காதலெனும் பெருங்காடு - வதனி

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Madhuvathani, Oct 8, 2019.

 1. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,338
  Trophy Points:
  113
  ஹாய் friend's
  இது ஒரு குட்டிக்கதை தான்.. இப்போது வெளியில் இருப்பதால் முழுவதுமாக பதிவு கொடுக்க இயலவில்லை.
  நாளைக்கு முழுக்கதையும் கொடுத்து விடுகிறேன்..
  அனைவருக்கும் இனிய விஜயதசமி திருநாள் வாழ்த்துக்கள்
  காதலெனும் பெருங்காடு
  -----------------------------
  காதலெனும் பெருங்காட்டில் தொலைந்திட்ட உனை என் எதிர்பார்ப்புகள் மொத்தமுமாய் கொண்டு தேடியலைந்ததில் கிடைத்தது என்னவோ ஏமாற்றம் என்றாகிவிட்டது.

  பத்து நிமிடங்கள் கழித்து என் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார். புருவத்தில் தெரிந்த ஈரம், முகம் கழுவிவிட்டு வந்தார் என்று உணர்த்தியது.
  “Hi, if you don’t mind, நான் உங்க கிட்ட ரெண்டு நிமிசம் பேசலாமா?”
  ஒரு இந்தியப் பெண்ணே வலிய வந்து என்னிடம் பேசுவது இதுவே முதல் முறை. அதுவும் நான் தமிழன் என்று கண்டுபிடித்துப் பேசியது சற்றே ஆச்சரியமாகத்தான் இருந்தது!
  “சொல்லுங்க. என்ன விசயம்?” என்றேன்.
  “உங்க சொந்தக்காரங்க யாரும் மதுரைல இருந்ததுண்டா?”
  “இல்லியே, ஏன் கேக்குறீங்க?”
  “ஓ! இல்லையா..” வார்த்தைகளில் மெல்லிய ஏமாற்றம் தட்டுப்பட்டது.
  “என் சொந்தகாரங்கள உங்களுக்கு எப்படி தெரியும்?”
  “…”
  “அவங்கள பத்தி ஏன் விசாரிக்குறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”
  “இல்ல, எனக்கு பழக்கப் பட்ட ஒருத்தர் உங்க சாயல். அதான் ஒரு வேளை உங்களுக்கு சொந்தக்காரரோனு தெரிஞ்சுக்க கேட்டேன்.”
  “ஓகோ! இல்லிங்க, அப்படி யாரும் எனக்கில்ல.”
  சில நொடிகள் என்னையே குறுகுறு என்று பார்த்துக் கொண்டிருந்தார். சங்கடம் மிகுதியாக அவரிடம் கேட்டே விட்டேன், “என்னங்க இது? இப்படி சோகமா என்னையே உத்து பாத்துக்கிட்டு இருக்கீங்க? ஏதோ கேக்கணும்னு நினைக்குறீங்க. தயங்காம கேட்டுடுங்க. எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.”
  சரி என்பது போல் மேலும் கீழுமாய் தலை அசைத்தார். மூன்றாவது முறை குனிந்த தலை நிமிர்த்தாமல் குனிந்த படியே இருந்தார். சில விநாடிகள் கழித்து சட்டென்று தன் கைபேசியில் விரல்கள் பதிக்க நான் செய்வதறியாது அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். பின் என்னிடம் தன் கைபேசியை காண்பித்தார். அதில் ஒரு புகைப்படம் இருந்தது. வெளிர் மஞ்சள் நிற சுடிதாரும் குட்டையாய் வெட்டப்பட்ட கூந்தலுமாய் நின்று கொண்டிருந்தார். சிலகாலம் முன்பு எடுத்தது போலும். அவர் அருகில் ஒரு ஆண்! பார்ப்பதற்கு என்னைப் போலவே இருந்தார். அவருக்கு படிய வாரிய முடி, எனக்கு சற்று சுருட்டை முடி. அவருக்கு கொஞ்சம் நீளமான மூக்கு. படத்தில் இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே அளவு உயரம். அதை வைத்துப் பாத்தால் அவர் என்னை விட உயரம் கொஞ்சம் குறைவாக இருக்கக் கூடும். மற்றபடி அவர் என்னுடைய carbon copy எனலாம். ஆச்சரியத்துடன் நானே பேச்சை ஆரம்பித்தேன், “இது எப்ப எடுத்த photo?”
  “BE final yearல. ஏழு வருசம் முன்னாடி.”
  “ஓ! நான் இப்பதான் 3rd year படிக்கிறேன். இவரு உங்க friendஆ? ஒரே batchஆ?”
  “ம்ம். Boyfriend. ஒரே batch தான், ஆனா வேற department.”
  Boyfriend என்று சொன்ன உடன் இவ்வளவு குறுகுறு என்று அவர் என்னைப் பார்த்ததன் அர்த்தம் புரிந்தது.
  “அச்சு அசலா என்னைய மாதிரியே இருக்காரே!”
  “ம்ம். முடி, மூக்கு, உயரம் தவிர இவரோட carbon copy தான் நீங்க.”
  என் மனதில் தோன்றிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியது எனை வியப்பில் ஆழ்த்தியது.
  “நான் நினைச்சத அப்படியே சொல்லிட்டீங்க. எத்தனை வருசம் பழக்கம் உங்க ரெண்டு பேருக்கும்?” என்றேன்.
  “High schoolல இருந்து.”
  “Wow! Super. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் எப்ப ஆச்சு?”
  மௌனமாய் ஒரு கணம் இருந்து விட்டு இல்லை என்று தலையாட்டினார். பின் என் பார்வை தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
  மனதிற்குள் திட்டிக்கொண்டேன், ‘மடையா. கல்யாணம் ஆயிருந்தா ஏன் பழைய photoவ காட்ட போறாங்க?’ கைபேசியை பார்ப்பதைப் போல தலை குனிந்து கொண்டு அவர் கால்களை பார்த்தேன். கால்களில் மெட்டியும் இல்லை.
  “Break-up ஆயிடுச்சா?” என்றேன்.
  அதற்கும் இல்லை என்று தலை அசைத்தார்.
  “பின்ன?”
  ஒரு இடைவேளைக்குப் பிறகு கூறினார், “He is no more!”
  “அச்சச்சோ! எப்படி?” ஏதோ நெருங்கிய உறவினர் மறைந்த செய்தி கேட்டது போல் இருந்தது எனக்கு.
  “Bike accident.”
  “Oh no! I’m very sorry.”
  “Thanks..”
  சிறிது நேரம் அசௌகரியமான மௌனம் நிலவியது. அவரே மீண்டும் தொடர்ந்தார். “ரவி ரொம்ப safe driver. கவனமா ஓட்டுவான், signalல சரியா நிப்பான். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும்தான் பைக்ல இருந்தோம். Signalல இருந்து கிளம்பும் போது பின்னாடி இருந்த car வேகமா எடுத்துட்டான். Sideல தண்ணி lorry. இடிச்ச வேகத்துல நான் median பக்கமா விழுந்துட்டேன். அவன் lorry…” என்று தொடர்கையில் அவர் குரல் சற்று கம்மியது. “Helmet போட்டிருந்தான். ஆனா, lorry wheel ஏறி…load…helmet உடைஞ்சு…spotலயே…”
  சற்றே கனத்த குரலில் உடைத்து உடைத்தும் வராத வார்த்தைகளுக்கு கைகளை அசைத்தும் அவர் பேசிய வரிகள் ஒரு கோர சம்பவத்தை மறு ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தன.
  “…என் கண்ணு முன்னாடியே…” என்று அவர் தொடர முற்பட, நான் குறுக்கிட்டேன்.
  “போதும். இதுக்கு மேல சொல்லாதீங்க.”
  அழுகையையும் கண்ணீரையும் அடக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு சரியென தலை அசைத்து கூறினார், “I’m sorry.”
  “பரவாயில்லைங்க.”
  மீண்டும் அசௌகரியமான மௌனம். மௌனத்தை கலைக்க வேண்டி இந்த முறை நானே பேச்சைத் தொடங்கினேன், “அவர் பேர் என்ன?”
  “ரவி.. ரவீந்திரன்.”
  “ஓ! என் பேர் விஜய் ஆனந்த்.”
  “நான் ராஜஸ்ரீ.”
  “நீங்க என்ன விஜய்னே கூப்பிடுங்க.”
  “ம்ம், சரி.”
  “இப்ப எங்க போறீங்க ஸ்ரீ?”
  “சென்னைக்கு. அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்.” என்றாள் புரியாத பார்வையோடு,
  “ஏன்.. ஏன் அப்படி பார்க்குறீங்க.” என்றேன், ஏதோ இருக்கிறது என்ற படபடப்புடன்.
  “நத்திங்.. எல்லாரும் ராஜின்னு கூப்பிடுவாங்க, ரவி மட்டும் ஸ்ரீன்னு தான் கூப்பிடுவான். நீ எனக்கு ஸ்பெஷல், சோ ஸ்பெஷல் நேம்ன்னு சொல்வான். நீங்களும் அப்படியேக் கூப்பிடவும், சாரி..”
  இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் திருதிருவென என்னால் முழிக்க மட்டுமே முடிந்தது.
  அவரே தொடர்ந்தார், “ஆனா இந்த கல்யாணம் நடக்காது. நான் போய் வேண்டாம்னு சொல்லி நிறுத்தப் போறேன்.”
  “அச்சச்சோ, ஏங்க? உங்கள கேட்காம ஏற்பாடு பண்ணிட்டாங்களா?”
  “இல்ல, கேட்டாங்க. நான் ok சொன்னதுக்கு அப்புறமாத்தான் ஏற்பாடே நடந்தது.”
  “பின்ன ஏன் நடக்காதுனு சொன்னீங்க?”
  “நீங்க தான் காரணம்.”
  சட்டென்று என் மீது பழி சுமத்துகிறாரோ எனத் தோன்றியது.
  “நானா?” சற்று கடினமாகவே எனது குரல் ஒலிக்க,
  “இல்ல, இல்ல சாரி ஒரு குழப்பம், நீங்கன்னு உங்களை சொல்லல. உங்களுக்கும் ரவிக்கும் உள்ள உருவ ஒற்றுமை, இந்த சிச்சுவேசன், இத்தனை நாள் விட்டு இன்னிக்கு நான் உங்களை சந்திச்சது…”
  “அதுக்காக…?”
  “விஜய். உங்களை பழி சொல்லல.” என் பெயரை அழுத்தமாக உச்சரித்து அவர் கூறிய வார்த்தைகளில் எனது கோபம் சற்று குறைவது எனக்கே வியப்பாக இருந்தது.
  ......​
   
   
 2. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,338
  Trophy Points:
  113
  காதலெனும் பெருங்காடு

  காதலெனும் பெருங்காட்டில் தொலைந்திட்ட உனை
  என் எதிர்பார்ப்புகள் மொத்தமுமாய் கொண்டு
  தேடியலைந்ததில் கிடைத்தது என்னவோ
  ஏமாற்றம் என்றாகிவிட்டது!


  டெட்ராயிட் மாநகர விமான நிலையத்தில் Concourse Bயின் gate B10ல் அமர்ந்திருந்தேன். இன்னும் தோராயமாக இரண்டு மணி நேரம் இருந்தது, ஹூஸ்டன் நகர் நோக்கி நான் செல்லவிருக்கும் விமானம் புறப்படுவதற்கு. அங்குதான் அந்தப் பெண்ணை முதன்முதலில் பார்த்தேன். Walkatorல் எனது இடத்தை கடந்து சென்றார். ஏனோ, வைத்த கண் வாங்காமல் எனையே பார்த்துக் கொண்டு சென்றார். இருவருமே இந்தியர் என்பதால் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன். அவருக்கு என்னை விடவும் வயது அதிகம் இருக்கலாம் என்று தோன்றியது. அவரை நான் பார்த்த போது சட்டென்று பார்வையை இடம் மாற்றிக் கொண்டார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் எனைக் கடந்து மறுபுறம் சென்றார். இந்த முறையும் எனையே பார்த்துக் கொண்டு சென்றார், ஏனோ தெரியவில்லை!

  மூன்றாவது முறை இதே போல் நடந்த பின்பு என்னைச் சங்கடம் தொற்றிக் கொண்டது.

  எந்த நேரமும் பெண்களை ஆண்கள் ‘நோக்கி
  க் கொண்டே இருப்போமே, உங்களுக்கும் இப்படித்தான் இருக்குமோ? என தோழியிடம் கேட்டிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  பத்து நிமிடங்கள் கழித்து என் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார். புருவத்தில் தெரிந்த ஈரம், முகம் கழுவிவிட்டு வந்தார் என்று உணர்த்தியது.

  Hi, if you don’t mind, நான் உங்க கிட்ட ரெண்டு நிமிசம் பேசலாமா?”

  ஒரு இந்தியப் பெண்ணே வலிய வந்து என்னிடம் பேசுவது இதுவே முதல் முறை. அதுவும் நான் தமிழன் என்று கண்டுபிடித்துப் பேசியது சற்றே ஆச்சரியமாகத்தான் இருந்தது!

  சொல்லுங்க. என்ன விசயம்?” என்றேன்.

  உங்க சொந்தக்காரங்க யாரும் மதுரைல இருந்ததுண்டா?”

  இல்லியே, ஏன் கேக்குறீங்க?”

  ஓ! இல்லையா..” வார்த்தைகளில் மெல்லிய ஏமாற்றம் தட்டுப்பட்டது.

  என் சொந்தகாரங்கள உங்களுக்கு எப்படி தெரியும்?”

  “…”

  அவங்கள பத்தி ஏன் விசாரிக்குறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”

  இல்ல, எனக்கு பழக்கப் பட்ட ஒருத்தர் உங்க சாயல். அதான் ஒரு வேளை உங்களுக்கு சொந்தக்காரரோனு தெரிஞ்சுக்க கேட்டேன்.”

  ஓகோ! இல்லிங்க, அப்படி யாரும் எனக்கில்ல.”

  சில நொடிகள் என்னையே குறுகுறு என்று பார்த்துக் கொண்டிருந்தார். சங்கடம் மிகுதியாக அவரிடம் கேட்டே விட்டேன், “என்னங்க இது? இப்படி சோகமா என்னையே உத்து பாத்துக்கிட்டு இருக்கீங்க? ஏதோ கேக்கணும்னு நினைக்குறீங்க. தயங்காம கேட்டுடுங்க. எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.”

  சரி என்பது போல் மேலும் கீழுமாய் தலை அசைத்தார். மூன்றாவது முறை குனிந்த தலை நிமிர்த்தாமல் குனிந்த படியே இருந்தார். சில விநாடிகள் கழித்து சட்டென்று தன் கைபேசியில் விரல்கள் பதிக்க நான் செய்வதறியாது அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். பின் என்னிடம் தன் கைபேசியை காண்பித்தார். அதில் ஒரு புகைப்படம் இருந்தது. வெளிர் மஞ்சள் நிற சுடிதாரும் குட்டையாய் வெட்டப்பட்ட கூந்தலுமாய் நின்று கொண்டிருந்தார். சிலகாலம் முன்பு எடுத்தது போலும். அவர் அருகில் ஒரு ஆண்! பார்ப்பதற்கு என்னைப் போலவே இருந்தார். அவருக்கு படிய வாரிய முடி, எனக்கு சற்று சுருட்டை முடி. அவருக்கு கொஞ்சம் நீளமான மூக்கு. படத்தில் இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே அளவு உயரம். அதை வைத்துப் பாத்தால் அவர் என்னை விட உயரம் கொஞ்சம் குறைவாக இருக்கக் கூடும். மற்றபடி அவர் என்னுடைய carbon copy எனலாம். ஆச்சரியத்துடன் நானே பேச்சை ஆரம்பித்தேன், “இது எப்ப எடுத்த photo?”

  BE final yearல. ஏழு வருசம் முன்னாடி.”

  ஓ! நான் இப்பதான் 3rd year படிக்கிறேன். இவரு உங்க friendஆ? ஒரே batchஆ?”

  ம்ம். Boyfriend. ஒரே batch தான், ஆனா வேற department.”

  Boyfriend என்று சொன்ன உடன் இவ்வளவு குறுகுறு என்று அவர் என்னைப் பார்த்ததன் அர்த்தம் புரிந்தது.

  அச்சு அசலா என்னைய மாதிரியே இருக்காரே!”

  ம்ம். முடி, மூக்கு, உயரம் தவிர இவரோட carbon copy தான் நீங்க.”

  என் மனதில் தோன்றிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியது எனை வியப்பில் ஆழ்த்தியது.

  நான் நினைச்சத அப்படியே சொல்லிட்டீங்க. எத்தனை வருசம் பழக்கம் உங்க ரெண்டு பேருக்கும்?” என்றேன்.

  High schoolல இருந்து.”

  Wow! Super. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் எப்ப ஆச்சு?”

  மௌனமாய் ஒரு கணம் இருந்து விட்டு இல்லை என்று தலையாட்டினார். பின் என் பார்வை தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

  மனதிற்குள் திட்டிக்கொண்டேன், ‘மடையா. கல்யாணம் ஆயிருந்தா ஏன் பழைய photoவ காட்ட போறாங்க?’ கைபேசியை பார்ப்பதைப் போல தலை குனிந்து கொண்டு அவர் கால்களை பார்த்தேன். கால்களில் மெட்டியும் இல்லை.

  Break-up ஆயிடுச்சா?” என்றேன்.

  அதற்கும் இல்லை என்று தலை அசைத்தார்.

  பின்ன?”

  ஒரு இடைவேளைக்குப் பிறகு கூறினார், “He is no more!”

  அச்சச்சோ! எப்படி?” ஏதோ நெருங்கிய உறவினர் மறைந்த செய்தி கேட்டது போல் இருந்தது எனக்கு.

  Bike accident.”

  Oh no! I’m very sorry.”

  Thanks..”

  சிறிது நேரம் அசௌகரியமான மௌனம் நிலவியது. அவரே மீண்டும் தொடர்ந்தார். “ரவி ரொம்ப safe driver. கவனமா ஓட்டுவான், signalல சரியா நிப்பான். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும்தான் பைக்ல இருந்தோம். Signalல இருந்து கிளம்பும் போது பின்னாடி இருந்த car வேகமா எடுத்துட்டான். Sideல தண்ணி lorry. இடிச்ச வேகத்துல நான் median பக்கமா விழுந்துட்டேன். அவன் lorry…” என்று தொடர்கையில் அவர் குரல் சற்று கம்மியது. “Helmet போட்டிருந்தான். ஆனா, lorry wheel ஏறி
  load…helmet உடைஞ்சுspotலயே…”

  சற்றே கனத்த குரலில் உடைத்து உடைத்தும் வராத வார்த்தைகளுக்கு கைகளை அசைத்தும் அவர் பேசிய வரிகள் ஒரு கோர சம்பவத்தை மறு ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தன.

  “…என் கண்ணு முன்னாடியே…” என்று அவர் தொடர முற்பட, நான் குறுக்கிட்டேன்.

  போதும். இதுக்கு மேல சொல்லாதீங்க.”

  அழுகையையும் கண்ணீரையும் அடக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு சரியென தலை அசைத்து கூறினார், “I’m sorry.”

  பரவாயில்லைங்க.”

  மீண்டும் அசௌகரியமான மௌனம். மௌனத்தை கலைக்க வேண்டி இந்த முறை நானே பேச்சைத் தொடங்கினேன், “அவர் பேர் என்ன?”

  ரவி.. ரவீந்திரன்.”
   
   
 3. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,338
  Trophy Points:
  113
  ஓ! என் பேர் விஜய் ஆனந்த்.”

  நான் ராஜஸ்ரீ.”

  நீங்க என்ன விஜய்னே கூப்பிடுங்க.”

  ம்ம், சரி.”

  இப்ப எங்க போறீங்க ஸ்ரீ?”

  சென்னைக்கு. அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்.” என்றாள் புரியாத பார்வையோடு,

  “ஏன்.. ஏன் அப்படி பார்க்குறீங்க.” என்றேன், ஏதோ இருக்கிறது என்ற படபடப்புடன்.

  “நத்திங்.. எல்லாரும் ராஜின்னு கூப்பிடுவாங்க, ரவி மட்டும் ஸ்ரீன்னு தான் கூப்பிடுவான். நீ எனக்கு ஸ்பெஷல், சோ ஸ்பெஷல் நேம்ன்னு சொல்வான். நீங்களும் அப்படியேக் கூப்பிடவும், சாரி..”

  இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் திருதிருவென என்னால் முழிக்க மட்டுமே முடிந்தது.

  அவரே தொடர்ந்தார், “ஆனா இந்த கல்யாணம் நடக்காது. நான் போய் வேண்டாம்னு சொல்லி நிறுத்தப் போறேன்.”

  அச்சச்சோ, ஏங்க? உங்கள கேட்காம ஏற்பாடு பண்ணிட்டாங்களா?”

  இல்ல, கேட்டாங்க. நான் ok சொன்னதுக்கு அப்புறமாத்தான் ஏற்பாடே நடந்தது.”

  பின்ன ஏன் நடக்காதுனு சொன்னீங்க?”

  நீங்க தான் காரணம்.”

  சட்டென்று என் மீது பழி சுமத்துகிறாரோ எனத் தோன்றியது.

  நானா?” சற்று கடினமாகவே எனது குரல் ஒலிக்க,

  “இல்ல, இல்ல சாரி ஒரு குழப்பம், நீங்கன்னு உங்களை சொல்லல. உங்களுக்கும் ரவிக்கும் உள்ள உருவ ஒற்றுமை, இந்த சிச்சுவேசன், இத்தனை நாள் விட்டு இன்னிக்கு நான் உங்களை சந்திச்சது…”

  அதுக்காக?”

  “விஜய். உங்களை பழி சொல்லல.” என் பெயரை அழுத்தமாக உச்சரித்து அவர் கூறிய வார்த்தைகளில் எனது கோபம் சற்று குறைவது எனக்கே வியப்பாக இருந்தது.

  பிரச்சனை எங்கிட்ட தான் விஜய். இந்த ஏழு வருசத்துல நான் ரவியோட நினைப்ப விட்டு வெளிய வந்துட்டேன்னு நினைச்சேன். I thought I’d moved on. பட் உங்கள பாத்த உடனேயே அப்படி இல்லனு புரிஞ்சுக்கிட்டேன். ரவி உருவத்துல உங்கள பாத்ததுமே என் மனசு இப்படி குழம்புதே, நாளைக்கு என்னை கட்டிக்கப் போறவர் ஆசையா எங்கிட்ட பேசும் போதோ, இல்ல என்னை தொடும்போதோ இதே மாதிரி ரவி நினைவு வருமே, அப்ப நான் என்ன பண்ணுவேன்? அவன் நினைப்ப மனசுல வச்சுக்கிட்டு என்னால இன்னொருத்தருக்கு நல்ல மனைவியா எப்படி வாழ முடியும்? ரவியை காதலிச்சதுக்காகவோ, அவன் இறந்ததுக்காகவோ நான் வேணா கஷ்டப்படலாம், சம்பந்தமே இல்லாம இன்னொருத்தர் ஏன் கஷ்டப்படணும்? அதனால தான் ஊருக்கு போனதும் முதல் வேலையா கல்யாணத்தை நிறுத்தப் போறேன்.” படபடவென்று மூச்சு விடாமல் பேசி முடித்தார்.

  தவறான முடிவு என்றே எனக்குப் பட்டது. இருந்தாலும் அவருக்கு எடுத்துரைக்க நான் யார்? இது அவர் வாழ்க்கை, அவர் முடிவு. எனவே மேலும் இதைப்பற்றி தர்க்கம் செய்ய விரும்பவில்லை.

  ரவியைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தது. “ரவிய பத்தி, உங்க ரெண்டு பேருக்கும் உண்டான காதல் பத்தி எனக்கு சொல்வீங்களா?”

  முடிஞ்சு போன விசயம், அது எதுக்கு? வேண்டாமே please.”

  இந்த நிராகரிப்பை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியாவது இவரைப் பேச வைக்க வேண்டுமே என யோசித்த படி, “தெரிஞ்சோ தெரியாமலோ உங்களோட இந்த முடிவுக்கு நானும் ஒரு வகையில காரணமாயிட்டேன். நீங்களும் அதை சுட்டிக் காட்டிட்டீங்க. I’m sorry for everything ஸ்ரீ.” என்றேன்.

  இல்ல விஜய், I am sorry. மறுபடியும் சொல்றேன், உங்கள பழி சொல்லணும்ன்னு என்னோட எண்ணமில்ல. Please don’t mistake me.”

  ம்ம், சரி. இருந்தாலும் உங்க சாரியை என்னால ஏத்துக்க முடியல

  அதுக்கு என்ன பண்ணனும்?”

  பேசணும்.”

  என்ன பேசணும்?”

  ரவிய பத்தி – அவரை பாத்த முதல் நிமிசத்துல இருந்து அவரை நீங்க இழந்த விபத்துக்கு முந்தின நிமிசம் வரைக்கும் உங்க இருவரோட வாழ்க்கை பத்தி!”

  மீண்டும் கேட்டதால் அவர் கோபமுற்றார். “முடியாது. நான் ஏன் உங்ககிட்ட இதெல்லாம் சொல்லணும்? அது என்னோட பர்சனல், அதை தெரிஞ்சுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” – என் மீதான இந்த சீற்றம் என்னை மிகவும் பாதித்தது. இது அர்த்தமற்றது, அநியாயமானது எனத் தோன்றியது.

  முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும். ஆதலால் நானும் கோபத்துடன் பதில் அளிக்கத் தொடங்கினேன், “உரிமையா? உங்களுக்கு மட்டும் என்ன உரிமை இருந்துச்சு, எங்கிட்ட வந்து பேசுறதுக்கு? ரவியோட போட்டோ காமிச்சதும் அப்படியே பேச்சை கட் பண்ணிட்டு போயிருக்க வேண்டியதுதான? எதுக்கு அந்த ஆக்ஸிடென்ட் பத்தி சொன்னீங்க? எதுக்கு கல்யாணத்தை நிறுத்த போறேன்னு சொன்னீங்க? அதுக்கு நான்தான் காரணம்னு வேற..இதெல்லாம் நான் கேட்டனா?”

  அதுக்காக உங்ககிட்ட என் கதையை சொல்லணும்னு அவசியம் இல்ல விஜய். இத்தனை நாள் நான் படுற கஷ்டம் போதாதா? உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லி do you want me to re-live the sad story again?”

  Come on ஸ்ரீ, ஏழு வருசம் முன்னாடி உங்க வாழ்க்கைல பெரிய இடி விழுந்திருக்கலாம். அதுக்காக you don’t get to play the victim today, even in front of a stranger. அன்ட் உங்களோட இந்த கோவம், I certainly don’t deserve” என்று கூறிவிட்டு விலகிச் செல்ல எழுந்தேன். இரண்டு எட்டு நடந்து பின் மீண்டும் திரும்பி, “You know what, உங்க வாழ்க்கை உங்க இஷ்டம். Do whatever you want, I don’t care. Who am I to you anyway?” என்று கூறிவிட்டு வேகமாக அவரின் பின்புறம் இரண்டு வரிசைகள் தாண்டிச் சென்று அமர்ந்து கொண்டேன்.

  எப்படியாவது அவரை என்னிடம் வந்து பேச வைத்துவிடு ஆண்டவா என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டும் இருந்தேன்.  சிறிது நேர மௌனத்தின் பிறகு பின்னிருந்து அவர் குரல் வந்தது, “ரவிக்கும் இப்படித்தான் பொசுக்குனு கோபம் வரும்.”

  திரும்பிப் பார்த்த பொழுது அவர் சாந்தமாகி இருப்பது தெரிந்தது.

  I’m sorry.” என்றார்.

  சிறு புன்னகை உதிர்த்து “me too” என்றேன்.

  ஏனோ என்னிடம் அவர் தன் கதையை கூறத் தயாரானது போன்று தோன்றியது. அருகில் வந்து அமர்ந்து தொடர்ந்தார்.

  எங்க வீட்ல எனக்கு வச்ச செல்லப் பெயர் கடுகு. எதுக்கெடுத்தாலும் பட்டுபட்னு பொரிஞ்சு பேசிடுவேன். ஆனா மனசுல ஒளிச்சு வச்சு எதையும் பேசிப் பழக்கமில்ல. அது ஏனோ தெரியல, பட் நான் அப்படித்தான்! ரவி எனக்கு மேல கோவக்காரன். என்னை விட அதிகமா கோவப்படுவான், வேகமா கூலும் ஆயிடுவான். எங்களோட முதல் சந்திப்பே ஒரு சண்டைல தான் ஆரம்பிச்சது. ஒரு நாள் கெமிஸ்ட்ரி லேப்ல அவனோட பிப்பெட்ட நான் உடைச்சிட்டேன். என் மேல கோவப்பட்டான், பதிலுக்கு நான் கோவப்பட்டேன். அப்ப ஆரம்பிச்சது எங்க காதல் கதை…” வழக்கமாக ஆரம்பிப்பது போல் மோதலில் ஆரம்பித்த தன் காதலைப் பற்றி கூற ஆரம்பித்தார்.
   
   
 4. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,338
  Trophy Points:
  113
  உண்மையில் எனக்கு இவர்கள் காதல் கதையைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் இல்லை. என்னுடைய நோக்கம் ரவியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். என்னைப் போல் ஒருவர். அவர் பழக்கம் எப்படி, நடத்தை எப்படி, தண்ணி/தம் அடிப்பாரா, கண்ணியமானவரா, அவர் குடும்பமே எங்கே, என பல கேள்விகள். அண்ணன் தம்பி இன்றி வேறு நெருங்கிய சொந்தபந்தங்கள் இன்றி வளர்ந்தவன் நான். ஒரு வேளை அவர் எனக்கு தூரத்து சொந்தமோ எனத் தோன்றியது. இவற்றிற்கான பதில்களையே இவர் கதையினில் எதிர்பார்க்கிறேன். அவர் எனக்கு தொலைந்த ஒரு சொந்தமாக இருந்திட வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டது. அவர் மூலம் பல புது சொந்தங்கள் என் வாழ்வில் வந்திடாதோ என மனம் ஏங்கியது.

  வேதியியல் ஆய்வகத்தில் தொடங்கிய அவர்களது சண்டை, 11ஆம் வகுப்பு முழு பரிட்சை முடிந்து வீடு செல்லும் முன்பாக ‘சண்டை போதும், இனி சமாதானமாக செல்வோம் என நட்பாக மாறி கைகுலுக்கிப் பிரிந்து, பின் வந்த நாட்களில் நெருங்கிய நட்பாக உருமாறியது. அவர்கள் நட்பு இருவரையும் ஒரே கல்லூரியில் பொறியியல் படிப்பு எடுக்கவும் வைத்தது. பின் வந்த இரண்டாண்டுகளில் அவர்களின் இணைபிரியா நட்பின் கதை தொடர்ந்தது.

  தேர்ட் யேர் ஆரம்பிக்க ரெண்டு நாள் முன்னாடி அவன் எங்க வீட்டுக்கு வந்துட்டான். அடுத்த நாள் நாங்க ரெண்டு பேரும் ஒன்னா கிளம்பி ஹாஷ்டலுக்கு போறதாக ப்ளான். அன்னிக்கு இரவு என்னோட சமையல். உருளைக்கிழங்கு சப்பாத்தி ஃபர்ஸ்ட் டைம் பண்ணினேன். நல்லா கருக்கி கருக்கி பண்ணினேன். ‘கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் இப்படியெல்லாம் சப்பாத்தி பண்ணினா உன் புருசனால எப்படி சாப்பிட முடியும்? கண்டிப்பா உனக்கு டிவோர்ஸ் ஆகப்போவுதுன்னு சிரிச்சுக்கிட்டே கிண்டல் அடிச்சான். ‘நீயே சாப்பிடுற, உன்ன மாதிரி ஒருத்தன் எனக்கு கிடைக்காமலா போயிடுவான்னு சொன்னேன். அதுக்கு அவன், ‘நான் இருக்கையில என்ன மாதிரி இன்னொருத்தன் எதுக்கு? நீ சரினு சொன்னா நானே உன்ன கட்டிக்குறேன்னு சொன்னான். அவன் ப்ரபோஸ் தான் பண்ணினான்னு புரிஞ்சுக்க முன்னாடியே டக்குனு யோசிக்காம நானும் சரினு சொல்லிட்டேன்.

  என் வாழ்க்கையில நான் யோசிக்காம எடுத்த முடிவு, ரொம்ப நல்ல முடிவு அவன் காதலை ஏத்துக்கிட்டதுதான் என்று தன் காதல் ப்ரபசல்l நடந்த அழகிய தருணத்தை விவரித்தார்.

  எங்க வீட்ல இந்த காதலுக்கு உடனடியா ஓகே சொல்லிட்டாங்க. ஆனா அவன் வீட்ல ஒத்துக்கல. தாய் மாமா பொண்ண கட்டிக்குறதா சின்ன வயசுலயே ரவியோட அம்மா வாக்கு குடுத்துட்டாங்களாம். ஆனா இவன் ரெண்டு வருசமா விடாம என்னைப் பத்தி ,’இவ ரொம்ப நல்லவ, வல்லவ, நம்ம குடும்பத்தை நல்லா பாத்துக்குவா அப்படி இப்படினு ஏகத்துக்கு பிட்டு போட்டு சம்மதம் வங்கிட்டான். அதுக்கு அடுத்த ஒரு வாரத்துக்குள்ள…” என்று பேச்சை முடித்தாள்.

  அவள் தன் மொத்த கதையையும் கூறி முடிக்க ஏறத்தாழ ஒரு மணி நேரம் பிடித்திருந்தது. இந்த நேரத்தில் எங்கள் இருவருக்குமான போர்டிங்க் கால்ஸ் அறிவிக்கப் பட்டிருந்தது.

  சுருக்கமாக சொன்னாலும் இவளின் காதல் கதை என்னை வெகுவாக ஈர்த்ததையும் பாதித்ததையும் மறுப்பதற்கில்லை. அழகாய் வரையப்பட்ட ஓவியத்துடன் ஒப்பிட வல்ல வாழ்க்கை இவளுக்கு அமைந்திருக்க வேண்டும். வரைந்து முடிக்கும் முன் காகிதம் கிழிந்தது போல் ஆகிற்று.

  கடந்த ஒரு மணி நேரம் இவள் தன் காதலைப் பற்றி சொல்லச் சொல்ல ஏதோ ஒரு இனம் புரியாத நெருக்கத்தை இவளிடம் உணர்ந்தேன். இந்த ஈர்ப்பு இதுவரை எந்த பெண்ணுடனோ அல்லது ஆணுடனோ எனக்கு தோன்றியதில்லை. இன்பம் துன்பம் ஆசை கோபம் இன்னும் பெயர் யூகிக்க முடியாத பல உணர்வுகளின் கலவை உடல் முழுவதும் பரவுவது போன்ற பிரம்மை தோன்றியது. இந்த ஒரு மணி நேரத்தில் ‘அவர்-இவர் என்று மரியாதையாய் நினைத்துக் கொண்டிருந்த நான் ‘அவள்-இவள் என்று உரிமையாய் எப்பொழுது நினைக்கத் தொடங்கினேன் என்றும் புலப்படவில்லை.


   
   
 5. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,338
  Trophy Points:
  113
  அதுக்கு அடுத்த ஒரு வாரத்துக்குள்ள…” என்று அவள் கூறி இரண்டு நிமிடங்கள் இருக்கலாம்.

  மௌனம்.

  விழியோரத்தில் தடுக்கிய கண்ணீர்த்துளியை விழவிடாமல் விரலால் துடைத்து எடுத்தாள்.

  இத விட என் வாழ்க்கைல சந்தோசமான நேரம் இருந்ததில்ல, இனிமே வாழ்க்கைல சோகத்துக்கு இடமே இல்லனு நினைச்சிருந்த வேளைல மிகப் பெரிய இடிய விதி என் தலையில போட்டுருச்சு. அடுத்த ஆறு மாசம் நான் நடைபிணமாத்தான் இருந்தேன். ஒருத்தர்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசல. ஒரு வாரத்துக்கு 3-4 வேளை கட்டாயப்படுத்தி சாப்பிட்டதே அதிசயம். I went into depression. பின்ன ஒரு ஆறு மாசம் கவுன்ஸ்லிங், ரெண்டு வருசம் சொந்தக்காரங்க வீடுகள்னு வாழ்க்கை மெல்லமா நகர ஆரம்பிச்சுது. அப்புறமா GRE prepare பண்ணி இங்க வந்து MS முடிச்சிட்டு வேலை பார்த்திட்டு இருக்கேன்.”

  போர்டிங் கால் மீண்டும் அறிவிக்கப்பட, “It’s time குரு. Thanks a lot for listening to me. என் கதைய சொல்லி ரொம்ப போர் அடிச்சுட்டேனோ?” என்றாள்.

  சே சே, அப்படிலாம் ஒன்னும் இல்ல. Come, let me send you off.” என்று அவளுடன் எழுந்தேன்.

  Thanks. நாலஞ்சு கேட் தள்ளிதான் என்னோடது. நானே போய்க்கிறேன். நீ உன் ஃப்ளைட்ல ஏறிக்கோ.” அவளும் என்னை ஒருமையில் பேசியதை கவனித்தேன். அது ஏனோ பிடித்திருந்தது.

  அஞ்சு நிமிசம் தான ஆகும். கேட் வரைக்கும் வந்து விட்டுட்டு போறேன். எனிவே, என்னோட ப்ளைட் தான் ரெண்டாவது கிளம்பும். அதனால நோ ப்ராப்ளம்.

  வரும் walkator வழியாக Concourse Cல் கேட் C8ஐ அடைந்தோம். சிகாகோ செல்லவிருக்கும் அவளுக்கான விமானத்திற்குள் செல்ல நீண்ட வரிசை இருந்தது. 40-50 பயணிகள் நின்று கொண்டிருக்க, “தேங்க்ஸ் குரு, for dropping me,” என்று விடையளித்தாள். “I’m sorry again, if I had hurt you”.

  ஒரு புன்னகையுடன், “no problem, take care” என்று உரைத்து, திரும்பிச் செல்லத் தொடங்கினேன்.

  இதயம் மிகவும் கனத்தது. இனி இவளை என் வாழ்வில் சந்திக்கப் போவதே இல்லையே. Walkator அருகே நின்று திரும்பிப் பார்த்தேன். அவள் எனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

  ஸ்ரீ, கிளம்ப முன்னாடி உங்கிட்ட கடைசியா ஒரு விசயம் சொல்லணும்.”

  என்ன?” என்று அருகில் வந்தாள். அவள் அனுமதியின்றி அவள் கரம் பற்றி எடுத்தேன். எனது கைகளைப் பார்த்து பின் குழப்பத்துடன் எனை நோக்கினாள்.

  நான் தொடர்ந்தேன், “எனக்கும் ரவிக்கும் எந்த தொடர்பும் இல்ல. அவர் பிறந்து ஏழெட்டு வருசம் கழிச்சு அவரை மாதிரியே சாயல்ல நான் பிறந்தது ஜஸ்ட் ஒரு கோ இன்சிடென்ட் மாதிரி எனக்கு தோணல. அது ஏன்னு எனக்கு நல்லாவே புரியுது.”

  ஏன்?”

  உனக்காகத்தான்

  எனக்காகவா?” நான் ஒருமையில் பேசியதை அவள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இதுவும் பிடித்திருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொடர்ந்தேன்.

  அன்னைக்கு ஆக்ஸிடென்ட்ல, அந்த எதிபாராத நொடியில எல்லாம் முடிஞ்சு போச்சுல. உன்னால ரவிக்கு ப்ராப்பரா குட் பை சொல்ல முடிஞ்சிருக்காதுல.”

  அதுக்கு?” அவள் முகம் மாறியது.

  அதுக்காகத்தான் நான் ரவி ரூபத்துல…” என்று இழுத்தேன்.

  அதுக்குத்தான் நீ ரவி ரூபத்துல பிறந்தியாக்கும். சாகப்போறான்னு தெரிஞ்சு ஆண்டவன் அவன் சாகறதுக்கு 15 வருசம் முன்னாடியே உன்ன படச்சானாக்கும். என்ன பேத்தல் இது?”

  ஆண்டவன் அது தெரிஞ்சு என்னைப் படச்சானா அப்படினுலாம் எனக்குத் தெரியாது. ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒரே சாயல்ல இருக்குறதுக்கு இது காரணமா இருக்கலாமே!”

  நான் ரவிக்கு குட் பை சொல்லலனு உனக்கு யார் சொன்னது? I’d moved on. And that is BECAUSE I’d said goodbye to him!” என் கையில் இருந்து தன் கையைப் பிடுங்கிக் கொண்டாள். அவள் பேச்சில் கோபம் தெரிந்தது.

  கோச்சுக்காத. அப்படி you had really moved on-னா என்னைப் பாத்ததுமே ஏன் உன் மனசு கலைஞ்சது. கல்யாணத்தை நிறுத்தணும்னு உடனே முடிவு பண்ணிட்டியே, அது ஏன்?”

  அது..வந்து..” பதிலின்றி தடுமாறினாள்.

  மீண்டும் அவள் கை பற்றிக்கொண்டு தொடர்ந்தேன். “Listen to me. நான் உன்ன குறை சொல்லல. இந்த சிச்சுவேசன ஏன் நீ உனக்கு சாதகமா எடுத்துக்கக் கூடாது? ரவியே இப்ப உன் முன்னாடி நிக்குறதா நினைச்சுக்கோ. நான் எதுவும் பேசாம இருக்கேன். நீயும் வாய் விட்டு எதுவும் பேச வேணாம். உன் மனசுலயே ரவி கூட பேசிட்டு ஒரு ஃபைனல் ப்ரபர் குட் பை சொல்லு. That will be the actual start of your real moving on!”

  No! தேவையில்ல

  Come on ஸ்ரீ.. இன்னும் அரை மணி நேரத்துல நம்ம ஃப்ளைட்ஸ் கிளம்பிடும். இதுக்கு அப்புறம் நாம ரெண்டு பேரும் சந்திச்சுக்கப் போறதே இல்ல. இந்த சான்ஸ் இப்ப விட்டா இனி கிடைக்காது. சோ டூ இட்.

  No விஜய்!”

  ஜஸ்ட் ஜஸ்ட் மீ ஸ்ரீ அண்ட் டூ இட்!” அவள் கைகளை அழுத்திப் பற்றி பின் பிடியை சற்று தளர்த்தினேன்.

  அவள் மனதிற்கு என் வாதம் சரியெனப் பட்டது போலும். மௌனமாய் என் கண்களை உற்று நோக்கினாள். நான் கூறியதை ஒத்துக் கொண்டாள் என்றே தோன்றியது.

  அடுத்த ஐந்து நிமிடங்கள் ரவிக்கான அவளின் கடைசி விடைகொடுத்தல் அவள் மனதினுள் அரங்கேறியது.

  ஐந்து நிமிடங்கள்.

  என் வாழ்க்கையில் மிக நீண்ட ஐந்து நிமிடங்கள். மிக அழகான ஐந்து நிமிடங்கள். மீண்டும் கிடைத்திடாத ஐந்து நிமிடங்கள்.

  என் கண்களை மாறி மாறிப் பார்க்கும் அவள் பார்வையும் வழக்கத்திற்கு அதிகமாக சிமிட்டும் அவள் கண்களும் ரவியுடன் அவளின் இறுதி உரையாடலை உணர்த்தியது. ஆழமான அவள் பார்வையும் அது தோற்றுவித்த விழியோர நீர்த்துளியும் என் உயிர் வரை ஊடுருவி மனதுள்ளே உணர்ச்சிப் பேரலைகளை உருவாக்கியது. ஆனால் அதை எனைத் தவிர வேறு யார் அறிவார்? சுற்றியுள்ள நகரம் கணப்பொழுதில் மண்ணோடு மண்ணாகி குளிர்ந்த ஓர் பாலைவனத்தின் நடுவே நாங்கள் இருவரும் தனித்து நின்றிருப்பது போல் ஒரு பிரம்மை தோன்றியதை யார் அறிவார்?

  பேசாமல் நிற்பேன் என்று அளித்த வாக்குறுதியை உடைத்து விடுவேனோ என்று அஞ்சினேன்.

  ஸ்ரீ.” என்னையும் மீறி வார்த்தைகள் உதிரத் தொடங்கின. மனதிற்குள் என்னிடம் நானே சண்டையிட்டுக் கொண்டேன். பேசாமல் இருக்கச் சொல்லி மன்றாடினேன்.

  ராஜஸ்ரீயை ஸ்ரீ என்று ரவி செல்லமாக அழைப்பதை அவள் கூறியது போல் ஞாபகம். ஆதலால் அவள் முகத்தில் சட்டென்று தோன்றிய பரவசம், குழப்பம், மிரட்சி, மேலும் இறுக்கமாகப் பற்றிய அவள் கைகள் – இவை அனைத்தும் ‘பேசக்கூடாது எனும் என் முயற்சியை உடைத்து எறிந்தன. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எனை மீறி பேசலானேன். எனக்குள் இருந்து ரவியே பேசுவது போன்று தோன்றிற்று.

  ஸ்ரீ..”

  ரவி..” அழுகையும் சுவாசமும் கலந்து அவள் குரல் சன்னமாய் ஒலிக்க,

  என்ன மன்னிச்சிடு ஸ்ரீ. நான் உன்ன பாதிலயே விட்டுட்டு போயிட்டேன். நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும்ல ஸ்ரீ?”

  நிற்பதற்கு திராணியின்றி என் காலருகே அவள் உடைந்து அமர்ந்தாள். அருகில் நான் மண்டியிட்டு அமர்ந்தேன்.

  ஏன் ரவி என்ன விட்டு போன? நீ எனக்கு வேணும் ரவி. நீ இல்லாம என்னால சத்தியமா முடியல ரவி..” தேம்பித் தேம்பி அழலானாள்.

  நீ வாழணும் ஸ்ரீ. என் வாழ்க்கை பாதிலயே முடிஞ்சதுக்காக உன்ன நீயே தண்டிச்சுக்காத. விதியால என் உடம்பைதான் உங்கிட்ட இருந்து பிரிக்க முடியும். என் உயிரை இல்லனு மறந்துட்டியே ஸ்ரீ. இத்தன வருசமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நான் உன் பக்கத்துலயேதான் இருந்தேன். நீ பேசாம இருந்தப்ப உங்குரல கேக்க முடியாம நான் பட்ட அவஸ்தை, நீ சாப்பிடாம இருந்தப்ப ஒரு வாய் உனக்கு ஊட்டி விட முடியாம நான் அடைஞ்ச வேதனை இதெல்லாம் உனக்குத் தெரியுமா? சாப்பிடச் சொல்லி, பேசச் சொல்லி கத்தினேனே, உங்கால்ல விழுந்து கதறினேனே. உன் பக்கத்துல நான் இருக்கேன்னு உனக்கு உணர்த்த ஆயரக்கணக்கான முறை முயற்சி பண்ணிப் பண்ணி நான் தோத்துட்டேனே ஸ்ரீ!

  நீ சாகணும்னு முயற்சி பண்ணினப்ப அறுபட்டது உன் கை இல்ல, எம்மனசுனு உனக்கு ஏன் ஸ்ரீ தோணல?”

  நான் என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியல ரவி. I’m so sorry. நீ எனக்கு வேணும் ரவி, என்ன விட்டு போகாத..”

  “நான் உங்கிட்ட மீண்டு வரணும் ஸ்ரீ. நீ சந்தோசமா சிரிச்சு பாக்கணும். இத்தன வருசமா உன்ன சுத்தி நீயே போட்டுக்கிட்ட வேலி போதும் ஸ்ரீ. நீ வாழணும் ஸ்ரீ. ஊருக்கு போ. கல்யாணம் பண்ணிக்கோ. நான் உங்கிட்ட வரணும் ஸ்ரீ. அதுக்கு நீ வாழணும். போ…”  எதற்காக இப்படி பேசினேன் என்று சற்றும் புரியவில்லை. சுற்றி இருந்த பாலைவனம் மீண்டும் எழும்பி கட்டிடங்களாக, வாகனங்களாக, மனிதர்களாக மாறியது. உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. எனக்கான ஃபைனல் போர்டிங் கால் ஒலிப்பதும் புலப்பட்டது.

  ஸ்ரீயின் இருகண்களில் இருந்தும் தாரை தாரையாக வழிந்த கண்ணீர் தரையை அடைந்தது. இறுகப் பற்றிய அவள் கைகள் சற்றும் தளரவில்லை. என் கைகளை முகத்தில் இழுத்து அணைத்து முத்தமிட்டாள்.

  கால்களை இரண்டு எட்டுகள் பின் வைத்து நான் walkatorல் ஏறினேன். அது எனை பின்னோக்கி இழுக்க, அவள் கைகள் சற்று தளர்ந்தது. “Goodbye ஸ்ரீ என்றேன்.

  கைகள் பிரிந்தன. இருவருக்கும் இடையேயான தூரம் அதிகரித்தது. மக்கள் வெள்ளத்தில் அவள் மறைந்து போகும் வரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.


   
   

Share This Page