"என் தேவதை "

Discussion in 'Story Threads - Read All Ongoing stories' started by sahara, Nov 13, 2019.

  1. sahara

    sahara Wings

    Messages:
    7
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    ஹலோ வணக்கம் ...........!!!!!!!!!
    நான் உங்கள் சஹாரா . இது நான் முதன் முதலாக எழுத போகும் கதை உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறேன் .
    "என் தேவதை "
    யாரும் இல்ல உலகில் வாழும் தேவதை பெண்ணுக்கு முழு உலகமாக ஒருவன் மாறும் கதை .

    சசிவர்ம தேவ் -பரம்பரை பணக்கார வம்சத்தை சேர்த்தவன். சிறு வயது முதலே குடும்ப பொறுப்போரை சுமப்பவன். எப்பொழுதும் வேலை வேலை என்று உழைப்பவன் . தன் குடுப்பத்தின் மீது மிகுந்த பாசம் உடையவன்
    நிலமொழி - சிறு வயதிலேயே தாய் தந்தையை பறி கொடுத்தவள் .தன் தாத்தா அவருடைய வயல் மட்டுமே உலகம் என்று வாழ்ந்தவள். சிறு வயது முதலே பொறுப்பும் அமைதியும் கொண்டவள்.

    இருவரின் வாழ்க்கையும் எப்படி காதல் இணைகிறது என்பதை இந்த காதல் கதையில் காண்போம்
    இவைர்களோடு நாமும் பயணிப்போம்.


    "என் தேவதை "
     
    Last edited: Nov 13, 2019
     
  2. sahara

    sahara Wings

    Messages:
    7
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    அத்தியாயம் -1



    காலை 5 மணிக்கு எழுந்து வழக்கம் எழுந்து குளித்து விட்டு கோலம் போடசென்றாள் நிலமொழி .காலை வேளையில் அவளை பார்ப்பதற்கு பனியில் பூர்த்து இருக்கும் ரோஜா பூவை போல் இருந்தாள் .


    நிலமொழி 18 வயது நிரம்பிய பாவை .துரு துரு கண்களும் குண்டு கன்னங்களையும் யாரையும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு அழகு. எப்பொழும் வேலை செய்வதால் என்னவோ கோடி போன்ற உடல் வாகு .அவளுடைய தாய் பாட்டியை போல இடையை தாண்டும் கூந்தல் .


    சிறு வயதிலேயே தாய் தந்தையை பறி கொடுத்தவள் . வேலாயுதம் , சரஸ்வதின் செல்ல பேத்தி . சிறு வயது முதலே அவள் பொறுப்புடன் இருப்பாள் . தாத்தா பாட்டிக்கு எந்த தொந்தரவும் தர மாட்டாள் .ஊரில் அனைவருக்கும் செல்ல பிள்ளை அவள். அவளுடைய குண்டு கன்னத்தை கிள்ளவே அவளை பார்க்க அனைவரும் வருவார் .

    அவளுடைய பாட்டிக்கு எப்போதும் உடல் நிலை சரி இல்லாமல் போகும். அவளுக்காகவே அவர் உயிரை பிடித்து வைத்து இருந்தார்.இருப்பினும் அவளுடைய 16 வயதில் அவரும் அவளை விட்டு பிறந்து சென்றார் .

    தன் பெற்றோர் பிரிவை விட அவளுடை பாட்டின் இருப்பு அவளை மிகவும் பாதித்தது .அவள் சிறு வயதில் நல்ல சுட்டி பெண்ணாக தான் இருந்தாள் ஆனால் பாட்டியை கவனித்தால் வீடு வேலைகளும் அவளே கவனித்தால் என்னவோ அவள் அப்பொழுதே தன் வயதை மீறிய பொறுப்புடன் இருப்பாள்.

    சரஸ்வதின் பிரிவின் பிறகு அவள் முழுவதும் அமைதியாக மாறி விட்டாள்.அவள் தாத்தா மிகுத்த பாசம் உடையவர் தான் ஆனால் ஒரு வயதிற்க்கு மேல் அவரிடம் சிறு ஒதுக்கம் வந்து விட்டது .அதனால் என்னவவோ அவளுக்கு தான் மட்டும் தனியாக இருப்பது போல இருக்கும்.அவளுடைய தோழிகள் வேறு தன் குடும்பக் கதைகளை கூறும் போது அவளுக்கு ஏக்கமாக இருக்கும் .

    ஆனால் வயதான தனது தாத்தாவை அவள் கஷடப்படுத்த அவள் விரும்ப வில்லை . அவளுக்கு தெரியும் தன்னை விடவே தாத்தாவே பாட்டியின் பிரிவில் ரொம்ப கஷ்டப்படுகிறார் என்று .

    அவளுடைய இறுதி பள்ளி ஆண்டில் அவளுடைய தாத்தாவிற்கு உடம்பு சேரி இல்லாமல் போகவே அவள் மிகவும் பயந்து விட்டால் எங்கே தனக்கு இருக்கும் ஒரு உறவும் தன்னை விட்டு பிரிந்து போய் விடும் என்று .

    அவள் இறுதி தேர்வு முடித்தவுடனே தாத்தாவின் உடம்பு ரொம்ப மோசமாகி விட்டது.
    தாத்தாவின் நெருங்கிய நண்பர் சக்கரவர்த்தி .

    அவரை அவள் சிறு வயது முதலே பார்த்து இருக்கிறாள் .எப்பொழுதும் தனக்கு பிடித்த சாக்லேட் வாங்கி வரும் அந்த தாத்தாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.அவரின் பொறுப்பில் தனது பேத்தியே சேர்த்து வீட்டா நிம்மதில் அவரும் இறைவன் அடி சேர்த்துவிட்டார் .



    இவை எல்லாம் நடந்து முடிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது .முதல் முறை இந்த வீடு பார்க்கும் போது அவளுக்கு எவ்வளவு பிரமிப்பு தோன்றியதோ அது தான் எப்பொழுதும் தோன்றும் .

    கோவையில் பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் பகுதில் மற்ற அனைத்து வீடுகளை விட 2 மடங்கு பெரிதாக இருந்தது.இதனை வீடு இல்லை மாளிகை என்றே சொல்ல வேண்டும்.
    கோலம் போட்டு முடித்த உடனே அங்கு பூங்காவை போல இருக்கும் அந்த வீட்டு தோட்டத்தை சுற்றி வந்தாள் .அவளுக்கு இந்த காலை நேர நடை மிகவும் பிடிக்கும் . அப்டியே நடத்துக்கு கொண்டு சூரிய உதயத்தை பார்ப்பது அவளது வழக்கம் .

    இன்றும் அதனை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் அவர்களுடைய காலை பானத்தை செய்ய ஆரம்பித்தாள் .

    "ஏன் பாப்பா இதை எல்லாம் நன் பார்த்து கொள்ள மாட்டானா " என்றபடி வந்தார் அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் பொன்னம்மாள் .

    "இல்லை அம்மா நன் சும்மா தான இருக்கிறிறேன். அதான் " என்னும் நிலமொழியை பாசத்துடன் பார்த்தார் பொன்னம்மாள் .

    பொன்னம்மாள் இங்கு 15 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார் .இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்ற உடனே அவருடைய புகுந்த வீட்டினர் அவளை
    வீ ட்டை விட்டு துரத்தி விட்டனர் . அதனால் என்னவோ அவர் நிலா மொழியை தன் மகள்வே பார்க்கிறார் .

    அவருக்கு தெரியும் இவள் எந்த வீட்டின் விருந்தாளி இந்தவேலை எல்லாம் அவள் செய்ய வேண்டியதே இல்லை .ஆனால் வந்த நாள் முதலால் அம்மா அம்மா என்று தன் பின்னே சுற்றி இருக்குகிறாள் .

    "சரி அதான் நான் வந்து விட்டேன் இல்லை .போ நீ முதலில் தலையை காய வை பாப்பா "என்று அன்புடன் கடிந்து கொண்டார் .

    "சரி நானும் கல்லூரிக்கு கெளம்புகிறேன் "

    நிலமொழி 12 வகுப்பு தேர்வில் 92% மதிப்பெண் எதுத்து இருந்தாள் .கோவையில் பிரபலமான பொறியல் கல்லுரியில் சிவில் இன்ஜினீரிங் முதலாம் வகுப்பு படிக்கிறாள் .
    நாம ஹீரோயின் கெளம்பரத்துக்குள் நாம வீட்டில் இருப்போரை பற்றி பார்ப்போம் .

    சக்கரவர்த்தி -
    பரம்பரை பணக்காரர் .இந்தியா முழுவதும் பிரபலமான துணி மட்டும் நகை "துளசி குரூப்ஸ் ஆப் கம்பெனி " சொந்தக்காரர் .நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் .அதனால் தான் தன் நண்பன் வாக்கை நிறை வேற்ற நிலமொழின் பொறுப்பை ஏற்றவர் .

    தேவகி அமையர் -
    சக்கரவர்த்தியின் துணைவி .பிறந்து புகுந்த வீடு அனைத்தும் பரம்பரை பணக்கார வீடு .அதனால் பெருமை அதிகம்.பணம் இல்லை என்றால் அவர் யாரையும் மதிப்பதில்லை .(நிலமொழியை முக்கியமாக ).

    சாந்தி -
    பெயரை போன்று அமைதி ஆனவர் .சக்கரவர்த்தியின் மருமகள் . 40 வயதில் கணவரை பறி கொடுத்தவர் .ஆதிகேசவன் -சாந்தி திருமணம் ,காதல் திருமணம் .சாந்தி வசதி குறைந்த மருமகள் .
    அத்தை பேச்சை எதிர்த்து பேசாதவர் . மொத்தத்தில் வாயில்லா புள்ளப்பூச்சி .

    நிவேதா -
    சாந்தியின் புதல்வி .வீட்டின் கடை குட்டி .மருத்துவம் இறுதி ஆண்டு படிக்கிறாள் .

    ரோகிணி -
    சக்கரவர்த்தி , தேவகியின் செல்ல மகள் . அம்மா வீட்டில் குடும்பத்தோடு ராஜியம் பண்ணுகிறவள் .

    சங்கர் -
    ரோகிணி கணவர் .குள்ள நரியின் மரு உருவம் .எப்பொழுது யாரு யாமாறுவர் என்று காத்து கொண்டு இருப்பவர் .

    ஷிவானி -
    ரோகிணி ,சங்கர் புதல்வி .ரோகினின் திமிரும் சங்கரின் நரி தனமும் கொண்டவள். இந்த வீட்டின் மருமகள் ஆகி அனைத்து சொத்துக்களுக்கும் உரிமை உள்ளவள் ஆக வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டவள் .

    ஸ்ரீதர் -
    ஷிவானின் தமையன் .அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரே நல்லவன் . தானாக முன்னேற வேண்டும் என்ற கொள்கை கொண்டவன் .


    சசிவர்ம தேவ் -
    கோவமும் அழுத்தவும் கொண்டவன்.அதனால் என்னவோ 27 வயதில் இந்தியாவின் முக்கிய நபர்களில் ஒருவன் .
    தான் நினைத்தை நடத்தி காட்டுபவன் .6 அடிக்கு மேல் உயரமும் அழுத்தமான கண்களும் உடையவன் .
    இந்தியா முழுவதுவும் உள்ள ஹோட்டல் மற்றும் கட்டுமான தொழில் கொண்ட "தேவ் குரூப்ஸ் ஆப் கம்பெனி " ஓனர் .
    தற்பொழுது தொழில் வேலையாக வெளி நாடு சென்று இருக்கிறான் .



    "என்னமா சமையலில் எத்தனை உதவி தேவையா ?" என்ற படி வந்த நிலமொழியை பார்த்த பொன்னம்மாள் அவளுக்கு சுத்தி போட்டாள் .
    பின்ன அரைத்த சந்தானத்தின் நிறத்தில் வட முகமும் குண்டு விழிகளும் குண்டு கண்ணகளுடன் வந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவருக்கு.

    "ஒன்னும் வேணாம் பாப்பா .நீ சாப்பிட்டு கெளம்பு பஸ்க்கு மணி ஆகுது "என்றார் .
    "இருங்க சாப்பாடு எல்லாருக்கும் எடுத்து வைத்து விட்டு வரேன் " என்றாள் .

    "நீ சாப்டேயமா ?" என்ற சக்கரவர்த்திக்கு
    " நீங்க சாப்பிடுங்க .நான் சாப்பிடுகிறேன் " என்று பரிமாறினாள்.

    "அதுலாம் கரெக்ட் நடக்கும் .ஆன காலையில் காபி குடுக்க கூட ஆளு இருக்க மாட்ட .வெட்ட வெட்டியா தான இருக்க கொஞ்சம் வேலை பார்த்த என்ன ??" என்ற தேவகி பாட்டிக்கு

    "சரி இனி பண்றேன் " என்னும் பதிலை சொன்னாள் .
    "ஆமா ஆன ஊன இதை சொல்லு " என்ற ரோகினிகு ஒன்றும் சொல்லமால் தண்ணி எடுத்திவர சென்றாள் .

    பின்ன இப்படி குத்துவிளக்கு மாறி அழகா இருக்கும் நிலமொழியை பார்த்தாலே அவளுக்கு பிடிக்கவில்லை .
    இதில் இங்கவே இருந்து நல்ல கல்லூரியில் படிக்கிறாள் என்றால் அது வேறு அவளுக்கு எரிச்சல் வந்தது .

    அவளும் எவ்வளோவோ போராடி பார்த்து விட்டால் அவளை வீட்டிலேயே வைக்க வேண்டும் என்று .சக்கரவர்த்தி தன நட்பு சத்தியம் என்று ஓரளறினார் .சரி எதோ ஒரு ஓட்ட கால்லேஜ் என்றால் கூட அவளுக்கு மனம் ஒத்து கொள்ளும் .
    இங்கு இருப்பதில் முதல் காலேஜ் ஏன் என்று கேட்டல் நல்லமார்க் பிரீ சீட் னு இவள் வாயை அடைத்து விட்டார் .

    அந்த காலேஜ்யில் நிவேதா க்கு சீட் வாங்குவதற்க்கு அந்த தேவ்விடம் இவள் எவ்ளவு கஷ்ட பட்டு இருப்பாள் .அந்த கடுப்பு எல்லாம் சேர்த்து கொண்டு இவளை எப்படி நன் படிக்கச் விடுகிறேன் என்று மனதுக்குள் பொருமி கொண்டாள் .


    ரோகினிக்கு முதலில் எல்லாம் நிலமொழி மீது எந்த எண்ணமும் இல்லை .நீ ஒரு அவ்ளோ தான் வேலைக்காரி என்று இருந்தாள் .ஆனால் எப்பொழுது தனக்கு சரியாக அதே வகுப்பில் வந்தாலோ அப்போதே அவளை பிடிக்கவில்லை .
    அதுவும் அவள் எல்லாம் தனுக்கு ஈடா என்று .

    தான் மட்டுமே அழகி என்று பெருமை கொண்டு இருந்தாள் .ஆனால் அவள் வகுப்பில் இருக்கும் பக்கிகளோ நிலமொழியை எதோ காணாது கண்டது மாறி பார்க்கவே அவளுக்கு மொழி மீது பொறாமை வந்தது .
    அதுவே இப்பொழுது அவளை பழி வாங்க காத்து கொண்டு இறுக்கிறாள் .

    " மொழி சாப்பிட்டு கெளம்பு நேரம் ஆகுது பாரு " என்ற சாந்திக்கு
    "இதோ அத்தை " என்று பதில் கூறினாள் .

    எல்லாம் தனியாக இருக்கும் போது தான் இந்த அத்தை எல்லாம் .ஒருநாள் பாட்டியின் முன்னாள் அவள் அத்தை என்று சாந்தியை கூப்பிட்டதற்கு அவள் வாங்கிய திட்டை மறக்கவே மாட்டாள் .இருந்தாலும் அதன் மனது வறுத்த பட கூடாது என்று அவர் தனியாக இருக்கும் போது மட்டும் இப்படி கூப்பிடுவாள் .

    அவசரமாக அவசரமாக 2 வாய் சாப்பிட்டு விட்டு மணி ஆகுதுன்னு ஓடி விட்டாள் .

    "எத்தனை கார் இருக்கு அதில் போனால் என்ன ?" என்று கேட்ட தாத்தாவுக்கு '

    "பிரீஎண்ட்ஸ் ஓட போக தன நல்லா இருக்குனு " பதில் சொல்லிவிட்டு

    அன்னம்மாள் மற்றும் சாந்திடம் " பாய் " சொல்லிட்டு கிளம்பினாள் .

    அன்னம்மாளுக்கும் தெரியும் சந்திக்கும் தெரியும் அதுவல்ல உண்மை என்று .கடவுளே அந்த சின்ன பெண் இன்னும் எவ்வளவு துன்பம் அனுபவிப்பாள் .அவளுக்கு ஒரு நல்லவழி கட்டு என்று வேண்டி கொண்டனர் .

    ஆனால் அவருக்கு தெரியாது அந்த நல்லவழி அன்று இரவே வர போகுது என்று



    -------------------------------------------------------------------------------------------------------
     
    Last edited: Nov 14, 2019
     
  3. sahara

    sahara Wings

    Messages:
    7
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    ஹலோ ,

    நான் என் முதல் அத்தியாயம் போட்டு விட்டேன் .தங்களுடைய கருத்துக்களை பதிவு கூறுங்கள் .
     
    priyamurugan likes this.
     
  4. Lavanya mithran0601

    Lavanya mithran0601 Wings New wings

    Messages:
    31
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Hi sahara,
    Best of luck for ur new writings.. story start pannathu and character explain pannathu ellam super eh irunthu.......... but silla silla place la character oda names eh maathi eluthi irukeenga like ponnamaal eh last eh annammal nu sollirupeenga Rohini daughter name shalini u changed as neveatha ithu maathiri silla places la mistakes irukku nxt time CRT panni ezhuthunga Sahara story super eh irukku... once again all the best for ur upcoming eips....
     
    priyamurugan and sahara like this.
     
  5. sahara

    sahara Wings

    Messages:
    7
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    tq sis...next time mistake illama poda try panran..!!!
     
    Lavanya mithran0601 likes this.
     
Loading...

Share This Page