காதலை தேடி... - Devamathi

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by devamathi, Apr 5, 2019.

 1. devamathi

  devamathi Wings New wings LW WRITER

  Messages:
  29
  Likes Received:
  18
  Trophy Points:
  23
  Thank you ....
   
   
 2. devamathi

  devamathi Wings New wings LW WRITER

  Messages:
  29
  Likes Received:
  18
  Trophy Points:
  23
  காதலை தேடி - 15

  ஹாய் தோழிகளே... நான் வந்துட்டேன் வந்துட்டேன்!!! காதலை தேடி... அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன். படிச்சிட்டு எல்லோரும் உங்கள் கமெண்ட்ஸ தட்டிவிடுங்க கண்மணிகளா....சின்ன எபி தான் டியர்ஸ்ஸ்ஸ்ஸ்... கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க....

  அங்கே தீபக்கின் நண்பர்கள் அனைவரும் பார்ட்டி என்ற பெயரில் இன்றைய இளம் தலைமுறைகளை சீரழிக்கும் மதுவை அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை கண்ட தீபக், "டேய் என்னடா இது? யாரவது பார்த்தா என்ன ஆகும்?"

  "அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க. நீயும் வா மச்சான்" - விஜய்

  "டேய் விஜய்... தீபக்கை பத்தி தெரியாதா?
  அவன் எப்போ குடிச்சிருக்கான்?" - தினேஷ்

  "நீங்கலாம் திருந்த மாட்டிங்க. எனக்கு வேலை இருக்கு. சரி நீங்க இங்க இருக்கிங்க. பிரியாவும், ருத்ராவும் எங்க?"

  பிரியா அவங்க சித்தி வீட்டுக்கு கிளம்பிட்டா - விஜய்

  சரி ருத்ரா எங்க இருக்கா? - தீபக்

  ஆமா... நா கூட சாப்பிடும் போது பார்த்தது. அதுக்கு அப்புறம் ருத்ராவை பார்க்கலையே என தினேஷ் கூற விஜய்யும் அதை ஆமோதித்தான்.

  "உங்களை நம்பி ஒருவேளை கொடுத்தா அதை கூட உங்களால செய்யமுடியலை. ருத்ராவையும், பிரியாவும் கீழே இருக்க அறைல தானே தங்க வைக்க சொன்னேன்? சொன்ன ஒரு வேலைய கூட ஒழுங்கா செய்யாம இங்க வந்து குடிச்சிட்டு இருக்கீங்க" என திட்டியவன் அவர்களிடம் பேசி பயனில்லை என பிரியாவிற்கு அந்த நேரத்தில் அழைப்பது சரியில்லையென அவளிற்கு குறுந்செய்தி அனுப்பினான்.

  ஒரு அரைமணி நேரம் கழித்து பிரியாவிடம் இருந்து பதில் வந்தது. தான் தன் சித்தி வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், ருத்ராவை சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டதாகவும் பதில் வந்தது.

  பிரியாவின் பதிலை பார்த்துவிட்டு ருத்ராவிற்கு அழைத்தான். ஆனால் அவளின் கைபேசிக்கு அழைக்க அது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக சொல்ல மீண்டும் முயற்சித்து தொடர்பு கிடைக்காமல் என்ன செய்வதென தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

  மணி நள்ளிரவு பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருக்க தீபக்கின் தாய் கனகா, "தீபக் போய் தூங்குப்பா. காலைல முகூர்த்தம் ஒன்பது மணிக்கு தானே. கொஞ்சம் நேரம் போய் தூங்கு".

  "சரி மா என்று அறைக்கு வந்தவனால் தூங்கமுடியவில்லை. ருத்ராவிடமிருந்து ஏதாவது குறுந்செய்தி வந்துள்ளதா என நொடிக்கொரு முறை தன் கைபேசியை பார்த்துக்கொண்டிருந்தவன், தனியா எதுக்கு போகணும்? காலைல கல்யாணம் முடிச்சிட்டு போயிருக்கலாம். இந்த இராத்திரி நேரத்துல நல்லபடியா வீட்டுக்கு போகணும். எப்போ பாரு இவளுக்கு இதே வேலை. நம்மள பதறவச்சு வேடிக்கை பாக்கறதே பொழப்பா வச்சிட்டு இருப்பா போலிருக்கு என யோசனையில் இருந்தவனை ருத்ராவின் அழைப்பு வர அவசரமாக அதை உயிர்பித்தான்.

  "ஹே ருத்ரா... உனக்கு எத்தனை முறை கால் பண்றது? இப்போ எந்த இடத்துல இருக்க? ஒன்னும் பிரச்சனை இல்லையே? நீ வீட்டுக்கு போனதும் எனக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிடு. அப்போதான் என்னால நிம்மதியா இங்க வேலை செய்ய முடியும்..." என மூச்சு விடாமல் பேசியவனிடம் "எனக்கு ஒன்னும் பிச்சனை இல்லை தீபக். நாளைக்கு காலைல எங்க மாமா பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்... நான் வீட்டுக்கு போனதும் உனக்கு தகவல் சொல்லிடுறேன்..." என பேச ஆரம்பித்தவர்கள் அழைப்பை துண்டிக்காமல் பேச்சை வளர்த்தனர். ஏதோ பெரிதாக சத்தம் கேட்கவும் "என்ன சத்தம் ருத்ரா?"

  தெரியல தீபக்... வண்டி திடிர்னு நின்னுடுச்சு.. என்னாச்சுனு தெரியல..

  ஓட்டுனரும், நடத்துனரும் கீழே இறங்கி சென்று பார்த்துவிட்டு வண்டி இதற்குமேல் செல்லாது என அறிவித்தனர். சகபயணிகள் சலசலப்புடன் பேசிக்கொண்டிருக்க, ருத்ரா நடத்துனரிடம் என்ன விபரம் என கேட்க அவர் வேறு வண்டி பிடித்து செல்லுமாறு கூறினார்.

  பயணிகள் அனைவரும் திட்டியபடியே இறங்கினர். அது கல்யாணா நாள் என்பதால் வந்த அனைத்து வண்டிகளும் கூட்டமாக வர வேறு வழியில்லாமல் பாதி பேர் கூட்டமாக இருந்த வண்டியில் நின்றபடியே சென்றனர்.

  இதையெல்லாம் மறுமுனையில் உள்ள தீபக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் பலமுறை ஹலோ சொல்லியும் ருத்ரா இருந்த பதட்டத்தில் தீபக் இருப்பதை மறந்துபோனாள். அவளும் மற்ற பயணிகளுடன் வேறு பேருந்துக்காக காத்துக்கொண்டிருக்க அருகில் இருந்த முதியவர், "எங்கம்மா போகணும்?"

  "சென்னைக்கு போகணும் தாத்தா".

  இந்த நடு காட்டில வந்து இப்படி இந்த பேருந்து நின்னுடுச்சே மா.. நாங்கல்லாம் எப்படியும் போயிடுவோம்.. நீ எப்படி போவ?

  அவரிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தீபக்கிடமிருந்து மறுபடியும் அழைப்பு வர அப்போது தான் தீபக்கிடம் தான் பேசிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.

  "ருத்ரா இப்போ நீ எங்க இருக்க?"

  அந்த இராத்திரி வேளையில் அவளுக்கும் தான் எங்கே இருக்கிறோம் என தெரியவில்லை. எனக்கு தெரியல தீபக் என்றவளுக்கு தான் எப்படி சென்னைக்கு சென்று சேரப்போகிறோம் என்பதை நினைத்து கண்கள் பணிக்க அதை தீபக்கிடம் வெளிக்காட்டவில்லை.

  "சரி அங்க யாரவது இருந்தா அவங்க கிட்ட கேளு".

  "ம்ம் சரி என அவள் நடத்துனரிடம் கேட்டு, தான் இருக்கும் இடத்தை கூறினாள்".

  "தீபக், இங்க நிறைய பேர் கூட இருக்காங்க. அதனால பயம் ஒண்ணுமில்லை. நான் பத்திரமா சென்னைக்கு போய் சேர்ந்திடுவேன். நீ கவலைபடாம அங்க கல்யாண வேலையை பாரு என கூறி கைபேசியை அணைத்தாள்".

  மறுபடியும் ஒரு அரை மணி நேரம் கழித்து ருத்ராவிற்கு அழைத்து பேருந்து கிடைத்ததா என கேட்க இன்னுமில்லை என்றாள்.

  அவன் தூங்காமல் தனக்காக யோசித்து கொண்டிருப்பான் என சரியாக ஊகித்து பத்து நிமிடம் கழித்து தீபக்கிற்கு அழைத்து தனக்கு பேருந்து கிடைத்துவிட்டதாகவும் சென்னைக்கு போய் சேர்ந்ததும் கால் செய்வதாக கூறினாள்.

  ஆனால் தீபக்கோ பேருந்து நின்றுவிட்டது என கூறிய பதினைந்து நிமிடத்தில் திருமண மண்டபத்தில் இருந்து தன் நண்பனின் மகிழுந்து (கார்) எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

  தேடல் தொடரும்....
   
  sarah rose likes this.
   
 3. devamathi

  devamathi Wings New wings LW WRITER

  Messages:
  29
  Likes Received:
  18
  Trophy Points:
  23
  ஹாய் செல்லகுட்டிஸ்.... காதலை தேடி அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்... சின்ன எபி தான் டியர்ஸ்... கோச்சுக்காம அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.. சீக்கிரம் பெரிய எபியோட வரேன் டியர்ஸ்... படிச்சிட்டு மறக்காம லைக்ஸ், கமெண்ட்ஸ் போடுங்க செல்லங்களா....  காதலை தேடி… - 16

  ஏனோ ருத்ராவை தனியே அனுப்பிவிட்டு தீபக்கால் திருமண வேலைகளை பார்க்க முடியவில்லை. அவளிடம் இடத்தை கேட்டு கொண்டு தன்நண்பனின் மகிழுந்தை எடுத்து கொண்டு ஒரு மணி நேரத்தில் சென்றடைய வேண்டிய இடத்தை முக்கால் மணி நேரத்தில் சென்றடைந்தான். அவன் ருத்ரா இருக்கும் இடத்தை வந்தடையும் வரை ருத்ராவிற்கு பேருந்து கிடைக்கவில்லை.

  அவளின் பக்கத்தில் சென்று வண்டியை நிறுத்தியவன் அதிலிருந்து இறங்க அங்கே அந்த நேரத்தில் தீபக்கை எதிர்பார்க்கத்தவள் திகைத்து நின்றாள்.

  சாதாரண வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்தவனை எங்கே கண் சிமிட்டினால் மறைந்து விடுவானோ என கண்ணிமைக்காமல் அவனை பார்த்து கொண்டிருந்தாள்.

  அவன் அருகில் வந்தும் பார்த்து கொண்டிருந்தவளை அவளின் முகத்திற்கு நேரே சொடுக்கு போட நிகழ்காலத்திற்கு வந்தாள்.

  "ஏய் தீபக்!!! நீ ஏன் வந்த? நான் தான் பத்திரமா சென்னைக்கு போயிடுவேன்னு சொன்னனே? காலைல கல்யாணத்த வச்சுக்கிட்டு நீ ஏன் வந்த?"

  "இதுதான் நீ பேருந்துல இருக்கேன்னு சொன்னதா?"

  "இல்ல... நான் இன்னும் இங்க தான் இருக்கன்னு சொன்னா, நீ அங்க எந்த வேலையும் செய்யாம என்னை பத்தி கவலைபட்டுட்டு இருப்ப. அதுதான் உன்கிட்ட பொய் சொன்னேன்".

  "சரி... வந்து வண்டியிலே ஏறு..."

  "எங்க?"

  "உன்னை சென்னையில விட்டுட்டு வரேன்..."

  "சென்னையா? நீ என்னை பேருந்துல ஏத்தி விடு போதும்... ஏற்கனவே உன்னோட தங்கச்சிய பொண்ணு பார்க்க வந்தப்போ என்னால தான் நீ தாமதமா போன... மறுபடியும் இன்னைக்கு என்னால நீ கல்யாணத்துக்கும் தாமதமா போகவேண்டாம்... நீ கிளம்பு..."

  "அதெல்லாம் தாமதமாகாது... காலைல ஒன்பது மணிக்கு தான் முகூர்த்தம். உன்னை சென்னைல விட்டுட்டு நான் காலைல ஆறு மணிக்குள்ள மண்டபம் வந்திடுவேன்... இப்போ பேசி நேரத்தை வீணாக்காம வண்டியில ஏறி உட்காரு".

  வண்டியில் ஏறாமல் தயங்கியவளை கட்டயாப்படுத்தி வண்டியில் ஏற்றியவன் சென்னைக்கு நோக்கி வண்டியை செலுத்தினான். தன்னால் தான் தீபக் தேவையில்லாமல் இந்த நேரத்தில் வந்ததால் குற்றஉணர்ச்சியில் பேசாமல் இருந்தவளை ஓரக்கண்ணால் அவன் ரசித்து கொண்டு வர அந்த மௌனமும் இருவருக்கும் பிடித்திருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காத பொழுது ரசித்து கொண்டு வர தீபக் மௌனத்தை களைத்தான்.

  "உனக்கு தூக்கம் வந்தா தூங்கு ருத்ரா".

  "இல்ல... தூக்கம் வரல" என இருவரும் பேச்சை தொடர்ந்தனர்.

  பேச்சு சுவாரஸ்யத்தில் மூன்று மணிநேரம் போனது இருவருக்கும் தெரியவில்லை. சென்னையை நெருங்கி கொண்டிருக்க வண்டியை ஒரு டீக்கடையில் நிறுத்தியவன், "நீ இங்கயே இரு.. உனக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன்... என கடைக்கு சென்று டீ வாங்கி கொண்டு வந்தான்.

  அமைதியாக டீயை குடித்து முடித்தவர்கள், தீபக் வண்டியை கிளப்ப "தீபக்.. உன்கிட்ட ஒன்னு கேட்கணும்..."

  "என்ன கேளு?"

  "காலைல கல்யாணத்த வச்சுக்கிட்டு என்னை வீடு வரைக்கும் விட ஏன் வரணும்?"

  "என்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டு உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு நான் தானே பொறுப்பு".

  "அப்போ நீ என்னை பேருந்து ஏற்றி விட்டிருந்தா போதுமே.. அதைவிட்டுட்டு பாண்டிச்சேரில இருந்து சென்னை வரைக்கும் கொண்டுவந்து விடணும்னு அவசியம் இல்லையே".

  "தீபக் பதில் ஏதும் கூறாமல் சிரித்து கொண்டிருக்க, ஏன்னு உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்..."

  தன் வெட்கத்தை மறைத்து கொண்டு "எனக்கு தெரியாது தீபக். என்ன காரணம்னு நீயே சொல்லு.."

  "என்னோட தங்கச்சிக்கு விடிஞ்சா கல்யாணம்.. என்னோட தங்கச்சி கல்யாணம் எவ்ளோ முக்கியமோ அந்த அளவுக்கு என்னோட வாழ்க்கைல நீயும் முக்கியம்..."

  "நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்ன தான் காதலா? நாம் செய்யும் சிறு காரியத்திலும் நம் காதலை உணரவைக்கலாம்" என உணர்த்தினான் அந்த காதலன்.

  தீபக்கும் தன்னை காதலிப்பது தெரிந்தாலும் ருத்ராவிற்கு மனதின் மூலையில் சிறு சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. அதுவும் இப்பொழுது தீபக்கின் பதிலில் காணாமல் போனது.

  பேசிக்கொண்டே ருத்ரா வீடு வந்துவிட, வண்டியில் இருந்து இறங்கிய ருத்ரா, “என்னோட நாத்தனாருக்கு கல்யாண வாழ்த்து சொல்லிடுங்க” என தன் சம்மதத்தை கூறினாள்.

  தேடல் தொடரும்....
   
  sarah rose likes this.
   
 4. sarah rose

  sarah rose Wings New wings

  Messages:
  54
  Likes Received:
  57
  Trophy Points:
  38
   
 5. devamathi

  devamathi Wings New wings LW WRITER

  Messages:
  29
  Likes Received:
  18
  Trophy Points:
  23
  Thank you
   
   
Loading...

Share This Page