Sponsored


Vegetable Idly

Discussion in 'Vegetarian' started by arunthathi, Apr 11, 2018.

Sponsored


  1. arunthathi

    arunthathi Roots of LW Staff Member Administrator New wings

    Messages:
    220
    Likes Received:
    86
    Trophy Points:
    48
    Admin Post

    Sponsored


    [​IMG]
    என்னென்ன தேவை?


    புளிக்காத இட்லி மாவு - 2 கப்,
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய கேரட் - 100 கிராம்,
    பீன்ஸ் - 50 கிராம்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    வேகவைத்து மசித்த பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    நறுக்கிய மல்லித்தழை - சிறிது.

    எப்படிச் செய்வது?

    புளிக்காத இட்லி மாவில் கேரட், பீன்ஸ், மல்லித்தழை, மசித்த பட்டாணி, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கரைத்துக் கொள்ளவும். இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து, கரைத்த மாவை இட்லி தட்டில் உள்ள குழியில் ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி வெஜிடபிள் இட்லியை வேகவைத்து எடுத்து தக்காளி சட்னி அல்லது வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

    குறிப்பு: கீரையைப் பொடியாக நறுக்கி இட்லி மாவில் சேர்த்து கீரை இட்லி செய்யலாம்.
     
    K.Ramya likes this.
     
Loading...

Share This Page

Sponsored