எனை கொஞ்சும் சாரலே!! - Goms

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by goms, Jun 4, 2019.

 1. goms

  goms Pillars of LW LW WRITER

  Messages:
  1,069
  Likes Received:
  3,245
  Trophy Points:
  133
  “எனை கொஞ்சும் சாரலே!!”

  இது எனது பத்தாவது கதை. இந்த கதைக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்..

  நாயகன் – சித்தார்த்தன்
  நாயகி – ஊர்மிளா

  உங்களில் சிலருக்கு பெயரை கேட்டதும் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா!!! எனது ‘யாருக்கு யாரோ???’ கதையை படித்தவர்களுக்கு இவர்கள் அறிமுகமானவர்கள் தான்.. அந்த கதையை படிக்காமல் இதை படிப்பவர்கள் எதையும் மிஸ் செய்யமாட்டீர்கள்..

  கதையை பத்து நாட்களில் ஆரம்பிக்கிறேன்.. அதற்கு முன்....

  கதைக்கு சின்ன டீசர்:-

  முதலிரவு அறைக்குள் சித்தார்த்தன் நுழைந்ததும்,

  "டைவர்ஸ் பேப்பரில் எப்ப வேணாலும் சைன் போட நான் ரெடி" என்ற ஊர்மிளாவின் வாக்கியத்தை கேட்டு பெரிதும் அதிர்ந்தான்.

  "என்ன சொன்ன?"

  ஊர்மிளா நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக தெளிவாக, "டைவர்ஸ் பேப்பரில் எப்ப வேணாலும் சைன் போட நான் ரெடி" என்று கூறினாள்.

  "உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லையா?"

  "உங்களுக்கு விருப்பமில்லை"

  "ஊர்மிளா"

  "எனக்கு தெரியும்.. உங்கள் நண்பனுக்காக தான் நீங்க என் கழுத்தில் தாலியை கட்டுனீங்க"

  சித்தார்த்தன் ஏதோ கூற வரவும் கையை உயர்த்தி அவனது உரையை நிறுத்தியவள், "இல்லைனு பொய் சொல்ல வேண்டாம்.. கௌதம்-சவிதா சேர்வதற்காக தான் நீங்க என்னை கல்யாணம் செய்துக்க முடிவு எடுத்தீங்க.. கஷ்டப் பட்டு நீங்க என்னுடன் வாழ வேண்டாம்.. இப்போதே கூட எம்ப்டி பேப்பரில் சைன் போட்டு தரேன்"

  "ஸ்டாப் இட்.. ஊர்மிளா" என்று குரலை உயர்த்தி கத்தினான் சித்தார்த்தன்.

  சாரல் கொஞ்ச காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥


  கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே பதியவும்..
  எனை கொஞ்சும் சாரலே!! - Comments

  உங்கள் அன்புத் தோழி,
  கோம்ஸ்.
   
   
Loading...

Share This Page