Nithya kannaiyan - என் கனவு நீதானே - story thread

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Nithya Kannaiyan, Sep 5, 2018.

  1. Nithya Kannaiyan

    Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

    Messages:
    220
    Likes Received:
    4,219
    Trophy Points:
    113
    அத்தியாயம் 28

    மூன்று நாட்களுக்கு ஒருமுறையோ நான்கு நாட்களுக்கு ஒருமுறையோ மிதுனாவை காலையில் ஆபிஸிற்கு அழைத்துச் செல்வதோ இல்லை மாலையில் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதோ ஆரூப்பின் வேலையாயிற்று.

    பூஜாவிற்கு இது பிடிக்கவில்லை எனினும், மிதுனாவிற்காக அவள் எதுவும் பேசவில்லை.

    மிதுனாவை பொறுத்தவரை அவளிற்கு ஆரூப்பிடம் சந்தேகப்பட எந்த ஒரு காரணமும் இல்லை. மிதுனாவுடன் அவன் இருக்கையில் அவனுக்கு வரும் கால்கள் அவனது உயரத்தை மிதுனாவிற்கு உணர்த்தியது.

    ஆனால் அவனது நடவடிக்கையில் அவளுக்கு அந்த உயரத்தை அவன் ஒரு நொடிகூட உணரச் செய்தது இல்லை.

    அவன் மிகவும் சீக்ரெட்டாக வைத்திருக்கும் அவனது மொபைல் பாஸ்வேர்டு கூட மிதுனாவிற்குத் தெரியும்.

    போனில் பேசுகையில் அவள் இருக்கிறாள் என்று அவன் எந்த ஒரு நொடியும் நடித்ததுபோல அவளுக்குத் தெரியவில்லை. அவன் பேசும் வார்த்தைகள் புரியவில்லை எனினும் அவனது குரலில் தெரியும் ஆளுமை அவளை நன்கு உணரச் செய்தது.

    இயல்பாக அவளது கை கோர்த்துக் கொள்வது அவனது வழக்கமாக இருந்தது. அதைமீறி அவனிடம் தவறான பார்வையோ, வார்த்தையையோ மிதுனா எப்பொழுதும் கண்டதில்லை.

    அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. லீவ் நாளில் வீட்டில் ஜாலியாக இருக்கலாம் என அவள் நினைத்திருக்க.. மாலையில் அவளுக்கு அழைத்து நாளை வெளியே போகலாம் என்று கூறியிருந்தான் ஆரூப்.

    அவனது வார்த்தையை மறுக்க முடியாமல் சீக்கிரமாக வீடு திரும்பிவிட வேண்டும் என சொல்லியிருந்தாள் மிதுனா.

    இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அனைவரும் ஹாலில் டிவி முன்பு அமர, சரணை மடியில் தாங்கியவாறே மிதுனா மெதுவாக பேச்சைத் தொடங்கினாள்.

    "அக்கா"

    "என்ன பாப்பு"

    "நாளைக்கு நான் மால்க்கு போயிட்டு வரட்டா"

    "மால்க்கா? தனியாவா பாப்பு போற" ஈஸ்வர்தான் கேட்டார்.

    "தனியாவா பாப்பு போற? தனியானா நீ எங்கயும் போக வேண்டாம்" கேள்வியும் கேட்டு பதிலையும் சொன்னாள் அனிதா.

    "அக்கா.. தனியா போகலை அக்கா.. பிரண்ட்ஸ் எல்லாரும் போறோம்"

    "அப்படியா?? பூஜாவும் வராலா??"

    "பூஜா..." என்ன சொல்வது என தெரியாமல் மென்று விழுங்கினாள் மிதுனா. இப்படி அடுத்து அடுத்து இன்னும் எத்தனை பொய் சொல்லனுமோ. கிருஷ்ணா காப்பாத்துப்பா.. கடவுளிடம் இறைஞ்சினாள் மிதுனா.

    "நா என்னைக்குக்கா தனியா போயிருக்கேன்.. கூட ஆளு வராம நா போவேனா" பொய் சொல்ல மனமில்லாம் பாதி உண்மையைக் கூறினாள்.

    "அப்பச் சரி போயிட்டு வா.. வேணும்னா மாமாவ கொண்டு வந்து விடச் சொல்லவா?"

    'அவ்ளோதான்.. ஆரூகூட நாளைக்கு கார்ல போகமுடியாது' அவள் மனம் காரில் அவன் அருகில் அவனைப் பார்த்தவாறே அமர்ந்து செல்லும் பயணத்திற்கு ஏங்கியது.

    நேராக உட்காரு என மிரட்டுவது போல அவன் கொஞ்சுவதும், சீட் பெல்ட்டை அவளுக்கு மாட்டி விடுவதும் நினைவிற்கு வர அக்காவின் பேச்சை மறுத்தாள் மிதுனா.

    "வேண்டாம்கா.. நானே போய்ப்பேன்"

    "பாப்பு அவளோட பிரெண்ட்ஸோட போவாளா இருக்கும்.. விடு அனி.. அப்படிதானே பாப்பு.." அவளிற்காக பேசினான் அருண்.

    "ஹிம்ம்!! ம்ம்ம்.. ஆமாம் மாமா.. அப்படிதான்"

    "சரி சரி.. பாத்து பத்திரமா போயிட்டு வரனும்.. வெளியிடத்துல விளையாட்டுத்தனமா இருக்கக்கூடாது" அறிவுறுத்தினார் ஈஸ்வர்.

    "சரிங்கப்பா"

    "காலைல எத்தனை மணிக்கு பாப்பு போற"

    "7 மணிக்கு அக்கா"

    "7 மணிக்கேவா? அவ்ளோ சீக்கிரமா போயி அங்க என்னடி பண்ணுவிங்க.."

    "சீக்கிரமா போயிட்டு வந்தர்லாம்னு நினைச்சேன் அக்கா"

    "நினைச்சியா? அப்ப அவங்க?"

    "அவங்களும் ஓ.கே சொல்லிட்டாங்க அக்கா"

    மிதுனாவின் பிரெண்டை அனிதா குறிப்பிட, ஆரூப்பை குறிப்பிட்டாள் மிதுனா.

    அனைவரும் அவரவர் அறைக்கு சென்ற பிறகு, தனது அறையில் சரணை தூங்க வைத்துவிட்டு நாளைக்கு என்ன டிரெஸ் போடலாம் என அலமாரியை குடைந்து கொண்டிருந்தாள் மிதுனா.

    ஆரூப்பின் கால் வர அட்டென் செய்து புளூடூத்தில் கனெக்ட் செய்தவாறே தேடுதல் வேட்டையை தொடர்ந்தாள்.

    "ஹலோ"

    "சொல்லுங்க ஆரூ"

    "வெளிய போறதுக்கு பர்மிஷன் வாங்கிட்டயா பாப்பா"

    "ஆரூ.. கிண்டல் பண்ணிங்கன்னா போனை வைச்சுருவேன் போங்க" ஆரூபை மிரட்டினாள் மிதுனா.

    "அப்படியா.. போனை வைச்சுருவயான?"

    "ஏன்? கட் பண்ண மாட்டேனா?"

    "மாட்ட"

    "அதை எப்படி நீங்க சொல்றிங்க.. நான் கட் பண்ணப் போறேன்"

    "கட் பண்ணினா பிச்சுடுவேன்"

    "எதை?"

    "உன்னைத்தான்"

    "என்ன?"

    "அடி பிச்சிடுவேன்னு சொன்னேன்"

    "நானும் உங்களை.."

    "நீயும் என்னை?"

    "அடி பிச்சுடுவேன்"

    "ஹா ஹா ஹா.. அது எதுக்கு"

    "என்னை கிண்டல் பன்றிங்க" மூக்கை உறிஞ்சி சினுங்கினாள் மிதுனா.

    "சரி சரி.. போன்ல இனிமேல் கிண்டல் பண்ணலை"

    "ரொம்பப் பெரிய காரியம்தான் போங்க"

    "என்னடி.. எதுக்கெடுத்தாலும் போங்க.. போங்கன்னே சொல்ற"

    "வேற எப்படி.. போ போனு சொல்லட்டா"

    "நீ சொல்லு.. அப்புறம் என்ன நடக்குதுனு மட்டும் பாரு"

    அவனுடன் பேசியவாறே ஒரு பிளாக் கலர் டாப்பும், புளூ கலர் பேண்ட்டும் சாலும் எடுத்தாள்.

    "ஆரூ"

    "ம்ம்ம்.. என்னடா"

    "எங்க இருக்கிங்க?"

    "என்னோட ரூம்ல"

    "சூப்பர்.. உங்ககிட்ட பிளேக் கலர் சர்ட் இருக்கா"

    "ம்ம்ம்.. இருக்கே"

    "அதை எடுங்க"

    "அது எதுக்கு?"

    "எடுங்க ஆரூ.. ஒரு வேலையாவது சொன்னா செய்யறிங்களா.. கேள்வி கேட்டுட்டே இருக்கறது.."

    "டேய்.. உன்னை.. இரு எடுக்கறேன்"

    "ம்ம்ம்.. அது நல்ல பிள்ளைக்கு அழகு.. போய் எடுங்க" அவன் அந்த பக்கம் எதையோ இழுப்பது போல இங்கே சவுண்ட் கேட்டது.

    இவள் எடுத்த டிரெஸ்ஸை டேபிளின் மேல் வைத்துவிட்டு சரணின் அருகில் வந்து படுத்துக் கொண்டாள். இவள் படுத்ததை உணர்ந்த குழந்தை சினுங்கியவாறே இவளின் மேல் கை கால்களை போட்டது..

    "இங்கதான்டா இருக்கேன் கண்ணா.. தூங்குங்க.. தூங்குங்க" சரணின் முதுகில் மென்மையாய் தட்டிக் கொடுத்தாள்.

    "சிச்சி" தூக்கத்திலேயே சினுங்கினான்.

    "என்னடா கண்ணா.. சித்தி இங்கதான் இருக்கேன் தூங்குங்க.." அவனை மென்மையாய் தன்னோடு அணைத்துக் கொள்ள அவன் தூங்கிவிட்டான்.

    சரண் தூங்கியது தெரிந்ததும் சன்னக் குரலில் ஆரூபை அழைத்தாள் மிதுனா.

    "ஆரூ"

    "ம்ம்ம்" அவனின் குரலில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது மிதுனாவிற்கு.

    "சரண் இங்க திடீர்னு முழிச்சுக்கிட்டான்.. அங்க என்ன ஆச்சு.. உங்க வாய்ஸ் ஏன் ஒரு மாதிரி இருக்கு.."

    தொண்டையை லேசாக செறுமியவன் "எப்படியிருக்கு.. நார்மல்லாதான் இருக்கு.. அதுசரி.. இந்த சர்ட் எதுக்கு எடுக்கச் சொன்ன"

    "அச்சோ மறந்தே போயிட்டேன்.. ஹா ஹா ஹா.. அந்த சர்ட்ட கைல பிடிச்சிட்டே நிக்கறிங்களா"

    "இல்ல இல்ல.. அவ்ளோ சிரிப்பு வேண்டாம்.. கைல பிடிச்சுட்டு உக்காந்துட்டு இருக்கேன்"

    "ஹா ஹா ஹா.. சரி டார்க் புளூ ஜீன்ஸ் எடுங்க"

    "என்னடி.. என்னமோ கடைல பர்சேஸ் பண்றதை போல சொல்ற"

    "எடுங்க ஆரூ.. பிளீஸ்" கொஞ்சும் குரலில் கெஞ்சினாள் மிதுனா.

    "ம்ம்ம்.. எடுத்துட்டேன்.. சொல்லு"

    "சூப்பர் நாளைக்கு இதையே போட்டுட்டு வரிங்களா.. பிளீஸ்"

    "எத்தனை பிளீஸ்டா.. நீ எடுக்க சொல்லும்போதே எனக்கு தெரிஞ்சிரிச்சு.. ஆனால் ஏன் இந்த கலர் சொல்றன்னுதான் தெரில"

    "அப்ப நாளைக்கு இதையே போட்டுட்டு வரிங்களா?"

    "ஆமாடா பூனைக்குட்டி.. நீ கேட்டு நா நோ சொல்றதா.. அதுக்கு சான்ஸ்ஸே இல்ல"

    அவன் பதிலில் மிதுனாவின் முகத்தில் கள்ளப் புன்னகை வந்தது. 'நா கேட்டா நோ சொல்ல மாட்டிங்களா? நா என்ன கேட்டாலும் நோ சொல்ல மாட்டிங்களா?'

    "டேய்.. லைன்ல இருக்கயா"

    "ம்ம்ம்.. இருக்கேன்.. போய் தூங்குங்க ஆரூ.. மார்னிங் நேரமா எழுந்துருப்பிங்க இல்ல"

    "நாளைக்கு காலைல உன்னோட ஊர் சுத்தப் போறேன்.. நினைச்சாலே சந்தோஷத்துல தூக்கம் வர மாட்டிங்குது மிது"

    "ஊரா.. நாம மால்க்கு தான போறோம்"

    "நீ நேரா மால்க்கு குதிக்கப் போறியா.. என்கூட கார்லதான வரப்போற"

    "ஓ.. அப்படி சொல்றிங்களா?" ஆரூப் அவளின் ஓ சொல்லும் இதழ்களை நினைத்துக்கொண்டே ம்ம்ம் கொட்டினான்.

    "ஓ.கே.. குட்நைட் ஆரூ.. இன்னும் கொஞ்ச நேரம் பேசினா.. சரண் எழுந்துப்பான்"

    "மிது..."

    "ம்ம்ம்.. என்ன ஆரூ"

    "நா ஒன்னு கேட்டா செய்வியா?"

    "ஏன் இப்படி கேக்கறிங்க.. கண்டிப்பா செய்வேன் சொல்லங்க"

    "சரண்ண தூங்க சொன்ன மாதிரி என்னையும் தூங்க சொல்றயா?"

    "எ.. என்ன ஆரூ.. எனக்குப் புரியலை"

    "சரண்ண தூங்க வைச்ச இல்ல"

    "அது.. அவனுக்கு தட்டிக் கொடுத்தேன்.. தூங்கிட்டான்" தன் கழுத்தில் கையை போட்டுக்கொண்டு, இடுப்பில் ஒரு காலை போட்டவாறே தன் அணைப்பினுள் இருந்த சரணை பார்த்தவாறே மென்று விழுங்கி கூறினாள் மிதுனா.

    "அவனை தூங்க சொல்லி சொன்ன இல்ல.. அது மாதிரி ஒரே ஒரு டைம் சொல்லுடா மிது பிளீஸ்.."

    மிதுனாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவன் தன் குரலுக்காக அந்தப் பக்கம் காத்திருக்கிறான் என்பது புரிந்தது.

    "என்னடா கண்ணா.. தூங்குங்க" சொல்லி முடித்த நொடியில் போனை கட் செய்துவிட்டாள் மிதுனா.

    குளிரில் நடுங்குபவள் போல அவளின் உடல் வெட வெடவென நடுங்கியது.

    அந்தப் பக்கம் பெட்டில் இருந்த ஆரூப் தூங்காமல் பெட்டில் புரண்டு புரண்டு படுத்தான். திரும்ப திரும்ப மிதுனாவின் குரல் அவன் காதில் எதிரொலித்தது.

    'என்னடா கண்ணா.. என்னடா கண்ணா.. தூங்குங்க.. தூங்குங்க'

    காலையில் அவள் முகம் காணும் ஆவலில் சூரிய உதயத்திற்காக காத்திருந்தான் ஆரூப்.

    ஆரூப்பின் முகத்தில் காலையில் எப்படி விழிப்பேன் என வெட்கத்தில் கையால் முகத்தை மூடிக்கொண்டாள் மிதுனா.

    - தொடரும் .
     
     
  2. Nithya Kannaiyan

    Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

    Messages:
    220
    Likes Received:
    4,219
    Trophy Points:
    113
     
  3. Nithya Kannaiyan

    Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

    Messages:
    220
    Likes Received:
    4,219
    Trophy Points:
    113
    அத்தியாயம் 29

    காலையில் மிதுனாவிற்காக அவனது காரில் காத்திருந்த ஆரூப்பிற்கு மிதுனாவைக் கண்டதும்தான் புரிந்தது, அவள் எதற்காக பிளேக் அன் புளூ காம்பினேஸன் டிரஸ் சொன்னாள் என்று.

    ஆழ்ந்த கருப்பும், அடர் நீலமும் அவளது நிறத்திற்கு இன்னும் அழகாக இருந்தது. ஏதோ ஷோகேஸில் வைக்கும் பொம்மையைப் போல இருந்தாள் மிதுனா.

    அருகே வந்து காரில் ஏறி அமர்ந்தவளின் மீதிருந்து ஏதோ ஒரு மனதை மயக்கும் வாசனை வந்தது. ரோஜாப் பூவிலிருந்து வரும் பன்னீரின் நறுமணத்தைப் போல இருந்தது அந்த வாசம்.

    "ஹா" ஆழ மூச்செடுத்து சுவாசித்தவன், மெல்ல அவளை அழைத்தான்.

    "மிது"

    முதல் நாள் இரவில் அவனிடம் பேசிய நினைவில் இருந்தவள் அவனின் முகம் பார்க்க மறுத்தாள். ஜன்னலின் புறம் திரும்பி அமர்ந்தவள், "காரை எடுங்க ஆரூ" என்றாள்.

    எஜமானனின் பேச்சைக் கேட்கும் நாய்குட்டியைப் போல அவள் கூறிய அடுத்த நொடியில் காரை கிளப்பிவிட்டான் ஆரூப்.

    காரை ஓட்டியவாறே மெல்ல திரும்பி மிதுனாவை ரசித்தான் ஆரூப். தலைக்கு ஒரு கிளிப் மட்டும் குத்தி முடியை முதுகில் படர விட்டிருந்தவள், முகத்தில் உராயும் ஒன்றிரண்டு முடிகளை எடுத்து விட்டவாறே இருந்தாள். அவளுக்கு அது தனி அழகைக் கொடுத்தது.

    காரிலிருந்த அவனது செல்லை எடுத்தவள், அவன் வைத்திருந்த வீடியோக்களை பார்வையிட்டாள். அவன் வைத்திருந்ததில் பாதிக்கும் மேலே அவனது பிஸினெஸ் சம்பந்தமான வீடியோக்களாகவே இருந்தன.

    "ஆரூ.. நீங்க மூவியே உங்க செல்ல வைச்சிருக்க மாட்டிங்களா?"

    "மூவியா? அது பார்க்க எல்லாம் டைம் இருக்காதுடா மிது.."

    "அப்புறம் டெய்லியும் என்னதான் பண்ணுவிங்க.. போர் அடிக்காதா.. எப்பப் பாரு பிஸினெஸ், மீட்டிங்னு?" அவன் முகத்தைப் பார்த்தவாறே கேட்டாள் மிதுனா.

    அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவன், ரோட்டைப் பார்த்தவாறே கூறினான் "பார்ட்டி".

    "என்ன பார்ட்டி" லேசாக குரல் உள்ளே செல்ல பயத்துடனே கேட்டாள்.

    "அடிக்கடி பார்ட்டி நடக்கும்.. டிரிங்க்ஸ் பார்ட்டி.. உன்னை பார்க்கறதுக்கு முன்னாடி வரைக்கும் அதுக்கு போனேன்"

    "இப்ப" என்ன சொல்வானோ என்ற எதிர்பார்ப்புடன் கேட்டாள்.

    "அதுக்கு போக டைம் இல்ல" அவனின் பதிலில் கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தாள் மிதுனா. அவளின் புன்னகையில் தானும் முகம் மலர்ந்தான் ஆரூப்.

    காரை ஓட்டியவாறே அவளைப் பார்த்தவன் அவளின் கன்னத்தைப் பிடித்து கிள்ளினான்.

    "ஸ்ஸா ஆரூ.." அவனது கையை தட்டி விட்டவள், "எங்க போறோம்?" என்று கேட்டாள்.

    "ஹோட்டலுக்கு"

    "உங்க ஹோட்டலுக்கா?"

    அவளை திரும்பிப் பார்த்து முறைத்தவன், "நம்ம ஹோட்டலுக்கு" என்றான்.

    "வேண்டாமே" தயங்கியவாறே மெல்லக் கூறினாள் மிதுனா.

    "என்ன?"

    "பிளீஸ் ஆரூ.. வேற ஹோட்டலுக்குப் போலாமே" என்றாள் கியரின் மீதிருந்த அவனது கையின் முழங்கையைப் பிடித்தவாறே.

    அவளை திரும்பிப் பார்த்தவன், "ஏன்டா.. அந்த ஃபுட் உனக்குப் பிடிக்கலையா?" என்றான்.

    "அதெல்லாம் இல்ல.. அங்க போனா உங்க ரூம்குள்ளயே உக்கார்ந்து சாப்பிடனும்"

    "அதுக்கு?"

    "ஏதாவது ஓப்பன் ரெஸ்டாரன்ட் போலாம் ஆரூ.. சுத்தி செடிகளோட உக்கார்ந்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும்.."

    "நம்ம ஹோட்டல்லயே உனக்கு பிடிச்ச மாதிரி நான் அரேன்ஞ் பண்ணச் சொல்றேன் டா"

    "இல்ல வேணாம்.. பிளீஸ் ஆரூ.. வேற ஹோட்டலுக்குப் போலாம்" அவள் மீண்டும் மறுக்க வேறு எதையும் கூறாமல் சரி என்றவன் அவளுக்குப் பிடித்தவாறு இருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

    செடிகளின் அருகில் இருந்த ஒரு டேபிளில் அமர்ந்தவர்கள் காலை உணவை உண்டனர்.

    "உங்களுக்கு ஸ்வீட் பிடிக்குமா? காரம் பிடிக்குமா?" மிதுனா.

    "எனக்கு காரம் அதிகமா இருக்க ஃபுட் ரொம்ப பிடிக்கும்டா"

    "ம்ம்ம்.. நினைச்சேன்"

    "என்ன நினைச்ச"

    "ஒன்னுமில்லை.. இப்ப எங்க போறோம்.. மால்க்கா?" பிளேட்டை காலி செய்தவாறே கேட்டாள் மிதுனா.

    "ம்ம்ம்" என்றவன் உணவை முடித்துக்கொண்டு எழ, அவனுடனேயே எழுந்தாள் மிதுனா.

    அந்த மாலின் முன்பு காரை நிறுத்தியவன், "நீ இங்கயே நில்லுடா.. நான் பார்க் பன்னிட்டு வரேன்" என்றான்.

    காரிலிருந்து இறங்கியவள் அவன் வருவதற்காக காத்திருந்தாள். அங்கே மாலிற்குள் ஜோடி ஜோடியாக சுற்றுபவர்களைப் பார்த்தவளுக்குள் உற்சாகமாக இருந்தது.

    இன்று தானும் ஆரூப்பும் இவர்களைப் போல தான் ஜோடியாக சுற்றப் போகிறோம். நினைக்கையிலேயே வாயிற்குள் சர்க்கரையை மெல்வதுபோல இருந்தது.

    காரை பார்க் செய்துவிட்டு வந்தவன் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

    எலிவேட்டரின் அருகே சென்றவனின் கையைப் பிடித்து இழுத்தவள், "லிப்ட்ல போலாம்" என்றாள் லிப்ட்டை கைகாட்டி.

    "ம்ம்ம்.. வா" என்று அவளை அழைத்துக் கொண்டு லிப்டின் அருகே சென்றவன் லிப்ட் கீழே வருவதற்காக பட்டனை அழுத்தி விட்டுக் காத்திருந்தான்.

    திடீரென அவனுக்கு கால் வர போனை அட்டென் செய்து காதில் வைத்தவாறே சற்று நகர்ந்து நின்றான் ஆரூப்.

    ' வந்துருச்சா.. எங்க இருந்துதான் கால் பன்னுவாங்களோ.. 24 மணிநேரமும் போன் பேசிட்டே இருக்காரு.. இவரு அலப்பறை தாங்கலைடா சாமி' புலம்பிக்கொண்டு அவனை பார்த்தவாறே திரும்பியவள் அதிர்ச்சியில் என்ன செய்வது என்றே தெரியாமல் நின்றுவிட்டாள்.

    லிப்டின் உள்ளே இருந்த ஒரு ஜோடி அவசரமாக விலகி நின்றனர். மிதுனாவிற்கு அவர்களின் முகம் பார்க்க முடியாமல் கூச்சம் தடுத்தது.

    'ச்சை.. பப்ளிக் பிளேஸ்ல போயி எப்படி இப்படி..' அவள் தடுமாறிக் கொண்டிருக்கையிலேயே போனை கட் செய்தவன் "போலாமா?" என இவளின் அருகே வந்தான்.

    "ம்கூம்" அவனிற்கும் லிப்ட்டிற்கும் நடுவே வந்து நின்றவள் தலையை வேகமாக ஆட்டி மறுத்தாள்.

    "எனக்கு இதுல போக வேணாம்.. அதுலயே போகலாம்" என்றுவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

    "ஏய்.. என்னடா ஆச்சு.." அவளிடம் கேட்டவாறே அவளின் பின்னே வந்தான் ஆரூப்.

    எலிவேட்டரின் அருகில் சென்றவள் அதில் ஏறாமல் பயத்துடன் அதை முறைத்துப் பார்த்தவாறே நின்றாள்.

    இவளின் அருகே வந்த ஆரூப் அவளின் பயத்தைக் கண்டு புன்னகைத்தவாறே அவளின் கையை பிடித்துக்கொண்டான்.

    "வா டா" என்றவன் அவளை மெதுவாக தன்னுடன் அணைத்தவாறே எலிவேட்டரில் ஏற்றினான். பயத்தில் அவனிடம் இன்னும் ஒன்றிக்கொண்டு அவன் கையை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டாள்.

    முதல் தளத்திற்கு சென்றவர்கள் ஒவ்வொரு கடையாக சுற்றி வேடிக்கை பார்த்தனர்.

    "எதாவது வாங்கிக்கோ மிது.. ஏன் எதுவுமே வாங்க மாட்டிங்கற?"

    "என்ன ஆரூ வாங்கறது..எங்கிட்டதான் எல்லாமே இருக்கே.. எனக்கு எதுவுமே வாங்கத் தோனலையே"

    "எதாவது டிரஸ் வாங்கலாமா?"

    "ஏற்கனவே எடுத்த 2 செட்டை இன்னும் போடாம அப்படியே வைச்சிருக்கேன்.."

    "ஜுவல்ஸ், காஸ்மெடிக்ஸ்"

    "ஜூவல்ஸ் எல்லாம் அக்காவும், அப்பாவும்தான் வாங்குவாங்க.. நா காஸ்மெடிக்ஸ்லாம் யூஸ் பண்ண மாட்டேன்"

    "வேற"

    "ம்கூம்"

    "ஷாப்பிங் வந்துட்டு எதுவுமே வாங்கத் தோனலைனு சொல்ற பொண்ணு நீயாதான் இருப்ப"

    "ஓ.." என்றவள் அவனை மேலும் கீழும் பார்த்தவாறே "அப்படி எத்தனை பொண்ணுங்களை உங்களுக்கு தெரியும் ஆரூ.. எத்தனை பேருக்கு நீங்க வாங்கிக் கொடுத்துருக்கிங்க.." என்றாள்.

    சிரித்தவாறே அவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் மாறிவிட்டது. அவளின் முகத்தைப் பார்க்காமல் தவிர்த்தவாறே சொன்னான்.

    "எனக்கு தெரிஞ்ச எல்லா பொண்ணுங்களுமே அப்படிதான் மிது.. என்கிட்ட எதையாவது எதிர்பார்த்துதான் என்கிட்டே பழக ஆசைப்படுவாங்க" அவன் சொல்லியவாறே அவள் முகம் பார்க்க, கண்களில் வலியுடன் வேறு எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் மிது.

    "அதனாலேயே நான் யார்கிட்டயும் அதிகமா பழகறது இல்ல மிது.. ஒரு லிமிட்டோடயே அவங்களை கட் பண்ணிருவேன்"

    அவனின் முகம் பார்த்த மிதுனா, "என்னை நீங்க எப்படி நினைச்சிருக்கீங்க.. அவங்களும், நானும் உங்களுக்கு ஒன்னுதானா ஆரூ?" மிகுந்த வலியுடன் கேட்டாள் மிதுனா.

    அங்கிருந்த சேரில் அவளை அமர வைத்தவன், அவளின் அருகே அமர்ந்து அவளின் கைகளை தன் கைகளுக்குள் பொத்தி வைத்தவாறே அவளிடம் பேசினான்.

    "நா உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரிடா மிது.. நா உன்னை எப்பயும் யாரோடயும் கம்பேர் பண்ண மாட்டேன்.. ஏன்னா நீ எப்பவும் எனக்கு ஸ்பெசல்தான்.. நீ செய்யற ஒவ்வொரு விஷயத்தையும் நா ரசிக்கத்தான் செய்யறேன்.. எந்த ஒரு நிமிஷமும் அதைப் பார்த்து சலிக்கவோ இல்ல முகம் சுளிக்கவோ இல்ல.. பிகாஸ் நா உன்னை அந்த அளவுக்கு நேசிக்கறேன்.. எந்த அளவுக்கு நேசிக்கறேன்னா உன்னால அதை கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது.."

    அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மிதுனாவிற்கு கண்கள் கலங்கி அவளின் கன்னத்தில் கண்ணீர் துளி கோடாக இறங்கியது.

    அவளின் கையை ஒரு கையால் பிடித்தவன், மறுகையால் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.

    "அழாத மிது.. நா எப்பயும் உன்கூடவேதான் இருப்பேன்.. நீ என்ன பண்ணாலும் நா அதை ரசிக்கத்தான் செய்வேன்.. உன்னை ஒரு நிமிசம் கூட வெறுக்க என்னால முடியாது.."

    அவனைப் பார்த்து சிரித்தவள், "எனக்கு ஐஸ்கிரீம் வேணும்.." என்றாள் மூக்கை உறிஞ்சியவாறே.

    "ம்ம்ம்.. ஒழுங்கா அழுகாம இரு.. அப்பதான் வாங்கித் தருவேன்.."

    "நா அழல" என்றவள் இரு கையாலும் கன்னத்தை துடைத்தவாறே, அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

    அவளின் இரு கன்னங்களையும் பிடித்து கிள்ளி ஆட்டியவன், "ஆரூ" என அவள் கத்துவற்குள் ஓடிவிட்டான்.

    அவளுக்கு பிடித்த பட்டர்ஸ்காட்ச்சை வாங்கிக்கொண்டு அவளிடம் சென்று நீட்டினான். அதை வாங்கிப் பிரித்து பாதி சாப்பிட்ட பின்பே இவனிடம் கேட்டாள் மிதுனா.

    "உங்களுக்கு.. நீங்க சாப்பிடலையா"

    "எனக்கு ஸ்வீட் அதிகமா பிடிக்காதுடா"

    "கொஞ்சமா சாப்பிடலாம் இல்ல.." என்றவள் தான் சாப்பிட்ட ஐஸ்கிரீமை அவனிடம் நீட்டினாள்.

    "இந்தப் பக்கம் நா சாப்பிடல.. நீங்க கொஞ்சமா கடிச்சுக்கோங்க.." குழந்தைத்தனத்துடன் நீட்டியவளிடம் மறுக்கத் தோன்றாமல் வாங்கிக் கொண்டான் ஆரூப்.

    இருவருமாக ஒரு ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு, அடுத்து புளோரை சுற்றக் கிளம்பினர்.

    ஒவ்வொரு தளமாக சுற்றிவிட்டு, மேலே செல்ல மிதுனாவிற்கு அந்த ஆசை வந்தது.

    "ஆரூ.. மூவிக்கு போலாமா?"

    "மூவியா.. என்ன மூவி இந்த டைம்க்கு இருக்குன்னு தெரியலையே"

    "பரவால.. எதாவது ஒரு நல்ல மூவியா இருந்தா போதும்.. போலாமா ஆரூ" அவனின் கையைப் பிடித்து தொங்கியவாறே கேட்டாள் மிதுனா.

    "சரி வா.. கீழே போயி டிக்கெட் வாங்கிட்டு வரலாம்" அவளை ஓரமாக இழுத்து நிறுத்தியவாறே கூறினான் ஆரூ.

    'மறுபடியும் கீழே போகனுமா.. அந்த எலிவேட்டர்லயா??' அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

    "ஆரூ.. நீங்க மட்டும் போயிட்டு வாங்க ஆரூ.. பிளீஸ்.. நா இங்கயே உக்கார்ந்து வைட் பண்ணிட்டு இருக்கேன்.. எங்கயும் போக மாட்டேன்"

    "தனியா எல்லாம் வேண்டாம்.. என்கூட வா.. வேண்ணா லிப்ட்ல போகலாம்" எலிவேட்டரில் செல்ல பயப்படுவாளே என்று அவன் கேட்க, லிப்டின் பெயரைக் கேட்டவுடன் அவள் முகம் முழுவதும் சிவக்க முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

    திடீரென முகம் சிவக்க, அவள் முகத்தைத் திருப்பியதும் ஆரூப் அவளை யோசனையுடன் பார்த்தான்.

    "என்னாச்சு மிது.. எதுக்கு லிப்ட்டுனு சொன்ன உடனே இப்படி வெட்கப் படற.. கீழயும் அப்படிதான் திடீர்னு லிப்ட் வேண்டாம்னு ஓடி வந்துட்ட.. என்ன மேட்டர்"

    "ஒன்னுமில்ல.." அவனின் முகம் பார்க்காமல் சொன்னாள் மிதுனா.

    "இங்க பாரு.. என்னைப் பாரு மிது" அவளின் தாடையைப் பிடித்து தனது முகத்தைப் பார்க்க வைத்தான் ஆரூப்.

    வெட்கத்தில் அவனது முகத்தைப் பார்க்காமல், தடுமாறினாள் மிதுனா.

    அவளை ரசனையுடன் பார்த்தவன் "என்னடி" என்றான் உல்லாசமாக.

    "ம்கூம்" என மறுப்பாய் தலையசைத்தாள் மிதுனா.

    "இப்ப சொல்லப் போறயா இல்லையா?"

    "அது வந்து ஆரூ.."

    "ம்ம்ம்.. சொல்லு"

    "அந்த லிப்டுக்குள்ள.. அவங்க ரெண்டு பேர் நின்னாங்க இல்ல.."

    "ம்ம்ம்"

    "அவங்க.. அவங்க" அதற்கு மேல் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டாள் மிதுனா.

    "ம்ம்ம்.. அவங்க" அவளை நெருங்கி நின்று அவளிடம் ரகசியம் கேட்பவன் போல அவளின் முகத்தருகே தனது முகத்தை கொண்டு சென்றான் ஆரூப்.

    - தொடரும் .
     
     
  4. shiyamala sothy

    shiyamala sothy Wings New wings

    Messages:
    171
    Likes Received:
    265
    Trophy Points:
    83
    Hi nithya!
    அருமையான எபி. இது ரொமான்டிக்கான அமைதியான கதை. போட் டிக்கு சரித்திரக் கதை. இரு வித்தியாசமான கதைகள் கலக்குங்கள்.
    [​IMG][​IMG]
     
     
  5. Nithya Kannaiyan

    Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

    Messages:
    220
    Likes Received:
    4,219
    Trophy Points:
    113
    Thank you for your support frnd
     
     
Loading...

Share This Page