  Trophy Points:
  21
  ஆத்ம போதம் என்பது ஆதிசங்கரர் அருளிய ஸம்ஸ்க்ருத நூல்.
  இதை ரமணமகரிஷி வெண்பாக்களில் கொடுத்துள்ளார்.
  அதில் ஒன்றைப் பார்ப்போம்.

  உடல்கருவி உள்ளம் ஓதும்புத்தி மாயை

  விடவேறாவட்றின் விருத்தி - யுடனே

  எவைக்குமே சாட்சியாம், என்றும் ஆன்மாவை

  அவைக்கரசன் போல அறி.

  உன் ஆன்மா என்பதாவது - உன் உடலல்ல. உன் அவையங்களும் அல்ல. உன் உள்ளமும் மனதும் கூட அல்ல. உன் அறிவும் அல்ல. பின் என்ன அது?

  மேற்கூறிய எல்லாவற்றின் செயல்களையும் கவனித்துக் கொண்டு இருப்பது தான் ஆன்மா - அரசவையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டு இருக்கும் அரசன் போல.

  அவைக்கு அரசன் போல, அவையங்களுக்கு அதிபதி ஆன்மா.

  ஆனால் ஆன்மா வேறு, அவையங்கள் வேறு.

  அவையில் மந்திரிகளும், ஏனைய ஆலோசகர்களும் இருந்தாலும், அரசன் மட்டும் ஒருவன். அவன் போல் அவையில் யாரும் இல்லை.

  அது போல் ஆன்மா. ஆன்மா போல் நம்மிடம் மற்றொன்று இல்லை
   
  Srjee likes this.
   

Share This Page