Sponsored


Saran Selva _Nane Tholaintha Kathai ..Naanariyen Kanmaniye ..

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Lady's Wings, Jan 4, 2018.

Sponsored


Thread Status:
Not open for further replies.
 1. Saran selva

  Saran selva Pillars of LW LW WRITER

  Messages:
  170
  Likes Received:
  951
  Trophy Points:
  113

  Sponsored


  Thank you...
   
  vani Priya Subramani likes this.
   
 2. Saran selva

  Saran selva Pillars of LW LW WRITER

  Messages:
  170
  Likes Received:
  951
  Trophy Points:
  113
   
 3. Saran selva

  Saran selva Pillars of LW LW WRITER

  Messages:
  170
  Likes Received:
  951
  Trophy Points:
  113
  NTKNK - 2

  திருச்சி இயற்கை எழில் கொஞ்சும் பொன்னம்பட்டி கிராமம்... காலை வேளையில் ஆண்களும், பெண்களும் வயல்களுக்கும், வரப்பு வேலைகளுக்கும் கிளம்பிக் கொண்டிருந்தனர்...


  இந்த ஊரின் பெரிய வீடு என்று சொல்லப்படும் குட்டி மாளிகையில் சாம்பிராணி மனம் வீசிக்கொண்டிருந்தது... முற்றத்தில் உள்ள திண்ணையில் அமைந்திருந்த அஞ்சுகம் தன் மகனின் வரவைக் கண்டு "ஆத்தா லட்சுமி சேகருக்கு காப்பித்தண்ணி கொண்டுவாத்தா" என்று உள்ளே குரல் கொடுத்தார்...


  சேகர் அந்த ஊரின் தலைவர்...
  அந்த ஊரில் உள்ள நிலங்களில் மாந்தோப்பு, தென்னதாப்பு, விளைநிலங்கள், வயல்கள் என முக்கால்வாசிக்கு மேல் அவர்களுடையது... அனைவரிடமும் ஏற்ற தாழ்வு பாராமல் பழகுபவர், உதவி என்று வருவோருக்கு தன்னால் இயன்றதைச் செய்வார்... அதனாலேயே பெரிய வீட்டின் மேல் ஊர் மக்களுக்கு மரியாதை உண்டு...


  சேகர் அன்னையின் அருகில் உள்ள சேரில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளை புரட்டினார்... சிறிது நேரத்தில் மங்களகரமான முகத்துடன் மென்புன்னகையுடன் ராஜலெட்சுமி கையில் காப்பி காப்புடன் வந்தார்... காப்பியை கொடுத்துவிட்டு நகரப்போன மருமகளிடம் "இன்னும் உன் மகளுக்கு விடியலையா... வயசு பொண்ணு இப்படி தூங்குனா போற இடத்துல, பொண்ண வளத்து இருக்காங்க பாருனு உன்ன மட்டும் இல்ல எங்களையும் இல்ல குத்தம் சொல்லுவாங்க" என்று நெடிக்கவும், லெட்சுமி ஏதோ சொல்ல வரவும், "அஞ்சு" என்ற குரல் கேட்கவும் சரியாய் இருந்தது... மூவரும் குரல் வந்த திசையை பார்க்க கையில் பூஜைத் தட்டுடன் வந்தாள், சேகர் - ராஜலெட்சுமி தம்பதியரின் ஒரே மகள் அந்த வீட்டின் தேவதை... அவ்வூரின் இளவரசி... கயல்விழி...


  கயல்விழி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் BE மூன்றாம் ஆண்டு அவளின் தோழி செல்லம்மாளுடன் படிக்கிறாள்... சேகர் அவர்களுக்கு தனி வீடு எடுத்து துணைக்கு ஒரு வயதான பாட்டியை தங்க வைத்திருக்கிறார்... இருவரும் செமஸ்டர் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருக்கிறார்கள்... இன்னும் இரண்டு நாளில் கல்லூரி திறப்பதால் இன்று கிளம்ப வேண்டும்...


  அவளை பார்த்ததும் அஞ்சுகம் "கயலு என் ராசாத்தி இப்பதா உன்னைப் பத்தி கேட்டுட்டு இருந்தேன்... நீயே வந்துட்ட... ஏன்டா இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருக்கலாமில்ல" என்று கேட்டதும், லெட்சுமி சேகரை முறைத்துவிட்டு விறுவிறுவென்று உள்ளே சென்று விட்டார்... சேகரோ காலையிலேவா என்று மானசீகமாக தலையில் கைவைத்து விட்டார்... ஏனெனில் அஞ்சுகம் தன் மருமகளை ஏதேனும் சொல்வதும், மாமியாரை எதிர்த்து பேசும் பழக்கம் இல்லாத லட்சுமி சேகரிடம் முறையிடுவதும், இருவரையும் சமாதானம் செய்வதும் வழக்கமான ஓன்று... அஞ்சுகம் தன் மருமகளை எவ்வளவு குறை கூறினாலும் அவரின் மேல் பாசம் உண்டு... அது லெட்சுமி, சேகர் இருவரும் அறிந்ததே...


  கயல் கையில் இருந்த பூஜைத்தட்டிலிருந்து திருநீரை பாட்டிக்கு பூசிவிட, பாட்டி அவளை வாஞ்சையுடன் பார்த்தார்... புன்சிரிப்புடன் கண்ணடித்துவிட்டு தந்தைக்கும் தானே திருநீர் பூசிவிட்டு தன் பாட்டியை திரும்பி பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்...


  கயல்விழி கண்ணடித்ததும் விட மாட்ட போலவே எப்படி தன் மகனிடம் சொல்வது என்று யோசனையுடன் இருக்க செய்தித்தாளில் இருந்து நிமிர்ந்து அன்னையின் யோசனை முகம் கண்ட சேகர் "என்னமா என்ன யோசிச்சுட்டு இருக்கிங்க" என்று அவர் யோசனையைக் கலைத்தார்...


  "அது ஒண்ணுமில்லப்பா கயலு காட்டுக் காளியம்மன் கோவிலுக்கு போயிட்டு வரட்டுமானு..." சொல்லி முடிக்கவில்லை... "அங்கயா அங்க எதுக்கு" என்று சேகர் வினவவும், "ஏதோ வேண்டுதலாம்" என்க... "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அங்கே பாதுகாப்பில்லை யாரும் இல்லாத இடம் ஒன்னுகிடக்க ஒன்னு ஆச்சுன்னா" என்றதும்... "தனியா போகலப்பா செல்லத்தோட தான் போகப்போறேன் அப்பா ப்ளீஸ்பா ப்ளீஸ்" என்று கயல் வந்து அவர் பின்னால் இருந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு கெஞ்ச, அதில் மனம் இலகியவர் "ரெண்டுபேரும் பாத்து பத்திரமா போய்ட்டு வரணும் சரியா" என்று கூறவும், "தேங்க்ஸ்ப்பா" என அவர் கன்னத்தில் முத்தமிட்டு தன் தோழியின் வீட்டிற்கு சென்றாள்... செல்லும் மகளையே பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்...


  கயல் தோழி வீட்டிற்கு செல்ல... செல்லம்மாளின் தாய் பவளம் அங்கு வந்த கயல்விழியை கண்டு "கயலு எப்படிடா இருக்கு பாத்து எம்புட்டு நாளாச்சு" அவளிடம் நலம் விசாரித்து விட்டு, "செல்லம் கயலு வந்திருக்கு பாரு" என்று உள்ளே குரல் கொடுத்து, "உள்ள வாடா" என்று அவளின் கைபிடித்து அழைத்துச் சென்றார்...


  செல்லம்மாள் மருது - பவளத்தின் ஒரே மகள்... விவசாய குடும்பம்... கயல்விழி, செல்லம்மாள் இருவருக்கும் நட்பு தொடங்கியது முதலாம் வகுப்பில் முதல் நாள் கயல்விழி பட்டுப்பாவாடை சட்டையில் குட்டிதேவதையாய் இருந்தவளை ஆசிரியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த, சேகர் கொடுத்த இனிப்பை அனைவருக்கும் வழங்கிவிட்டு அமர்வதற்கு சுற்றிலும் பார்வையை சுழற்ற அங்கு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மாளிடம் புன்னகையுடன் சென்று அமர்ந்தாள்...


  அப்போதும் அவள் தன்னையே பார்க்கவும், என்ன என்று கேட்க "எனக்கு இன்னொரு சாக்லெட் தரியா" சாக்லெட்டை பார்த்து கேட்க... கயல் உடனே இரண்டு சாக்லெட் எடுத்து கொடுக்க புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்... முதலில் அளவாய் பேசினாலும் நாளடைவில் இருவரின் நெருக்கமும் அதிகமானது... திடீரென ஒரு நாள் செல்லம்மாள் பள்ளிக்கு வராமல் இருக்க கயல் அவளை காணாமல் அன்று முழுவதும் பாடத்தை கவனிக்காமல் அவள் ஏன் வரவில்லை என்பதையே யோசித்துக் கொண்டிருந்தாள்... தொடர்ந்து ஒரு வாரம் பள்ளிக்கு வராமல் இருக்க... கயல் தோழியை காணாமல் பள்ளியில் இருந்து வீட்டிற்க்கு வந்தவுடன் அழுது கரைந்தவளை அஞ்சு பாட்டியும், லெட்சுமி அம்மாளும் அவள் அழுகைக்கான காரணம் தெரியாமல் சொன்ன சமாதானங்கள் காற்றோடு கரைய வெளியே சென்ற சேகரின் வருகைக்காக காத்திருந்தனர்...


  வீட்டிற்கு வந்த சேகர் மகளைக்கண்டு பதறி கயலை கைகளில் ஏந்திக்கொண்டு அன்னையிடம் என்னவென்று விசாரிக்க... அவர்களுக்கும் எதுவும் தெரியாது என்று சொல்லவும், மகளிடம் திரும்பியவர் "கயல் என்னடா ஆச்சு" என்று கேட்கவும்.... "செல்லம் காணும்" சொல்லவும்... ஏற்கனவே பள்ளியில் நடப்பதையும் அதில் செல்லம்மாள் பற்றியும் சேகரிடம் தினமும் சொல்லிவிடுவாள் என்பதாலும்... செல்லம்மாள் குடும்பமும் அதே ஊர் என்பதால் நடந்ததை நொடியில் யூகித்தவர்... செல்லம்மாள் வரவில்லைபோல என்று நினைத்தவர்... "கயல் நாளைக்கு செல்லத்தை பாக்கப்போகலாம் சரியா இப்போ வாங்க சாப்பிட்டு தூங்கலாம்" என்று சொல்லவும்... தோழியை காணலாம் என்றதும் சரி என்பதுபோல் தலையை ஆட்டினாள்... பின் மனைவி கொண்டுவந்து கொடுத்த உணவை தானே மகளுக்கு ஊட்டிவிட்டு தோளில் போட்டு தட்டிக்கொடுத்து தூங்க வைத்தார்...


  மறுநாள் செல்லம்மாள் வீட்டுக்கு சென்று பார்க்க... அங்கு மருதுவின் படத்திற்கு மாலைபோட்டு பொட்டு வைத்திருக்க... அதன் பக்கத்தில் பவளம் அமர்ந்து விட்டதை வெறிக்க... கைகள் தன் மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் மகளின் தலையை வருடிக்கொண்டிருந்தது... காலையில் தான் கடன் கொடுத்தவர்கள் கடனுக்கு பதிலாக அவர்களின் விவசாய நிலத்தை கேட்டு சண்டையிட்டு வாங்கிச் சென்றனர்...


  கயல் மெதுவாக சென்று அவர் முன்மண்டியிட்டு தோழியைப் பார்க்க... பக்கத்தில் நிழல் ஆடுவதை உணர்ந்து பார்த்தவர்... கயலை பார்த்துவிட்டு அங்கே நின்ற சேகரை கண்டதும் "வாங்க அய்யா" என்று செல்லம்மாளை தரையில் படுக்க வைத்து எழுந்து நிற்க... தான் வந்த காரணத்தை கூறவும்...
  பவளம் "செல்லமும் கயல பத்திதான் எந்தநேரமும் பேசும்" என்றவர், பின் " அடுத்த வேளைக்கு கூலிவேல பாத்துதான் பொழைக்கனும் இனி இதுல எங்க பள்ளிகூடம் அனுப்புவேன்" என்று கலங்கினார்...


  அவர்களின் நிலை உணர்ந்து யோசித்து முடிவெடுத்தவராய் பவளத்திடம் பேசி இனி அவளின் படிப்பு செலவை தான் பார்த்துக் கொள்வதாகவும், அவளை பள்ளிக்கு அனுப்புமாறு சேகர் கூறவும், "உங்களுக்கு எதுக்கு ஐயா சிரம.." பவளம் கூறும்முன் அவளை தடுத்து, தன் பேச்சால் சம்மதிக்க வைத்தார்... அன்றிலிருந்து இன்றுவரை செல்லம்மாளின் படிப்பு செலவு மொத்தமும் சேகரே பார்த்துக் கொள்கிறார்... அதோடு தோழிகளின் நட்பும் இறுகியது...


  12ம் வகுப்பில் தோழிகள் இருவரும் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தனர்... செல்லம்மாளுக்கு மேற்கொகொண்டு படிக்க ஆசை இருந்தாலும் சேகருக்கு சிரமம் தர விரும்பாமல் மறுக்க, சேகர் இருவரையும் சென்னையில் படிக்க வைக்கப் போவதாகவும், நீயும் சென்றாள் கயலுக்கு துணையாக இருக்கும் என்று என்ன சொன்னால் அவள் சம்மதிப்பாளோ அந்த வழியில் சொல்லவும் அது சரியாக வேலை செய்தது... தயக்கத்துடனே சம்மதம் சொன்னாள்...


  செல்லம்மாள் வீடு சிறிய ஓட்டு வீடு... கயல் வீட்டினுள் சென்று பார்க்க அங்கு செல்லம்மாள் தன் முகத்தில் புள்ளி புள்ளியாய் க்ரீமை வைத்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்... அவளை கண்டு கயல் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள்... சத்தம்கேட்டு திரும்பி பார்த்த செல்லம்மாள் தன் தோழியின் சிரிப்பு எதனால் என தெரிந்ததும் அவளை முறைத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்... சிறிதுநேரம் பொறுத்தவள் இது வேளைக்கு ஆகாது என நினைத்து தன் தோழியின் கைப்பற்றி இழுத்துச் சென்றாள்... "ஏய்ய்.. இரு வரேன்" அதற்கு மேல் அவள் சொன்னதை காதில் வாங்காமல் அழைத்துச் சென்றாள்...

  அவர்கள் நேரே சென்ற இடம் ஊருக்கு வெளியில் ஒதுக்குப்புறமாக உள்ள பாழடைந்த காட்டுக் காளியம்மன் கோவிலுக்கு.... அந்த அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும் என்று சிறுவயதில் பாட்டி சொன்னதை நம்பி, அவளுக்கு என்ன தேவையோ அதை இந்த அம்மனிடம் வேண்டுதல் வைப்பாள்... இன்றுவரை அவள் வைத்த வேண்டுதலும் நடந்திருக்கிறது.... ஆனால் இனி...????


  கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து விட்டு அருகே உள்ள ஆற்றங்கரையில் தோழிகள் இருவரும் அமர்ந்தனர்... செல்லம்மாள் "கயலு இதை நீ நம்புரியா இந்த அம்மன்கிட்ட சொன்னா நடக்கும்னு " எனக் கேட்டதும், கயல்விழி "தெரியல ஆனா நா இந்த அம்மன்கிட்ட எது வேண்டினாலும் நடக்கும்" என்று சிறுசிரிப்புடன் கூறினாள்... செல்லம்மாள் அவளையே ஆழ்ந்து பார்த்தாலே தவிர ஏதும் கூறவில்லை...


  பின் தோழிகள் இருவரும் அன்று முழுவதும் ஊர்சுற்றிவிட்டு வீட்டிற்கு சென்றனர்... கயல்விழி இரவு உணவை முடித்து விட்டு பாட்டியிடம் செல்லம் கொஞ்சிவிட்டு நாளைய பயணத்திற்கு தேவையானதை எடுத்துவைத்து விட்டு உறங்க சென்றாள்... நாளை நடக்கப் போவதை அறியாமல்...
   
   
 4. Saran selva

  Saran selva Pillars of LW LW WRITER

  Messages:
  170
  Likes Received:
  951
  Trophy Points:
  113
  NTKNK - 3


  சென்னை...

  மேல்தட்டு 3rd class மக்கள் வாழும் தனித்தனி வீடுகள் கொண்ட குடியிருப்பு...

  அதிகாலை 5.00 மணி...

  மார்கழி மாதக்குளிரையும் பொருட்படுத்தாது தன் வீட்டுப்பால்கனியில் இலக்கில்லாமல் தொலைதூரத்தை வெறித்தபடி நின்றான்... தமிழின்பன்... அவன் மனக்கண்ணில் கடந்தகாலம் காட்சியாய் விரிந்தது... அதன் கணம் தாங்காது கண்ணை இருக்க மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் முகம் வேதனையை சுமந்திருந்தது...


  மெல்லக் கண்ணை திறந்து பார்க்க ஆதவன் தன் செந்நிறக்கதிரால் பூமிக்கு தன் வருகையை தெரியப்படுத்திக் கொண்டிருந்தான்... தன் நினைவிலிருந்து மீண்டு உணர்ச்சியின் பிடியில் செல்ல இருந்த தன் மடமையை எண்ணித் தன்னையே வெறுத்தவன் மீண்டு அறையினுள் சென்று படுக்கையில் உறங்கும் தனது 4 வயது மகன் ஹரீஷ் அருகில் சென்று அவன் தூக்கம் களையாவண்ணம் நெற்றியில் முத்தமிட்டு
  ஜாக்கிங் செய்யத் தயாராகி அறையை விட்டு வெளியேறினான்...


  தமிழின்பன் அரிச்சந்திரன் - தேவகி தம்பதியரின் செல்வ மகன்... அரிச்சந்திரன் பிரபல தொழிலதிபர்... அவர்களுக்கென்று பல கட்டுமான தொழில்கள், சாப்ட்வேர் கம்பெனிகள், ஏற்றுமதி தொழில்கள், பள்ளிகள், கல்லூரிகள் இருந்தாலும்... சில காரணத்ததால் குடும்பத்தை விட்டு வெளியேறி தன் நண்பன் மகேஷுடன் சேர்ந்து 2 சாப்ட்வேர் கம்பெனிகளும், இந்தியாவில் அதன் கிளைகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறான்...
  அறையிலிருந்து வெளியேறிய தமிழ் நேராக மகேஷின் அறைக்கு செல்ல...  அங்கு தலை முதல் பாதம் வரை போர்வைக்குள் நுழைத்து கொண்டு உறங்குவனை எழுப்பினான்... அதில் தூக்கம் கலைந்த கடுப்புடன் போர்வைக்குள் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி கண்ணை சுருக்கி யார் என்று பார்க்க,


  அங்கு நண்பனைக் கண்டதும் "ஏண்டா மிட்நைட்ல எழுப்புற" எனக்கூறி அப்பொழுது தான் தமிழை நன்றாக கவனித்தான்...

  அங்கு தமிழ் ஜாக்கிங் செல்ல தயாராகி நின்றவனை ... "டேய் ஜாக்கிங் போனும்னா நீ மட்டும் போ என்னை ஏண்டா தொல்லை பண்ணுற" என புலம்பிவிட்டு...


  அவன் அசையாதிருக்கவும், "இன்னைக்கு ஒரு நாள் மட்டும்டா ப்ளீஸ்" என்று கூறிவிட்டு போர்வைக்குள் தலையை இழுத்துக் கொண்டான்...


  சிறிது நேரத்தில் தன் முகத்தில் சில்லென்று தண்ணீர்படவும் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தான்... என்ன நடந்தது எனப் புரியாமல் தமிழைப் பார்க்க... அவன் கையில் இருந்தத் தண்ணீர் ஜக்கைப் பார்த்து நண்பனை முறைத்தான்...
  அவன் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் "5 மினிட்ஸ்ல ரெடியாகி கீழ வர" எனக் கூறிச்சென்றான்...  "கொஞ்சம் சிரிச்சாதா என்னவாம்" என்று மகேஷ் புலம்புவது காதில் விழுந்தாலும் பேசாமல் சென்றுவிட்டான்... அவனை பழைய தமிழாக எப்போது காண்போம் என்று ஒரு பெருமூச்சோடு மகேஷ் பாத்ரூமுக்குள் சென்றான்...


  மகேஷ் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஆசிரமத்தில் தான்... பிறந்த மறுநாளே ஆசிரம தொட்டிலில் விட்டுச் சென்ற குழந்தையை... ஆசிரம நிர்வாகி அன்புடன் அரவணைத்துக் கொண்டார்... சிறுவயதிலிருந்தே கலகலப்பானவன் இல்லாவிட்டாலும்... தன் நற்குணத்தால் சிறிய நண்பர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டான்... படிப்பிலும் கெட்டியாக இருந்தான்...

  ..................................

  பணக்காரர்கள் மட்டுமே படிக்கும் பிரபல பொறியியல் கல்லூரி... அந்த கல்லூரியில் மகேஷுக்கு மெரிட்டில் இடம் கிடைத்திருந்தது... முதல்நாள் அடியெடுத்து வைத்த மகேஷின் முகத்தில் சந்தோசத்தை மீறி சிறு பயம் இருந்தது... அவனின் பயத்தைப்போக்கி தன் நண்பனாகவும் ஏற்றுக்கொண்டான் தமிழின்பன்... அதற்கு காரணமும் இருந்தது...


  .......................................
  .......................................


  மகேஷ் தயாராகி கீழே வந்து நண்பர்கள் இருவரும் வீட்டைவிட்டு கிளம்பினர்... தினமும் பக்கத்தில் ஒரு தெரு தள்ளி உள்ள பார்க்கிற்கு ஜாக்கிங் செல்வது வழக்கம்... தமிழ் மௌனமாக வர "தமிழ் நைட் அம்மா போன் பண்ணுனாங்க" என மகேஷ் தயக்கத்துடன் ஆரம்பிக்கவும்...


  அவனை முறைத்தவன் எதுவும் கூறாமல் அமைதியாக வந்தான்... எப்பொழுதும் வீட்டின் பேச்சு எடுத்தாலே கோபம் கொள்பவன்... இன்று அமைதியாய் வரவும்... "தமிழ் எவ்வளவு நாள் இப்படியே இருக்கப்போற... உனக்குன்னு ஒருத்தி மனைவியா வரணும்... ஹரிஷ்க்கு அம்மா வேணும்... அதோட..." மேல் சொல்லப்போனவன்... தமிழின் இறுகிய முகத்தைக்கண்டு பேச்சை பாதியிலே நிறுத்தினான்...


  மெதுவாக அவன் தோளைத்தொட "நாம இதப்பத்தி ஏற்கனவே நிறைய பேசியாச்சு மகேஷ்... எனக்கு ஹரிஷ், ஹரிஷ்க்கு நான்... எங்களுக்கு யாரும் தேவையில்லை... பொண்ணுங்கனாலே வெறுப்பா இருக்கு... எல்லாம் சுயநலவாதிகள்" என்று கடுமையாக மொழிந்தவனிடம்...


  "உனக்கு வேணும்னா யாரும் தேவையில்லாமல் இருக்கலாம்... ஆனா ஹரிஷ்க்கு அம்மா தேவை... அவனுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சு... இப்பவே அம்மா எங்கேன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான்" என்று கொஞ்சம் சூடாகவே கேட்டான்...


  மகேஷை ஆழ்ந்து பார்த்தவன் "அவனை எப்படி சமளிக்கணும்னு எனக்குத் தெரியும்" என்று கூறி, இனிப்பேச ஒன்றும் இல்லை என்பது போல் ஜாக்கிங்கை தொடர்ந்தார்...


  "இனி எப்படி அவனை சமாளிக்கப்போறான்னு நானும் பாக்குறேன் தமிழ்" என விஷமச் சிரிப்புடன் அவனுடன் சேர்ந்து கொண்டான்...


  இருவரும் பக்கத்துக்கு தெருவிற்குள் நுழையும்போது தமிழின் மொபைல் அடிக்க அதை அட்டெண்ட் செய்து பேசிக்கொண்டு பின்தங்கினான்...

  அதை கவனிக்காமல் குளிரில் உடலை குறுக்கி கையை கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த மகேஷின் முகத்தில் யாரோ தண்ணீரை ஊற்ற அலறியடித்து துள்ளிக்குதித்து தடுமாறி கீழே வீழ்ந்தான்...
   
   
 5. selviesan

  selviesan Bronze Wings New wings

  Messages:
  1,414
  Likes Received:
  1,310
  Trophy Points:
  133
   
 6. Saran selva

  Saran selva Pillars of LW LW WRITER

  Messages:
  170
  Likes Received:
  951
  Trophy Points:
  113
  NTKNK - 4


  முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா
  முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா
  முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா

  பூவையர் மீது கண் ஏய்வது முறையா
  பாவை என் நெஞ்சு தினம் பெய்கின்ற பிறையா
  போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா
  கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா

  கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா.....


  என்ற பாடல் எங்கோ தூரத்தில் ஒலிப்பது போல் இருக்க... கயல்விழி தூக்கத்திலிருந்து கண்விழிக்காமலே கையை பக்கத்தில் துழாவி... கையில் கிடைத்த தலையணையை காதில் வைத்துப் பொத்திக்கொண்டு "ம்ம்... அந்த போன(phone) ஆப் பண்ணுடி" என்று கத்தினாள்...  செல்லம்மாள் "உன் போன் தான நீயே ஆப் பண்ணுடி" என்று தூக்கத்திலேயே முனங்கி விட்டு திரும்பி படுக்க... அவள் மீது தலையணை பறந்து வந்து விழுந்தது... "ப்ச்" சலித்துவிட்டு... எழுந்து அதை எடுப்பதற்குள் கட் ஆக... மணியை பார்த்தவள் காலை 5.30 எனக்காட்டவும்... எழுந்து முகம் கழுவி பிரஷ் செய்துவிட்டு... பக்கெட்டில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வெளியே வந்து வாசலில் தண்ணீரை தெளித்தவள்... மீதம் இருந்த தண்ணீரை ரோட்டில் ஊற்றப் போகும்போது... அந்த நேரம் சரியாக வந்த மகேஷ் மீது ஊற்றிவிட்டாள்...


  அவன் கீழே விழுந்ததைப் பக்கத்துக்கு எதிர்த்த வீட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த இளம்பெண்கள் பார்த்து சிரிக்க... அதில் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு... யார் செய்தது என்று தலையிலிருந்து முகத்தில் வழிந்த தண்ணிரை கையால் துடைத்து விட்டு அவளை உக்கிரமாய் முறைத்து எழ...


  மகேஷ் மீது தண்ணீர் பட்டதுமே, "ஹய்யய்யோ" என்று வடிவேல் பாணியில் மனதில் சொன்னவள்... அவன் முறைத்தவுடன் எங்கே தன்னை அடித்து விடுவானோ என்று தன் நடுங்கும் கரங்களை இடுப்பில் அழுத்தமாய் வைத்து முறைத்தவள்... இல்லை முறைத்த மாதிரி நடித்தவள்... "ஹலோ பாத்து வரமாட்டிங்க" என்று கேட்க...


  ஏற்கனவே அந்த பெண்கள் சிரிக்கவும் இப்படி ஆகிவிட்டதே என்று அவமானமாய் எண்ணியவன்... அவள் பேச்சில் ஆத்திரத்துடன் "ஏய்ய்" என்று பல்லைக்கடித்து நெஞ்சை நிமிர்த்தி... ஒற்றை விரலை நீட்டிக்கொண்டு செல்ல...


  டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
  டண்டனக்கா நக்கா

  எங்க தல எங்க தல டீ ஆறு
  செண்டி மெண்டுல தாறு மாறு

  மைதிலி காதிலி இன்னாரு
  அவர் உன்மையா லவ் பண்ண சொன்னாரு

  மச்சான் அங்க தாண்டா
  தல நின்னாரு

  டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
  டண்டனக்கா நக்கா........


  என்று வீட்டுக்குள் ஹோம்தியேட்டரில் இருந்து வீடே அதிரும் அளவுக்குப் பாட...


  வேகமாக அவளின் மிக அருகில் சென்ற மகேஷ் அந்த காலை நேரத்தில் அமைதியை கிழித்துக்கொண்டு வந்த சத்தத்தில் "ஆ" என்று ஜெர்க் ஆகி ஓரடி பின்னே குதித்தான்...


  செல்லம்மாள் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள்...


  ச்ச இன்னைக்கு நேரமே சரியில்ல என நினைத்தவன், அவள் தோரனையாய் நிற்கவும்... கோபம் அதிகமாக, "ஏ... நீ பாக்காம ரோட்ல போற என் மேல் ஊத்திட்டு... என்ன சொல்றியா... உன்னை..." என்று அவள் மீது பாயும்முன் அங்கு வந்த தமிழ் அவனை தடுத்து என்ன வென்று கேட்க... சொன்னவன் அவளை முறைக்க... தெரியாமல் செய்ததை பெரிதுபடுத்த வேண்டாம் என மகேஷ் இழுத்துச் சென்றான்... உனக்கு இருக்கு என்கிட்ட என்று மனதில் நினைத்துக்கொண்டு முறைத்து விட்டுச் சென்றான்...


  செல்லம்மாள் ஷப்பா தப்பிச்சொம் என்று மனதில் சொல்லிவிட்டு , "இவளுக்கு அலாரம் வைக்க வேற பாட்டே கிடைக்கலையா... நானே ஒரு நிமிஷம் பயந்துட்டேன்..." என்று சொல்லி சிரிப்புடனே கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் சென்றாள்...

  ...............................

  ஜாக்கிங் முடித்து இருவரும் வீட்டிற்குள் நுழையும்போது ஹரீஷ் ஹால் சோபாவில் அமர்ந்து சமையல்காரர் ரெங்கனிடம் இருந்து பால் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தான்...


  ரெங்கன் சமையல்காரர் மட்டுமல்ல... தமிழ் குடும்பத்தின் விசுவாசி... தமிழ் குடும்பத்தில் நடந்த பிரச்சனையில் அவன் வீட்டைவிட்டு வெளியேறும் பொழுது தானும் தமிழுக்கு துணையாக வந்தவர்... பின் ஹரீஷின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்...


  ஹரிஷ் அருகில் சென்று அமர்ந்து தலையைவருடி, "குட் மார்னிங் ஹரி கண்ணா" என்று நெற்றியில் முத்தமிட,

  "குட் மார்னிங் டாடி" என்று எக்கி கன்னத்தில் முத்தமிட்டான்...

  அதில் தமிழ் மென்புன்னகை புரிந்தான்...


  ஹரீஷ் விவரம் தெரிந்ததிலிருந்து தாயின் அன்பை அறியாத பிள்ளை... வயதுக்கு உரிய குறும்புகள் இருந்தாலும்... தமிழின் அறிவுரையால் வயதுக்கு மீறிய முதிர்வுடன் செயல்படுவான்...


  மகேஷ் எதிர் சோபாவில் அமர்ந்து, "குட் மார்னிங் கண்ணா..." என்றவன்,

  ஹரீஷ் குட் மார்னிங் சொன்னதும்...


  " இன்னைக்கு மழைவரும் போல" என தமிழை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே வினவ,

  மகேஷின் சொல்லில் தமிழின் புன்னகை மறந்தது...

  "ஹரி கண்ணா வாங்க கிளம்பலாம்... ஸ்கூலுக்கு டைம் ஆச்சு..." என்று கூறவும்... அங்கு காபியுடன் வந்த ரெங்கன் "தம்பி நான் ஹரி தம்பிய ரெடி பண்ணுறேன்... நீங்க ஆபீஸ்க்கு கெளம்புங்க..." என்று இருவருக்கும் கொடுத்துவிட்டு தமிழ் மறுத்தும் கேளாமல் ஹரீஷை தூக்கிச் சென்றார்...


  தமிழ் எழுந்து மேல செல்ல... மகேஷ் செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்... அவனுக்கு தெரியும் தன் பேச்சை வேண்டும் என்றே தவிர்க்கிறான் என்று... இதற்கு சீக்கிரமே ஒரு முடிவு கட்ட வேண்டும்... என நினைத்துக்கொண்டு நேரம் ஆவதை உணர்ந்து தானும் கிளம்பினான்...


  .............................


  "T2 Infotech"
  தலைமை அலுவலகம்...

  தனது பி.எம்.டபிள்யூ காரை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் நுழைந்து விஷ் செய்த யாரையும் கண்டுகொள்ளாமல் தனது கேபினுள் சென்று இருக்கையில் அமர்ந்தவன் முகம் எதையும் வெளிக்காட்டாமல் இருந்தாலும்... அவன் மனம் கொதித்துக் கொண்டிருந்தது... பின்னோடு வந்த மகேஷ் அவன் எதிர் இருக்கையில் அமர்ந்து எதுவும் பேசாமல் இருந்தான்... இப்போது தான் பேசினால் அவ்வளவு தான் என நினைத்து மௌனமாய் இருந்தான்...


  ஏனெனில் தமிழ் கோபத்தில் இருக்கும்போது யாரேனும் குறுக்கே பேசினாலோ... அறிவுரை வழங்கினாலோ... அவனது கோபம் அதிகமாகுமே தவிர குறையாது...


  சிறிது நேரத்தில் முயன்று தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன்... அப்பொழுது தான் மகேஷை கவனித்தான்... "இங்க என்னடா பன்னுற... 2 ஹவர்ஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்குன்னு தெரியும் தானே... அதுக்கான ஏற்பாட்டை கவனிக்காம... ஹாயா இருக்க... கோ மேன் (Go man)..." என்று பொறியவும்...


  தலையை ஆட்டிவிட்டுச் சென்றான்...

  அவன் சென்றதும் சிறிது நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்து ஆத்திரத்தில் பல்லைக்கடித்தான்... "அவள........"
   
   
 7. Saran selva

  Saran selva Pillars of LW LW WRITER

  Messages:
  170
  Likes Received:
  951
  Trophy Points:
  113
  ஹாய் ப்ரண்ட்ஸ்...

  கதையை படிப்பவர்கள் எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்கப்பா.. உங்க கமெண்ட் தான் எனக்கான உந்து சக்தி.. நீங்க சொன்னாதானே தெரியும் நல்லா எழுதுறேனா.. இல்லையான்னு...

  லைக் அண்ட் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி... மற்றும் சைலண்ட் ரீடர்ஸ்க்கும் நன்றி..

  செவ்வாய்க்கிழமை அடுத்த யூடியோட வரேன்...

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  அன்புடன்..
  சரண்யா..
   
   
 8. Geethuprasath

  Geethuprasath Wings

  Messages:
  4
  Likes Received:
  4
  Trophy Points:
  23
   
 9. selviesan

  selviesan Bronze Wings New wings

  Messages:
  1,414
  Likes Received:
  1,310
  Trophy Points:
  133
   
 10. Saran selva

  Saran selva Pillars of LW LW WRITER

  Messages:
  170
  Likes Received:
  951
  Trophy Points:
  113
  NTKNK - 5


  சிறிது நேரத்திற்கு முன்.....


  காலையில் அலுவலகத்திற்கு கிளம்பிய தமிழ், மகேஷ் இருவரும் ஹரீஷை பள்ளியில் விடச் சென்றனர்... காலையில் ஹரீஷை தமிழ்தான் பெரும்பாலும் பள்ளிக்கு கொண்டுபோய் விடுவான்... மாலை ரெங்கன் சென்று அழைத்து வருவார்...


  பள்ளியில் ஹரீஷை விட்டு... அன்று மீட்டிங் இருப்பதால் அதைப்பற்றி இருவரும் பேசிக்கொண்டு வரும்போது... தனக்கு முன்னால் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண் திடீரென வேகத்தைக் குறைக்கவும்... பேசிக்கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் அந்தப்பெண் வேகத்தைக் குறைப்பாள் என்று எதிர்பாராததால் சட்டெனக் காரைத் திருப்பி விட்டாலும் அவளது ஸ்கூட்டியில் நன்றாக இடித்து விட்டது... காரை ஓரமாக நிறுத்தியவன்... மகேஷை போய் பார்க்கச் சொல்ல... அவனும் கதவைத் திறந்து வேகமாகச் சென்றான்...


  கார் வேகமாக வந்து இடித்தத்தில் கீழே விழுந்த கயல்விழியின் கால் வண்டிக்கு அடியில் மாட்டிவிட... மெதுவாக காலை எடுத்து வலியில் முகத்தை சுளித்துக்கொண்டே... வண்டியை நிமிர்த்தி ஸ்டாண்ட் போட்டுப் பார்க்க... சைலன்சர் நெளிந்து தரை தொட... பின் லைட் உடைந்து இருந்தது...


  அதில் கோபம் கொண்டு இடித்த கார் நின்றதை பார்த்து... காலை லேசாக நொண்டிக்கொண்டே காரை நோக்கிச்செல்ல... மகேஷ் வருவதைப் பார்த்து... "யூ இடியட்... கண்ண எங்க வச்சுட்டு வந்த... கார்ல வந்தா பிளைட்ல வர்றதா நினைச்சுட்டு நினைப்போ... முன்னாடி போறவங்க கண்ணனுக்கு தெரியல..." என மகேஷ் சொல்ல வருவதைக் கேளாமல் அவள் பாட்டுக்கு பொறியவும்...


  தமிழ் கண்ணை மூடி தன் நடுக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான்... முயன்று தன் நினைவை ஒதுக்கியவன்... ரிவ்யூ கண்ணாடி வழியாக பார்க்க... அங்கு மகேஷை அந்தப்பெண் திட்டுவது தெரிந்ததும்... மற்றதை மறந்து கதவைத் திறந்து அவர்களை நோக்கிச் சென்றான்...


  அவள் மகேஷை பேச விடாமல் திட்டிக்கொண்டிருக்கவும் அவர்களை நெருங்க... டிரைவர் சீட்டிலிருந்து இறங்கிய தமிழை கண்டவுடன்... அவனிடம் திரும்பி "நீங்கதான் என் ஸ்கூட்டியை இடிச்சதா..." என அவள் முதலில் இருந்து தொடங்கவும்...


  "ஹலோ மிஸ் லிசன் நீங்க சடன்னா ஸ்லொவ் பண்ணதும் தான் லைட்டா இடிக்க வேண்டுயதா போச்சு..." என அழுத்தமாக சொன்னவன்... சற்று குரலை உயர்த்தி "இப்படித்தா நடுரோட்டில வண்டிய நிறுத்துவிங்களா... பின்னாடி யா..." குறுக்கே புகுந்து அவனை பேசவிடாமல், "எக்ஸ்க்யூஸ் மீ இடிச்சது மட்டும் இல்லாம என்ன ஓவரா பேசுறீங்க..." என எகிறி... "என் ஸ்கூட்டியை பாருங்க சார் எப்படி இருக்குனு... என் அப்பா என்னோட பர்த்டேக்கு வங்கிக்கொடுத்தது..." என அவளையும் அறியாமல் கண்ணில் நீர்கோர்க்கச் சொல்ல...


  அவள் தன்னிடம் பணம் எதிர்பார்க்கிறாள் என தவறாக கணித்து... தன் பர்ஸிலிருந்து நான்கு ஐநூறு ரூபாய்த்தாள்களை அவள் கையைப் பிடித்து வைத்து விட்டுச் "இதுக்கு தானே இவ்ளோ சீன் போட்டுட்டு இருக்க..." என்று வெறுப்பாய் சொன்னவன்... மகேஷைப் பார்த்து கம் என்று விட்டுச் சென்று காரை ஸ்டார்ட் செய்ய...


  பணத்திற்காக தான் என்று சொன்னதும் கோபம் அதிகமாக வேகமாக சென்று கார்க்கதவின் கண்ணாடியை தட்டி கண்ணாடியை இருக்குமாறு சைகை செய்ய... இறக்கவும்... "பணம் இருக்குன்னு என்ன வேணும்னாலும் செய்யலாம்னு திமிர்.. என்னோட வண்டிக்கு பணம் கொடுத்துட்டிங்க... ஒரு வேளை எனக்கு ஏதேனும் ஆகிருந்தால் உங்களோட இந்த பணத்தால் என் உயிரைத் திருப்பித் தர முடியுமா..." என்றவள்... பணத்தை அவன் முகத்தில் வீசிவிட்டுச் செல்ல...


  அதில் அவன் கோபம் எல்லையைக் கடக்க பின்னோடு வேகமாக சென்று தன் ஒரு கரத்தால் அவளது கையை இறுக்கிப்பிடித்து இழுத்து... மற்றொரு கரத்தால் அவளின் கழுத்தை நெறிக்க... அவனின் கண்கள் செந்தணல் போல் சிவந்திருக்க... அதில் கயல்விழி பயத்தில் வெடவெடத்துப்போய்... கழுத்தில் உள்ள அவன் கரத்தை விலக்க முயற்சிக்க... மகேஷ் "தமிழ் என்னடா பண்ணுற" என்று ஓடிவந்து அவளை தமிழிடமிருந்து பிரித்து காப்பற்றியவன்... "உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலடா" என கண்டனத்துடன் சொல்லவும்...


  தன்னைப்பிடித்திருந்த மகேஷ் கையை உதறிவிட்டு காரில் சென்று அமர்ந்தவன்... அதை ஸ்டார்ட் செய்து உறுமவிட... மகேஷ் திரும்பி கயலைப் பார்த்துவிட்டு மறுபுறம் சென்று அமர கார் சாலையில் சீறிப்பாய்ந்தது...


  அதை நினைத்துப் பார்த்தவன்... அவள் சொன்ன "உங்களோட இந்த பணத்தால் என் உயிரைத் திருப்பித் தர முடியுமா..." என்ற சொல் அவன் காதுகளில் ரீங்காரமிட... "அது உண்மைதானே" என நினைத்து பின் தலை உலுக்கி நினைவை விரட்டியவன்... முயன்று தன் வேளையில் மூழ்க... மகேஷ் வந்து மீட்டிங் தயாராய் இருப்பதாய் சொல்லவும்... மீட்டிங் ஹாலுக்கு சென்றவன் அதோடு மற்றதை மறந்தான்...


  ...................................


  இங்கு கயல்விழி ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கழுத்தை நீவி விட்டாள் கயல்விழி... அவன் சென்று நேரமாகியும் வலி போகவில்லை... அப்போது காலில் ஏதோ உரசும் உணர்வில் கீழே குனிந்து பார்க்க... நாய்க்குட்டி ஓன்று வாலை ஆட்டிக்கொண்டு நின்றது...


  காலையில் எழுந்ததும் அம்மாவிடமிருந்து அலைப்பேசி அழைப்பு வர... அட்டெண்ட் செய்து காதில் வைத்து பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் "இன்னைக்கு ரெண்டுபேரும் கோவிலுக்கு போய்ட்டு வாங்க..." என்றதும்,

  "இன்னைக்கு எதுக்குமா"

  "இன்னைக்கு பிரதோஷம் அதோட..." ஏதோ சொல்ல வந்தவர், பின் "அதனால போய்ட்டு வாங்க" அழுத்திச் சொல்ல...


  தூக்க கலக்கத்தில் சரியாக காதில் வாங்காதவள் சரி என்று சொல்லிவிட்டு... செல்லம்மாளிடம் விசயத்தைச் சொல்ல, வரவில்லை என்று சொல்லவும்... சரி என்று தயாராகி தனது ஸ்கூட்டியில் கிளம்பினாள்...


  வேகமாக செல்கையில் தீடீரென ரோட்டின் குறுக்கே அந்த நாய்க்குட்டி வரவும் தான் வேகத்தை குறைத்தாள்... அதற்குள் கார் வந்து இடித்து... அதன்பின் நடந்த வாதம்... அவன் நடந்துகொண்ட முறை அதற்குள் அவ்வளவும் நடந்துவிட்டது... "எல்லாம் உன்னால தான்..." என்று செல்லமாக அதன் தலையில் தட்டி... தூக்கிக்கொஞ்சி விட்டு... அங்கு ஓரமாக விட்டுவிட்டு... வண்டியை தள்ளிக்கொண்டு சென்றாள்...

  ஆட்டோவில் வந்து இறங்கிய கயலை பார்த்தவுடன் வாசலில் அவளுக்காக காத்திருந்த செல்லம்மாள் பதட்டத்துடன் அருகில் சென்று "என்ன ஆச்சு கயல் உன்னோட ஸ்கூட்டி எங்க.." என்று வினவ... அவனிடம் சண்டையிட்டது தவிர்த்து மற்றதை செல்லியவள்... தலைவலி என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்று படுக்கையில் படுத்து கண்மூடியவளின் கண்ணில் அவனின் பிம்பமே...


  தன் நெற்றியில் விரலின் ஸ்பரிசத்தில் கண்ணை திறந்து பார்க்க... செல்லம்மாள் அவளுக்கு தைலத்தை தேய்த்து மெதுவாக பிடித்து விட்டாள்... அதில் நெகிழ்ந்தவள்... தோழியின் மடியில் முகம் புதைத்து அவளின் இடுப்பை கட்டிக்கொண்டாள்... அது வழமைதான் என்பதுபோல் கயலை தட்டிக் கொடுக்க... மெல்ல மெல்ல உறங்கிப்போனாள்...


  ...............................


  இரவு வீடு திரும்பிய தமிழ் ஹரீஷ் எங்கே என்று ரெங்கனிடம் கேட்க... அவன் அறையில் உறங்குவதாக சொல்லவும்... தமிழ் நேராக மாடியேறி தன் அறைக்குச் சென்றான்... அங்கு மகன் உறங்குவதைக் கண்டு அருகில் சென்று அமர்ந்தவன்... அவன் தலையை வருடிக்கொடுத்தான்... வேலை வேலை என்று ஓடி மகனுடன் இருக்கும் நேரம் குறைவது தெரிந்து அவனுக்கு அத்தனை வருத்தமாக இருந்தது...


  "சாரி கண்ணா" என்று நெற்றியில் முத்தமிட்டு எழுந்து... தன்னை சுத்தப்படுத்திக் கொண்டுக்கீழே வர, மகேஷ் அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தான்...


  தமிழ் அங்கிருந்த சோபாவில் அமர... மகேஷ் ரெப்பிரஷ் செய்துவிட்டு வந்தான்... இருவரும் சிறிதுநேரம் பேசி, உணவருந்திவிட்டு அவரவர் அறைக்குச் சென்றனர்... அறைக்கு வந்த தமிழ் மகனின் அருகில் சென்று அவனை அணைத்துக்கொண்டு படுத்து ஹரீஷையே பார்த்துக் கொண்டிருந்தவனை மெல்ல உறக்கம் தழுவிக்கொண்டது...  நாளை.....???????
   
  Last edited: Jan 16, 2018
   
Loading...
Thread Status:
Not open for further replies.

Share This Page

Sponsored