காதல் விதை 1

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Ramyasuji096, Feb 19, 2020.

 1. Ramyasuji096

  Ramyasuji096 Pillars of LW LW WRITER

  Messages:
  2
  Likes Received:
  6
  Trophy Points:
  23
  காதல் விதை 1
  அமெரிக்காவின் முக்கிய மாகாணம் வாஷிங்டனில் சூரியன் தன் வரவை அறிவித்து அந்த மக்களின் அன்றாட வாழ்க்கையை பறைசாற்றி கொண்டு இருந்தது.​

  அந்த அழகான காலை நேரத்தில் ஏழு மாடி கட்டிட அமைப்பை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு அழகான குருவி கூடாக உருவாக்கி அதில் வாழ்ந்து வந்தாள் நாம் கதையின் நாயகி மதுரா.​

  மதுரா காலை நேர பரபரப்பில் எழுந்து தன்னுடைய காலை நேர உடற்பயிற்சியை மேற்கொண்டால் சிறிது நேரத்திற்கு பின் குளித்து கிளம்பி தன் செல்ல மகளை எழுப்ப சென்றாள்.​

  மதுராவை பற்றி ஒரு அறிமுகம்.மதுரா 23 வயது நிரம்பிய பெண் அழகு மற்றும் அறிவு இரண்டும் ஒருங்கே பெற்றவள்.​
  மதுரா தமிழ்நாட்டில் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டவள்.​

  மதுராவின் பெற்றோர்கள் இராஜன்-தேவி தம்பதி.அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மூத்தவன் யாதவ் இளையவள் மதுரா.​

  மதுராவின் குடும்பம் மிகவும் அமைதியாக அழகாக சென்று கொண்டு இருந்தது.ஆனால் யாதவ் அந்த ஊரின் பண்ணையார் மகளை காதலிக்கும் வரை அந்த குடும்பம் மிகவும் அமைதியாக சென்று கொண்டு இருந்தது.​

  மதுரா 10ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் சமயம் யாதவ் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் அந்த ஊரின் அருகில் உள்ள கல்லூரியிலே படித்து கொண்டு இருந்தான்.​

  யாதவ் கல்லூரியில் உடன்பயிலும் மாணவியான கயல்விழியை காதலித்தான். இவர்கள் காதலானது இரண்டு வருடம் தொடர்ந்து வந்தது.மதுரா 12ம் வகுப்பு முடிந்து கல்லூரி செல்வதற்கு இருந்த சமயம் அவளின் அண்ணன் பண்ணையாரின் மகளை அழைத்து கொண்டு ஊரைவிட்டு சென்றுவிட்டான்.​

  பண்ணையார் விஜயநாராயணிற்கு இரண்டு குழந்தைகள் மூத்தவன் நரசிம்மன்(நமது கதையின் நாயகன்).​
  இரண்டாவது கயல்விழி.​

  கயல்விழி அந்த ஊரைவிட்டு சென்று விட்ட மனவருத்ததில் பண்ணையார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.​

  நரசிம்மன் மதுராவின் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து பயத்தில் உறைந்து போய் இருந்த மதுராவின் அருகில் வந்து அவளின் கையை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு சென்றான்.​

  மதுரை இழுத்து சென்ற நரசிம்மனை அந்த ஊர் மக்களே வேடிக்கை பார்த்தனர்.​
  ஒருவரும் அவனை எதிர்க்க முன்வரவில்லை.​

  பண்ணையார் விஜயநாரயணன்-சுவாதி தம்பதிகள் அந்த ஊர் மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்றவர்.அந்த ஊரில் நடக்கும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் விஜயநாரயணன் தலைமையில் நடைபெறும்.​

  விஜயநாரயணன் குணத்தில் தங்கம் சுவாதி கணவன் சொல் மீறாத குடும்ப பெண்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மூத்தவன் நரசிம்மன் இரண்டாவது கயல்விழி.​

  நரசிம்மன் அவனின் தந்தை குணத்திற்கு எதிரானவன்.நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்.மாநிறத்தில் பார்க்க கம்பீரமான தோற்றத்தில் கன்னிகளை கவரும் காளையாக இருப்பான்.ஆனால் பெண்கள் விஷயத்தில் ராமன் ஒரு பெண்களையும் நிமிர்ந்து பார்க்கமாட்டான்.நரசிம்மனிற்கு படிப்பு சுட்டு போட்டாலும் வராது 12ம் வகுப்பு வரை படித்து தன் தந்தையுடன் விவசாயத்தை கவனித்து வருகிறான்.அந்த ஊர் மக்கள் அனைவரும் விஜயநாராயணின் அடுத்த வாரிசாக நரசிம்மனை நினைத்தார்கள்.​

  விஜயநாரயணன் இறந்ததை நரசிம்மனால் தாங்கமுடியவில்லை தன் குடும்பத்தை இந்த நிலைக்கு தள்ளிய யாதவ் குடும்பத்தை அழிக்க நினைத்தான்.தங்கை கயல்விழி யாதவிடம் சென்ற தினம் மதுராவின் வீட்டிற்கு அதிரடியாக நுழைந்து அங்கு இருந்த பொருட்களை அடித்து உடைத்து பயத்தில் உறைந்து நின்ற மதுராவின் கையை தரதரவென இழுத்து சென்றான்.​

  அந்த ஊரே அதை வேடிக்கை பார்த்தது ஒருவரும் அதை தடுக்க முன்வரவில்லை. நரசிம்மனை யாரும் எதிர்க்கவில்லை.​

  மதுராவின் பெற்றோர் அவனை தடுத்தும் அவர்களை தாண்டி மதுராவை இழுத்து சென்றுவிட்டான்.நரசிம்மன் மதுராவை அன்று இரவில் ஒரு இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தான்.​

  மதுரா இரவு முழுவதும் பயத்தில் பதறி இருந்தாள்.மறுநாள் காலை கதவு தட்டும் ஒசை கேட்டு திடுக்கிட்டு விழித்தாள்.நரசிம்மன் காலையில் ஒரு பெரிய பையுடன் அவளை நெருங்கி அதை அவள் மேல் எறிந்தான்.மதுரா நரசிம்மனை அதிர்ந்து பார்க்கும் சமயம் அவளிடம்​

  இதை கட்டி கொண்டு முதலில் வா என்றான்.மதுரா பயத்தில் அசையாமல் இருந்தால் நரசிம்மன் ஒரு கையை உயர்த்தி ஏய்! உன்னை தான் போ இதை உடுத்தி கொண்டு வா.​

  மதுரா தள்ளாடி கொண்டு நிற்க முடியாமல் நின்றாள்.அவளிடம் பின் வாசலை காட்டி அந்த பகுதியில் ஒரு பாத்ரூம் உள்ளது அங்கு சென்று இதை உடுத்தி கொண்டு வா என்றான்.​

  மதுரா நடக்க முடியாமல் நடந்து அங்கு சென்று குளித்து உடை மாற்றி வந்தாள். அதில் ஒரு நூல் புடவை இருந்தது.அதற்கு பொருத்தமான சட்டை அதை அணிந்து புடவை கட்டி கொண்டு வெளியே வந்தாள்.​

  நரசிம்மன் மதுராவை அழைத்து கொண்டு அவனின் அன்னை அறைக்கு சென்றான்.​

  விஜயநாராயணன் இறந்தபின் சுவாதி ஒரு அறையை வெளியே வரவில்லை.சாப்பாடு தண்ணீர் மட்டும் கதவு அருகில் வைத்து நரசிம்மன் கதவை தட்டுவான் சுவாதி அவன் அந்த அறை வாசலில் இருந்து விலகிய பின் சுவாதி கதைவை திறந்து சாப்பாட்டை எடுப்பார்.நரசிம்மன் தன் அன்னையின் முகம் பார்த்தே முப்பது நாட்கள் முடிந்து விட்டது.​


  மதுராவை அழைத்து கொண்டு சுவாதி அறை வாசலில் நின்று மூடி இருந்த அறையை சிறிது நேரம் வெறித்து பார்த்து பையில் இருந்த தாலியை எடுத்து மதுராவின் கழுத்தில் கட்டினான்.​

  மதுரா அதிர்ந்து நரசிம்மனை நோக்கினாள்.​

  விதைப்போம்..................​

  ஹாய் friends எனக்கு இது முதல் கதை தயவுசெய்து எப்படி இருந்தது என்று comments செய்யுங்கள்.​

   
   
Loading...

Share This Page