சின்னஞ்சிறு ரகசியம் நீ

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Anusuya chellapandiyan, Aug 13, 2019.

கதை பிடிக்கிறதா?

  1. ஆம்

    0 vote(s)
    0.0%
  2. இல்லை

    0 vote(s)
    0.0%
  3. நீயல்லாம் எழுதுறதே வேஸ்ட்

    0 vote(s)
    0.0%
Multiple votes are allowed.
  1. Anusuya chellapandiyan

    Anusuya chellapandiyan Wings New wings LW WRITER

    Messages:
    11
    Likes Received:
    14
    Trophy Points:
    23
    காதல் கதைதான் தோழிகளே....

    பனியும் ரோரோஜாச்செடியும் போல ஒரு ஜோடியோட காதல் சில்லுனு.....

    காதல் வருவதற்கு காரணம் இருப்பதில்லை
    காரணம் இருந்தால் அது காதலாக இருப்பதில்லை

    விமலேந்திரன்
    பவித்ரா

    கையில் துப்பாக்கியை எடுத்து சத்தம் வந்த திசையை நோக்கி நீட்டிய விமலுக்கு தன்னெதிரில் தெரிந்த பெண் ஆச்சரியத்தை கொடுத்தாலும் அவன் துப்பாக்கியின் முனை இன்னும் எதிரிலிருந்த உருவத்தின் தலைக்கு நேராகதான் இருந்தது. அவளின் மிரண்ட பார்வை அவனுள் ஏதோ செய்ய துப்பாக்கியை கீழிறக்கியவன் மேஜையிலிருந்த பாட்டில் நீரை அவள் முன் நீட்ட அதை பருகியவளின் படபடப்பு குறைந்தது.

    யார் நீ? மணி என்ன தெரியுமா? இந்த இராத்திரியில் இந்த இடத்துக்கு எதற்கு வந்த? என்றவனின் கேள்விக்கு பதில் கூறாமல் அவன் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அவள்.
    சற்று முன் பயந்தது அவள்தானா என்று அவனே ஆச்சரியப்படும் அளவுக்கு அவள் புன்னகையுடன் அவனை நோக்கியவள், "ஏன் இவ்வளவு கோவம் விமல்? நேரம் தற்போது அதிகாலை 2.20. உங்களோட பேசணும் அதனால தான் இப்போதே வரவேண்டியதாகி போச்சு. நைட் சாப்டீங்களா இல்லையா?" என்று உரிமையோடு கேட்டுகொண்டே எழுந்து சமையலறைக்குள் நுழைய அவனுக்கு தலை சுற்றாத குறைதான்.
    கோவம் தலைக்கேற அவள் பின்னே சென்றான்.

    "ஹே யார்டி நீ ? நீ பாட்டுக்கு ஏதோ உன் வீடு மாதிரி சமையல் கட்டுக்கு போய் என்ன பண்ணிகிட்டு இருக்க? நான் யார்னு தெரியாம விளையாடிட்டு இருக்க..." என்றவனின் உதடுகளின் மீது அவள் தனது வலது ஆள்காட்டி விரலை வைக்க மேற்கொண்டு பேசாமல் மந்திரத்திற்கு கட்டுபட்டவனை போல நின்றான்.
    இருவரது பார்வைகளும் கலந்து இனம்புரியாத இதத்தை தர அவனுக்கே ஆச்சர்யம் தான் எப்போதும் மற்றவர்கள் அவன் பார்வைக்கு கட்டுப்பட்டுதான் பழக்கம். ஆனால் இன்றோ ??? எத்தனை நிமிடங்கள் கழிந்ததோ ....பொங்கி வரும் பால் வாசனையும் அதன் மெல்லிய சத்தமும் உணர்ந்து முதலில் மந்திர கட்டை உடைத்து வெளியேறியதும் அவளே.
    பாலில் அவனுக்கு பிடித்த பனை வெல்லத்தை தட்டிப்போட்டு ஆற்றி அவன் கைகளில் தந்தவளின் பார்வை எனக்கா உன்னை தெரியாது என்று தம்பட்டம் அடித்தது.




    Friends ithu oru chinna intro. 1st time pannirukken. Ungaloda anbhum comments
     
    Ramya kannan likes this.
     
  2. Anusuya chellapandiyan

    Anusuya chellapandiyan Wings New wings LW WRITER

    Messages:
    11
    Likes Received:
    14
    Trophy Points:
    23
    Anusuya Chellapandiyan:
    Anusuya Chellapandiyan:
    சின்னஞ்சிறு ரகசியம் நீ

    ❤️முதல் ரகசியம்❤️

    அனிச்சை செயல் போல அவனின் விரல்கள் அவள் கொடுத்த பால் நிறைந்த கோப்பையை வாங்கும் போதே அவள் பேசத் தொடங்கியிருந்தாள்.
    "உங்கள் பேர் விமலேந்திரன். இரண்டு வருடமாக உங்களை நான் காதலிக்குறேன். எனக்கு ஏதோ கல்யாண வயசு வந்துருச்சாம், வீட்டில் மாப்பிள்ளை அது இதுனு பேச ஆரம்பிச்சுட்டாங்க. நாளைக்கு வீட்டில வந்து என்னை பொண்ணு கேளுங்க."

    அவள் பேச்சை கேட்டவன் "ஏய் என்னடி? நடுகாத்திரியில் ஒருத்தன்கிட்ட வந்து நீ பாட்டுக்கு பொண்ணு கேளுங்கனு சொல்ற! எனக்கு உன்னை பற்றி ஒன்றுமே தெரியாது... எனக்கும் உன்னை பிடிக்க வேண்டாமா?" என்றவன் கூற கண்களில் கேலிச்சிரிப்புடன் தன்னை நோக்கியவளை ஒற்றை புருவத்தை தூக்கி என்னடி? என்றான் அவன்.

    "இல்லை எனக்கும் உங்களுக்கு என்னை பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் நீங்க யாரையும் இத்தனை உரிமையாய் அழைக்கமாட்டிங்க அதாவது இப்போது என்னை அழைப்பது போல....
    பிறகு என் பேர் கூடத் தெரியாமல் இப்போ நான் கொடுத்த பாலை குடிச்சுட்டு இருக்கீங்களே?...
    என்னை புடிக்கலையென்றால் ACP சார் இன்னேரம் இந்த பால் டம்ளரை தட்டிவிட்டுருக்கனும். ஏன் செய்யல
    என்னை உங்களுக்கு புடிச்சுருக்கு. அதை உணர மறுக்காதீங்க"என்றவளின் கூற்று 100 சதவீதம் சரி ஆயிற்றே என்று அவன் மனதும் கூற அவள் விழிகளை பார்த்துகொண்டே "என்னை பற்றி எப்படி எல்லாமே தெரிஞ்சு வைச்சுருக்க?" என்று சிரிப்பும் தவிப்புமாக கேட்டான் அவன்.

    அவன் விழிகளில் காதலின் தவிப்பு கூட அதை தாங்காது அவன் கையை பிடித்து ஹாலிற்கு அழைத்து வந்தவள் அவனை அமரச்செய்தவள் அவனிடம் "எனக்கு உங்களை ஒரு 10 வருடமாக தெரியும் இந்தர். நீங்க என் ஒன்று விட்ட அண்ணனின் உயிர் தோழன். என் அண்ணன் பெயர் ஆகாஷ்." என்று அவள் கூற அவனுக்குள் ஏதோ இதம் பரவியது.
     
    Ramya kannan and prikar like this.
     
  3. Anusuya chellapandiyan

    Anusuya chellapandiyan Wings New wings LW WRITER

    Messages:
    11
    Likes Received:
    14
    Trophy Points:
    23
    Anusuya Chellapandiyan's

    சின்னஞ்சிறு ரகசியம் நீ

    ❤️ரகசியம் 2

    "உங்கள் பள்ளி பருவம் துவங்கி இன்றைக்கு வரை உங்கள் வாழ்க்கையில் நடந்த எல்லாமும் எனக்கு தெரியும். நானே எதிர்பாரா விதமாய் நீங்கள் எனக்குள்ள கலந்துட்டீங்க இந்தர்" என்று சொல்லி கொண்டே போனவள் அவன் மனம் தெளிவடைந்ததை அவன் முகம் வழி உணர்ந்து அவனை கைகளை விட்டு நான்கடி தள்ளி நின்றாள்.

    அவளது திடீர் விலகலை தாங்காதவன் "ஏய் ஏண்டி? இப்போ எதுக்கு கைய விட்ட?"என்றபடி எழுந்து அவளருகே சென்றான்.

    அவள் இரு கரங்களையும் தன்னிருக் கரங்களுக்குள் அடக்கியவனின் பார்வை, தன்னை காதலோடு பார்த்து கொண்டிருந்தவளின் கண்களை ஊடுறுவ அதுவரை விடுப்பு எடுத்து ஊருக்கு போயிருந்த வெட்கம் அவளுக்குள் பிரவேசம் செய்தது.

    அவன் பார்வைத் தந்த சூடு தாங்காமல் அவன் மார்பில் சாய்ந்தவளை இன்னும் வாகாக அவனுள் இறுக்கி அணைத்தவன் உல்லாசமாக சிரித்துக்கொண்டே "இம்சை பண்ணுறடி. ஆனால் நல்லாருக்கு" என்றபடி அவள் உச்சந்தலையில் முத்தமிட, அவளுக்கு அது பிடித்திருந்தாலும் எதிர்பாராததால் அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

    அவனோ அவள் அடிகளை புன்னகையோடு ஏற்க திடீரென கேட்ட அலாரம் சத்தம் இருவரது கவனத்தையும் ஈர்த்தது. அவனை அடிப்பதை நிறுத்திவிட்டு தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்த போனின் அலாரத்தை அணைத்துவிட்டு "வீட்டில யாரும் எழும் முன்ன நான் போகணும் இந்தர். மணி 4 ஆயிடுச்சு" என்றவள் தன்னை பிரிய மனம் இல்லாமல் நிற்பவனை நோக்கினாள். "இன்றைக்கு மாலை 4.30 மணிக்கு வந்து வீட்டில பேசுங்க இந்தர். அந்த மெரூன் கலர் சட்டை போட்டுட்டு வாங்க " என்று கூறிவிட்டு நகர "நில்லு நான் ட்ராப் பண்றேன்" என்று இவன் கூற அவளும் மறுக்கவில்லை.

    வெளியே வந்து இவன் பைக்கை எடுக்க போக "நடக்குற தூரம்தான்...நடக்கலாமே"என்று நடக்கவும் வைத்தாள். அவளுடன் இணைந்து நடந்த விமலேந்திரனோ அவளையே பார்த்துகொண்டு வந்தான்.

    அவன் மனமோ,

    "அடியே இத்தனை நேர்த்தியாக என்னை அடக்கவும் (அடிக்கவும்), கணிக்கவும் எப்படி உன்னால் முடியுகிறது?"

    "டேய் ஆகாஷ் உன்னை சமாளிக்கிறதை விட உன் தங்கையை சமாளிக்கிறது எனக்கு கஷ்டம் போல."

    "எல்லாரும் என் பார்வைக்கு, என் ஆளுமைக்கு அடங்க ஒரு தனி திமிரோட அலையுற போது வராத சந்தோசம் உனக்கு நான் அடங்கும் போது வருதே ஏன்டி?"

    "முழுசா 3 மணி நேரம் கூட ஆகலை என்னை ஆட்டி படைக்குறா"
    என்று பலவாறு புலம்பி தீர்த்து கொண்டிருந்தது.

    "மாநிறத்தழகி. இடை வரை நறுக்கி விட்டிருந்த கூந்தல் சிறிது கலைந்திருந்தாலும் அதை அவள் நேர்த்தியாக பின்னியிருந்ததால் அழகாகவே இருந்தது. தன் தோள்வரை உயரம் இருக்கிறாள் என்றாள் ஐந்தரை அடி உயரம் இருப்பாள். பற்கள் வெளியே தெரியாமல் சிரிக்கும் சாருஹாசினி பெண்" என்று எண்ணி கொண்டு வந்தவனுக்கு அவளின் கேலி புன்னகை ஏதோ புரிய வைக்க சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளை முறைத்தான்.
    பின்னென்னவாம் 20 நிமிட நடைக்குப் பின்னர் கிளம்பிய இடத்துக்கே வந்து சேர்ந்திருந்தனர் இருவரும்.
    அவளோ சாந்தமாக முகத்தை மாற்றி 5வது தளத்தில் தான் என் வீடு. 5 D என்று கூறிக்கொண்டே அவனையும் இழுத்து கொண்டு லிப்டிற்குள் செல்ல அவன் ஐந்தாம் தளம் வரை பேசாமல் வர அங்கு கனத்த மெளனம் நிலவியது.

    Anusuya Chellapandiyan:
    "கோவமா இந்தர்? விளையாட்டுக்காக தான் செய்தேன். மன்னிச்சு....." என்று சொல்வதற்குள் அவள் இதழை அவன் இதழ்கள் ஆளத் துவங்கியிருந்தது. இன்னொரு முறை விளையாடினால் இதே தண்டனை கிடைக்கும் என்று கூறியவனுக்கு தன் மேல் கோவமில்லை என்றறிந்து அவன் மீசையை பிடித்து இழுத்து அவனை கத்தவிட்ட பிறகே லிப்டை விட்டு வெளியே நகர்ந்தாள்.

    "எவ்வளவு இனியவள் என் பவி.
    பவித்ரா..பவிமா ஐ லவ் யூ டா"
    என்றபடியே உறங்கி போனான் பவித்ராவின் விமலேந்திரன்.
    Anusuya Chellapandiyan:
    ஒரு வார தொடர் வேலை தந்த சோர்வும் முன் தின இரவு விழித்திருந்தும் சேர்ந்து விமலேந்திரனை எழ விடாமல் செய்ய 3 மணி வரை உறங்கி கொண்டிருந்தவனை தொடர்ந்து ஒலித்த அவனது வீட்டின் காலிங்பெல் சத்தம் எழுப்ப எழுந்து வந்து வந்திருப்பது யாரென்று கதவை திறக்க வெளியே நின்றவன் அவன் உயிர் தோழன் ஆகாஷ்.



    Anusuya Chellapandiyan
    சின்னஞ்சிறு ரகசியம் நீ

    ❤️ரகசியம் 2❤️
     
    Ramya kannan likes this.
     
  4. Anusuya chellapandiyan

    Anusuya chellapandiyan Wings New wings LW WRITER

    Messages:
    11
    Likes Received:
    14
    Trophy Points:
    23
    Anusuya Chellapandiyan'S

    சின்னஞ்சிறு ரகசியம் நீ

    ❤️ரகசியம் 3❤️

    எதிரிலிருந்த ஆகாஷோட கோபமான முகத்தையும், தான் உள்ளே அழைத்தும் அவன் வராதிருப்பதையும் கண்டு வினாவிய விமலனை உள்ளே தள்ளிவிட்டு நாலு குத்துகளை பரிசளித்த ஆகாஷ் "ஏண்டா இன்னும் கிளம்பாம என்ன பண்ற? 4 மணிக்கு வீட்டுக்கு நீ வந்துடுவனு அங்க ஒருத்தி வீட்டையே இரண்டு பண்ணி வைச்சுட்டு இருக்கா. நீ என்னடானா குளிக்க கூட இல்ல. போய் குளி" என்றபடி குளியலறைக்குள் தன்னை தள்ளி பேசவிடாமல் செய்தவனிடம் உள்ளிருந்தபடியே "டேய் ஆகாஷ், உனக்கு கோவமில்லையா? " என்றான் விமல்.

    "எதுக்கு மச்சான் கோவம் வரணும். நீ குளிச்சுட்டு சீக்கிரம் வா"

    குளித்து முடித்தவனுக்கு "போகும் முன் என்ன சொன்னாள் என்னவள்?....
    விடைபெறும் நேரம் கதவு வரை சென்றவள் அவனை ஒருமுறை திரும்பி பார்த்து "ஓய் ஏசிபி என் பேர் பவித்ரா" என்று கண்சிமிட்டியபடி வீட்டுக்குள் ஓடி மறைந்தாள்.

    " அவளானால் என்னைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாள். ஆனால் நான் அவளாக சொல்லும் வரை அவள் பெயர் கூட கேட்காதிருந்திருக்கின்றேன்."
    " சாரிடா பவிமா. உன் இந்தர் மேல உனக்கு கோவமே வரலையாடா? "
    Anusuya Chellapandiyan:
    "எவ்வளவு இனியவள் என் பவி.
    பவித்ரா..பவிமா ஐ லவ் யூ டா" என்று தனக்குள்ளே பேசியபடி படுத்தவன் தான் அலரம் வைக்க மறந்து அப்படியே தூங்கி போனான்.
    நேற்றைய நினைவு மீண்டும் வர மனம் இனித்தது.

    "டேய் விமல் இன்னும் என்னடா பண்ற?" என்று கத்திய நண்பனின் முன் போய் தலையை துவட்டியபடியே நின்றவன் ஆகாஷ் அந்த மெரூன் கலர் சட்டையை அயர்ன் செய்திருந்ததை கேள்வியாக பார்க்க ஆகாஷின் பார்வையோ கேலியாக மாட்டிகிட்ட மச்சி ரேஞ்சில் நம் ஹீரோ மேல் பட "நீயும் ஒரு நாள் மாட்டுவடா "என்றபடி தயாராக ரூமிற்குள் சென்றான்.

    தயாராகி வெளியே வந்தவனை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்த ஆகாஷ் தரத்தரவென இழுத்து வெளியேற்றி 5F என்ற பலகையிருந்த கதவை பூட்டி சாவியை வழக்கமாய் வைக்குமிடத்தில் வைக்க அவளின் நேற்றைய வருகை நண்பனின் அனுமதியோடு தான் நிகழ்ந்திருக்கும் என்று மனம் உறுதி செய்ய " கேடி தங்கச்சி கேடி அண்ணன்" என்று செல்ல முறைப்போடு ஆகாஷின் தோள் மீது கை போட, "நாங்க கேடியாக இல்லாம போனால் நீ கடைசி வரைக்கும் சாமியாா் தான்டா. உனக்கெல்லாம் என் தங்கச்சி வாழ்க்கை தரதே பெரிசு. ரொம்ப பிகு பண்ணாத பிறகு பவிக்கிட்ட வேற நல்ல அழகான பையனா பார்க்கலாம் அம்மு. இந்த போலீஸ்காரன் வேண்டாம்னு சொல்லீடுவேன்." என்று போலியாய் மிரட்ட அதில் பயந்தவன் போல நடித்தபடி நிற்பவனை தன் சித்தப்பா வீட்டுக்கு அழைத்து சென்றான். (அதாங்க 5D க்கு
    நாலு அடி தள்ளி)
     
     

Share This Page