Sponsored


Sponsored


ஆடை பாதி போல்ட் லுக் மீதி!

Discussion in 'Clothing' started by starbliss, Jul 28, 2018.

 1. starbliss

  starbliss Webmaster Administrator Moderator New wings

  Messages:
  656
  Likes Received:
  260
  Trophy Points:
  83
  Admin Post

  Sponsored


  ld46130545624.jpg
  பெண்களின் லேட்டஸ்ட் சாய்ஸ் எது தெரியுமா? பேண்ட் சூட்தான். அடிப்படையில் வெஸ்டர்ன். அதே சமயம் இந்திய ஸ்டைல்களை இணைத்தது. இதுதான் அவர்களது விருப்பம். அதுவும் சமீபத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஒரு காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பேண்ட் சூட் கெட்டப்பில் வந்து ஸ்டைலிஷ் போஸ் கொடுத்ததும்... இளம் பெண்கள் மத்தியில் இந்த உடை பற்றிக் கொண்டது. போதாதா? டிசைனர் யாரென தேடினோம். பார்த்தால் பெங்களூரிலிருந்து ‘ஹாய்’ சொல்கிறார் பிரியா அகர்வால். “என் ஸ்டைல் கேட்டலாக்ஸ்ல எனக்கே பிடிச்சது இதுதான்.

  வெஸ்டர்ன் ஸ்டைலும் இதுல உண்டு. கூடவே இந்திய டிரெடிஷனல் லுக்கும் உண்டு. தவிர இந்திய ஸ்பெஷல் மெட்டீரியல்ஸான இக்காட் காட்டன்லதான் பேண்ட் சூட் உருவாக்கியிருக்கோம்! ஆக்சுவலா இக்காட் காட்டனை பயன்படுத்தினதுக்கு காரணம், கைத்தறி உடைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான். 25 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உடை இது. இதை அணிஞ்சா ஸ்டைலாவும் இருக்கும் போல்ட் லுக்கும் கொடுக்கும்!’’ என்ற பிரியா அகர்வால், எப்படிப்பட்ட பெண்கள் பேண்ட் சூட்டை விரும்புகிறார்கள் என்றும் ஆராய்ந்திருக்கிறார்.

  “எம்.டி, ஹெச்.ஆர், ஐடி, பிஸினஸ் பெண்கள்... எல்லாத்தையும் விட எந்தத் துறைல இருந்தாலும் தைரியமா இருக்கிற பெண்கள்... இவங்க எல்லாருமே பேண்ட் சூட்டை விரும்பறாங்க. ஒல்லியான பெண்கள் இதை எப்படி வேண்டுமானாலும் டிசைன் செய்துக்கலாம். பப்ளி பெண்கள் ஜாக்கெட் ஸ்டைல் இல்லைனா குர்த்தி ஸ்டைலை பேண்ட் மாதிரி அணியறாங்க. ஒரு டைப் உடலை ஒட்டி வரும். இன்னொரு டைப் கொஞ்சம் கோட் சூட் ஸ்டைல் கொடுக்கும். ரெஜினா ஸ்டைலை பார்த்தீங்கனா அது க்ளாமர் லுக் கொடுக்கிற ஸ்லிம் ஃபிட். சிலர் கோல்ட் ஷோல்டர்கள் கேட்டு டிசைன் செய்துக்கறாங்க.

  ரெஜினா போட்டிருக்கற மாடல் இன்ஃபினிட்டி ஸ்டைல். அதாவது டாப் நடுவுல ஒரு லூப் இருக்கும். லாக் பண்ணிக்கற ஸ்டைல் அது...” என்ற பிரியா, இந்த உடைகளுக்கு எப்படிப்பட்ட அகஸசரிஸ்கள் அணியலாம் என்றும் டிப்ஸ் கொடுத்தார். ‘‘சிலர் ஓவர் போல்ட் லுக் வேண்டாம்னு நினைப்பாங்க. வீட்டு விசேஷங்களுக்கு இது செட் ஆகாதேனு யோசிப்பாங்க. இந்த சந்தேகமே வேண்டாம். பார்ட்டி, ஃப்ரெண்ட்ஸ் கெட் டுகெதர், ஆபீஸ் மீட்னு எல்லாத்துக்கும் பேண்ட் சூட் பொருந்தும். வீட்டு விசேஷத்துக்கு டாப்பை ஸ்கர்ட் கூட மேட்ச் செய்துடுவோம்.

  இந்த உடைக்கு சிம்பிள் அதே சமயம் போல்ட் லுக் அக்ஸசரிஸ் ரொம்ப அழகா இருக்கும். ட்ரைபல் நகைகள், பம்ப் அல்லது கட் ஹீல் ஷூக்கள் போட்டுக்கலாம். மொஜாரி, கோலாபுரி செருப்புகளும் நல்ல மேட்ச் கொடுக்கும். நம்ம ஊர் வெயிலுக்கு கோட் சூட் போட்டுக் கிட்டு ஆபீஸ் போக முடியாது. ஆனா, இதை அணியலாம். கலர் ஃபுல்லாவும் இருக்கும். எங்க கிட்ட ரூ.4500ல ஆரம்பிச்சு ரூ.15 ஆயிரம் வரைக்கும் இந்த உடைகள் கிடைக்கும். இப்ப நடிகைகள் இந்த பேண்ட் சூட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. காரணம் ஏற்கனவே சொன்னதுதான். ஸ்லிம், சிம்பிள் & போல்ட் லுக்!’’ என்கிறார் பிரியா அகர்வால்.
   
   
Loading...

Share This Page